கொரோனா உதவி தகவல் சுரங்கம்

1. covid winகோவிட்வின்.இன் (https://covidwin.in/ ) இணையதளம், கொரோனா உதவி தொடர்பாக இணையத்த்தில் பகிரப்படும் தகவல்களை சரி பார்த்து தொகுத்தளிக்கும் இணையதளமாக செயல்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பின் காரணமாக, மருத்துவமனை படுக்கை வசதி, மருந்ந்து மற்றும் ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட உதவி கோரிக்கை டிவிட்டர் உள்ளிட்ட சேவைகளில் பகிரப்பட்டு வருகின்றன. இத்தகைய தகவல்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் தொகுத்தளிக்கும் இணையதளங்களில் ஒன்றாக கோவிட்வின் அமைந்துள்ளது.

கொரோனா உதவி தொடர்பான் சரிபார்க்கப்பட்ட தகவல்களை தொகுத்தளிப்பதோடு, அவற்றை சரி பார்க்கும் பணியில் இணையவாசிகளும் பங்கேற்க வழி செய்திருப்பது இந்த தளத்தின் சிறப்பம்சமாக அமைகிறது.

இந்த தளத்தின் மைய பகுதியில், கொரோனா உதவி கோரல் தொடர்பான தகவல்கள் வரிசையாக இடம்பெறுகின்றன. எந்த நகரில் யாருக்கு என்ன உதவி தேவை என்பது குறிப்பிடப்பட்டு, தொடர்புடைய தொலைபேசி எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன், மருத்து, மருத்துவமனை படுக்கைகள், அவசர சிகிச்சை பிரிவு வசதி, ஆம்புலன்ஸ் வசதி, உணவு வசதி என தனித்தனி தலைப்புகளில் இந்த தகவல்களை நாடலாம்.

இந்த தகவல்களை குறிப்பிட்ட மாநிலத்தில், குறிப்பிட்ட நகரத்தில் தேடும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தகவல்களை திரட்டித்தருவதோடு, தகவல்களை சரி பார்த்து உறுதி செய்யும் வாய்ப்பையும் இந்த தளம் அளிக்கிறது. பயனாளிகள் இதில் உள்ள தகவல்களுக்கு வாக்களிப்பதன் மூலம், அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்யலாம். பயனாளிகள் தங்களுக்கான உதவி கோரிக்கை அல்லது தகவல்களையும் இந்த தளத்தில் சமர்பிக்கலாம். அவை சரி பார்க்கப்பட்ட பின் தளத்தில் பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பைட்டர்ஸ் இந்தியா, யுவ ஹல்லா போல் உள்ளிட்ட அமைப்புகளின் உதவியோடு தகவல்கள் சரி பார்க்கப்பட்டாலும், அவற்றை கவனமாக தனிப்பட்ட முறையில் சரி பார்த்து பயன்படுத்தவும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

விபுல் (@vipbhavs ) மற்றும் சகாக்கள் இணைந்து இந்த தன்னார்வ கொரோனா உதவி சரி பார்த்தால் சேவை தளத்தை நடத்தி வருகின்றனர்.

5. Covid Fight Clubகோவிட்பைட்கிளப் (https://covidfightclub.org/) இணையதளமும் இதே போன்ற கொரோனா உதவி ஒருங்கிணைப்பு சேவையை வழங்கி வருகிறது.

முழுக்க, முழுக்க பயனாளிகளின் பங்கேற்பால் இயங்கும் தளமாக இது அமைந்துள்ளது. இந்த தளத்தில், கொரோனா உதவி தேவைப்படுபவர்கள் தங்கள் கோரிக்கையை சமர்பிக்கலாம். அதே போல, கொரோனா உதவிக்கான வளங்களையும் இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.

இப்படி சமர்பிக்கப்படும் உதவிக்கான கோரிக்கைகள் மற்றும் வளங்களுக்கான தகவல்களை தனித்தனி வரிசையில் தேடும் வசதியும் இருக்கிறது.

டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட மேடைகளில் பகிரப்படும் தகவல்கள் இந்த தளத்திலும் இடம்பெறுகின்றன.

ஒவ்வொரு கோரிக்கையிலும், என்ன தேவை, எங்கே தேவை எனும் விவரங்களை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. தொடர்பு எண் மற்றும் வாட்ஸ் அப் எண் விவரமும் இணைக்கப்பட்டுள்ளன.

இவைத்தவிர, குறிப்பிட்ட நகரம் சார்ந்த தகவல்களை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.

பெரும்பாலான தகவல்கள், சரி பார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இந்த தளத்தில் தகவல்கள் அல்லது கோரிக்கைகளை சமர்பிக்கும் போது அரசு நெறிமுறைகள், உள்ளூர் நெறிமுறைகள் உள்ளிட்டவற்றை மனதில் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தளத்தை கவனத்துடனும், பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டும்.

இந்த இணையதளத்தில் பகிரப்படும் தகவல்களை இதன் டிவிட்டர் பக்கத்திலும் அணுகலாம். – https://twitter.com/COVIDFightClub1

புதிய இணையதளங்களை அறிந்து கொள்ள இணைய மலர் மின்மடலை பின் தொடருங்கள்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.