Tag Archives: america

1emoji

இமோஜி ஐகான்கள் மூலம் பேட்டி அளித்த ஆஸ்திரேலிய அமைச்சர்

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதற்கு முன் எந்த தலைவரும் அளித்திராத சாதனை பேட்டியை அளித்து வியக்க வைத்திருக்கிறார். அவர் இணையத்தில் இளைஞர்களின் மொழியாக இருக்கும் இமோஜி ஐகான்கள் மூலமாகவே பேட்டி அளித்திருக்கிறார்.

அரசியல் தலைவர்கள் பத்திரிகைகளுக்கும் ,இணைதளங்களுக்கும் பேட்டி அளிப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை தான். ஒரு சில தலைவர்கள் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலம் கூட பேட்டி அளித்த்துள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜூலி பிஷப், இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் முற்றிலும் இமோஜி ஐகான்கள் மூலமே கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். பிரபல இணையதளமான பஸ்ஃபீட் இந்த பேட்டியை உலகின் முதல் இமோஜி பேட்டி என்றும் வரனணையோடு வெளியிட்டுள்ளது.

enhanced-3269-1424047799-6ஸ்மைலிகளின் அடுத்த அவதாரங்களாக கருதப்படும் இமோஜி ஐகான்களை இணையவாசிகள் நன்றாக அறிந்திருக்கலாம். குறுஞ்செய்தி உரையாடல்களிலும் இதர இணைய உரையாடல்களிலும் இந்த ஐகான்கள் பிரபலமாக இருக்கின்ற்ன. குறிப்பாக வாட்ஸ் அப் பயனாளிகளி இந்த ஐகான்களுக்கு மிகவும் பரிட்சயமானவை.
புன்னகைகும் முகம், கேலி முகம், அழுகை முகம், கைகூப்பல், பூச்செண்டு என எத்தனையோ விதமான இமோஜி ஐகான்கள் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு பதிலாக மட்டும் அல்லாமல், ஒரு கருத்தை சுவையாக சொல்லவும் இந்த காட்சிரீதியிலான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்ற்ன.

சுருக்கமாக சொன்னால் இணைய யுகத்தில் இது இளைஞர்களின் மொழி.

ஆனால் எல்லோருமே இதை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் இமோஜி குறியீடுகளை பயன்படுத்துவதில் வல்லவராக கருதப்படுகிறார்.
குறுப்பதிவு சேவையான டிவிட்டரில் தீவிரமாக இருக்கும் பிஷப் அடிக்கடி இமோஜிகளையும் அழகாக பயன்படுத்தி வருகிறார். சமிபத்தில் கூட ஆஸ்திரேலியா யூரோவிஷன் போட்டியில் பங்கேற்க இருப்பதை நடன மங்கை, மற்றும் மைக் உள்ளிட்ட குறியீடுகளுடன் அவர் செய்தியாக வெளியிட்டிருந்தார்.

இப்படி இமோஜி பிரியையாக இருக்கும் அமைச்சர் பிஷப்புடன் பிரபல இணையதளமான பஸ்பீட் புதுமையான முறையில் இமோஜி மூலம் பதில் அளிக்க கேட்டு பேட்டிக்கண்டு வெளியிட்டுள்ளது.

குறுஞ்செய்தி வடிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பொருத்தமான இமோஜி குறியீடுகளாக பதில் அளித்துள்ளார். ஆரம்ப கேள்விகள் எளிதாக இருந்தாலும் , ரஷ்யாவுடனான உறவு , இந்தோனேசிய பிரச்ச்னை என சிக்கலான ராஜாங்க கேள்விகளுக்கும் அவர் இமோஜியில் பதில் அளித்திருக்கிறார்.
ரஷ்ய அதிபர் புதின்பற்றிய கேள்விக்கு ஆவேச முக்த்தை பதில் அளித்தவர், அமெரிக்காவுடான ஆஸ்திரேலிய உறவு பற்றி கேட்கப்பட்ட போது , கட்டை விரல் ,டிக் மற்றும் புன்னகை முகத்தை பதில் அளித்துள்ளார்.
சிக்கலுக்கு ஆளாகி இருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் பற்றிய கேள்விக்கு ஓட்டம் எடுக்கும் மனிதரின் குறியீட்டை பதிலாக்கியுள்ளார். தனது தனிப்பட்ட ஆர்வங்கள் குறித்தும் அழகாக இமோஜியில் பேசியிருக்கிறார்.ஆனால் அவர் பிரதமராகும் வாய்ப்பு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அரசியல்வாதிக்கே உரிய சாதுர்யத்துடன் புதிரான இமோஜியாக பதில் அளித்திருக்கிறார்.

இமோஜி போட்டிகள் தொடருமா? பார்க்கலாம்!

அமைச்சர் ஜூலி பிஷப்பின் இமோஜி பேட்டி: http://www.buzzfeed.com/markdistefano/emoji-plomacy#.el1XKZ8YOW

———

.

chelsea

அமெரிக்க சுற்றுலா தலங்களை அடையாளம் காட்டும் அருமையான இணையதளம்

அமெரிக்க சொர்கபுரி என்பது பலரது எண்ணம். இருக்கலாம்! நம்மவர்களில் பலரும் அங்கு மேற்படிப்பிற்கும், மேல் வாழ்க்கைக்கும் ( அங்குயே குடிபெயர்தல்) விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்கா பிழைக்க்செல்லவும் அங்கேயே தங்கிவிடவும் மட்டும் ஏற்ற தேசம் அல்ல; அந்நாடு சுற்றுலா நோக்கிலும் அருமையான பிரதேசம். அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க சுற்றுலா இடங்கள் அநேகம் இருக்கின்றன. ஆனால் பிரான்சும் ,இத்தாலியும், ஸ்பெயினும் சுற்றுலாவுக்காக அறியப்படும் அளவுக்கு அமெரிக்க அறியப்படவில்லை.

அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க அப்படி என்ன இருக்கிறது ? என்று கூட நீங்கள அப்பாவிதனமாக கேட்கலாம். இந்த கேள்விக்கு அழகாக பதில் அளிக்கிறது அட்ராக்‌ஷன்ஸ் ஆப் அமெரிக்கா இணையதளம்.  அமெரிக்காவில் இருக்கும் 50 மாநிலங்களிலும் பார்க்க வேண்டிய இடங்களை இந்த இணையதளம் அழகாக பட்டியல் போட்டு காட்டுகிறது.  உலகிலேயே மிகவும் மாறுபட்ட நிலப்பரப்பை கொண்ட பெரிய நாடு என்ற முறையில் அமெரிக்காவில் நியூயார்க்கின் வானுயர் கட்டடம் முதல் அலாஸ்கா, அரோசோனாவின் இயற்கை எழில் பகுதிகள் அவரை பார்க்க வேண்டிய இடங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது எனும் அறிமுகத்துடன் இந்த தளம் ஒவ்வொரு மாநில அழகையும் அறிமுகம்செய்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் பார்க்க வேண்டிய பத்து இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.  50 மாநிலங்களும் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த மாநில பட்டியலின் கீழ் அமெரிக்காவில் பார்க்க வேண்டிய பத்து இடங்கள் என்பது போன்ற பொதுவாக பட்டியல் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவுக்கு செல்பவர்கள் மட்டும் அல்ல அங்கேயே கிரீன் கார்டு வாங்கி செட்டிலானவர்கள் கூட இந்த தளத்தை பார்த்து பயன்பெறலாம்.

இந்த தளமே சிறப்பாக இருக்கிறது. இதில் இன்னொரு நல்ல விஷய்ம் என்ன என்றால் பட்டியலில் அடையாளம் காட்டப்படும் எல்லா இடங்களுக்கும் தனியே இணையதளம் இருக்கிறது. எனவே கூடுதல் விவரன்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவை சுற்றிப்பார்க்க: http://www.attractionsofamerica.com/

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

EM_slide2_1024 (1)காலத்தினால் செய்த நன்றி பெரிது என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். காலத்தினால செய்யப்படும் பாராட்டும் பெரிது தான். உரிய நேரத்தில் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும். பல சாதனை மனிதர்கள் இத்தகைய பாராட்டுகளால் தான் உருவாகியுள்ளனர். 

சரி, இத்தகைய பாராட்டு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? அவசரகால பாராட்டுக்களை வழங்க இருக்கவே இருக்கிறது இணையம். ஆம், நீங்கள் சோர்வுக்கு ஆளாகிய்ருந்தாலோ , அல்லது கொஞ்சம் ஊக்கம் தேவை என்றாலோ, எமர்ஜன்சி காம்ப்லிமெண்ட் இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள். ‘ உங்களைப்போல உலகில் யாருமே இல்லை’ என்பது போன்ற பாராட்டு வாசகத்தோடு இந்த இணையதளம் உங்களை வரவேற்கும். 

நல்லதாக நாலு வார்த்தை என்பார்களே, அதே போல இந்த இணையதளத்தில் எப்போதுமே ஊங்களைப்பற்றி ஊக்கம் அளிக்கும் வாசகம் இடம்பெற்றிருக்கும். இந்த வாசகம் உங்களை புன்னகைக்க வைத்து, உற்சாகம் கொள்ள வைத்தால், கிழே உள்ள நன்றி, பட்டனை அழுத்தலாம். ( உங்களை மகிழ்வித்த வாசகத்தை அச்சிட்ட வடிவில் ஆர்டர் செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது ). இல்லை, இன்னும் மோசமான மனநிலை தான் நீடிக்கிறது எனும் பட்டனை அழுத்தினால், உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய வேறு ஒரு வாசகம் தோன்றும்.

குறிப்பாக உங்களுக்கு என்று இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமான வாசகங்கள் தான் என்றாலும், இந்த பாராட்டுக்கள் நிச்சயம் மன மகிழ்ச்சியை தரும். 

அவசர உலகில் இப்படி அவசரகால பாராட்டும் தேவைப்பட தான் செய்கிறது இல்லையா?

இணையதள முகவரி: http://emergencycompliment.com/

இந்த எளிமையான ஆனால் புத்திசாலித்தனமான இணையதளத்தை அமெரிக்காவை சேர்ந்த மேக் செங் என்பவர் உருவககியுள்ளார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு இந்த நல்லெண்ண இணையதளம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம். இதன் பாதிப்பால் ஒரு யூடியூப் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த வாசகங்களை தொகுத்து புத்தகமாக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாம். இது அவ்ரது இணையதளம்: http://megssenk.com/

 

தேசிய கடனுக்கான கால்குலேட்டர்

big_red

ஒரு கால்குலேட்டர் மூலம் நாட்டுப்பற்றையும் சமுக அக்கரையையும் வெளிப்படுத்த முடியுமா?கூடவே மற்றவர்களையும் குரல் கொடுக்க வைக்க முடியுமா?.

அமெரிக்கர் ஒருவர் இத‌னை செய்திருக்கிறார்.அவ‌ர் உருவாக்கியுள்ள புத்த‌ம்புதிய‌ கால்குலேட்டர் ப‌ல‌ கேள்விக‌ளை எழுப்ப‌க்கூடிய‌து ம‌ட்டும‌ல்ல‌ பொருளாதார‌ விழிப்புண‌ர்வையும் ஏற்ப‌டுத்த‌ வ‌ல்ல‌து.

தேசிய கடனை கணக்கிடுவதற்கான கால்குலேட்டர்;இப்படி தான் அவர் அந்த கால்குலேட்டரை வர்ணிக்கிறார்.பிக்ரெட் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த கால்குலேட்டர் சராசரி கால்குலேட்டர்களை விட நீ..ண்ட இலக்கங்களை கண‌க்கிட வல்லது.அதற்கேற்றவாறு சற்றே பெரிய திரையை கொண்டது.

இதில் டிரில்லியன் கண‌க்கில் மதிப்பிடலாம்.அதாவ‌து ல‌ட்ச‌ம் கோடி என்கின்ற‌ன‌ரே அந்த‌ அள‌வுக்கு பிர‌ம்மாண்ட‌மான‌ இல‌க்க‌ங்க‌ளை எல்லாம் இந்த‌ கால்குலேட்ட‌ர் கையாள‌க்கூடிய‌து.

நாம் என்ன‌ வ‌ங்கியா வைத்திருக்கிறோம். ல‌ட்சம், கோடி, ல‌ட்ச‌ம்கோடி என்றெல்லாம் க‌ண‌க்கிட‌ என்று நீங்க‌ள் நினைக‌லாம்.இது ந‌ம் வீட்டுக்க‌ண‌க்கை போடுவ‌த‌ற்கான‌ கால்குலேட்ட‌ர் இல்லை. நாட்டின் க‌ண‌க்கை போடுவ‌த‌ற்கான‌ கால்குலேட்ட‌ர்.

நாட்டின் க‌ண‌க்கு என்றால் க‌ட‌ன் கணக்கு தான்.

அமெரிக்க‌ பொருளாதார‌ம் நிலைகுலைந்து போன‌ கதை நினைவிருக்கிற‌து அல்லாவா? வீட்டுக்க‌ட‌ன் நெருக்க‌டியால் ஏற்ப‌ட்ட‌ பொருளாதார‌ பாதிப்பு அமெரிக்க‌ பொருளாதார‌த்தின் ப‌ல‌வீன‌ங்க‌ளை உண‌ர்த்திய‌தோடு க‌ட‌னுக்கான‌ உண்மையான‌ அர்த‌த‌த்தையும் ச‌ராச‌ரி அமெரிக்க‌ர்க‌ளுக்கு புரிய‌ வைத்த‌து.

க‌ட‌ன் சுமை தாளாம‌ல் ஒரு தேச‌மாக‌ அமெரிக்க‌ இன்னும் த‌டுமாறிக்கொண்டிருக்கிற‌து.பொருளாதார‌ செழிப்பு நில‌விய‌ கால‌த்தில் அமெரிக்கா க‌ட‌ன் வாங்கியே கால‌ம் த‌ள்ளிய‌தால் இன்று அந்நாடு டிரில்லிய‌ன் க‌ண‌க்கில் க‌ட‌ன்ப‌ட்டிருக்கிற‌து.டிரில்லிய‌ன் என்றால் ல‌ட்ச‌ம் கோடி என்று பொருள்.

நாட்டின் ஒட்டுமொத்த‌க‌ட‌ன் ப‌ற்றியெல்லாம் ச‌ராச‌ரி ம‌னித‌ர்க‌ள் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை . ஆனால் மேற்கு கொல‌ராடோவை சேர்ந்த‌ மாட் மைல‌ஸ் என்னும் ரிய‌ல் எஸ்டேட் அதிப‌ர் ஒரு நாள் அமெரிக்க‌ தெசிய‌ க‌ட‌ன் ப‌ற்றி யோசித்திருக்கிறார்.அப்போது தான் ச‌ராச‌ரி கால்குலேட்ட‌ரில் அமெரிக்க‌ க‌ட‌ன் தொகை அட‌ங்க‌வில்லை என்ப‌தையும் உண‌ர்ந்திருக்கிறார்.

ஒருவிதத்தில் தேசிய‌க்க‌ட‌ன் கை மீறி போய் கொண்டிருப்ப‌த‌ன் அடையாள‌ம் என்று அவ‌ர் க‌ருதினார்.சாத‌ராண‌ கால்குலேட்ட‌ரில் க‌ன‌க்கிட‌ முடியாத‌ அள‌வுக்கு க‌ட‌ன் வ‌ள‌ர்ந்திருப்ப‌து அவ‌ருக்கு க‌வ‌லையை அளித்த‌து.

தேசிய‌க்க‌ட‌ன் ப‌ற்றி அவ‌ப்போது பேச‌ப்ப‌ட்டாலும் நாம் எந்த‌ அள‌வுக்கு க‌ட‌ன் ப‌ட்டிருக்கிறோம் என்ப‌து யாருக்கும் தெரிய‌வில்லை என‌ நினைத்த‌ அவ‌ர் இது தொடர்பாக‌ விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்த‌ தெசிய‌ க‌ட‌னுக்கான‌ பிர‌த்யேக‌ கால்குலேட்ட‌ரை உருவாக்கினார்.

இந்த‌ கால்குலேட்ட‌ரில் டிரில்லிய‌ன் டிரில்லியனாக‌ சேர்ந்துகொண்டிருக்கும் அமெரிக்க‌ க‌ட‌னை சுல‌பமாக‌ கண‌க்கிட‌முடியும்.அது நாள்தோறும் வள‌ர்ந்து வ‌ருவ‌தையும் க‌ண‌க்கிட‌ முடியும்.

இத‌னால் என்ன‌ ப‌ய‌ன் என்கிறீர்க‌ளா? அமெரிக்காவின் செல‌வு எந்த‌ அள‌வுக்கு போய்கொண்டிருக்கிறது என்பதை இத‌ன் மூல‌ம் உண‌ர‌ முடியும் என்று அவ‌ர் ந‌ம்புகிறார்.

இந்த‌ கால்குலேட்ட‌ரை வாங்கி ஆட்சி பொறுப்பில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌க்குங்க‌ள் என்றும் வ‌ர‌வை மீறி செல‌வு செய்ப‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்குங்க‌ள் என்றும் அவ‌ர் கேட்டுக்கொண்டுள்ளார.

ஒரு கால‌த்தில் மில்லிய‌ன் என்று பேசிக்கொண்டிருந்தோம். பின்ன‌ர் பில்லிய‌ன் என்றோம் .இப்போது டிரில்லிய‌ன் என்கின்ற‌ன‌ர்.இத‌ன் உண்மையான‌ ப‌ர்மான‌த்தை த‌ன‌து கால்குலேட்ட‌ர் புடரிய‌ வைக்கும் என்று கூறும் அவ‌ர் இந்த‌ கால்குலேட்ட‌ர் ம‌ற்றும் த‌ன‌ அவ‌சிய‌த்தை உண‌ர்த்த‌ ஒரு இணைய‌தள‌த்தையும் உருவாக்கியுள்ளார்.

——–.

link;
http://www.bigredcalculator.com/index.html

ஒரு டிவிட்டால் நிகழ்ந்த அற்புதம்

amsபிரபல சைக்கிள் பந்தைய வீரரான லான்ஸ் ஆம்ஸ்டிராங் சமீபத்தில் ஸ்காட்லாந்து சென்று திரும்பினார்.அதனால் என்ன என்று கேட்கிறீர்களா?இந்த பயணத்தின் போது அவர் ரசிகர்களை ம‌கிழ்வித்து தானும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதெல்லாம் ஒரு பெரிய விஷ‌யமா,பிரபலமாக விளங்கும் விளையாட்டு வீரர் ஒரு நகருக்கு விஜயம் செய்வதும் அவரைக்காண ரசிகர்கள் செல்வதும் எல்லா இடங்க‌ளிலும் நடப்பது தானே என நினைக்கலாம் .

ஆனால் ஆம்ஸ்டிராங் பயணத்தில் விசேஷம் என்னவென்றால் மிக இயல்பாக இந்த ச‌ந்திப்பு நடந்தது தான்.பொதுவாக பிரபலங்களின் பயண திட்டங்களின் போது என்ன நடக்கும். அவரது வருகை பத்திரிக்கை செய்திகள் மூலம் வெளியாகும். அதைப்பார்த்துவிட்டு அவரைக்காண ரசிகர்கள் முற்றுகையிடுவார்கள்.

நிக‌ழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த‌வ‌ர்க‌ள் ர‌சிக‌ர்க‌ளை ம‌ன‌தில் கொள்ளலாம‌ல் திட்ட‌மிட்டிருந்தால் அவ‌ர்க‌ள் வேண்டாத‌ விருந்தாளியாகி விடுவார்க‌ள்.கூட்டத்தை கட்டுப்படுத்தும் போது ரசிகர்களும் சேர்த்தே தள்ளப்படுவார்கள்.பாதுகாப்பு போன்ற‌ பிர‌ச்ச‌னை கார‌ண‌மாக‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ வீர‌ரே நினைத்தால் கூட‌ ர‌சிக‌ர்க‌ளுக்கு உத‌வ‌ முடியாது.

பெரும்பாலான‌ நேர‌ங்க‌ளில் ர‌சிக‌ர்க‌ளால் த‌ங்க‌ள் அபிமான‌ ந‌ட்ச‌த்திர‌த்தை ப‌க்க‌த்தில் சென்றுகூட‌ பார்க்க‌ முடியாது.ஒரு கையெழுத்து வாங்க‌வும் அவ‌ர்க‌ள் திண்டாட‌ வேண்டும்.விளையாட்டு போட்டிக‌ள் என்றால் நிலைமை இன்னும் மோச‌மாகி விடும்.அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதியை க‌ட‌ந்து அவ‌ர்க‌ளால் செல்ல‌வே முடியாது.

விழாக்க‌ள் என்றால் விஐபிக்க‌ளும் செல்வாக்கு மிக்க‌வ‌ர்க‌ளும் போய் ஒட்டிக்கொள்வார்க‌ள்.ர‌சிக‌ர்க‌ளின் பாடு திண்டாட்ட‌ம் தான்.

ஆனால் ஆம்ஸ்டிராங் ஸ்காட்லாந்து வ‌ந்த‌ போது எந்த‌வித‌ த‌டையோ குறுக்கிடோ இல்லாம‌ல் ர‌சிக‌ர்க‌ளை ச‌ந்தித்திருக்கிறார்.அவ்ர்க‌ளோடு சைக்கிள் ஒட்டி மகிழ்ந்திருக்கிறார்.

எப்ப‌டி என்று கேட்கிறீர்க‌ளா?

ஆம்ஸ்டிராங் இந்த‌ ப‌ய‌ண‌த்தை ப‌ற்றிய‌ விவ‌ர‌த்தை தெரிவிக்க எந்த இடைத்தரகரையும் நாடவில்லை.மாறாக த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் தனது வருகையை ர‌சிக‌ர்க‌ளுக்கு தெரிவித்தார்.

டிவிட்ட‌ர் சேவையை தீவிர‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ரும் பிர‌ப‌ல‌ங்க‌ளில் ஆம்ஸ்டிராங்கும் ஒருவ‌ர்.த‌ன்னுடைய‌ ப‌யிற்சி விவ‌ர‌ம்,எண்ண‌ ஓட்ட‌ம் ஆகிய‌வ‌ற்றை எல்லாம் டிவிட்ட‌ரில் ப‌கிர்ந்து கொண்டு வ‌ருகிறார்.ர‌சிக‌ர்க‌ளும் ஆர்வ‌த்தோடு அவ‌ர‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் பின்தொடார்ந்து வ‌ருகின்ற‌ன‌ர்.புதிய‌ போட்டி என்றாலும் ச‌ரி,ப‌த்திரிக்கை பேட்டிக்கு விள‌க்க‌ம் என்றாலும் ச‌ரி டிவிட்ட‌ரிலேயே த‌ன‌து க‌ருத்தை அவ‌ர் தெரிவித்து விடுகிறார்.

இப்ப‌டித்தான் அவ‌ர் ஸ்காட்லாந்து ப‌ய‌ண‌ திட்ட‌ம் ப‌ற்றியும் டிவிட்ட‌ரில் அறிவித்தார்.ந‌ண்ப‌ர்க‌ளே நான் ஸ்காட்லாந்து வ‌ருகிறேன் என்னை ச‌ந்திக்க‌ விரும்புகிற‌வ‌ர்க‌ள் வரலாம்.வ‌ந்து என்னோடு சைக்கிள் ஓட்ட‌த்தில் க‌ல‌ந்து கொள்ள‌லாம் என்று அவ‌ர் கூறியிருந்தார்.

டிவிட்ட‌ரில் அவ‌ரை பின்தொட‌ரும் அந்நாட்டு ர‌சிக‌ர்க‌ள் இந்த‌ ப‌திவை பார்த்த‌தும் குஷியாகி குறிப்பிட்ட தின‌த்த‌ன்று சைக்கிளோடு வ‌ருகை த‌ந்த‌ன‌ர்.ஆம்ஸ்டிராங் சைக்கிள் ஓட்டிச்செல்ல‌ ர‌சிக‌ர்க‌ளும் அவ‌ரோடு உற்சாக‌மாக‌ சைக்கிள் ஒட்டிச்சென்ற‌ன‌ர்.ந‌ம்மூர் ர‌சிக‌ர்க‌ளுக்கு ச‌ச்சின் டெண்டுல்க‌ரோடு கிரிக்கெட் விளையாட‌ வாய்ப்பு கிடைத்த‌த் போல் தான் இதுவும்.

ஆம்ஸ்டிராங்கின் சைக்கிள் ப‌ந்தைய‌ சாத‌னைக‌ளை கொண்டாடி ம‌கிழும் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் அபிமான‌ ந‌ட்ச‌த்திர‌த்தோடே சைக்கிள் ஒட்ட‌ வாய்ப்பு கிடைத்த‌தை பாக்கிய‌மாக‌ க‌ருதின‌ர்.

ஆம்ஸ்டிராங்கும் த‌ன் ப‌ங்கிற்கு ர‌சிக‌ர்க‌ளோடு நேர‌த்தை செல‌விட‌ முடிந்த‌து க‌ண்டு ம‌கிழ்ச்சி அடைந்தார்.யாராவ‌து சில‌ ர‌சிக‌ர்க‌ள் வ‌ருவார்க‌ள் என்று அவ‌ர் நின‌த்த‌ற்கு மாறாக‌ முன்னூறுக்கும் மேற்ப‌ட்ட‌ ர‌சிக‌ர்க‌ள் திர‌ண்டு வ‌ந்துவிட்ட‌னாராம்.இத‌னால் அவ‌ருக்கு ம‌ட்ட‌ற்ற‌ ம‌கிழ்ச்சி.அதோடு உள்ளூர் சாம்பிய‌ன் ஒருவ‌ரும் வ‌ந்த‌தில் அவ‌ர் நெகிழ்ந்து போய்விட்டார்.

இனிதே த‌ன‌து ப‌ய‌ண‌த்தை முடித்த்க்கொண்டு சொந்த‌ நாடான‌ அமெரிக்க‌ திரும்பிய‌ அவ‌ர் டிவிட்ட‌ரில் மூல‌மே ர‌சிக‌ர்க‌ளுக்கு ந‌ன்றி தெரிவித்து கொண்டார்.

இப்போது ர‌சிக‌ர்க‌ள் தலைவர் அடுத்த‌ முறை த‌ங்க‌ள் ப‌குதிக்கு எப்போது வ‌ருவார் என்று டிவிட்ட‌ரை ஆர்வ‌த்தோடு பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌ராம்.

ஆம்ஸ்டிராங் சாத‌னை வீர‌ர் ம‌ட்டும‌ல்ல‌.ம‌ர‌ண‌த்தைவென்ற‌ வீரும் கூட. 25 வது வ‌ய‌தில் புற்றுநோயால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ அவ‌ர் பின்ன‌ர் அந்த‌ நோயோடு தீர‌த்தோடு போராடி வெற்றி பெற்ற‌தோடு மீண்டும் ப‌யிற்சி மேற்கொண்டு சைக்கிள் ப‌ந்த‌ய‌த்திலும் சாத்னை ப‌டைத்தார்.சைக்கிள் போட்டியின் உச்சமாக கருதப்படும் டூர் டி பிரான்ஸ் போட்டியில் அவரது சாதனைகள் மலைக்க வைக்ககூடியது.

இத‌ற்காக‌ அவ‌ர் மன உறுதியின் ம‌று வ‌டிவ‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுகிறார்.ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு முன்னுதார‌ண‌மாக‌வும் க‌ருத‌ப்ப‌டுகிறார்.

——-

ஆம்ஸ்டிராங்கின் டிவிட்டர் பயன்பாடு தொடர்பான முந்தைய பதிவுக்கு பார்க்க …

——-
link;
http://cybersimman.wordpress.com/2009/02/21/twitter-23/