உதவி பாலம் அமைக்கும் இணையதளம்

5ea70cc674a94c328ba14950_img_story-cards-p-500கொரோனா ஏற்கனவே பொருளாதாரத்தை பதம் பார்த்து பணியிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. கைவசம் சேமிப்பு இல்லாதவர்கள் அல்லது இருக்கும் சேமிப்பை கரைந்து விட்டவர்கள் நிலை மிகவும் கடினம் தான். உலகில் பல நாடுகளில் இது தான் நிலை. அமெரிக்காவில், இப்படி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்களில் ஒன்று ’1 கே பிராஜெக்ட்’ – (https://www.1kproject.org/ ).

கொரோனா பாதிப்பால் பணியிழப்பு அல்லது ஊதியம் குறைப்பு போன்றவற்றுக்கு உள்ளாகி உடனடியாக பொருளாதார உதவி தேவைப்படும் குடும்பங்களை கண்டறிந்து, பணம் அளிக்க வழி செய்வது தான் இந்த தளத்தின் நோக்கம்.

உதவிக்கு கண்டறியப்படும் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் ஆயிரம் டாலர் அளிக்க இருக்கின்றனர். பண உதவி செய்யக்கூடிய ஸ்பான்சர்கள் இந்த தொகையை அளிப்பார்கள். இரு தரப்பினரையும் இணைக்கும் வகையில் இந்த தளம் செயல்படுகிறது.

உதவி தேவைப்படுபவர்களை, அவர்களை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனங்கள் பரிந்துரைக்கலாம். மற்றவர்களும் பரிந்துரைக்கலாம். அதன் பிறகு குடும்பங்களின் நிலை சரி பார்க்கப்பட்டு உதவிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

*

இதே போல, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், கொரோனாவால் பாதிப்புக்குள்ளான உள்ளூர் ரெஸ்டாரண்ட்களுக்கு கைகொடுக்கும் வகையிலும் ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. ’சேவ் அவர் பேவ்ஸ்’ (https://saveourfaves.org/) எனும் அந்த தளம் மூலம், மக்கள் உள்ளூர் ரெஸ்டாரண்ட்களுக்கான பரிசு அட்டைகளை வாங்கி அவற்றை ஆதரிக்கலாம்.

கடும் பொருளாதார பாதிப்பு நிலவும் சூழலில், உள்ளூர் வணிகர்களையும், வர்த்தகங்களையும் ஆதரிப்பதன் மூலம், பொருளாதார மீட்சிக்கு நம்மால் உதவலாம் என்று சொல்லப்படுவதற்கு செயல்வடிவம் கொடுக்க முயல்கிறது இந்த இணையதளம்.

வீடியோ உறவுப்பாலம் அமைக்கும் செயலி

வீடியோ உரையாடலில் ஆர்வம் கொண்டிருப்பவர்கள், மார்கோபோலோ (https://www.marcopolo.me/ ) செயலியை அறிந்து கொள்வது நல்லது. வீடியோ உரையாடல் என்றவுடன், இன்னொரு ஜூம் வகை செயலியா? என அலுத்துக்கொள்ள வேண்டாம். இது முற்றிலும் வேறு விதமான வீடியோ உரையாடல் செயலி.

ஜூம் போன்ற செயலிகள் நேரடி வீடியோ உரையாடலுக்கானது. இந்த காரணத்தினாலேயே அவை மாணவர்களுக்கு வகுப்பெடுக்கவும், இலக்கிய சந்திப்புகளை நடத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

மார்கோபோலோ செயலி, நேரடி சந்திப்புகளுக்கானது இல்லை: இது வீடியோ உரையாடலுக்கானது. அன்பானவர்களுடன் வீடியோ வழியே பேச விரும்புகிறவர்கள், இந்த செயலியில் தங்கள் வீடியோ பேச்சை பதிவு செய்து, உரியவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதை அவர்கள் அப்போதே பார்த்து பதில் சொல்ல வேண்டும் என்றில்லை. அவர்களுக்கு எப்போது விருப்பமோ அப்போது பதில் வீடியோவை அனுப்பி வைக்கலாம்.

கிட்டத்தட்ட பழைய வாக்கிடாக்கி பாணியிலான உரையாடல் இது. இந்த செயலி மூலம் நீங்கள் அன்பானவர்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால் உடனடியாக பேச வேண்டும் என்றில்லை. நேரம் கிடைக்கும் போது பேசி, நேரம் கிடைக்கும் போது பதிலை பார்க்கலாம்.

வெவ்வேறு இடங்களில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை மனதில் வைத்துக்கொண்டு இந்த செயலியை அணுகினால் இதன் அருமையை புரிந்து கொள்ளலாம். அம்மா பேசும் போது மகள் அலுவலக்த்திற்கு சென்றிருக்கலாம். அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் உடனடியாக பதில் சொல்ல முடியாத நிலை இருக்கலாம்.

மார்கோபோலோ செயலி இது போன்ற சிக்கல்களை கருத்தில் கொண்டு, விரும்பிய நேரத்தில் பேச வழி செய்கிறது. காலையில் அம்மா அன்பாக பகிர்ந்து கொண்ட செய்திக்கு, மகள் அலுவலகம் சென்றதும் பரபரப்பில்லாமல் பதில் அளிப்பதை, அம்மா மதிய வேலைகளை எல்லாம் முடித்த பிறகு பார்ப்பது இனிமையானது தானே. இதை தான் மார்கோபோலோ செயலி செய்கிறது.

வெளியூர் அல்லது வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு இந்த வீடியோ செயலி இன்னும் பயனுள்ளதாக இருக்கும். சொல்லப்போனால் இந்த செயலியை உருவாக்கிய தம்பதி, இத்தகைய தேவையை உணர்ந்த போது பிறந்தது தான் மார்கோபோலோ செயலி.

ஆம், போலந்து நாட்டைச்சேர்ந்த விலடா பார்ட்னிக் (Vlada Bortnik,) தனது கணவர் மைக்கேலுடன் (உக்ரைன்) சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க குடி பெயர்ந்தார். அப்போது, தொலைந்தூரத்தில் இருந்த தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசுவதில் நேர சிக்கல் போன்றவற்றை எதிர்கொண்ட போது தான், தொலைவில் இருக்கும் குடும்பத்தினர் விரும்பிய நேரங்களில் தொடர்பு கொள்வதற்கான மார்கோபோலோ செயலியை உருவாக்கினர்.

வீடியோவில் பார்ப்பதால் நேரில் பேசுவது போன்ற தன்மையை பெறலாம். ஆனால் அதற்காக நேரில் பார்த்துக்கொண்டே பேச வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதன் மூலம் அன்பானவர்களின் அருகாமையை செயலி உணர வைக்கிறது.

மேலும் குழு உரையாடலுக்கு அழைக்கும் வசதி, பில்டர்கள், இமோஜிகளை உரையாடலின் போது பகிரும் வசதியும் இருக்கிறது.

இணைய மலர்’ மின்மடலில் எழுதியது. பயனுள்ள இணையதள அறிமுகங்களை உங்கள் இமெயிலில் நேரிடையாக பெற மின்மடலில் இணையுங்கள்https://tinyletter.com/cybersimman

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.