Category Archives: தேடல்

வேலை வேட்டை தளம்

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது.
வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள் பயோடேட் டாவை இடம்பெற செய்யலாம்.
.
வேலைக்காக பொருத்தமானவர் களை தேடி கொண்டிருக்கும் நிறு வனங்கள் அதற்கான அறிவிப்பை இடம் பெற செய்யலாம். ஆக, வேலைத் தேடுபவர்கள் தங்களுக்கு ஏற்ற வாய்ப்பு எந்தெந்த நிறுவனங் களில் இருக்கிறது என்று இந்ததளங் களின் மூலம் தேட முடியும். அதே போல வர்த்தக நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நபர்கள் பற்றிய விவரங்களை பயோடேட்டா கடலில் தேடிப்பார்க்க வும் முடியும்.

இந்த வகையில் வேலைத் தேடுபவர் மற்றும் வேலை தருபவர் இடையே பாலமாக வேலைவாய்ப்பு தளங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு தளத்திற்கும் அதன் தனித் தன்மைக்கேற்ப கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், புகழ் பெற்ற மான்ஸ்டர் டாட்காம் தளத்தில் துவங்கி, வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தளங்களின் பொது அம்சம் மேலே குறிப்பிட்டவையாகத்தான் இருக்கும்.

ஆனால் ஜாப்-ஹன்ட் தளத்தில் இந்த அம்சம் எதுவுமே கிடையாது. இந்த தளத்தில் வேலை வாய்ப்பை தேடிக் கொண்டிருப்பவர்கள் தங்களை பற்றிய விவரங்களை இடம் பெற வைப்பதற் கான வழி கிடையாது.

நிறுவனங்களும் தங்களது அறிவிப்பை இங்கே இடம் பெற வைக்க முடியாது. என்றாலும் கூட இந்த தளம் வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கு சகல விதங்களிலும் உதவக்கூடிய தளமாகவே இருக்கிறது.

உண்மையில் வேலை வேட்டை என்று பொருள்படும் இந்த தளத்தின் பெயருக்கு 100 சதவீதம் பொருந்தக் கூடிய வகையில் இந்த தளம் வேலை வாய்ப்பை பெற உதவி செய்கிறது.

வேலை தேடுபவர்களின் விவரங் களை பதிவு செய்ய அனுமதிக்கா விட்டாலும், இந்தத்தளம், மற்ற வேலை வாய்ப்பு தளங்களுக்கான இணைப்புகளை வழங்குகிறது. இவ்வாறு 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்பு இணைப்புகள் இந்த தளத்தின் அடிநாதமாக விளங்குகின்றன.

இணையவாசிகள் தங்களுக்கு தேவையானதை பெறக் கூடிய வகை யில் இந்த இணைப்பு கள் அனைத்தும் அவற்றுக்குரிய தலைப்பு களின் கீழ் தொகுத்து அளிக் கப் பட்டுள்ளன.
முன்னணி வேலை வாய்ப்பு தளங்க ளோடு இத்தளம் ஒப்பந்தம் செய்து கொண்டு அவற் றில் உள்ள விவரங் களை இணையவாசிகளுக்கு அளிக் கிறது.

எனவே இந்தத்தளம் வேலை தேடி வருபவர்களுக்கு பய னுள்ள தகவல்களை சுட்டிக் காட்டுகிறது. இது தவிர, வேலைவாய்ப்பு தொடர் பான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

வேலைதேடும் போது கவனிக்க வேண்டியவை, பயோடேட்டாவை தயார் செய்யும் முறை. எந்த வேலை வாய்ப்பு தளத்தில் யார் வேலை தேடலாம் என்பது போன்ற பயனுள்ள குறிப்புகள் இந்த கட்டுரைகளில் உள்ளன.

எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த தளம், ஏற்கனவே வேலையில் இருந்து அதனை இழந்து தவிப்பவர் களை மனதில் வைத்து உருவாக்கப் பட்டுள்ளது. வேலைவாய்ப்பு என்பது ஒரு வழி தானே தவிர, அதுவே ஒரு இறுதியான இடம் அல்ல என்பது இந்த தளத்தின் கொள்கையாக இருக்கிறது.

இந்த தளத்தின் உரிமையாளரான சூசன் ஜாய்ஸ், பல ஆண்டுகளுக்கு முன்னர் வேலையை இழந்து தவித்த போது, தன் போன்றவர்களுக்கு மறு வேலைவாய்ப்பை தேடித் தருவதற் காக இந்த தளத்தை நடத்தலானார்.

ஏற்கனவே செயல்பட்டு வந்த வேலைவாய்ப்பு தளத்தை விலைக்கு வாங்கி, அதனை தற்போதைய பாதைக்கு அவர் அழைத்து வந்திருக்கி றார். பிரதானமாக அமெரிக்காவை மையமாக கொண்டே இந்த தளம் செயல் படுகிறது. அமெரிக்காவில் ஒவ் வொரு மாநிலம் அல்லது நகரத்திலும் உள்ள வாய்ப்புகளையெல்லாம் தனித்தனியே பட்டியலிட்டிருக்கின்றனர்.

எனவே நம்மவர்களுக்கு நேரடி யாக பயன் படும் என்று சொல்ல முடியாவிட்டாலும், நம்மூரில் இந்த தளத்தை பின்பற்றி ஒரு சிறப்பான வேலை வாய்ப்பு தளத்தை அமைப்பதற் கான உந்து சக்தியாக இந்த தளம் அமையலாம்.

————-
link;
www.job-hunt.org

இப்படியும் ஒரு தேடியந்திரம்-2

மனித மாமிச தேடியந்திரம்’ என்று சொல்லும் போதே நெருடலை ஏற்படுத்தலாம். இந்த நிகழ்வே நெருடலானது என்பதே விஷயம். பொது இடத்தில் தரும அடி போடுவது போல இன்டெர்நெட் உலகில் தவறுசெய்ததாக கருதப்படுபவர் மீது எல்லோரும் பாயும் நிகழ்வாகவே இது அமைகிறது.
.
சீன பூகம்பத்திற்கு பிறகு மட்டும் 5 பேர் இப்படி மனித மாமிச தேடியந்திர தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர். பள்ளி மாணவர்கள் சிலர் பூகம்பத்தால் பள்ளிக் கட்டிடம் இடிந்து தரை மட்டமாகி இருந்தால் பள்ளிக்கு விடுமுறை கிடைத்திருக்குமே என்று பேசி அந்தக் காட்சியை பதிவு செய்து இன்டெர்நெட்டில் பதிவேற்றினர். அவ்வளவுதான், பல இணைய வாசிகள் ஆவேசமடைந்து அந்த மாணவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, இன்டெர் நெட்டில் வெளியிட்டு அவர்களை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு இழிவுபடுத்தி விட்டனர். அதோடு, இமெயில் மூலமும் தாக்குதல் தொடுத்தனர். விளைவு அடுத்த சில நாட்களிலேயே அந்த மாணவர்கள் வேறு ஒரு வீடியோவை தயார் செய்து, “”நாங்கள் நாட்டை மிகவும் நேசிக்கிறோம், எங்கள் தவறை சுட்டிக்காட்டி யவர்களுக்கு மிக்க நன்றி” எனக் கூறி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

இதே போல ஹாங்காங் நகரைச் சேர்ந்த மாணவி தன்னுடைய வலைப்பதிவில் பூகம்பம் பாதிக்கப் பட்டவர்கள் மீது பரிவு இல்லை என்று எழுதியதை அடுத்து, கடும் கண்டனத் திற்கு ஆளானார். அந்த கண்டனக் கணைகள் இன்டெர்நெட் முழுவதும் எதிரொலித்தன. இதன் பயனாக அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியரால் எச்சரிக்கப்பட்டார். கடைசியில் அவர் வலைப்பதிவு தளத்தை மூட வேண்டியிருந்தது.

ஆக சீனாவில் இன்டெர்நெட்டில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளி யிட்டால் சக இணையவாசிகளின் கோபத்தினை சந்தித்தாக வேண்டும். இன்டெர்நெட் தரும் சுதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டு எந்த கருத்தை வேண்டு மானாலும் வெளிப்படுத்தலாம் என்பதே உலக நடைமுறையாக இருக்கும் போது சீனாவில் மட்டும் இணையவாசிகள் மாட்டிக்கொண்டு விழிக்க நேர்கிறது.

வலைப்பதிவு மூலமே (அ) வீடியோ படத்தின் வாயிலாகவோ தவறாக ஒரு கருத்தை தெரிவித்தால், இணைய வாசிகளின் கூட்டு தாக்குதலுக்கு இலக்காக வேண்டியது தான்! குறிப்பிட்ட அந்த நபர் தொடர்பான அந்தரங்க தகவல்களை எப்பாடு பட்டாவது திரட்டி, பகிரங்கப் படுத்தி அவமானப் படுத்தி விடுகின்றனர். சில நேரங்களில் இணையவாசி களால் வசைபாடப்பட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்படுவதும் உண்டு!

2006ம் ஆண்டு முதன் முதலில் இந்தப்போக்கு தலைதூக்கியதாக கருதப்படுகிறது.
வாங்ஜீ என்னும் இளம்பெண் தான் செல்லமாக வளர்த்த பூனைக் குட்டியை காலில் போட்டு மிதிப்பது போன்ற காட்சியை கேமிராவில் பதிவு செய்து அந்த வீடியோவை இன்டெர்நெட் மூலம் பகிர்ந்த கொண்டார். மண வாழ்க்கையில் தோல்வி அடைந்த அந்த பெண் தனது விரக்திக்கு இப்படி வடிகால் தேடிக் கொண்டார். ஆனால் இந்த கொடூர காட்சியை பார்த்த விலங்கின ஆர்வலர்கள் கொதித்துப் போய் விட்டனர்.

பொதுவாக இதுபோன்ற வீடியோவை வெளியிடுபவர்கள் தங்கள் அடை யாளத்தை மறைத்துக் கொண்டு கண்ணாமூச்சு காட்டு வார்கள். உண்மையில் தாங்கள் யார் என்பதை ரகசியமாக வைத்துக் கொள்ள முடிவதே பலரை மனம் போன விதமாக நடந்து கொள்ள வைக்கிறது. ஆனால் இந்த வீடியோவைப் பார்த்த உடனே இணையவாசிகள் தேடுதல் வேட்டையில் இறங்கி, அவரைப் பற்றிய தகவல்களை திரட்டி பகிரங்கப்படுத்திவிட்டனர். அதன் பிறகு இன்டெர்நெட் எங்கும் அவருக்கு எதிரான ஆவேச குரல்கள் ஒலிக்கவே

அந்தப்பெண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். விரக்தியின் உச்சியில் இப்படி செயல்பட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
இதன் பிறகு “சைனாபவுண்டர்’ என்னும் வலைப்பதிவாளர் இணைய வாசிகளின் கோபத்திற்கு இலக்கானார்.

ஹாங்காங் நகரில் வசித்து வந்த பிரிட்டிஷ்காரரான இவர், சீனாவில் தான் சந்தித்த பெண்களுடன் உறவு கொண்டவிதம் பற்றி வெளிப் படையாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வந்தார். இந்த பதிவுகளில் அவர் சீன பெண்கள் பற்றி மோசமான விதமாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சீன இணையவாசிகள் மீண்டும் பொங்கி எழுந்துவிட்டனர். அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததோடு “சைனா பவுண்டர்’ என்னும் புனைப் பெயர் பின்னே மறைந்திருக்கும் நபரின் அடையாளத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். விளைவு, அந்த நபர் வலைப்பதிவை நிறுத்திக் கொண்டார்.

இதன் பிறகு பலமுறை இப்படி இணையவாசிகள் தவறு செய்த வர்களை தட்டிக்கேட்கும் விதமாக செயல்படத் தொடங்கிவிட்டனர். பொது கோபத்திற்கு ஆளாகும் நபர்களின் அந்தரங்க விவரங்களை திரட்ட இணையவாசிகள் தேடலில் ஈடுபடுவது பிரபலமாகி இந்த போக்கு “மனித சதைக்கான தேடல்’ என குறிப்பிடப்பட்டது. இதுவே ஆங்கிலத்தில் மனித மாமிச தேடியந்திரம் என பொருள் படும் வகையில் மொழி பெயர்க்கப் பட்டது.

இணையவாசிகளின் இந்தப் போக்கு சைபர் விழிப்புணர்வு என்றும் குறிப்பிடப்படுகிறது. சீனாவுக்கு மட்டுமே உரித்தான இணைய நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது.
சீனாவில் குற்றங்களை தண்டிப் பதில் அரசு தரப்பிலான மெத்த னத்தால் அதிருப்தி அடைந்துள்ள சராசரி சீனர்கள் இப்படி சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதா கவும் விளக்கம் தரப்படுகிறது.

இப்படியும் ஒரு தேடியந்திரம்-1

del-1எத்தனையோ வகை தேடியந்திரங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்! மனித மாமிச தேடியந்திரம் பற்றி அறிவீர்களா?
.
பெயரே விசித்திரமாகவும், வில்லங் கமாகவும் இருப்பதாக தோன்றுகிறதா? உண்மையில் இது விவகாரமான தேடியந்திரம்தான்! இதனை கண்டு அஞ்சி நடுங்காத சீனர்களே கிடையாது என்றும் சொல்லலாம்.

பல அப்பாவி சீனர்கள் யோசிக்காமல் செய்த தவறுக்காக இந்த தேடியந்திரத்திடம் தலை வணங்கி இருக்கின்றனர். இன்னும் சிலர் கண்ணீர் விட்டு குறையாக மன்னிப்பு கேட்டு மண்டி யிட்டிருக்கின்றனர். வேறு சிலரோ ஓடி ஒளியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆக கொஞ்சம் பயங்கரமான தேடியந்திரம்தான்! ஆனால் கூகுலுக்கு போட்டியான தேடியந் திரமோ, கூகுலைப் போன்ற தேடியந்திரமோ அல்ல! சொல்லப் போனால் இது சம்பிரதாயமான தேடியந்திரமே அல்ல! இணைய வாசிகள் கூட்டு முயற்சியில் நடத்தப்படும் தேடுதல் வேட்டையே இந்த பெயரில் குறிப்பிடப்படுகிறது.

இந்த வேட்டை ஒரு தொடர் நிகழ்வாக நடைபெற்று வருவதே, கவனத்திற்கு உரியதாகவும், கவலை அளிப்பதாகவும் அமைந்துள்ளது. இன்டெர்நெட் உலகில் மனித சக்தி தேடியந்திரம் என்னும் கருத்தாக்கம் தற்போது பிரபலமாக பேசப் படுகிறது. தேடல் முடிவுகளை பட்டியலிட, இணையவாசிகளின் பங்களிப்பையும் பரிந்துரையையும் பயன்படுத்திக் கொள்ளும் புதுயுக தேடியந்திரங்கள் இவ்வாறு குறிப் பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவை ஹின் பவர்டு சர்ச் இன்ஜின்ஸ் என்று அழைக்கப் படுகின்றன. ஆனால் சீனாவிலோ கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், ஹியுமன் ஃபிளஷ் சர்ச் இன்ஜினாக உருவெடுத்துள்ளது.

தவறு செய்த ஒருவரைப்பற்றிய தனிப்பட்ட விவரங்களை தேடிப்பிடித்து, இன்டெர்நெட்டில் அவற்றை பகிரங்கமாக வெளியிட்டு, தலைகுனிய வைக்கும் செயல்தான் இப்படி குறிப்பிடப்படுகிறது.

இந்தப் போக்கின் தீவிரத்தை உணர ஒரு சில உதாரணங்களை பார்க்கலாம்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு உண்டானது. பூகம்பத்தை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஒரு இளம்பெண், வெப் கேமரா முன் அமர்ந்து தனது கருத்துக்களை பதிவு செய்து வெளியிட்டார்.

எப்போது டிவியை திருப்பினாலும், பலியான உடல்களையும், காய மடைந்த மனிதர்களையும் காட்டிக் கொண்டிருக் கின்றனர். இவற்றை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழியில்லையே எனக்கூறிய அந்த இளம்பெண், “ஒரு சிலர் தானே பலியாகி உள்ளனர். எப்படியும் சீனாவில் கோடிக் கணக்கானோர் உள்ளனரே’ என்றும் பேசியிருந்தார்.

மனிதாபிமானமற்ற பேச்சு தான்! கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் இளம்பெண் ஒருவர் இப்படி பேசியிருப்பது திடுக் கிடத்தான் வைக்கும். வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் தான் இது.

நம்மூரில் இப்படி ஒருவர் சொல்லி யிருந்தால் என்ன செய்திருப்போம்! “இப்படியும் ஒரு பெண்ணா’ என கோபத்தை வெளிப்படுத்தி சும்மா விட்டிருப்போம். ஆனால் சீனாவில் நடந்த கதையே வேறு.

இந்த வெப் கேமரா பேச்சு கண்ணில் பட்டதுமே கொதித்துப் போன இணையவாசிகள் “”உன்னை சும்மா விட்டோமா பார்” என்று காரியத்தில் இறங்கி விட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் எல்லாம் அந்த இளம்பெண் யார், அவரது பெயர் என்ன, அவர் எங்கே பணி புரிகிறார் போன்ற விவரங்களை எல்லாம் தோண்டி எடுத்து, இன்டெர் நெட்டில் வெளியிட்டு விட்டனர்.

அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்றவர்கள் உள்ளிட்ட அந்தரங்க விவரங்களும் வெளியிடப்பட்டன. அவருடைய பொறுப்பற்ற பேச்சு, விவாதிக்கப்பட்டு, விமர்சிக் கப்பட்டு, கண்டனத்திற்கும் ஆளானது. இணைய குழுக்கள், அரட்டை அறைகள் என இன்டெர்நெட் முழுவதும் அந்த இளம்பெண் கடும் கண்டனத்திற்கு ஆளானார்.

“இந்த பெண்ணை அவமானப் படுத்துங்கள்’ என்று ஒரு இணை யவாசி கோபமாக எழுதியிருந்தார். ஆயிரக் கணக்கானோர் அதை தான் செய்து கொண்டிருந்தனர்.
இந்த கோபாவேசம் உச்சத்தை தொட்டதன் விளைவாக, உள்ளூர் போலீசார் தலையிட்டு அந்த பெண்ணை கைது செய்தனர்.

இளம்பெண்ணின் செயல் தவறு என்றாலும், அவர் மீது எந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பது எனத் தெரியாமல் காவலர்கள் குழம்பித் தவித்தனர். அந்த இளம்பெண் நிச்சயம் இத்தகைய தாக்குதலை எதிர் பார்த்திருக்க மாட்டார். ஏதோ மனதில் தோன்றியதை பேசி, வெளியிட்டு விட்டார். அதை நினைத்து அவரே கூட பின்னர் வருந்தியிருக்கலாம். இல்லை என்றாலும் கூட அவரது செயல் எந்த பெரிய அதிர்வையும் ஏற்படுத்தி இருக்காது.

ஆனால் சீன இணையவாசிகள் அப்படி எல்லாம் விட்டு விட தயாராக இல்லை. யாராவது ஒருவர் ஏற்க முடியாத செயலில் ஈடுபடுவது இன்டெர்நெட் மூலம் தெரிய வருமானால், உடனே அவர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் திரட்டி வெளியிட்டு அசிங்கப்படுத்தி விலகுகின்றனர். யாரோ முகம் தெரியாத நபர் பற்றிய விவரங்களை தேடுவது ஒன்றும் அத்தனை சுலப மானதல்ல. ஆனால் சீன இணைய வாசிகள் பலர் இந்த தேடலில் ஈடுபடத் தயாராக இருப்பதால், ஒருவரின் ஜாதகத்தையே வெளியி டுவது சாத்தியமாகிறது.

பொதுவாக தகவல்களை தேட கூகுல் போன்ற தேடியந்திரங்களை தானே பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக ஒருவரைப்பற்றிய விவரங்களை தேடி கண்டுபிடிக்க இணையவாசிகளே களத்தில் இறங்கி விடுவதால், இந்த முயற்சி ஹயுமன் ஃபிளஷ் சர்ச் இன்ஜின் என்று அழைக்கப்படலாயிற்று! தமிழில் மாமிச தேடியந்திரம் என்று சொல்லலாம்!
(நாளை தொடரும்)…..’

தேடியந்திரத்தின் நிறம் கருப்பு

தலித்களுக்கு என்று தனியே ஒரு தேடியந்திரமோ, சிறுபான்மையினருக்கான பிரத்யேக தேடியந்திரமோ உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்! தேடியந்திர உலகில் இத்தகைய பாகுபாடு அவசியமா? என்ற கேள்விக் கான பதில் என்னவாக இருக்கும்?

எது எப்படியோ, அமெரிக்காவில் கருப்பர்களுக்கான தேடியந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கருப்பர்களின் சமூகத்திற்கனா முதல் தேடியந்திரம் என்னும் வர்ணணை யோடு “ரஷ்மோர் டிரைவ்’ என்னும் இந்த தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது.

அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கணிசமாக இருப்பதும் பல விஷயங்களில்
இவர்கள் சிறுபான்மையினருக்கே உரித்தான பாகுபாட்டை அனுபவிப்பதும் தெரிந்த விஷயம்தான். திரைப்படங்களிலும் சரி, ஊடகங்களிலும் சரி தங்களை சரியாக பிரதிபலிப்பதில்லை என்ற மனக்குறை அமெரிக்காவில் வசிக்கும் கருப்பர்கள் மத்தியில் உண்டு. பத்திரிகைகளை புரட்டும்போதோ, டிவி நிகழ்ச்சிகளை பார்க்கும்போதோ இவை எல்லாம் உங்களுக்கானவை எங்கள் மன உணர்வுகள் என்றே கருப்பர்கள் குமுறுவதோ, புழுங்குவதோ உண்டு.

கருப்பர்களின் நலனுக்காக போராடி வருபவரான ஜானி டைலர் இந்த உணர்வுகளை எல்லாம் நன்கறிந்தவர். அதோடு, பொது சமூகத்தில் கருப்பர் கள் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது போலவே, இன்டெர்நெட் உலகில் குறிப்பாக தேடியந்திரங்கள் மத்தியில் கருப்பர்கள் கண்டு கொள்ளப் படுவதில்லை என்ற உணர்வும் கொண்டவர். அதனால் தான் கருப்பர் களுக்கான தேடியந்திரமான ரஷ்மோர் டிரைவை உருவாக்கியிருக்கிறார்.

செய்தி தளம் என்று வரும்போது கருப்பர்கள் தங்களுக்கென உள்ள பிரத்யேக தளங்களுக்கு நேரடியாக சென்றுவிடும் சாத்திரம் இருக்கிறது. ஆனால் தகவல்களை தேடுவது என்று வரும்போது கூகுலை விட்டால் வேறு கதியில்லை.

கூகுல் மற்றும் வேறு எந்த தேடியந்தி ரத்தை கருப்பர்கள் பயன்படுத்தினா லும், தேடல் முடிவுகளை பார்த்து நான் தேடும் தகவல்கள் எங்கே? என்று கேட்க நினைக்கும் தருணங்கள் உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் தங்களுடைய எதிர்பார்ப்பை உணர்த் தும் வகையில், மேலும் சில குறிப்புச் சொற்களை சேர்த்து தேடிப்பார்க்க வேண்டும். அப்போதும் கூட கருப்பர் களுக்கான தேடல் முடிவுகள் முதலில் வந்து நிற்கும் என்பதற்கு உறுதி இல்லை.

உதாரணமாக பொதுவாக “பாடல்கள்’ என்று குறிப்பிட்டு தேடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், அப்போது தங்களது மண்ணின் மைந்தர்கள் பாடிய ரெகே (அ) புளூஸ் வகை பாடல்கள் தொடர்பான தகவல்களை தான் கருப்பர்கள் விரும்புவார்கள். ஆனால் கூகுலுக்கு இந்த நுட்பம் எல்லாம் புரியாது. பொதுவான நோக்கில் முன்னிலை பெறும் முடிவுகளையே அது பட்டியலிடும்.

எனவே தேடுபவர்கள் தான் தங்கள் எதிர் பார்ப்பை வேறுபட்டது என்பதை உணர்த்த வேண்டும். குறிப்புச் சொற்கள் இதற்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தெரிய வில்லை.

ஆனால் டைலர் உருவாக்கியுள்ள “ரஷ்மோர் டிரைவ்’ தேடியந்திரத்தில் இந்த பிரச்சனை இல்லை. இங்கு ஒரே ஒரு குறிப்புச் சொல் போதுமானது கருப்பர்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் தானாக முன்னுக்கு வந்து நிற்கும்.

கருப்பர்கள் அதிகம் வாழும் பகுதிகளை வரைபடத்தில் ஒப்பிடச் செய்வதன் மூலம் இது சாத்தியமாகிறது. இந்த உத்தியை ஜியோபாயாஸிங் என்று டைலர் குறிப்பிடுகிறார். பாடல் என்றால் சார்பு நிலை என்று பொருள். சார்பு நிலை என்பது பொதுவாக எதிர்மறையானதா கவே கருதப்படும். அதற்கு மாறாக கருப்பர்களுக்கு சாதகமாக செயல்படக்கூடிய சார்பு தன்மையை தான் டைலர் ஜியோபையாஸிங் என்கிறார்.

அதாவது, அமெரிக்காவில் கருப்பர்கள் அதிகம் வாழும் இடங்களை எல்லாம் சேகரித்து அவற்றை அமெரிக்க வரைபடத்தின் மீது பொறுத்தி இருக்கிறார். இதன் மீது பிரபல தேடியந்திரமான ஆல்க் டாட்காமிலிருந்து பெறப்பட்ட கடந்த 5 ஆண்டு கால தேடல் முடிவுகள் ஒப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் கருப்பர் வாழும் பகுதியிலிருந்து ஒரு தேடல் கோரிக்கை வருகிறது என்றால், தேடல் முடிவுகள் கருப்பர் சார்போடு பட்டியலிடப்படும். உதாரணமாக கருப்பர்கள் அதிகம் வசிக்கும் நகரமான அட்லாண்டாவில் உள்ள ஒருவர், “விட்னி’ என்பவர் பெயரை டைப் செய்தால் அவர், விட்னி ஹூஸ்டன் என்னும் கருப்பின பாடகரை (அ) சிவில் உரிமை போராளி விட்னி யங்கையே தேட அதிகம் வாய்ப்பிருப்பதாக புரிந்து கொண்டு இவர்கள் தொடர்பான தகவல்களே முன்னிறுத்தப்படும்.

வழக்கமான தேடியந்திரம் என்றால், விட்னி அருங்காட்சியகம் போன்ற முடிவுகளை தான் முதலில் தரும். கருப்பர்கள் இதை பார்த்ததுமே வெறுத்துப்போய்விடுவார்கள். ரஷ்மோர் டிரைவோ அவர்கள் மனமறிந்து, பொருத்தமான தேடல் முடிவுகளை அளித்து அகமகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.

டைலர் இந்த சேவையை தான் கண்டு பிடிக்கவில்லை என்றும், கருப்பர்களுடன் இன்டெர்நெட் பயன்பாட்டு அனுபவம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது இதற்கான தேவையை உணர்ந்ததாகவும் கூறுகிறார். மேலும் அவர்கள் ஒரு கருப்பு தேடியந்திரத்தை எதிர்பார்க்க வில்லை என்றும் தங்கள் உணர்வு களை புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மேம்பட்ட தேடியந்திரத்தையே விரும்பியதாக கூறும் அவர், அதன் அடிப்படையில்தான் கருப்பர்கள் தேவையை பூர்த்தி செய்யும் புதிய தேடியந்திரத்தை வடிவமைத்ததாக கூறுகிறார்.

கருப்பர்கள் என்றில்லை, லத்தீன் அமெரிக்கர்கள், பெண்கள் போன்ற தனித்தனி பிரிவுகளுக்கும் பொருத்த மான தேடியந்திரத்தை உருவாக்கலாம் என்கிறார் அவர். அமெரிக்கா வாழ் இந்தியர்களையும், உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களையும் கூட இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த தேடியந்திரம் அறிமுகமாகி ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில், சராசரி அமெரிக்கர்கள், அதாவது வெள்ளை யர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் ஆய்வு நோக்கில் இந்த தேடியந்தி ரத்தை அதிகம் பயன்படுத்துவது வியப்பிற்குரிய விஷயம் என்கிறார் டைலர்.

இதுபோன்ற “தனி’ தேடியந்திரங்க ளுக்கான தேவையின் இன்னொரு அடையாளமாகவும் இதனை புரிந்து கொள்ளலாம். ரஷ்மோர் டிரைவ் தளம் கருப்பர்களுக் கான செய்தி மற்றும் வேலை வாய்ப்புகளையும் வழங்கி வந்தாலும் தேடல் உத்தியே அதன் சிறப்பம்சமாக இருக்கிறது.
———–
link;www.rushmoredrive.com

புதியதொரு தேடியந்திரம்

மாற்று மருத்துவம், மாற்று எரிபொருள், மாற்று தொழில்நுட்பம் என்றெல்லாம் பரவலாக பேசப்படும் அளவுக்கு மாற்று தேடியந்திரம் பற்றி யாரும் பேசுவதாக தெரியவில்லை.
மாற்று தேடியந்திரத்திற்கான முக்கியத்துவத்தையும் பலரும் அறிந்திருப்பதாக தெரியவில்லை. இன்டெர்நெட் உலகில் தேடல் என்றாலே எல்லோருக்கும் கூகுல்தான் நினைவுக்கு வரும். அதிலும் குறிப்பாக இன்டெர்நெட்டுக்கு புதியவர்கள் கூகுலை மட்டுமே தேடியந்திரம் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர்.
கூகுல் தனது பணியை செவ்வனே செய்து வந்தாலும், கூகுலைத் தவிரவும், நூற்றுக்கணக்கான தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன.அவற்றில் சிலவற்றுக்கு மாற்று தேடியந்திரம் என்னும் அந்தஸ்தை கொடுத்து கூகுலுக்கு பதிலாக பயன்படுத்துமாறு பரிந்துரைக்கலாம்.

இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பது டல்சீனியாடாட்காம். கூகுல் போன்ற சாப்ட்வேர் மூலமாக தேடல் முடிவுகளை பட்டியலிடும் தேடியந்திரங்களை விட மனிதர்கள் முனைப்போடு தேடி முடிவுகளை பட்டியலிடும் தேடியந்திரமே சிறந்தது எனும் ஒரு கருத்து நிலவுகிறது. அந்த வகையான தேடியந்திரம்தான் டல்சீனியா.

மார்க் மோரன் என்பவர் இந்த தேடியந்திரத்தை உருவாக்கியிருக்கிறார். இன்டெர்நெட் யுகத்தின் நூலகம் என்று இந்த தேடியந்திரத்தை அவர் வர்ணிக்கிறார். உங்களுக்கு தேவையான தகவல்களை தேடித்தருவதுதான் எங்கள் பணி என்றும் அவர் பெருமையோடு சொல்கிறார்.

கூகுலும் அதைத்தானே செய்கிறது. அதுவும் சிறப்பாக செய்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். அப்படி கேட்டால் அதற்கு மார்க் அளிக்கும் பதில் இப்படி இருக்கிறது:
“கூகுல் உள்ளிட்ட பெரும்பாலான தேடியந்திரங்கள் நொடிப்பொழுதில் லட்சக்கணக்கான முடிவுகளை கொண்டு வந்து கொட்டி விடுகின்றன.

ஆனால் பல நேரங்களில் இணையவாசிகள் தேடுவதை இவற்றில் பெற முடியவில்லை. பெரும்பாலானோர் முதல் பக்கத்தில் உள்ள 5 முடிவுகளை பார்த்து விட்டு, தாங்கள் தேடுவது கிடைக்கவில்லை என்று வேறு குறிப்பு சொற்களை பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

இப்படி குறிப்பு சொற்களை மாற்றி பார்த்து விட்டு, தங்களுக்கு தேவையானது கிடைக்கவில்லை என்று வெளியேறி சென்று விடுகின்றனர். இத்தகைய தேடியந்திர களைப்புக்கு பலர் ஆளாகின்றனர்.

இவர்கள் சார்பாக எல்லாம் அவர்கள் தேடும் சரியான முடிவுகளை பட்டிய லிட்டுத்தருவதுதான் எங்களுடைய நோக்கம்’. இணையவாசிகள் பல நேரங்களில் எதிர்பார்த்தது கிடைக்காமல் நொந்து போகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், கூகுலுக்கே முடியாதது புதியதொரு தேடியந்திரத்திற்கு எப்படி சாத்தியம்?

இங்கேதான் டல்சீனியா விசேஷ முறையை பின்பற்றுகிறது என்கிறார் மார்க்.
சாப்ட்வேரை கொண்டு இணைய பக்கங்களை பட்டியலிடாமல், இன்டெர்நெட்டில் நல்ல மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எங்கெல்லாம் கிடைக்கின்றனவோ அந்த தளங்களை எல்லாம் குறித்து வைத்து கொண்டு அவற்றிலிருந்து தேடல் முடிவுகளை தங்கள் படை தொகுத்து தருவதாக இவர் கூறுகிறார்.

தேடியந்திரங்கள் பார்வை படாத எண்ணற்ற தகவல்கள் இன்டெர்நெட்டில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் தங்களுடைய படை தேடி வைத்திருப்பதாக அவர் கூறுகிறார். இதன் காரணமாக இணையவாசிகளின் தேடலுக்கு பொருத்தமான முடிவுகளை தர முடிவதாக அவர் நம்பிக்கையோடு சொல்கிறார்.

பல நேரங்களில் முதல் சில பக்கங்களுக்கு பிறகு அமைந்துள்ள தேடல் முடிவுகளில்தான் அற்புதமான தகவல்கள் மறைந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம் என்கிறார் அவர்.

கிட்டத்தட்ட 50 ஆயிரம் மணி நேரத்திற்கு மேல் அவருடைய ஊழியர்கள் இன்டெர்நெட் தகவல் களை திரட்டி ஒழுங்கு படுத்துவதில் செலவிட்டிருக்கின்றனர். ஆகையால் நீங்கள் செலவிட வேண்டிய நேரம் குறைந்துபோய்விட்டதாக அவர் கூறுகிறார்.

பிரதான தேடியந்திரங்கள் கைவிடும் போது டல்சீனியாவை பயன்படுத்தி பார்ப்பது ஒன்றும் தவறில்லை. டல்சீனியாவில் தகவல்களை தேடுவதும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

பிரதானமாக 3 பகுதிகளாக டல்சீனியா சேவை அமைந்திருக்கிறது. முதல் பகுதி இன்டெர்நெட் வழிகாட்டி. இதில்தான் தகவல்களை தேட வேண்டும். இரண்டாவது பகுதி “செய்திக்கு பின்னே’ என்னும் பெயரில் அமைந்துள்ளது.

இன்டெர்நெட்டில் செய்தி தளங்களுக்கு பஞ்சமில்லை என்றாலும், பெரும்பாலான செய்தித் தளங்கள் ஒரேவிதமான செய்தி களைத்தான் முன்வைக்கின்றன. இவைகள் கண்ணில்படாமல் சிக்கும் செய்திகளை இந்த பகுதி தொகுத்து தருகிறது.

3வது பகுதி நெட்செட்ரா என்பது. இன்டெர்நெட்டில் சுவையான விஷயங்கள் மற்றும் மனிதர்களை பற்றிய விவரங்களை இந்த பகுதி தொகுத்து தருகிறது. மாற்று தேடியந்திரம் என்ற வகையில் தாராளமாக டல்சீனியாவை முயற்சித்து பார்க்கலாம்
——–
link;
www.dulcinea.com