Category Archives: தேடல்

கூகுல் நூலகத்திற்கு முன்னால்

டிராய் வில்லியம்ஸ் பெயரை சொல்லி இன்டர்நெட் முன்னோடிக ளில் ஒருவர் என்றால் அப்படியா? யார் அவர் என்று கேட்க தோன்றும். வில்லியம்ஸ், குவெஸ்டியாவின் நிறுவனர் என்று சொன்னால், குவெஸ்டியாவா? அது என்ன என்று அடுத்த கேள்வி பிறக்கும்.

இன்டர்நெட் முன்னோடி என்னும் அடைமொழிக்கு சொந்தக்காரராக இருக்க குறிப்பிட்ட சில தகுதிகள் இருக்கின்றன. பெயரை சொன்னாலே நினைவில் நிற்கும் வெற்றியை பெற்றிருக்க வேண்டும் அல்லது அவருடைய நிறுவனமாவது மகத் தானதாக அமைந்திருக்க வேண்டும்.

வில்லியம்ஸ் விஷயத்தில் இரண்டுமே இல்லை என்றாலும், அவரை இன்டெர்நெட் முன்னோடி என்று தயங்காமல் வர்ணிக்கலாம். அவர் எதிர்பார்த்த மகத்தான வெற்றியை பெற்றிருக்காவிட்டாலும், அவரிடம் மகத்தான லட்சியம் இருந்ததை மறுப்பதற்கில்லை.

உலகின் மிகப்பெரிய இணைய நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு அதற்காக உழைத்து வருபவர் அவர். 1998-ல் துவங்கிய இந்த நீண்ட நெடும் பய ணம் இன்று வரை பெரும் வெற்றியை பெறவில்லை. இதற் கிடையே தேடியந் திர முதல்வனான கூகுல், உலகில் உள்ள பெரும் பாலான நூல்களை டிஜிட்டல் மயமாக்கி, வையம் தழுவிய மா பெரும் நூலகத்தை உரு வாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டதால், வில் லியம்சின் எண்ணம் கடை சிவரை ஈடேறா மலே போயிருக்கலாம். ஆனா லும் கூட கூகு லுக்கு முன்பே இந்த மகத்தான முயற்சியில் அவர் ஈடு பட்டார் என் பதை மறந்து விடுவதற் கில்லை.

உலகில் உள்ள பிரபலங்களை யெல்லாம் தேடுவதற்கு வசதியாக தொகுத்து தருவதே எங்கள் இலக்கு என்று இப்போது வேண்டுமானால் கூகுல் பெருமிதத்தோடு கூறலாம். முதன் முதலில் உலகில் உள்ள புத்தகங்கள் எல்லாம் வாசகர்களின் கைகளுக்கு, இன்டர் நெட்டின் மூலம் வந்து சேர வேண்டும் என்று விருப் பப்பட்டவர்களில் வில்லி யம்சும் ஒருவர். அதனை நிறைவேற்றி காட்ட துணிச்சலோடு தளத்தில் இறங்கியவரும் அவரே.
அமெரிக்கரான வில்லியம்ஸ், சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

பள்ளி நாட்களில் வரலாறு தொடர்பான வீட்டு பாடத்தை முடிக்க தேவையான தகவல்களை பெற பல மைல்கள் நடந்து நூலகத்தை சென்றடைய வேண்டி யிருந்தது. அப்போதே அவர் மனதில் இதற் கான மாற்று வழி தேவை என்னும் எண்ணம் ஏற்பட்டு விட்டது. கல்லூரி நாட்களில் நூலக வசதியின் போதாமையை அவர் இன்னும் தெளிவாக உணர்ந்தார். அவர் படித்த கிராமப்பகுதி யில் அமைந்திருந்த கல்லூரியில் சில நூறு புத்தகங்களே இருந் தன. பின்னர் அவர் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்க துவங்கினார்.

ஹார் வர்ட் ஆயிரக் கணக்கான புத்தகங் களை உள்ளடக்கிய அருமையான நூல கத்தை கொண்டிருந் தது. அதனை பயன் படுத் தும்போது அவருக்கு இரண்டு விதமான எண்ணங்கள் தோன்றியது. ஒன்று இந்த புத்தகங்கள் அனைவருக் கும் கிடைக்க வேண்டும் என்பது, இரண்டாவதாக ஹார்வர்டு போன்ற நூலகத்தை அணுகும் வாய்ப்பு பெற்றவர்களே கூட பல நேரங்களில் அங்கிருக்கும் புத்தகங்களை தேடி எடுக்க முடியாத நிலை இருப்பதை அவர் உணர்ந்தார்.

இதனிடையே ஹார்வர்டு சட்ட ஆய்வு இதழின் ஆசிரியர் குழுவில் அவர் பணியாற்ற நேர்ந்தது. அப் போதுதான் அந்த அற்புதம் அவருக்கு அறிமுகமானது. பெரும்பாலான நீதிமன்ற வழக்கு தீர்ப்புகள் அனைத்தையும் இன்டர் நெட்டில் பார்த்து அலச முடிந்தது. இதே வசதி புத்தகங்களுக்கும் இருந் தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே இன்டர்நெட்டில் வலைவீசி பார்த்தார். அப்படி எந்த வசதியும் இல்லையே என்ற ஏக்கம் தேடலுக்கு பின்னர் அவருக்கு ஏற்பட்டது.

தாமே அந்த வசதியை ஏற்படுத்துவது என தீர்மானித்தார். புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை டிஜிட்டல் மயமாக்கி, இணைய தளத்தில் இடம் பெற வைத்து உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் அதனை தேடி பயன்படுத்தும் வகையில் இணைய நூலகத்தை ஏற்படுத்த விரும்பினார்.

இதனிடையே அவருக்கு மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் இருந்து கவர்ச்சிகரமான சம்பளத்தோடு நல்ல வேலைவாய்ப்பு தேடி வந்தது. எனினும் மனதில் இருந்த லட்சியத்தை நிறைவேற்ற அந்த வேலை வாய்ப்பை நிராகரித்தார். டிஜிட்டல் யுகத்தில் உலகில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் எந்த மூலை யில் உள்ள வாசகர்களுக்கும் இன்டெர் நெட் மூலம் எளிதாக கிடைக்க வேண் டும் என்பதை குறிக் கோளாக கொண்டு டிராய் வில்லியம்ஸ் உலகின் மிகப்பெரிய நூலகத்தை இன்டர்நெட் டில் உருவாக்கும் முயற்சியை மேற் கொண்டார். நொந்துபோகும் அளவுக்கு ஆரம்ப கால தடைகள் அவரை வாட்டின.

ஒவ்வொரு புத்தகத்தையும் டிஜிட் டல் மயமாக்கி, இன்டர்நெட்டில் பதி வேற்றுவது என்பது பெருமளவு நேர மும், அதை விட அதிக பொருட் செல வும் தேவைப்படும் செயல். இதற்கு தேவையான முதலீட்டை பெறுவது என்பது கிட்டத்தட்ட இயலாத காரிய மாக இருந்தது.

அது மட்டுமல்லாமல் டிஜிட்டல் நூல கம் என்று அவர் கூறியதை கேட்ட வர்கள் எல்லாம் கேலியாக சிரித்து விட்டு ஒதுங்கி கொண்டனர். இது சாத் தியமில்லை என்றும் பலர் தெரிவித்தனர்.

இவற்றையெல்லாம் மீறி பல மாதங் கள் போராடி இறுதியாக காம் பேக் நிறுவனத்தின் நிறுவனரான ராட்கேனி யானை சம்மதிக்க வைத்து தேவை யான முதலீட்டையும் பெற்றார்.
அதன் பிறகு டாட்காம் வீழ்ச்சியின் போது அவரது முயற்சி மேலும் பின்ன டைவை சந்தித்தது.

இருப்பினும் அவர் துவங்கிய குவெஸ்ட் டியா உலகின் முதல் டிஜிட்டல் நூலகம் என்னும் அடை மொழியோடு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் அவர் தன்னு டைய காரிலேயே வசிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அந்த வேதனை யான நிலையிலும் அவரது மன உறுதி குறைந்துவிடவில்லை.

மிகுந்த நம்பிக்கையோடு குவெஸ்ட் டியா நூலகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். குவெஸ்ட்டியாவின் பின்னே உள்ள கருத்து என்னவென்றால், புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை டிஜிட்டல் மயமாக்கி வாசகர்களின் பார்வைக்கு வைப்பதுதான்.

வாசகர்கள் மாதந்தோறும் குறிப் பிட்ட கட்டணம் செலுத்தி எந்த புத்த கத்தையும் தேடி படித்து கொள்ளலாம். அல்லது ஆண்டுதோறும் குறிப்பிட்ட கட்டணத்தை கட்டி பயன்படுத்தலாம். 2 தொகைகளுமே மிகவும் குறைவான வையே.

அதே போல் பத்திரிகைகளில் வெளி யான கட்டுரைகளையும் படிக்கலாம். ஆராய்ச்சி மாணவர் களுக்கு இந்த வசதி பேரூதவியாக அமையும். இதைத் தவிர, புத்தகங்கள் தொடர் பான தகவல்களை தேடும் வசதியும் உண்டு. மேலும் குறிப்புகளை எழுதி வைக்கவும்தனி வசதி உண்டு.

இந்த நூலகத்தில் இடம் பெறும் புத்த கங்கள் மெல்ல அதிகரித்து வருகிறது. வில்லியம்ஸ் பிரதானமாக மானிடவி யல் மற்றும் வரலாறு ஆகிய பிரிவுக ளில் கவனம் செலுத்தி வருகிறார்.

கூகுல் இதைவிட அகலக்கால் வைத்து 5 பல்கலைக்கழகங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு பெரிய முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும், காப்பிரைட் சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறது. ஆனால் குவெஸ்ட்டியா தரப்பில் காப்பிரைட் சிக்கல்கள் கிடையாது. எல்லா புத்தகங்களுமே முறையாக அனுமதி பெற்று இடம் பெற வைக்கப் பட்டுள்ளது.

இதன் காரணமாக வாசகர்கள் எந்த வித அச்சமும் இல்லாமல் புத்தகங் களை டவுன்லோடு செய்து படிக்க முடி யும். அது மட்டுமல்லாமல் எழுத்தாளர் கள் மற்றும் பதிப்பகங்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்க வில்லை. உலகெங்கும் உள்ள மாணவர்கள் விரும்பி பயன்படுத்தும் டிஜிட்டல் நூலக மாக இந்த தளம் விளங்கி வருகிறது.

இன்டெர்நெட்டின் ஆரம்ப காலத்தி லேயே டிஜிட்டல் நூலகத்தின் முக்கி யத்துவத்தை உணர்ந்து அதற்கான முயற்சியை மேற்கொண்டதே டிராய் வில்லியம்சின் தனி சிறப்பாக அமைந்திருக்கிறது.

பல்வேறு சோதனைகளை மீறி அந்த முயற்சியில் தொடர்ந்து பயணம் செய் வது அவரை இன்டெர்நெட்டின் முன் னோடிகளில் ஒருவராக ஆக்கி இருக்கிறது.
————

link;
www.questia.com

ரசாயன தேடியந்திரம்

துறை தோறும் தனி தேடியந்திரம் உருவாக்குவது என்றால் முதலில் எந்த துறைக்கு தேடியந்திரம் மிகவும் அவசியம்? மற்ற எந்த துறையையும் விட ரசாயன துறைக்கே தனி தேடியந்தி ரத்திற்கான தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது.

நீங்கள் ரசாயன துறையை சேர்ந்த வராக இருந்தால், ரசாயன துறை தொடர்பான தகவல்களை இன்டெர் நெட்டில் தேடுபவராக இருந்தால் இதனை நிச்சயம் ஏற்றுக் கொள்வீர் கள். அதனால்தான் ரசாயனத்திற் கென்று தனி தேடி யந்திரத்தை உருவாக்கி உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பென் ஸ்டேட் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு இந்த தேடி யந்திரத்தை உருவாக்கி உள்ளது.

ரசாயனத்திற்கான தனி தேடியந் திரத்தின் அவசியத்தை மிக எளிதாக விளங்கி கொள்ளலாம். மற்ற துறையினரை விட ரசாயன துறையை சேர்ந்தவர்கள் இன்டெர் நெட்டில் தங்கள் துறை தொடர்பான தகவல்களை தேடும்போது நொந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மூலக்கூறு தொடர்பான தகவல் களை தேடினால் கூகுல் உள்ளிட்ட எந்த தேடியந்திரமும் அவர்களை வெறுப் பேற்றி விட வாய்ப்பு இருக்கிறது.

உதாரணமாக சிஎச்4 எனும் மூலக்கூறு தொடர்பான கட்டுரையை ரசாயன நிபுணர் ஒருவர் தேடுகிறார் என்று வைத்துக் கொள்வோம், மாமூலான தேடியந்தி ரங்கள், அதனை சேனல்4 அல்லது சேப்டர்4க்கான குறியீடாக எடுத்துக் கொண்டு அந்த தகவல் களையெல்லாம் கொண்டு வந்து தரும். ஆனால் சிஎச்4 என்பது ஒரு மூலக்கூறு எனும் விஷயத்தை மறந்து விடும்.

இதே போல எண்ணற்ற உதார ணங்களை சொல்லி கொண்டே போகலாம். எச்இ என்றால் ஹீலியம் என்று உடனடியாக சொல்லத் தோன்றும். ஆனால் தேடியந்திரங் களை பொருத்தவரை எச்இ என்றால் அவன் என்று ஆண் மகனை குறிப்பதற்கான ஹி என்ற ஆங்கில வார்த்தையையே கருத்தில் எடுத்துக் கொள்ளும்.

இதே போல ஐ என்றால் அயோ டின் என்று பொருள் கொள்ளாமல் ஐ என்ற பதத்தையோ அல்லது இன் என்ற பதத்தையோ எடுத்துக் கொண்டு அதற்கேற்ப முடிவுகளை பட்டியலிட்டு கொடுக்கும்.

ரசாயன நிபுணர்களுக்கு இதனால் எத்தகைய ஏமாற்றம் ஏற்படும் என்பதை இப்படி தேடி பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மேலும் ஓஎச் என்றால் ஆக்சிஜன் தொடர்பான மூலக்கூறு சேர்க்கை என்பது ரசாயனத்தில் பரீச்சயம் கொண்டவர்களுக்கு நன்றாக தெரியும்.

தேடியந்திரத்தில் ஓஎச் என்று சொன்னால் அது அமெரிக்காவில் உள்ள ஓஹியா மாகாணத்திற்கான சுருக்கம் என்று நினைத்துக் கொள்ளும். எனவே ரசாயன நிபுணர்கள் தேடி யந்திர பட்டியல்களில் மூலக்கூறு தொடர்பான விவரங்களை தாங் களே தேடி கண்டுபிடித்தாக வேண் டிய நிலை தற்போது இருக்கிறது.

தேவையில்லாத தகவல்களை எல்லாம் விலக்கி விட்டு பொருத்த மான முடிவுகளை அவர்கள் தேடி எடுக்க வேண்டும். இதனை எளிதாக்கும் வகையில் தற்போது கெம் எக்ஸ் சீர் எனும் பெயரிலான தேடியந்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த தேடியந்திரம் மூலக்கூறு தொடர்பான தேடலில் ஈடுபடும் போது மூலக்கூறு இருக்கும் கட்டுரை களை இனங்கண்டு கொண்டு அவற்றை மட்டுமே பட்டியலிட்டு தருகிறது.

எனவே ரசாயன துறையினருக்கு தேடல் எளிதாக முடியும். இதற்காக ரசாயனம் தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் இந்த தேடியந்திரத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
மூலக்கூறுகளை தேட முடிவதோடு ரசாயன துறையினர் மூலக்கூறு தொடர்பான மற்ற ஆய்வுக் கட்டுரை களையும் தேடி கண்டுபிடிக்க இது உதவுகிறது. மூலக்கூறு தொடர்பான சூத்திரங் களை எப்படி புரிந்து கொள்கிறது என்பதை தேடியந்திரத்திற்கு கற்றுத் தந்து இதனை உருவாக்கியுள்ளனர்.

இதற்கு பின்னே கடினமான உழைப்பு இருக்கிறது. கம்ப்யூட்ட ருக்கு மூலக்கூறின் தன்மைகளை புரிய வைப்பது எளிதான காரியம் அல்ல. இதற்கான விசேஷ மொழியை கையாண்டு கம்ப்யூட்டர் கள் மூலக்கூறு விவரங்களை இனங் கண்டு கொள்ள வைத்திருக்கின்றனர்.

அடிப்படையான தகவல்களை தேட முடிவதோடு இந்த தேடியந்திரத்தின் மூலம் ரசாயன அட்டவணைகளில் உள்ள தகவல்களையும் எளிதாக தேட முடியும். இதற்காக என்று இன்டெர் நெட் முழுவதும் உள்ள ரசாயன அட்டவணைகளில் உள்ள தகவல்களையெல்லாம் சேகரித்து வைத்திருக்கின்றனர். ரசாயன துறையில் புதிதாக வெளியிடப்படும் கட்டுரைகள் அனைத்தும் இந்த தேடியந்திரத்தில் சேர்க்கப்பட உள்ளது. ரசாயன துறையினருக்கு பெரிதும் பயன்படக் கூடிய அற்புதமான தேடியந்திரம் என்று இதனை வர்ணிக்கலாம்
————
chem

website;http://chemxseer.ist.psu.edu/
——–

பின்னணியில் ஒரு தேடல்

சும்மாதானே இருக்கிறீர்கள். பயனுள்ளதாக ஏதாவது செய்ய கூடாதா? என்று யாரிடமாவது கேட்டால் (யாரிடம் கேட்டாலும்) உங்களுக்கு வேறு வேலை கிடை யாதா? எனும் பாணியில் கோபமாக திருப்பி கேட்டு விடுவார்கள். ஆனால் உங்கள் கம்ப்யூட்டர் சும்மாதானே இருக்கிறது. சும்மா இருக்கும் நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்ள சம்மந்தமா என்று கேட்டால் யார் வேண்டு மானாலும் சம்மதிக்கக் கூடும்.

 

இப்படி உலகம் முழுவதும் பலர் சம்மதித்திருக்கின்றனர். அவர்களின் கம்ப்யூட்டர்கள் சும்மா இருக்கும் நேரத்தில் மகத்தான செயலின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகின்றன.
பொதுவாக மிகப் பெரிய அளவில் கம்ப்யூட்டரில் செயலாற்றல் தேவைப்படும் பிரம்மாண்டமான திட்டங்களை சிறுசிறு பகுதியாக பிரித்து தனித்தனி கம்ப்யூட்டர்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இவை செயல்பட்டு வருகின்றன.
பூமிக்கு வெளியே உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளதா என்பதை அறிவதற்கான பிரம்மாண்ட சாப்ட்வேர் இந்த முயற்சியை துவக்கி வைத்தது. 

அதன் பிறகு புற்றுநோய்க்கான ஆதார மரபணுவை கண்டறியும் சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இப்படி சிதறிக் கிடக்கும் கம்ப்யூட்டர் களின் ஆற்றலை பயன்படுத்தி வருகின்றன.

இதே பாணியில் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் ஸ்கிரீன்சேவரை நுழைத்து தூங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர்களை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தலாம்.
இதற்கான உயிர்த் துடிப்பு மிக்க உதாரணமாக மிஸ்சிங் கிட் சேவர் திட்டத்தை குறிப்பிடலாம். உண்மையிலேயே இந்த திட்டத்தின் பின்னே உள்ள யோசனை அற்புத மானது; நிகழ வைக்கக் கூடியது. நடைமுறையில் மிகவும் அவசிய மானது.

குழந்தைகள் பல்வேறு காரணங் களால் காணாமல் போகின்றனர். காணாமல் போகும் குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பது கடினமான காரியம்தான். குழந்தைகள் காணாமல் போகும் துரதிருஷ்டவசமான அனுபவத்திற்கு ஆளாகும் பெற்றோர்களில் எத்தனை பேருக்கு அவர்கள் திரும்பி கிடைக்கும் பாக்கியம் சாத்திய மாகிறது என்று தெரியவில்லை.
இந்த நிலைக்கு குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல் வதற்கில்லை. விஷயம் என்னவென்றால் குழந்தை காணாமல் போன உடனேயே அது பற்றிய தகவல் பரவலாக்கப்பட்டு அனைத்து முனைகளிலும் 

யாராவது ஒருவர் தேடும் நிலை இருந்தால் அநேக குழந்தைகளை கண்டு       பிடித்து விடலாம். இல்லை யென்றால் காணாமல் போன குழந்தை கிடைப்பது என்பது அதிர்ஷ்டத்தை சார்ந்ததே! காணாமல் போன விவரத்தை தெரிவிப்பதற்காக இப்போது புகைப் படங்களை சுவரொட்டிகளாக ஒட்டுவது, விளம்பரம் செய்வது, டிவியில் காண்பிப்பது போன்ற யுக்திகள் பின்பற்றப்படுகின்றன.

இதெல்லாம் விட சக்தி வாய்ந்த யுக்தி உங்கள் கம்ப்யூட்டரில் குவிந்து இருக்கிறது. அதனை ஒரு அற்புதமான ஸ்கிரீன் சேவரின் மூலம் தட்டி எழுப்பி விடலாம். ஸ்கிரீன் சேவர் பொதுவாக அழகானதாகவும், அலங்காரமான தாகவும் மட்டுமே கருதப்படுகிறது. அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்கிரீன் சேவர் காணாமல் போன குழந்தைகளை தேடி கண்டுபிடிக்கக் கூடிய ஆயுதமாகவும் மாறலாம். அதற்கு ஒருவர் செய்ய வேண்டிய தெல்லாம் காணாமல் போன குழந்தைகளை தேடி கண்டு பிடிப்பதற்கான அமைப்பு வெளியிட்டுள்ள ஸ்கிரீன் சேவரை பயன்படுத்த சம்மதிப்பது மட்டுமே.

கனடாவை சேர்ந்த குளோபல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்ஸ் எனும் அமைப்பு, காணாமல் மற்றும் சுரண்டப்படும் தேசிய மையத்தின் ஆதரவோடு இந்த ஸ்கிரீன் சேவரை உருவாக்கியுள்ளது.  இந்த ஸ்கிரீன் சேவரில் என்ன விசேஷமென்றால் சமீபத்தில் காணாமல் போன குழந்தைகளின் புகைப்படங்கள் இதில் இடம் பெற்றிருக்கும். அவ்வப்போது புதிய படங்கள் மாறிக் கொண்டே  இருக்கும்.

இந்த ஸ்கிரீன் சேவரை பயன்படுத்துவதன் மூலமாக நமது கம்ப்யூட்டரில் இந்த காணாமல் போன குழந்தைகளின் படங்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கும். இப்படி நாடெங்கும் இருக்கும் கம்ப்யூட்டர்களில் காணாமல் போன குழந்தைகளின் படங்கள் தென்பட்டு கொண்டே இருக்கும்போது தற்செயலாக குழந்தையை பார்த்த/ பார்க்க வாய்ப்புள்ள யார் கண்ணிலாவது அந்த படம் பட்டு அக்குழந்தை மீட்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பெரும்பாலான நேரங்களில் காணாமல் போன குழந்தை நம்மை கடந்து போயிருக்கலாம். ஆனால் நமக்கு அது தெரிய வாய்ப்பில்லை. 

இப்போது இந்த ஸ்கிரீன் சேவர் அந்த வாய்ப்பை உண்டாக்கி விடும் சாத்தியமிருக்கிறது.
கனடாவில் உள்ள காவல் நிலையம் ஒன்று தங்கள் கம்ப்யூட்டர்களை அனைத்து கிரிமினல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் வரிசையாக சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தது. 

அதனை பார்க்க நேர்ந்த காவலர்கள் தீர்க்கப்படாமல் இருக்கும் வழக்குகள் தொடர்பான விழிப்புணர்வை பெற்று செயல்பட்டனர். இதனால் பல தீர்க்கப்படாத வழக்குகள் முடிவுக்கு வந்தன. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட உத்வேகத்தின் விளைவாக காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்கவும் இதே விதமான வழியை பயன் படுத்திக்கொள்ள மேற்சொன்ன ஸ்கிரீன் சேவர் உருவாக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் அமெரிக்காவை மனதில் கொண்டு இந்த ஸ்கிரீன் சேவர்  உருவாக்கப் பட்டுள்ளது.  உண்மை யில் ஒவ்வொரு நாட்டுக்கும் இப்படியொரு ஸ்கிரீன் சேவர் வேண்டும்.