வலை 3.0: உருவானது விக்கிபீடியா !

EnglishWikipedia_29June2017இணையத்தின் அங்கமான வலை, வளர்ச்சி அடையத்துவங்கிய காலத்தில் மென்பொருள் உலகில் ஓபன் சோர்ஸ் எனப்படும் திறவு மூல இயக்கமும் வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. மென்பொருளின் ஆதார அம்சங்கள் ரகசியமாக காக்கப்படுவதற்கு பதில் பகிரங்கமாக பகிரப்பட வேண்டும் எனும், ஓபன்சோர்சின் மைய கோட்பாடு, மென்பொருள் உலகில் பகிர்தல் சார்ந்த கூட்டு முயற்சிக்கு வித்திட்டிருந்தது.

ஓபன்சோர்ஸ் மென்பொருள் வலை வளர்ச்சிக்கு பலவிதங்களில் உதவியதோடு, அதன் கோட்பாடும் பெரும் தாக்கம் செலுத்தியது. இப்படி ஓபன்சோர்ஸ் இயக்கத்தின் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் ஜிம்மி வேல்சும் ஒருவர்.

போமிஸ் (Bomis) எனும் இணைய விளம்பர நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து நடத்திக்கொண்டிருந்த வேல்ஸ், இணைய களஞ்சியம் ஒன்றை துவக்க விரும்பினார். இணையத்தில் அப்போது நிறைய கலைக்களஞ்சியங்கள் இருந்தன. பாரம்பரிய கலைக்கலஞ்சியமான என்சைக்லோபீடியா பிரிட்டானிகா, இணையத்தில் டிஜிட்டல்மயமாக்கப்பட்டிருந்தது. மைக்ரோசார்ப்ட் நிறுவனம் என்கார்டா எனும் பெயரில் களஞ்சியம் ஒன்றை உருவாக்கியிருந்தது. வேர்ல்டு புக் உள்ளிட்ட வேறு சில களஞ்சியங்களும் இருந்தன.

ஜிம்மி வேல்ஸ், இவற்றில் இருந்து மாறுபட்ட இணைய களஞ்சியத்தை உருவாக்க விரும்பினார். தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்க கூடிய இலவச களஞ்சியமாக இது இருக்க வேண்டும் என்பதும், இணையத்தில் உள்ள எவரும் இதில் பங்களிப்பு செலுத்த வேண்டும் என்பதும் அவரது எண்ணமாக இருந்தது.

மென்பொருள் உலகில், கூட்டு முயற்சியால் புதிய மென்பொருள்கள் உருவாக்கப்படுவது போல, கூட்டு முயற்சியின் பலனாக இணைய களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது. ஆனால், இந்த முயற்சி எத்தகைய பரிமாணத்தை காணப்போகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

ஜிம்மி வேல்ஸ் மட்டும் அல்ல, உலகமே சற்றும் எதிர்பார்த்திராத வகையில், கட்டற்ற களஞ்சியமாக விக்கிபீடியா உருவாகி வளர்ந்தது. கலைக்களஞ்சியங்கள் உருவாகப்படும் முறையையே தலைகீழாக மாற்றி, யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம், திருத்தம் செய்யலாம் எனும் வகையில் விக்கிபீடியாவின் செயல்பாடு அமைந்திருந்தது. கட்டுப்படுத்த மைய குழு இல்லாமல் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியில் அவர்களின் கூட்டு கனவாக விக்கிபீடியா வளர்ந்து, இப்படியும் ஒரு தளம் சாத்தியமா என வியக்க வைத்தது.

விக்கிபீடியா உருவான விதத்தில் இன்னொரு ஆச்சர்யமும் இருக்கிறது. ஜிம்மி வேல்ஸ், மக்கள் பங்களிப்புடன் ஒரு இணைய களஞ்சியத்தை உருவாக்க விரும்பிய நிலையில், நூபிடியா (Nupedia) எனும் தளத்தையே முதலில் துவக்கினார். புத்தாயிரமாண்டில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை வழி நடத்த, லார் சாங்கர் என்பவரை, இணை நிறுவனராக அவர் சேர்த்துக்கொண்டார்.

பொதுமக்களும் கட்டுரைகளை சமர்பிக்கலாம் எனும் தன்மையை நூபிடியா கொண்டிருந்தாலும், அந்த கட்டுரைகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டே வெளியிடப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஏழு கட்ட பரிசீலனை முறையும் உருவாக்கப்பட்டிருந்தது. கட்டுரையை சமர்பிப்பதில் துவங்கி, வெளியிடுவது வரை என தீவிர அம்சங்களை கொண்டிருந்ததாக இந்த முறை அமைந்திருந்தது.

இதன் காரணமாக, பரிசீலனை முடிந்து கட்டுரைகள் வெளியாவதில் தாமதம் உண்டானது. முதல் ஆறு மாதங்களில் 2 கட்டுரைகள் மட்டுமே வெளியானது. நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பரிசலனையில் இருந்தன. இந்த தாமதத்தால் அதிருப்தி அடைந்த வேல்ஸ் மற்றும் சாங்கர், நூபீடியாவில் சமர்பிக்கப்படும் கட்டுரைகள் எல்லாம் உடனுக்குடன் வெளியிடப்படும் வகையில், ஒரு துணை இணையதளத்தை உருவாக்க விரும்பினார். அந்த தளம் தான் விக்கிபீடியா!

பயனாளிகளும் திருத்தங்களை (எடிட்) செய்ய வழி செய்யும் விக்கி எனும் விஷேச மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததால், இந்த தளத்திற்கு விக்கிபீடியா என பெயர் சூட்டப்பட்டது. 2001 ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி விக்கிபீடியா உதயமானது.

துவக்கத்தில், ஒபன்சோர்ஸ் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட மென்பொருளாளர்கள் அதில் ஆர்வத்துடன் கட்டுரைகளை சமர்பித்தனர். இதனிடையே, ஸ்லேஷ்டாட் விவாத செய்தி தளத்தில் விக்கிபீடியா தொடர்பான செய்தி வெளியாகி, பெரும் கவனத்தை ஈர்த்தது. யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம் எனும் தன்மை கொண்ட இணைய களஞ்சியம் எனும் கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு ஊடகங்களும் விக்கிபீடியா பற்றி செய்தி வெளியிட்டது. இதனையடுத்து தன்னார்வலர்கள் விக்கிபீடியாவை நோக்கி படையெடுக்கத்துவங்கினர்.

விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை தொடர்பான கேள்விகள் எழுந்தாலும், தன்னார்வர்களின் கூட்டு முயற்சி மற்றும் தொடர்ந்து உருவான வழிகாட்டும் நெறிமுறைகள் காரணமாக விக்கிபீடியா மாபெரு கட்டற்ற களஞ்சியமாக பிரும்மாண்ட வளர்ச்சி பெற்றது. ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட எண்ணற்ற மொழிகளிலும் விரிவடைந்தது.

  • தமிழ் இந்துவில் எழுதும் வலை 3.0 தொடரில் வெளியானது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *