எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்.

http _www.make-everything-ok.com_வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது. மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை தருகிறது.

பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மனநிலையில் இருக்கும் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் தான். இவை இருந்தால் எந்த பிரச்ச்னையையும் எதிர் கொண்டு வெற்றி பெறலாம்.

மேக் -எவ்ரிதிங் ஓகே இணையதளம் இதை தான் செய்கிறது . இந்த தளத்தில் அப்படி என்ன இருக்கிறது ? ஒரு பட்டன் இருக்கிறது. மாய பட்டன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அந்த பட்டன் மீது எல்லாம் சரி செய்யப்பட்டுவிடும் (மேக் -எவ்ரிதிங் ஓகே ) என எழுதப்பட்டிருக்கும். கம்ப்யூட்டர் விசைபலகையின் ஒரு விசை போல இருக்கும் அந்த பட்டனை அழுத்தினால் , எல்லாம் சரி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற வாசகம வரும்.அதன் பிறகு எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதாக குறிப்பிடப்படும். அப்படியும் எதுவும் சரியாகவில்லை என்றால், உங்கள் புரிதல் மற்றும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவும் எனும் ஆலோசனை வழங்கபடுகிறது.

எல்லாவ்ற்றையும் சரி செய்து கொள்வது நம்மிடம் தானே இருக்கிறது. எளிமையான இணையதளம். சுவாரஸ்யமானது. சிந்திக்கவும் வைக்ககூடியது.

இணையதள முகவரி; http://www.make-everything-ok.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *