டிஜிட்டல் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் குறும் பழக்கங்கள்!

mini-habits-desktop-storage-clutterபதிவுகள், குறும்பதிவுகள் என சொல்வது போல, பழக்கங்களிலும் குறும் பழக்கங்கள் இருக்கின்றன தெரியுமா? ஆங்கிலத்தில் இதை மைக்ரோ ஹாபிட்ஸ் அல்லது மினி ஹாபிட்ஸ் என்கின்றனர். அதாவது ஒரு பழக்கத்தின் சிறு அங்கம் என்று பொருள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு அது முதலில் பழக்கமாக மாற வேண்டும். ஆனால் பழக்கம் அத்தனை எளிதல்ல. புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அல்லது பழைய பழக்கத்தை மாற்றிக்கொள்ள விடாமுயற்சி தேவை. உற்சாகத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து கடைபிடிக்கும் உறுதி இல்லாமல் தொய்வு ஏற்பட்டால் எல்லாம் வீணாகிவிடும். அதன் பிறகு மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

பழக்கம் இப்படி பாடாக படுத்துவதை தவிர்ப்பதற்காக தான் எளிதான மாற்று வழியாக குறும் பழக்கங்களை முன்வைக்கின்றனர். எந்த பழக்கத்தை பின்பற்ற விரும்புகிறோமோ, அந்த பழக்கம் தொடர்பாக ஏதேனும் ஒரு சிறிய செயலை மட்டும் செய்யத்துவங்கினால் போதும். இதை செய்ய பெரிய அளவில் ஊக்கம் தேவையிருக்காது என்பதால், அதிகம் யோசிக்காமல் செய்யலாம். நாளடைவில் அது பழகிவிடும்.

பெரும் பாய்ச்சலாக முயற்சிப்பதை விட, இப்படி சின்ன சின்ன அடியாக எடுத்து வைத்து பழக்கங்களை வெல்லலாம் என்கின்றனர்.
இந்த வழிமுறையை தொழில்நுட்ப உலகிற்கும் பொருத்திப்பார்க்கலாம் எனும் மேக் யூஸ் ஆப் இணையதள கட்டுரை, நம்முடைய டிஜிட்டல் வாழ்க்கையை மேம்படுத்த்திக்கொள்ள உதவும் குறும் பழக்கங்களை பரிந்துரைக்கிறது:

* வாரம் ஒரு சேவைக்கு பாதுகாப்பு

இணைய பயன்பாடு பரவலாகி இருக்கும் அதே நேரத்தில் ஆபத்தாகவும் மாறி இருக்கிறது. ஹேக்கிங், பாஸ்வேர்டு திருட்டு, அடையாளத்திருட்டு, ஆன் -லைன் மோசடி, மால்வேர் பாதிப்பு என பலவிதங்களில் ஆபத்துகள் மறைந்திருக்கின்றன. இவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் இணைய சேவைகளை பாதுகாப்பானதாக அமைத்துக்கொள்ள வேண்டும். பேஸ்புக்கில் துவங்கி, ஜிமெயில், வாட்ஸ் அப் என பெரும்பாலான சேவைகளில் பயனாளிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. பலவகையான சேவைகளை பயன்படுத்தும் நிலையில், ஒவ்வொன்றிலும் இந்த அம்சங்களை செயல்படுத்துவதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கலாம். இதற்கு தீர்வாக, வாரம் ஒரு சேவையை தேர்வு செய்து அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்தலாம். அதிகம் பயன்படுத்தும் சேவையில் இருந்து இதை துவங்கலாம்.
இதே முறையை பாஸ்வேர்ட் பாதுகாப்பிற்கும் பின்பற்றலாம். பலவீனமான பாஸ்வேர்டுகளை வைத்திருக்க கூடாது, பரவலாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டை தவிர்க்க வேண்டும், ஒரே பாஸ்வேர்டை எல்லா சேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடாது என பாஸ்வேர்டு தொடர்பான பல விஷயங்கள் வலியுறுத்தப்படுகின்றன. வாரம் ஒரு இணைய சேவையாக தேர்வு செய்து அதன் பாஸ்வேர்டு பலமாக இருக்கிறதா என சோதித்துப்பார்த்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

* சுத்தமான டெஸ்க்டாப்
வீட்டைகூட சுத்தம் செய்து விடலாம் ஆனால் டெஸ்க்டாப்பை தூய்மையாக்க முடியவில்லை என்று புலம்பும் வகையில் உங்கள் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் ஐகான்களாகவும், கோப்புகளாகவும் அடைத்துக்கொண்டிருக்கின்றனவா? இதை ஒரேடியாக சுத்தமாக்க முயன்று தோல்வியை தழுவாமல், ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை இயக்கும் போதும் ஒரு ஐகான் அல்லது கோப்பை டெஸ்க்டாப்பில் இருந்து அகற்றுவது என வைத்துக்கொள்ளுங்கள்.

* உடற்பயிற்சி அவசியம்
நீண்ட நேரம், ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வது ஆரோக்கிய கேடு என்பது உங்களுக்கேத்தெரிந்திருக்கும். ஆனால் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பே கதி என இருப்பவர்கள் என்ன செய்வது? கவலையே வேண்டாம், கம்ப்யுட்டர் முன் அமர்ந்தபடியே அவ்வப்போது கை காலை நீட்டி மடக்கி செய்யும் எளிதான உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இந்த உடற்பயிற்சிகளை இ- மெயில் பார்க்கும் போது அல்லது பேஸ்புக்கில் நுழையும் போது செய்வது என வைத்துக்கொண்டால் போதும்.

* ஒளிபடங்கள்
கையில் ஸ்மார்ட்போன் இருப்பதால் ஒளிப்படங்களாக எடுத்து தள்ளிக்கொள்கிறோம். ஆனால் இவை அப்படியே சேர்ந்துவிட்டால் எவை என்ன படம் என்று தெரியாமல் குழப்பமாக இருக்கும். எனவே, ஓய்வு நேரத்தில் ஒளிபடங்களை வகைப்படுத்தி அவற்றுக்கென குறிச்சொல் அமைத்து சேமித்து வைக்கலாம். ஒளிபடங்களுக்கு பேக் அப் எடுக்கவும் மறக்க வேண்டாம்.

* மாதம் ஒரு சாதனம்

கம்ப்யூட்டர், மவுஸ், கீபோர்ட் தவிர தேவைக்கேற்ப ரவுட்டர், வை-பை, புளு டூத் ஸ்பிக்கர் என பல சாதனங்களை பயன்படுத்தும் நிலை இருக்கலாம். இந்த சாதனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மாதம் ஒரு சாதனத்தை சுத்தம் செய்வது என வைத்துக்கொண்டால் கூட போதும், கம்ப்யூட்டர் மேஜை ஓரளவு சுத்தமாக இருக்கும்.

* இ-மெயில் சுமை
செய்திமடல் சேவைகள் பயனுள்ளவை தான். ஆனால் அதிக சேவைகளில் உறுப்பினராக சேரும் போது, தொடர்ந்து வரும் மெயில்களை திறந்து பார்ப்பதற்கே நேரம் இல்லாமல் போகலாம். இது இமெயில் சுமையாக மாறுவதை தவிர்க்க தினம் ஒரு செய்திமடல் சேவையை பரிசீலித்து தேவை இல்லை எனில் அதில் இருந்து விலகி விடலாம்.

இப்படியே உங்கள் தேவை மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப தினம் ஒரு இணையதளத்தை பார்ப்பது, அல்லது இணைய அகராதியில் தினம் ஒரு வார்த்தைக்கு பொருள் அறிவது போன்ற வழிகளையும் பின்பற்றலாம். இணைய குறிப்பேடு அல்லது புக்மார்க் வசதியை பயன்படுத்தி தினம் ஒரு விஷயம் அல்லது நல்ல இணையதளத்தை குறித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.