மூன்று தமிழ் போல, முக்கனி போல, முப்பரிமானம் போல, மூன்று வலைகள் இருப்பதாக சொல்லப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இணைய வரலாற்றில் வலையின் பரிணாம வளர்ச்சி கட்டங்களை சுட்டிக்காட்டும் வகையில் மூன்று விதமான வலைகளை குறிப்பிடுகின்றனர்.
மூன்று வலை என்பது திட்டவட்டமான வரையறையாக அல்லாமல், வலையின் வளர்ச்சியையும், உருவாமாற்றத்தையும் புரிந்து கொள்வதற்கான கோட்பாடு சார்ந்ததாக அமைகிறது. மூன்று வலையில், வலை 2.0 என குறிப்பிடப்படும் இரண்டாம் அலை இணையதளங்கள் தான் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தவை.
உண்மையி, இரண்டாம் அலை இணையதளங்களை தனித்து உணர்த்தவே, வலையை, முதல் வலை, இரண்டாம் வலை என வகைப்படுத்தினர். இப்போது மூன்றாம் வலையும் உருவாகி கொண்டிருக்கிறது. ஆனால், மூன்றாம் வலை என்பது தொடர்பாக பெரும் குழப்பம் நிலவுகிறது.
பிளாக்செயின் போன்ற நுட்பங்கள் சார்ந்த சேவைகளை வலை 3.0 என்கின்றனர். இதில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவும் இணைகிறது. அந்த வகையில், இயந்திரங்களால் அணுக கூடிய வலை என்றும் இதை சொல்கின்றனர். செமண்டிக் வெப் எனப்படும் உணர் வலையாகவும் இது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே நான்காம் வலைக்கான அடித்தளம் பற்றியும் பேசப்படுகிறது. இவைத்தவிர, வலைக்கு முந்தைய வலை மற்றும் கண்ணுக்குத்தெரியாத ஆழ் வலையும் இருக்கின்றன. இந்த வலைகளை எல்லாம் விளக்கும் வகையில், வலையின் கதை ( Story of Web) எனும் வழிகாட்டி தளத்தை உருவாக்கியிருக்கிறேன்.
மூன்று வலைகளுக்கான அடையாளமாக விளங்கும் இணையதளங்களின் பட்டியலோடு, அவற்றுக்கான அறிமுகம் மற்றும் ஐந்து வலை நிலைகள் பற்றிய தகவல்களையும் இந்த தளம் கொண்டுள்ளது.
வலையின் வகைகள், அவற்றின் தாக்கம் தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வழிகாட்டி தளம், செய்தி ஆர்வம் கொண்டவர்கள் அறிந்திருக்க வேண்டிய 100 இணையதளங்களை மையமாக கொண்ட இணைய செய்தி கையேட்டின் ஒரு பகுதியாக உருவானது. பத்து பிரிவுகளில் செய்தி தளங்களையும், செய்தி வளங்களையும் பட்டியலிடும் இந்த கையேட்டின் நீட்டிப்பாக வலையின் வகைகளை உணர்த்தும் இணையதளங்களை தனியே பட்டியலிட விரும்பினேன். ஆனால், இந்த பட்டியல் விரிவாக தனி கையேடாக அமைந்துள்ளது.
இணைய செய்தி கையேடு போலவே, இந்த வலை கையேடும் இன்னமும் மாற்றங்களும், கூடுதல் சேர்க்கைகளும் தேவைப்படுவது. நீங்களும் உங்கள் கருத்துக்களை பரிந்துரைக்கலாம்.
வலை கையேடு: https://web-story.super.site/