Tag Archives: desktop

டிஜிட்டல் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் குறும் பழக்கங்கள்!

mini-habits-desktop-storage-clutterபதிவுகள், குறும்பதிவுகள் என சொல்வது போல, பழக்கங்களிலும் குறும் பழக்கங்கள் இருக்கின்றன தெரியுமா? ஆங்கிலத்தில் இதை மைக்ரோ ஹாபிட்ஸ் அல்லது மினி ஹாபிட்ஸ் என்கின்றனர். அதாவது ஒரு பழக்கத்தின் சிறு அங்கம் என்று பொருள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு அது முதலில் பழக்கமாக மாற வேண்டும். ஆனால் பழக்கம் அத்தனை எளிதல்ல. புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அல்லது பழைய பழக்கத்தை மாற்றிக்கொள்ள விடாமுயற்சி தேவை. உற்சாகத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து கடைபிடிக்கும் உறுதி இல்லாமல் தொய்வு ஏற்பட்டால் எல்லாம் வீணாகிவிடும். அதன் பிறகு மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

பழக்கம் இப்படி பாடாக படுத்துவதை தவிர்ப்பதற்காக தான் எளிதான மாற்று வழியாக குறும் பழக்கங்களை முன்வைக்கின்றனர். எந்த பழக்கத்தை பின்பற்ற விரும்புகிறோமோ, அந்த பழக்கம் தொடர்பாக ஏதேனும் ஒரு சிறிய செயலை மட்டும் செய்யத்துவங்கினால் போதும். இதை செய்ய பெரிய அளவில் ஊக்கம் தேவையிருக்காது என்பதால், அதிகம் யோசிக்காமல் செய்யலாம். நாளடைவில் அது பழகிவிடும்.

பெரும் பாய்ச்சலாக முயற்சிப்பதை விட, இப்படி சின்ன சின்ன அடியாக எடுத்து வைத்து பழக்கங்களை வெல்லலாம் என்கின்றனர்.
இந்த வழிமுறையை தொழில்நுட்ப உலகிற்கும் பொருத்திப்பார்க்கலாம் எனும் மேக் யூஸ் ஆப் இணையதள கட்டுரை, நம்முடைய டிஜிட்டல் வாழ்க்கையை மேம்படுத்த்திக்கொள்ள உதவும் குறும் பழக்கங்களை பரிந்துரைக்கிறது:

* வாரம் ஒரு சேவைக்கு பாதுகாப்பு

இணைய பயன்பாடு பரவலாகி இருக்கும் அதே நேரத்தில் ஆபத்தாகவும் மாறி இருக்கிறது. ஹேக்கிங், பாஸ்வேர்டு திருட்டு, அடையாளத்திருட்டு, ஆன் -லைன் மோசடி, மால்வேர் பாதிப்பு என பலவிதங்களில் ஆபத்துகள் மறைந்திருக்கின்றன. இவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் இணைய சேவைகளை பாதுகாப்பானதாக அமைத்துக்கொள்ள வேண்டும். பேஸ்புக்கில் துவங்கி, ஜிமெயில், வாட்ஸ் அப் என பெரும்பாலான சேவைகளில் பயனாளிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. பலவகையான சேவைகளை பயன்படுத்தும் நிலையில், ஒவ்வொன்றிலும் இந்த அம்சங்களை செயல்படுத்துவதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கலாம். இதற்கு தீர்வாக, வாரம் ஒரு சேவையை தேர்வு செய்து அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தலாம். அதிகம் பயன்படுத்தும் சேவையில் இருந்து இதை துவங்கலாம்.
இதே முறையை பாஸ்வேர்ட் பாதுகாப்பிற்கும் பின்பற்றலாம். பலவீனமான பாஸ்வேர்டுகளை வைத்திருக்க கூடாது, பரவலாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டை தவிர்க்க வேண்டும், ஒரே பாஸ்வேர்டை எல்லா சேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடாது என பாஸ்வேர்டு தொடர்பான பல விஷயங்கள் வலியுறுத்தப்படுகின்றன. வாரம் ஒரு இணைய சேவையாக தேர்வு செய்து அதன் பாஸ்வேர்டு பலமாக இருக்கிறதா என சோதித்துப்பார்த்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

* சுத்தமான டெஸ்க்டாப்
வீட்டைகூட சுத்தம் செய்து விடலாம் ஆனால் டெஸ்க்டாப்பை தூய்மையாக்க முடியவில்லை என்று புலம்பும் வகையில் உங்கள் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் ஐகான்களாகவும், கோப்புகளாகவும் அடைத்துக்கொண்டிருக்கின்றனவா? இதை ஒரேடியாக சுத்தமாக்க முயன்று தோல்வியை தழுவாமல், ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை இயக்கும் போதும் ஒரு ஐகான் அல்லது கோப்பை டெஸ்க்டாப்பில் இருந்து அகற்றுவது என வைத்துக்கொள்ளுங்கள்.

* உடற்பயிற்சி அவசியம்
நீண்ட நேரம், ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வது ஆரோக்கிய கேடு என்பது உங்களுக்கேத்தெரிந்திருக்கும். ஆனால் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பே கதி என இருப்பவர்கள் என்ன செய்வது? கவலையே வேண்டாம், கம்ப்யுட்டர் முன் அமர்ந்தபடியே அவ்வப்போது கை காலை நீட்டி மடக்கி செய்யும் எளிதான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இந்த உடற்பயிற்சிகளை இ- மெயில் பார்க்கும் போது அல்லது பேஸ்புக்கில் நுழையும் போது செய்வது என வைத்துக்கொண்டால் போதும்.

* ஒளிபடங்கள்
கையில் ஸ்மார்ட்போன் இருப்பதால் ஒளிப்படங்களாக எடுத்து தள்ளிக்கொள்கிறோம். ஆனால் இவை அப்படியே சேர்ந்துவிட்டால் எவை என்ன படம் என்று தெரியாமல் குழப்பமாக இருக்கும். எனவே, ஓய்வு நேரத்தில் ஒளிபடங்களை வகைப்படுத்தி அவற்றுக்கென குறிச்சொல் அமைத்து சேமித்து வைக்கலாம். ஒளிபடங்களுக்கு பேக் அப் எடுக்கவும் மறக்க வேண்டாம்.

* மாதம் ஒரு சாதனம்

கம்ப்யூட்டர், மவுஸ், கீபோர்ட் தவிர தேவைக்கேற்ப ரவுட்டர், வை-பை, புளு டூத் ஸ்பிக்கர் என பல சாதனங்களை பயன்படுத்தும் நிலை இருக்கலாம். இந்த சாதனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மாதம் ஒரு சாதனத்தை சுத்தம் செய்வது என வைத்துக்கொண்டால் கூட போதும், கம்ப்யூட்டர் மேஜை ஓரளவு சுத்தமாக இருக்கும்.

* இ-மெயில் சுமை
செய்திமடல் சேவைகள் பயனுள்ளவை தான். ஆனால் அதிக சேவைகளில் உறுப்பினராக சேரும் போது, தொடர்ந்து வரும் மெயில்களை திறந்து பார்ப்பதற்கே நேரம் இல்லாமல் போகலாம். இது இமெயில் சுமையாக மாறுவதை தவிர்க்க தினம் ஒரு செய்திமடல் சேவையை பரிசீலித்து தேவை இல்லை எனில் அதில் இருந்து விலகி விடலாம்.

இப்படியே உங்கள் தேவை மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப தினம் ஒரு இணையதளத்தை பார்ப்பது, அல்லது இணைய அகராதியில் தினம் ஒரு வார்த்தைக்கு பொருள் அறிவது போன்ற வழிகளையும் பின்பற்றலாம். இணைய குறிப்பேடு அல்லது புக்மார்க் வசதியை பயன்படுத்தி தினம் ஒரு விஷயம் அல்லது நல்ல இணையதளத்தை குறித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

sm1

ஆன்லைனில் ஆசிய கலை பொக்கிஷங்கள்

ங்கள் டெஸ்க்டாப்பிலோ ,லேப்டாப்பிலோ ஆசிய கலை பொக்கிஷங்களை வால்பேப்பராக வைத்துக்கொள்ள விருப்பமா?அல்லது உங்கள் டிவிட்டர் பக்கம் அல்லது பேஸ்புக் பக்கத்தில் பின்னணி சித்திரமாக கலைபடைப்புகள் இருக்க விருப்பமா? ஆம் எனில் அமெரிக்காவின் புகழ்பெற்ற அருங்காட்சியகம் அதற்கான வசதியை ஆன்லைனில் செய்து கொடுத்திருக்கிறது. பின்னணி புகைப்படங்களை டிஜிட்டல் வடிவில் தரவிறக்கம் செய்வது மட்டும் அல்ல, அந்த படைப்புகள் அனைத்துமே டிஜிட்டல் வடிவில் கண்டு களிக்கலாம். அதாவது மொத்த அருங்காட்சியகத்தையும் ஆன்லைனிலேயே உலா வரலாம்.
அகில உலக அளவில் புகழ்பெற்ற ஸ்மித்சோனியன் அருங்காட்சியக பிரிவு ஒன்று தான் இப்படி டிஜிட்டல் உலா வசதியை செய்து தந்திருக்கிறது. ’ஸ்மித்சோனியன் அருங்காட்சியகங்கள் பாரம்பரியம் மிக்க ஸ்மித்சோனியன் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் கீழ் மொத்தம் 19 அருங்காட்சியகங்கள் மற்றும் ஒரு விலங்கியல் பூங்கா இருக்கிறது. பெரும்பாலான அருங்காட்சியகங்கள் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ளன.
இவற்றில் ஆசிய கலைப்பொருட்கள் அங்கம் வகிக்கும் ப்ரீர் /சாக்லெர் கலைகூடம் தான் இப்போது ஆன்லைனில் அடியெடுத்து வைத்து டிஜிட்டல் உலாவுக்கான வசதியை செய்து தந்துள்ளது.

sm2
இந்த முயற்சியை டிஜிட்டல் சாதனை அல்லது டிஜிட்டல் மைல்கல் என்று கூறலாம். ஏனென்னில் ஒட்டுமொத்த கலைகூடமும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டும் ஆன்லைனில் பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. அதாவது கலை கூடத்தில் உள்ள ஒவ்வொரு கலைபொருளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு அவற்றின் புகைப்படம் ஆன்லைனில் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு கிட்டத்தட்ட 40,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் ஓவியங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
ஆக, இந்த கலைகூடத்திற்கு நேரடியாக சென்றால் கூட அனைத்து பொருட்களையும் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே ,ஆனால் ஆன்லைனில் எல்லாவற்றையும் பொறுமையாக பார்க்கும் வசதி இருக்கிறது. அதே போல அருங்காட்சியகம் இயங்கும் நேரம் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். எந்த நேரத்திலும் பார்க்கலாம். எந்த இடத்தில் இருந்தும் பார்க்கலாம்.
டிஜிட்டல் ஜிரோ எனும் முயற்சியில் கீழ் இப்படி எல்லா கலைப்படைப்புகளையும் டிஜிட்டல் வடிவில் மாற்றியுள்ளனர்.
இந்த ஆன்லைன் கலைக்கூடத்தில் என்ன வகையான கலைப்படைப்புகளை எல்லாம் பார்க்கலாம் தெரியுமா? சாக்கிய முனி புத்தரில் துவங்கி, முகாலாய கலைப்படைப்புகள், சோழர் கால நடராஜர் என ஆசிய கலைப்பொக்கிஷங்கள் பலவற்றை இங்கு காணலாம். ஆம், இந்த அருங்காட்சியகம் ஆசிய கலைபொருட்களுகான பிரிவு என்பது மட்டும் அல்ல, அமெரிக்காவில் உள்ள ஆசிய கலைப்பொருட்களுக்கான ஒரே அருங்காட்சியகம் இந்த ப்ரீர் /சாக்லெர் கலைகூடம் தான் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
சிற்பங்கள்,ஓவியங்கள்,பானைகள் போன்ற கலைப்பொக்கிஷங்கள் என பலவகையான கலைப்பொருட்களை பார்க்கலாம். இவை தவிர சீன மற்றும் கொரியா உள்ளிட்ட ஆசிய கலாச்சார பொக்கிஷங்களையும் காணலாம்.
கலை பொருட்கள் அனைத்தும் அவற்றின் வகைகளுக்கு ஏற்ப வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருளையும் கிளிக் செய்து பார்ப்பதோடு அவை தொடர்பான வரலாற்று தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். அந்த காலத்தின் அடையாளங்களாக திகழும் கலைப்படைப்புகளை கிளிக் செய்து பார்ப்பது சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.
அருங்காட்சியகத்தை உலா வருவதை விட இப்படி இருந்த இடத்தில் இருந்தே வரிசையாக கிளிக் செய்து பார்ப்பது இன்னும் கூட கூடுதல் சுவாரஸ்யம் தான்.
கலைப்படைப்புகளை பல அளவிகளில் டிஜிட்டல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் வால்பேப்பராகவோ அல்லது டிவிட்டர் /பேஸ்புக் பின்னணி சித்திரமாகவோ பயன்படுத்திக்கொள்ளும் வசதி இருக்கிறது. லாப நோக்கில்லாத தனிப்பட்ட பாட்டிற்காக இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
சோழர்கால நடராஜர் சிற்பத்தின் டிஜிட்டல் வடிவம் அப்படியே நெஞசை அள்ளுகிறது .

ஆன்லைனில் உலா வர; http://www.asia.si.edu/collections/default.asp

———–

 

கூகிள் வரைபடத்தில் சிம்பென்சிகளுடன் உலாவலாம்

chimp-google-branch_verge_super_wideகூகிள் ஸ்டீரிட்வியூ சேவை மூலம் கம்போடியாவின் அங்கோர்வாட்டில் இருந்து அரேபிய பாலைவனம் வரை உலகின் முக்கிய இடங்களை பார்த்து ரசிக்கலாம். இப்போது இந்த பட்டியலில் தான்சானியா கோம்பி தேசிய சரணாலயத்தில் உள்ள சிம்பன்சி குரங்குகளோடு உலாவுவதையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆம் கூகிள் தனது ஸ்டீரிவியூ சேவையில் உலகின் அரிய ரக சிம்பன்சி குரங்குகளின் புகலிடமான கோம்பி சரணாலயத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளது. ஆகவே டெஸ்க்டாப்பில் இருந்தே இந்த வனப்பகுதியில் உலாவும் சிம்பன்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

சிம்பன்சி குரங்குகள் என்றவுடன் , ஜேன் குட்டாலும் அவரது முக்கிய ஆய்வும் தான் நினைவுக்கு வரும். சிம்பன்சி குரங்குகள்டனான ஆய்வு மூலம் புகழ்பெற்ற குட்டாலின் ஆய்வு அமைப்புடன் இணைந்து கூகிள் இப்போது சிம்பன்சி குரங்களை ஸ்டிரீட்வியூ வரைபட சேவையில் கொண்டு வந்துள்ளது.

ஜேன் குட்டால் 1961 ம் ஆண்டு சிம்பன்சி குரங்குகள் பற்றி ஆய்வு செய்வதற்காக தான்சானியாவின் கோம்பி ஸ்டீரிம் தேசிய பூங்காவிற்கு வருகை தந்தார். கையில் ஒரு வரைபடம் மற்றும் நோட்டுப்புத்தகத்துடன் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் சிம்பன்சி குரங்குகள் பற்றிய புரிதலையே தலைகீழாக புரட்டிப்போட்டது. சிம்பன்சி குரங்குகள் மனதிர்களை போலவே கருவிகளை பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் அவற்றை உருவாக்கும் திறன் பெற்றிருக்கின்றன என்றும் அவர் கண்டறிந்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தினாலும் முக்கிய கண்டுபிடிப்பாக அமைந்தது.

தொடர்ந்து சிம்பன்சி குரங்குகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்கான தன்னை அர்பணித்துக்கொண்டுள்ள ஜேன் குட்டால் , மனித இனத்தை ஒத்த குரங்கினமாகிய சிம்பன்சிகள் மீது ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.

இது வரை அவரது ஆய்வுகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் தான் பார்க்க முடிந்துள்ளது. இப்போது கூகிள் ஸ்டீரிட் வியூ சேவை மூலம் தான்சானியாவின் கோம்பி காட்டுப்பகுதிக்கே சென்று சிம்பன்சிகளை அவை வாழுமிடத்திலேயே பார்க்கலாம்.

கூகிள் வரைபட சேவையின் ஒரு அங்கமான ஸ்டீரிட் வியூவுக்கு காட்சிகளை பதிவு செய்யம் டிரெக்கர் காமிரா மூலம் கோம்பி வனப்பகுதி படம் பிடிக்கப்பட்டு அவற்றின் 360 டிகிரியிலான காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக இந்த காமிராவுக்கு என்று வாகனம் உண்டு. ஆனால் வாகனம் செல்ல முடியாத இடத்தில் காமிராவை சுமந்து தான் செல்ல வேண்டும். சமீபத்தில் லிவா அரேபிய பாலைவனத்தை ஸ்டீரிட் வியூவுக்குள் கொண்டு வந்த போது கூகிள் ஒட்டகத்தை காமிராவுக்கான வாகனமாக பயன்படுத்தியது. ஆனால் கோம்பியில் குட்டால் கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்களே இந்த காமிராவை சுமந்து கொண்டு 9 நாட்கள் படமாக்கியுள்ளனர். விஷ நாகங்கள் மற்றும் எறும்பு படைகள் போன்றவை உலாவும் இடம் என்பதால் கொஞ்சம் ஆபத்தான பணி இது. ஆனால் சிம்பன்சி மீதான ஆர்வத்தால் செய்திருக்கின்றனர்.

சிம்பன்சி ஆய்வில் இல்லமான கோம்பி வனப்பகுதிக்கு வாருங்கள் எனும் அழைப்புடன் இந்த காட்சிகளை கூகிள் ஸ்டிரிட் வியூவில் காட்சிக்கு வைத்துள்ளது.
பூட்டானையும் பார்க்கலாம்

இதே போலவே கூகிள் இமயமலை அடிவாரத்தில் இருக்கும் பூட்டான் தேசத்தையும் ஸ்டிரிட் வியூ சேவையில் கொண்டு வந்துள்ளது. கோம்பி தேசிய பூங்கா போலவே இதுவும் முக்கியமானது. பூட்டான் எழில் கொஞ்சும் தேசமாக இருந்தாலும் உலகிற்கு மூடப்பட்ட தேசமாகவே இருக்கிறது. அந்நாடு 1999 ல் தான் தொலைக்காட்சிக்கே அனுமதி அளித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான நாடுகள் சுற்றுலா பயணிகளை விழுந்து விழுந்து வரவேற்கும் போது, பூட்டான் மட்டும் சுற்றுலா பயணிகளிடம் நாள் ஒன்றுக்கு 200 டாலர் கட்டணம் வசூலிக்கிறது.

இந்த நிலையில் பூட்டானின் எழில் கொஞ்சம் பகுதிகளை இப்போது ஸ்டிரிட் வியூ மூலம் பார்க்கலாம். கூகிளின் ஸ்டிரிட் வியூ கார் அந்நாட்டில் 3,000 கிமீ பயணம் செய்து காட்சிகளை பதிவாக்கியுள்ளது. பூட்டானின் நிர்வாக தலைமயகம் அமைந்துள்ள புனாக்கா ஜோங் பகுதி மற்றும் தலைநகர் திம்பு ஆகிய இடங்களை காணலாம். தேசிய அருங்காட்சியகததையும் காணலாம். பூட்டானின் காட்சிகள் இதயத்தை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கிறது.

கூடுதல் தகவல் ஐரோப்பியாவின் சின்னஞ்சிறிய நாடான லக்ஸம்பர்க் நாட்டிற்கும் இத்தகையை வசதியை ஸ்டிரிட் வியூ அளிக்கிறது.

சிம்பன்சிகளை காண: https://www.google.com/maps/views/streetview/gombe-tanzania?gl=us

பூட்டானை காண; https://www.google.com/maps/@27.4241755,89.4224632,3a,75y,349.13h,94.96t/data=!3m4!1e1!3m2!1sNRCJxaa97iHVoAsICuNhhQ!2e0

கம்ப்யூட்டரில் கோப்புகளை சேமிக்கசரியான வழி எது ?

desநீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களிடமும் அந்த பழக்கம் இருக்கலாம். அது, கோப்புகளை டெஸ்க்டாப்பில் சேமித்து வைக்கும் பழக்கம். கம்ப்யூட்டர் வைத்திருக்கும் எல்லோரும் செய்வது தான் இது. இப்படி டெஸ்க்டாப்பில் கோப்புகளை சேமித்து வைப்பது எளிதானது, இயலாபாது. சுலபமானது ! அதே நேரத்தில் பாதகமானது என்றும் நிபுணர்கள் சொல்கின்றனர். இமெயிலில் வரும் இணைப்புகளில் துவங்கி , இணையத்தில் டவுண்லோடு செய்யும் புகைப்படம் மற்றும் யூடியூப் வீடியோ என எல்லாவற்றையும் டெஸ்க்டாப்பிலேயே சேமித்து வைப்பது எளிதானது தான். அடுத்த முறை தேவைப்படும் போது எளிதாக கண்ணில் படும். அதோடு ஒரே கிளிக்கில் சேமித்துவிடலாம். தனியே கோப்புகளை தேடி அதற்கென பெயரிட வேண்டிய தேவை கிடையாது.
கோப்புகளை டெஸ்க்டாப்பில் சேமித்து வைப்பதில் உள்ள இது போன்ற சாதகங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தான். டெஸ்க்டாப்பில் சேமித்து வைப்பது அதனால் தானே! பலரது கம்ப்யூட்டரை பார்த்தாலே இதை தெரிந்து கொள்ளலாம்.டெஸ்க்டாப் முழுவதும் தபால்தலை ஒட்டப்பட்டது போல ஐகான்களாக காட்சி அளிக்கும். சிலர் டெஸ்க்டாப் முழுவதும் இப்படி ஐகான்களாக நிரப்பியிருப்பார்கள். இவற்றில் பெரும்பாலானவை சேமிக்கப்பட்ட கோப்புகள் தான் !

ஆனால் டெஸ்க்டாப் சேமிப்பில் பாதகமான அம்சங்களும் பல இருக்கின்றன தெரியுமா? முதல் பாதிப்பு உங்களுக்கே தெரிந்திருக்கலாம்.கோப்புகளை அடுக்கி கொண்டே இருந்தால் அது உங்கள் டெஸ்க்டாப்பின் தோற்றத்தை பாதிக்கும். கோப்புகள் நிறைந்த டெஸ்க்டாப் கூட்டப்படாத குப்பைகள் நிறைந்த அறை போல சுத்தமில்லாமல் காட்சி அளிக்கலாம். எனினும் இந்த அழகியல் பாதிப்பு கூட பெரிய விஷயமல்ல, டெஸ்க்டாப் கோப்புகள் கம்ப்யூட்டரின் வேகத்தை மட்டுப்படுத்தலாம் என்கிறது ’தி கம்ப்யூட்டர் டியூட்டர்’ இணையதளம். டெஸ்க்டாப் சேமிப்பு தொடர்பான பி.சி வேர்ல்டு கட்டுரை இந்த முறையில் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என எச்சரிக்கிறது. கோப்புகள் அதிகரிக்கும் போது குழப்பமாகி எந்த கோப்பு எங்கிருக்கிறது எனத்தெரியாமல் போய்விடலாம் என்பது மட்டும் அல்ல, டெஸ்க்டாப்பில் உள்ள கோப்புகளுக்கு பாதுகாப்பும் கிடையாது ,பேக் அப்பும் கிடையாது என்பது தான் முக்கியமாக கவனிக்க வேண்டியது.
கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் முதலில் டெஸ்க்டாப்பில் உள்ளவற்றை தான் பதம் பார்க்கும். கோப்புகளை பேக் அப் எடுக்க பயன்படுத்தும் புரோகிம்களும் பெரும்பாலும் டெஸ்க்டாப்பில் உள்ளவற்றை சேமிப்பதில்லை. எனவே , ஏதேனும் பாதிப்பு என்றால் டெஸ்க்டாப் கோப்புகளை இழக்க நேரலாம். அவற்றி திரும்ப பெற முடியாது. அதனால் தான் கோப்புகளை வைப்பதற்கு டெஸ்க்டாப் ஏற்ற இடம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.de

சரி கோப்புகளை எங்கே சேமித்து வைப்பது? கம்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான் ஏற்ற இடம் என்கின்றனர். ஹார்ட் டிஸ்க்கிலும் ஒரே இடத்தில் எல்லா கோப்புகளை சேமிக்க கூடாது ,வெவ்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்கின்றனர். நீதி முதலீட்டுக்கான ஆலோசனை போல தான் இதுவும். மூதலீட்டுக்கு பாதுகாப்பு தேவை என்றால் எல்லா சேமிப்பையும் ஒரே வழியில் சேமித்து வைக்கமால், வைப்பு நிதியில் கொஞ்சம், பங்குச்சந்தையில் கொஞ்சம், தங்கத்தில் கொஞ்சம் என பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்பார்கள். அதே போல தான் ஹார்ட் டிரைவில் சேமித்து வைக்கும் போதும் , அதில் உள்ள சி அல்லது டி பகுதியிலோ

பேஸ்புக் நண்பர்களுடன் இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்ள!.

2நீங்கள் இப்போது பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தை உங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்து இருக்கிறீர்களா? ஆம் என்றால் டெஸ்க்ஹாப் சேவை அதை சாத்தியமாக்குகிறது.  இந்த சேவையை பயன்படுத்த முதை எந்த பேஸ்புக் நண்பருடன் இணையபக்கத்தை பகிர்ந்து கொள்ள போகிறீரகள் என தீர்மானித்து கொள்ள வேண்டும். அந்த நண்[பர் நம்பகமானவாராக இருக்க வேண்டும் என்று டெஸ்க்ஹாப் எச்சரிக்கிறது. காரணம் நீங்கள் இணைய பக்கத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை; உங்கள் டெஸ்க்டாப்பின் கட்டுப்பட்டையும் தான் என்கிறது டெஸ்க்ஹாப்.
பேஸ்புக் நண்பரை தேர்வு செய்ததும் அவர் ஆன்லைனில் இருக்கிறாரா என உறுதி செய்து கொண்டு சின்ன சாப்ட்வேரை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். உங்கள் நண்பரும் இவ்வாறு செய்தவுடன் இருவரும் ஒரே இணைய பக்கத்தை பார்க்கலாம். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். இணையதளம் சார்ந்த கூட்டு முயற்சிக்கு இது ஏற்றது என்கிறது டெஸ்க்ஹாப்.
பகிர்தல் முடிந்தவுடன் சாப்ட்வேர் தானாக டெலிட் ஆகிவிடும் என்றும் உறுதி அளிகிறது.
பேஸ்புக்கில் எத்தனையோ விஷய்ங்களை இணைப்புகளாக பகிர்ந்து கொள்கிறோம். இந்த சேவை மூலமாக நாம் பார்த்து கொண்டிருக்கும் திரையை அப்படியே பகிர்ந்து கொள்ளலாம்.
இதை எப்படி பயன்படுத்தலாம்? கம்ப்யூட்டரில் எதேனும் பிரச்சனை என்றால் ஆலோசனை கேட்க பயன்படுத்தலாம். ஒன்றாக இணைந்து திரைக்கதை எழுதலாம். ஒரு புகைப்படத்தை பார்த்து திருத்தலாம்.
ஆனால் ஒன்றாக பாடல்களை கேட்க முடியாது. இதற்கு வேறு சேவைகள் உள்ளன.
பேஸ்புக் பிரியர்கள் பயன்படுத்தி பார்த்து இந்த சேவைக்கான புதிய பலன்கள் அல்லது பிரச்ச்னைகளை பகிர்ந்து கொள்ளலாம்.
http://deskhopapp.com/
பி.கு; உங்களில் சிலர் இணையதளம் அல்லது இணையசேவைகளை இந்த பதிவில் எதிர்பார்க்கலாம். இன்றைய முதல பதிவு செய்தி சார்ந்த்தாக அமைந்து விட்டதால் இணையதள பிரியர்களுக்காக இந்த பதிவு.