Category: இதர

இவர் ஸ்னேப்சாட் டாக்டர்!

சமூக ஊடக பயன்பாட்டிற்கான உதாரணங்கள் என்று வரும் போது பொதுவாக பிரபலங்களும், நட்சத்திரங்களும் தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். ஆனால் சமூக ஊடக பயன்பாட்டில் முன்னுதாரணமாக விளங்கும் பேராசிரியர்களும், டாக்டர்களும் கூட இருக்கின்றனர். இந்த பட்டியலில் இப்போது சமீபத்தில் அமெரிக்க டாக்டர் ஒருவரும் இணைந்திருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச்சேர்ந்த பல் மருத்துவரான டேனியல் ரூபின்ஷ்டியன் (Daniel Rubinshtein) எனும் அந்த டாக்டர் ஸ்னேப்சாட் சேவை மூலம் தனக்கான பாலோயர்களை தேடிக்கொண்டிருக்கிறார். அவர் தனது நோயாளிகளுடன் தொடர்பு கொள்ள […]

சமூக ஊடக பயன்பாட்டிற்கான உதாரணங்கள் என்று வரும் போது பொதுவாக பிரபலங்களும், நட்சத்திரங்களும் தான் முதலில் நினைவுக்கு வருவ...

Read More »

செயலி புதிது; கடன் நினைவூட்டி

மாத வருமானம், செலவுகளை குறித்து வைக்க உதவும் நிதி நிர்வாக செயலிகள் பல இருக்கின்றன. இந்த செயலிகளில் செலுத்த வேண்டிய பில்கள் போன்றவற்றையும் குறித்து வைக்கலாம். இதே போல, நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து செய்யும் செலவுகளை பதிவு செய்து, யாருக்கு எவ்வளவு தொகை என பங்கு பிரித்து செலவுகளை நிர்வகிக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. இந்த வகையில் இப்போது, தனிநபர்கள் தங்களுக்கு வர வேண்டிய கடன் தொகை மற்றும் தாங்கள் மற்றவர்களுக்கு தர வேண்டிய கடன் தொகைகளையும். […]

மாத வருமானம், செலவுகளை குறித்து வைக்க உதவும் நிதி நிர்வாக செயலிகள் பல இருக்கின்றன. இந்த செயலிகளில் செலுத்த வேண்டிய பில்க...

Read More »

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதுமையான நினைவூட்டல் சேவை

டாமி ரெய்சுக்கு முதலில் ஒரு பூங்கொத்து கொடுக்க வேண்டும்.இல்லை அவர் பூங்கொத்தை விரும்ப மாட்டார்.ரெய்ச்சுக்கு ஒரு கைகுலுக்கல் மூலமே பாராட்டி விடலாம். சைரஸ் இன்னவேஷன் எனும் சாப்ட்வேர் நிறுவனத்தை சேர்ந்த ரெய்ஸ் தனது குழுவினருடன் இணைந்து அறிமுகம் செய்திருக்கும் புதுமையான ஜிமெயில் நினைவூட்டல் சேவைக்காக தான் அவரை பாராட்ட வேண்டும். குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பாக அறிமுகமாகி இருக்கும் இந்த நினைவூட்டல் சேவை புதுமையானது மட்டும் அல்ல;லட்சிய நோக்கமும் கொண்டது- பெண்கள் உறுதியுடனும்,நம்பிக்கையுடனும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் […]

டாமி ரெய்சுக்கு முதலில் ஒரு பூங்கொத்து கொடுக்க வேண்டும்.இல்லை அவர் பூங்கொத்தை விரும்ப மாட்டார்.ரெய்ச்சுக்கு ஒரு கைகுலுக்...

Read More »

அடிப்படையான இணையம் என்றால் என்ன? பிரிபேசிக்சை முன்வைத்து சில கேள்விகள்

இணையம் கோடிக்கணக்கான இணையதளங்களை கொண்டிருக்கிறது. இவற்றில் பயன்பாட்டில் இல்லாத தளங்கள், வெறும் முகவரிகளாக பதிவு செய்யப்பட்டவை போன்றவற்றை எல்லாம் நீக்கிவிட்டால் கூட இணையதளங்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். இவற்றில் சிறந்த அல்லது பயன் மிகுந்த தளங்களை தேர்வு செய்வது என்பது சிக்கலான விஷயம் தான். பொதுவான பரிந்துரையாக ஒரு பட்டியல் போடலாமேத்தவிர , எல்லோரும் ஏற்றுக்கொள்ளகூடிய ஒரு அளவுகோள் சாத்தியமில்லை. ஏனெனில், இணையத்தை எந்த எடைத்தராசிலும் நிறுத்தி இது தான் சிறந்தது பகுதி என்று சொல்வதற்கில்லை. கற்றது […]

இணையம் கோடிக்கணக்கான இணையதளங்களை கொண்டிருக்கிறது. இவற்றில் பயன்பாட்டில் இல்லாத தளங்கள், வெறும் முகவரிகளாக பதிவு செய்யப்ப...

Read More »

நீங்கள் இன்ஸ்டாகிராம் கணவரா?

ஆண்டின் இறுதியில் வெளியான அந்த வீடியோ யூடியூப்பில் ஹிட்களை அள்ளி 2015-ன் வெற்றிகரமான வீடியோக்களில் ஒன்றாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது. இணையவெளி முழுவதும் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோ ரசித்து மகிழக்கூடியதாக இருப்பதோடு நம் காலத்து இணைய கலாச்சாரத்தை புன்னகைக்க வைக்ககூடியதாகவும் இருக்கிறது. அதோடு,நமது பாலின பார்வையின் சார்பு நிலை தொடர்பான விவாத்ததையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் ஒரு வெற்றிகரமான வீடியோவுக்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் கணவர் (Instagram Husband ) எனும் அந்த வீடியோ […]

ஆண்டின் இறுதியில் வெளியான அந்த வீடியோ யூடியூப்பில் ஹிட்களை அள்ளி 2015-ன் வெற்றிகரமான வீடியோக்களில் ஒன்றாகி கவனத்தை ஈர்த்...

Read More »