காடுகள் பேசுவதை கேட்க ஒரு இணையதளம்

soஉடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெற இயற்கை சிகிச்சையாக வனக்குளியலில் மூழ்கி திளைக்க வழி செய்யும் இணையதளங்கள் இருக்கின்றன. இதே போலவே காடும், காடு சார்ந்த இணையதளம் என சொல்லக்கூடிய வகையில் சவுண்ட்ஸ் ஆப் பாரஸ்ட் (https://timberfestival.org.uk/soundsoftheforest-soundmap/ ) எனும் புதுமையான இணையதளம் ஒன்றும் இருக்கிறது.

வனத்திருவிழாவை நடத்தும் டிம்பர் பெஸ்டிவல் எனும் அமைப்பின் சார்பில் இந்த திருவிழாவின் அங்கமாக நடத்தப்படும் இந்த தளம், வன ஒலிகளுக்கான வரைபடமாக திகழ்கிறது. இந்த தளத்தில் உள்ள உலக வரைபடத்தின் மீது சுட்டிக்காட்டப்படும் இடங்களில் கிளிக் செய்தால் அங்குள்ள வனப்பகுதிகள் ஒலிப்பதிவை கேட்கலாம். எல்லாமே, பயனாளிகளால் சமர்பிக்கப்பட்டவை.

இவ்வாறாக பயனாளிகள் சமர்பிக்கும் வன ஒலிகளை கொண்டு, திறவுமூல ஒலி நூலகத்தை உருவாக்குவதை இந்த தளம் நோக்கமாக கொண்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கூட ஒலிப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

புத்தாண்டு தொடர்பான இணையதளங்களை காண இணைய மலர் மின்மடலை நாடவும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.