பள்ளி மாணவர் உருவாக்கிய கொரோனா வைரஸ் தகவல் தளம்

Screen-Shot-2020-03-03-at-9.41.46-AM-630x297கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், என்கோவ்1919.லைவ் (https://ncov2019.live/ ) இணையதளத்தை நாடலாம். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அளிக்கும் இந்த தளமும் பரவலாக கவனத்தை ஈர்த்து வைரலாகி இருக்கிறது.

இந்த தளத்தில், ஒரு சில நொடிகளில் பறவை பார்வையாக கொரோனா பாதிப்பு தகவல்களை தெரிந்து கொண்டு விடலாம். எல்லாமே மிக அண்மை விவரங்கள் என்பது மட்டும் அல்ல, அனைத்தும் அதிகாரப்பூர்வமானவை.

தளத்தின் முகப்பு பக்கத்தில் முதலில், உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் புள்ளி விவரங்கள் பட்டியல் இடம்பெறுகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, அதில் ஏற்பட்டுள்ள அண்மை மாற்றம், தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை, தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை, இவற்றில் ஏற்பட்ட மாற்றம் ஆகியவை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, சீனா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளுக்கான கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நாடுகள் தொடர்பான விவரங்களையும் இதில் அறியலாம்.

இடப்பக்கத்தில் மேலே, மொத்த பாதிப்பு, உயிரிழந்தவர்கள், தீவிர பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் குணமானவர்களின் எண்ணிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிப்பின் தற்போதைய நிலையை இந்த தளத்தின் மூலம் சுலபமாக தெரிந்து கொள்ளலாம். இதில் இடம்பெறும் தகவல்கள், உலக சுகாதார அமைப்பு மற்றும் நாடுகளின் சுகாதார அமைப்புகள் போன்றவற்றில் இருந்து எடுத்தாளப்படுவதால் இந்த விவரங்கள் அனைத்தும் நம்பகமானவை.

கொரோனா தொடர்பான தகவல்களும், பொய் செய்திகளும் அதிகம் உலாவும் நிலையில், இந்த தளம் நம்பகமான புள்ளி விவரங்களை திரட்டித்தருகிறது.

கொரோனா தொடர்பான தகவல்களுக்கான நம்பகமான தளங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தளம் தொடர்பான ஆச்சரமான விஷயம் என்னவென்றால், இதை உருவாக்கியது 17 வயது பள்ளி மாணவர் என்பது தான். அதைவிட ஆச்சர்யமான விஷயம், ஜனவரி மாதத்திலேயே இந்த தளம் அமைக்கப்பட்டது தான். ஆம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டில் கொரோனா கோரத்தாண்டவத்திற்கு நடுவே, இந்த பாதிப்பு பற்றி யாரும் எங்களை எச்சரிக்கவில்லை என்று மார்ச் மாத வாக்கில் கூறிய நிலையில், அமெரிக்க மாணவரான அவி ஸ்கிப்மன் (Avi Schiffmann ) அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்த தளத்தை அமைத்திருந்தார்.

டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அறிந்து, அது தொடர்பான நம்பகமான தகவல்களை அளிப்பதற்காக இந்த தளத்தை உருவாக்கியதாக ஸ்கிப்மன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். வெப் ஸ்கிராப்பிங் என்று சொல்லப்படும் முறையில், நாடுகளின் சுகாதார அமைப்புகள் இணையத்தில் வெளியிடும் கொரோனா பாதிப்பு விவரங்களை அப்படியே உருவி, இந்த தளத்தில் உடனுக்குடன் இடம்பெறும் வகையில் தளத்தை அமைத்திருக்கிறார்.

ஏழு வயதிலேயே புரோகிராமிங் கற்றுக்கொண்டதாக கூறியுள்ள ஸ்கிப்மன் பெரும்பாலான நுட்பங்களி கூகுள் தேடல், மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தகவல்களை மட்டும் அளித்து எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க, தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்கள் எண்ணிக்கையையும் இடம்பெறச்செய்ததாக கூறுகிறார்.

இந்த தளம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளதோடு, பலரும் புதிய அம்சங்களை கோருவதாகவும் தெரிவிக்கிறார். அடுத்த கட்டமாக, கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை அளிக்க வாக்சின் டிராக்கர் இணையதளத்தை அமைக்க விரும்புவதாகவும் கூறுகிறார்.

கொரோனா தளத்தின் பெயரை ஜெர்ம் டிராக்கர் என பொதுவானதாக மாற்றி எதிர்கால தொற்றுகளையும் டிராக் செய்ய விரும்புவதாக கூறுகிறார்.

https://www.democracynow.org/2020/3/17/avi_schiffmann_coronavirus_tracker

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.