Tag Archives: facebook

ஒரு கடத்தலும் சில பேஸ்புக் அப் டேட்டுகளும்

உலகை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது.பேஸ்புக் என்னும் பூதம்!அந்த பூதம் எதையும் பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது.நேரம் காலம் பார்க்காமல் எப்போதும் அப் டேட்டுகளை வெளியிட வைக்கிறது.எங்கிருந்தாலும் என நடத்தாலும் பேஸ்புக்கில் தெரிவித்து விடும் மோகத்திற்கு பய‌னாளிகளை மாற்றியிருக்கிறது அது.

வம்பில் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்திருந்தும் பலர் வாழ்க்கை நிகழ்வுகளை அவை நிகழும் போதே பேஸ்புக்கில் பதிவேற்றி விடுகின்றனர்.

இந்த பேஸ்புக் அடிமைத்தனத்திற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்க வாலிபர் ஒருவர் கடத்தல் நாடகத்திற்கு மத்தியில் அதில் அரங்கேறிய காட்சிகளை பேஸ்புக்கில் வெளியிட்டு பரப‌ரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை எப்படி விளங்கி கொள்வது என்று தெரியாமல் காவல் துறையினர் மட்டும் அல்ல,சமூகவியல் நிபுணர்களும் குழ‌ம்பி போயுள்ளனர்.

அமெரிக்காவும் உட்டா நக‌ரை சேர்ந்த ஜேசன் வல்டேஸ் என்னும் அந்த வாலிபர் குற்ற்ங்களுக்கும் புதியவரல்ல.காவல் துறைகும் புதியவ‌ரல்ல.அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் போதை பொருள் வழக்கு தொடர்பாக காவல் துறையினர் அவரை கைது செய்ய வாரண்டோடு சென்ற‌னர்.வழக்கு விசாரணக்கு ஆஜராகுமாறு சமன் அனுப்பியும் அவர் அதனை மதிக்காமல் போக்கு காட்டி வந்ததால் இந்த‌ நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால் வால்டேசோ வெஸ்டன் காலனி இன் என்னும் ஓட்டலுக்குள் பதுங்கி கொண்டதோடு வெரோனிகா என்னும் பெண்மணையையும் பிணைக்கைதியாக பிடித்து வைத்து கொண்டார்.

அதன் பிறகு 16 மணிநேரம் காவலர்கள் அந்த பெண்ணை மீட்க அவரோடு போராடியுள்ளனர்.பொதுவாக இது போன்ற பரபரப்பான பதட்ட‌மான சூழலில் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை.டிவி சேனல்கள் போட்டி போட்டி கொண்டு நேரடி ஒளிபர‌ப்பு செய்யும் என்றாலும் அவை த‌ரும் செய்திகள் எல்லாம் வெளியில் இருந்தே பெறப்பட்டவையாகவே இருக்கும்.உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்ப‌தை தெரிந்து கொள்வது கடினமான விஷயமே.அதிலும் குற்ற‌வாளியின் மனநிலையை அறிந்து கொள்வது என்ப‌து இயலாத காரியம்.

ஆனால் இந்த சம்பவத்தின் போதோ பினைக்கைதியாக பெண் மணியை பிடித்து வைத்திருந்த வால்டேசின் மன‌ ஓட்டத்தை பலரும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.அதற்கு காரணம் அவரே பேஸ்புக் பக்கத்தில் உள்ளுக்குள் நடப்பவற்றை அப் டேட்டாக வெளியிட்டு வந்தது தான்.

ஒரு மோதலில் சிக்கியிருக்கிறேன்.கொஞ்சம் மோசமான நிலை தான்,ஆனால் எதற்கும் தயாராக‌ இருக்கிறேன் என்று அவர் தனது முதல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.அதோடு ‘நண்பர்களே உங்களை மிகவும் நேசிக்கிறேன்,இங்கிருந்து உயிரோடு வருவேனா என்று தெரியவில்லை…’என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து காவலர்களோடு மல்லுகட்டிய படியே அவர் பேஸ்புக்கிலும் பேசிக்கொண்டிருந்தார்.

தன்னுடன் இருக்கும் பெண்ணின் பெயர் வெரோனிகா என்றும் தெரிவித்தார்.தானும் அந்த பெண்ணும் இருக்கும் புகைபடத்தையும் பேஸ்புக்கில் அவர் நண்பர்கள் பார்வைக்கு சமர்பித்தார்.அழகான கைதி என்னிடம் சிக்கியிருக்கிறாள் என்ர குறிப்போடு இரண்டு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே காவலர்கல் மின்சாரத்தை துண்டித்திருந்தனர். இப்படி செய்வதன் மூலம் பிணைக்கைதியின் உயிருகு தான் காவலர்கள் ஆபத்தை உண்டாக்குகின்ற‌னர் என்றும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு கடத்தல் நாடக‌த்தை அது அரங்கேறும் போதே பின் தொடர்வதற்கான வாய்ப்பாக இந்த பேஸ்புக் பதிவுகள் அமைந்தன.இவற்றை படித்த நண்பர்கலில் சிலர் அவ‌ருக்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் சரண‌டைந்து விடுமாறு அறிவுறை கூறினர்.ஒரு நண்பர் ஒரு படி மேலே சென்று அருகில் உள்ள புதரில் காவலர் ஒருவர் பதுங்கியபடி இருப்பதாக பேஸ்புக் மூலமே தகவல் கொடுத்தார்.அவரும் இந்த தகவலுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

அந்த பெண்ணை விடுவித்துவிட்டேன் ,ஆனால் இந்த … கவலர்கள் எவ்வளவு சொல்லியும் கேளமால் உள்ளே நுழைய முற்படுகின்ற‌னர் ,எல்லாம் மீண்டும் ஆரம்பமாகிற‌து என சில மணி நேரம் கழித்து கடைசி பதிவில் குறிப்பிடிட்டிருந்தார்.அதன் பிறகு அவர் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

ஒரு குற்றவாளி காவலர்க‌ளோடு சண்டையிட்ட படி பேஸ்புக்கில் தனது மன‌நிலையை பகிர்ந்த கொண்ட இந்த சம்பவம் காவல்ர்களுக்கு புதிய சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.பேஸ்புக் மூலம் வால்டேசுக்கு தகவல் கொடுத்த நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமா,அவர்கள் குற்றவாளிக்கு உதவியாதாக க‌ருதலாமா போன்ற கேள்விகாளுக்கெல்லாம் பதில் தேடுகின்றனர்.

பேஸ்புக்கின் ஆதிக்கம் மற்றும் பாதிப்பை உணர்த்த எத்தனையோ உதாரணங்கள் உண்டு.இது முற்றிலும் புதிதாக இருக்கிறது.

சாப்பிடலாம்;சந்திக்கலாம்;அழைக்கும் இணையதளம்.

சாப்பட்டையும் சமூக வலைப்பின்னலையும் இணைக்கும் வகையில் மேலும் ஒரு சேவை உதயமாகியுள்ளது.

அதாவது சேர்ந்து சாப்பிட நண்பர்களுக்கு அழைப்பு விடுப்ப‌தற்கான இணையதளம்.

சாப்பிடுவதற்கு  நண்பர்களை அழைக்க வேண்டும் என்றால் செல்போன்  இருக்கிறதே என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்டால் நீங்கள் இன்னும் பேஸ்புக் யுகத்திற்கு வந்து சேரவில்லை என்று பொருள்.

போனில் கை வைக்காமால் ,இமெயில் உதவியை நாடாமல் பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் சேவை ஏற்படுத்தி தரும் வசதியை பயன்படுத்தி மதிய உணவுக்காக‌ நண்பர்களை அணி சேர்ப்பது தான் இப்போதைய பேஷன்.அது மட்டும் அல்ல நண்பர்கள் என்னும் போது ஏற்கனவே உள்ள நெருக்கமான வட்டத்தை சேர்ந்த நண்பர்கள் அல்ல.புதிய நண்பர்கள்.

பேஸ்புக்கில் வலைவீசினால் புதிய நண்பர்கள் கிடைக்கின்றனர் அல்லவா?அதே போல சேர்ந்து சாப்பிடுவதன் மூலமே அறிமுகமாகி நட்பை வளர்த்து கொள்ளும் நண்பர்கள்.

தொழில்முறையில் பலரை சந்தித்து பேச வேண்டியவர்களுக்கு இதன் அருமை புரியும்.தொழில் முறையில் புதிய வாய்ப்புகள் தேவைப்படும் போது புதியவர்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இத்தகைய நண்பர்களை அடைய சிறந்த வழி அப்படியே சாப்பிட்டு கொண்டே பேசலாமா என் கேட்டு ரெஸ்டாரண்டுக்கு போவது தான்.

சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்கும்.அப்படியே பேச்சு வாக்கில் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டு நட்பையும் ஏற்படுத்தி கொள்ளலாம்.இந்த நட்பு தொழில் ரீதியாக உதவும்.

ஆனால் திடிரென சாப்பிட‌ வாருங்கள் என‌ அழைப்பது எப்படி?

இந்த இடத்தில் தான் சாப்பிடுவதையும் சமுக தொடர்புகளையும் இணைக்கும் சேவைகள் வருகின்றன.

இந்த பிரிவில் புதிய வரவான பைட் டூ மீட் இணையதளம் மிக சுலபமாக சாப்பிடுவதற்கான நண்பர்களை தேடிக்கொள்ள உதவுகிறது.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்ததுமே உங்கள் பேஸ்புக் அல்லது டிவிட்டர் தொடர்புகளை நீங்கள் எங்கே எப்போது சாப்பிட விரும்பிகிறீகள் என்று குறிப்பிடலாம்.அதே நேரத்தில் உங்கள் தொடர்புகளில் யாரெல்லாம் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை இந்த தளம் வரைபடத்தில் காட்டும்.(அதாவது அவர்களும் இதில் உறுப்பினராக இருந்தால்).நீங்கள் தேர்வு செய்த இடத்தில் யார் இருக்கின்றனறோ அவர்களை தொடர்பு கொண்டு சாப்பிட அழைக்கலாம்.

அதே போல நீங்களும் கூட இந்த வகையில் யாராலாவது சாப்பிட அழைக்கப்படலாம்.எல்லாமே இருப்பிடம் சார்ந்தது என்பதால் மிகவும் உடனே சந்தித்து சாப்பிட ,சாப்பிட்டபடி பேச வசதியாக இருக்கும்

டேட்டிங் போல ஒருவரை மட்டும் சாப்பிட அழைக்கலாம்.அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்டவரையும் அழைக்கலாம்.

ஆனால் சாப்பாட்டுக்கான பில் யார் பொறுப்பு என்பதை எல்லாம் முன்கூட்டியே முடிவு செய்து கொள்வது நல்லது.

எதை பற்றி பேசுவது என்பதை தீர்மானிக்க அல்லது யாரை சாப்பிட் அழைத்தல் நமக்கேற்றவராக இருப்பார் என்பதை முடிவு செய்ய ஒவ்வொருவரும் குறிச்சொற்கள் மூலம் தங்கள் விருப்பங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.

அதே போல் ரெஸ்டாரண்டுகளுடன் கூட்டணி வைத்து கொண்டு உறுப்பினர்களுக்கு சலுகை மற்றும் தள்ளுபடி பெற்றுத்தரும் திட்டமும் உள்ளதாம்.ஆனால் ஒன்று சாப்பிட செல்லும் இடம் பாதுகாப்பானது தானா என்றெல்லாம் யோசித்து கொள்ள வேண்டும்.

இணையதள முகவரி;http://bitetomeet.com/accounts/sign_in

த‌கவல் நதி பாய்ந்து ஓட‌ட்டும்;டிவிட்டர் பிரகடனம்.

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் போது உருவாகியிருப்பது தற்செயலானது என்றாலும் பொருத்தமானது என்றே தோன்றுகிற‌து.

இதற்கான காரணம் மிகவும் சுலபமானது.மீனவர் ஆதரவு இயக்கம் போலவே எகிப்து மக்கள் போராட்டத்தின் முதுகெலும்பாக இருப்பது டிவிட்டர் மற்றும் அதன் சகோதர சேவைகள் தான்.(பேஸ்புக்,யூடியூப்).

எகிப்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு முன் டுனிசியாவில் டிவிட்டர் புரட்சி வெடித்தது.வேலையில்லா திண்டாட்டம் ,ஊழல் போன்ற பிர்சனைகளால் வெறுத்து போன டுனிசிய மக்கள் டிவிட்டர் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத்துவங்கியது அரசுக்கு எதிரான மக்கள் இயக்கமாக உருவானது.

டுனிசியாவின் புரட்சி தீ மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரவலாம் என்று கணிக்கப்பட்டதற்கு ஏற்பவே எகிப்தில் பதவி நாற்காலியில் பல ஆண்டுகளாக ஒட்டிக்கொண்டிருக்கும் முபாரக் அரசுக்கும் எதிரான‌ போராட்டம் வெடித்தது.எதிர்பார்க்க கூடியது போலவே எகிப்து அரசு முதல் வேலையாக டிவிட்டருக்கு தடை விதித்து இண்டெர்நெட் பயன்பட்டிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.

போராட்டத்தை நசுக்க எப்போதுமே ஆதக்க சக்திகள் பல்வேறு அடக்கு முறைகளை கடைபிடித்து வந்துள்ளனர்.தகவல் யுகத்தில் மக்கள் போராட்டத்திற்கான மாபெரும் ஆயுதமாக இணையம் உருவாகி இருப்பதால் போராட்டம் என்று வரும் போது அரசுகள் முதலில் செய்வது இண்டெர்நெட்டின் குரல் வலையை நெறிப்பது தான்.

அதிலும் குறிப்பாக இப்போது டிவிட்டரில் கை வைக்கின்றனர்.

டிவிட்டர் செய்திகள் மூலம் போராட்டத்திற்கு தூண்டுகோளாக இருக்ககூடிய‌ தகவல்கள பகிர்ந்து கொள்ளப்பட்டு பரஸ்பர ஆதரவு திரட்டப்படுகிற‌து.வெகுஜன ஊடகங்கள் தனிக்கை மற்றும் லாப நஷ்ட கணக்கின் அடிப்படையில் செய்திகளை சீர் தூக்கி பார்த்து வெளியிடும் நிலையில் இணையவாசிகள் எந்தவித அச்சமோ தய‌க்கமோ இல்லாமல் கருத்துக்களை வெளியிட்டு ஆதரவு திரட்ட டிவிட்டரும் பேஸ்புக்கும் கை கொடுக்கின்றன.

எனவே தான் செஞ்சீனமும் சரி மதாடிப்படைவாத ஈரானும் சரி மக்கள் அதிருப்தியை எதிர் கொள்ளும் போது டிவிட்டர் நதியின் மூலம் எதிர்ப்பு தகவல்கள் பாய்ந்தோடுவதை தடுக்க வேண்டும் என நினைக்கின்றன.

இப்போது எகிப்திலும் இது தான் நடந்திருக்கிறது.

உண்மையில் எந்த ஒரு நாட்டில் டிவிட்டருக்கு தடை விதிக்கப்படுகிறதோ அங்கு நிலைமை சரியில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு டிவிட்டர் மக்கள் சாதனமாக உருவாகியுள்ளது.

வர்த்தக நிறுவனமாக இருந்த போதிலும் டிவிட்டர் நிர்வாகம் இதனை உணர்ந்திருப்பது நல்ல விஷ‌யம்.அதைவிட இந்த புரிதலை வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள‌ அறிக்கை வரவேற்கத்தக்கது.

டிவிட்டர் நதி பாய்ந்தோடட்டும் என்னும் தலைப்பிலான பதிவில் டிவிட்டர் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன்,தங்களுக்கு அர்த்தமுள்ள வகையில் எந்த இடத்தில் இருப்பவரும் உடனடியாக தொடர்பு கொள்ள வழி செய்வதே டிவிட்டரின் நோக்கம் என்றும் இதற்கு கருத்து சுதந்திரம் மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சில டிவிட்டர் செய்திகள் அடுக்குமுறை தேசங்களில் முற்போக்கான மாற்றத்தை கொண்டு வர வல்லவை என்றும் கூறியுள்ள ஸ்டோன் டிவிட்டரின் உள்ளடக்கத்தில் உடன்பாடு  இல்லாவிட்டாலும் கூட அந்த தகவல்கள் பாய்ந்தோட செய்து வருவதாக கூறியுள்ளார்.

கருத்து சுதந்திரத்தை அடிப்படை ம‌னித‌ உரிமை என்று குறிப்பிட்டுள்ள ஸ்டோன் எந்த கருத்தையும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்வதை தடுக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.

டிவிடரின் தணிக்கை கொள்கை பற்றியும் விரிவாக விளக்கியுள்ள ஸ்டோன் கருத்து சுதந்திரம் தொடர்பான டிவிட்டரின் கருத்துக்களை பின்தொடர்வதற்கான முகவரியையும் கொடுத்துள்ளார்.

டிவிட்டர் ஒரு போராட்ட கருவியாக உருவாகியுள்ள நிலையில் டிவிட்டரின் இந்த தன்னிலை விளக்கம் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான ஆதரவு வரவேற்கத்தக்கதது.

சில ஆண்டுகளுக்கு முன் ஈரானில் எதிர்ப்பு அலை எழுந்த போது டிவிட்டரே அதன் மையமாக விளங்கியது.அப்போது டிவிட்ட தளத்தின் பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டிருந்த‌து.இந்த நேரத்தில் டிவிட்ட மூடப்பட்டால் போராட்டக்காரகளின் குரல் கேட்காமல் போய் விடும் என் க‌ருதி அமெரிக்க அரசே டிவிட்டரிடம் பராமரிப்பு பணிகளை தள்ளிவைக்க கேட்டுக்கொண்டது நினைவிருக்கலாம்.

———-

http://blog.twitter.com/2011/01/tweets-must-flow.htm

———-
(தமிழக மீனவர்களுக்கான டிவிட்டர் இயக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்)

l

ஃபேஸ்புக்கில் இந்திய பிரதமர்.

manmohan_singhகொஞ்சம் ஆச்ச‌ர்யமான விஷயம் தான்.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினராக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

மன்மோகனின் முன்னாள் மீடியா ஆலோசகர் சஞ்ஜய் பரு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.அவருடைய ஃபேஸ்புக் பக்கம் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதாகவும் எனவே பிரதமர் ஃபேஸ்புக் தளத்தில் இருப்பது உறுதியாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்போகன் தொடர்பான செய்திகள், வீடியோ கோப்புகள் ஆகியவை அதில் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் பொதுவாக‌ இளைஞ‌ர்க‌ளின் கூடார‌மாக‌ க‌ருத‌ப்ப‌ட்டாலும் பெரிய‌வ‌ர்க‌ளும் பிர‌ப‌ல‌ங்க‌ளும் அத‌னை ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் ப‌ல‌ர் ஃபேஸ்புக் மூல‌ம் தேர்த‌ல் பிர‌ச்சார‌மும் மேற்கொண்டுள்ள‌ன‌ர்.

அமெரிக்க‌ அதிப‌ர் ஒபாமா ஃபேஸ்புக் ப‌ய‌ன்பாட்டில் முன்னோடி என்று வ‌ர்ணிக்க‌ப்ப‌டும் அள‌வுக்கு த‌ன்னுடைய‌ தேர்த‌ல் பிராசார‌த்தின் போது ஆதார‌வாள‌ர்க‌ள் ம‌ற்றும் வாக்காள‌ர்க‌ளை தொட‌ர்புகொள்ள தீவிரமாக‌வே ஃபேஸ்புக்கை ப‌ய‌ன்ப‌டுத்த‌னார். த‌ற்போது அதிப‌ரான‌ பின்னும் ஃஃபேஸ்புக்கை அவ‌ர் ப‌ய‌ன்ப‌டுத்தி வருகிறார்.

ஆனால் இந்தியாவை பொறுத்த‌வ‌ரை அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் ம‌த்தியில் ஃபேஸ்புக் போன்ற‌வை இன்னும் பிர‌ப‌ல‌மான‌தாக‌ தெரிய‌வில்லை.ராகுல் போன்ற‌ இள‌ம் எம் பி க்க‌ள் சில‌ர் ஃபேஸ்புக்கில் உள்ள‌ன‌ர்.

இந்த‌ நிலையில் இண்டெர்நெட் ப்ரிட்ச‌ய‌ம் இல்லாத‌வ‌ரும் செல்போன் கூட‌ வைத்திர‌த‌வ‌ருமான‌ பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் ஃபேஸ்புக்கில் உறுப்பின‌ராக‌ இருப்ப‌து விய‌ப்பானாதது தான்.

ஆனால் பிரதமர் தானே நேரடியாக ஃப்பேஸ்புக்கில் தகவல்களை இடம்பெற வைப்பதாக கருத்வதற்கில்லை. இந்திய‌ வ‌ழ‌க்க‌ப்ப‌டி அவ‌ர் சார்பில் அதிகாரி யாராவ‌து செய்து கொண்டிருக்க‌லாம்.

ஒபாமாவின் அறிவுரை

இத‌னிடையே அமெரிக்க‌ அதிப‌ர் ஒபாமா ஃபேஸ்புக் ப‌ய்ன‌பாடு தொட‌ர்பாக‌ இளைஞ‌ர்க‌ளுக்கு முக்கிய‌ அறிவுரை வ‌ழ‌ங்கியுள்ளார்.எதிர்கால‌த்தில் அதிப‌ராக‌ வேண்டும் என்‌ற‌ விருப்ப‌ம் இருந்தால் ஃபேஸ்புக்கில் இட‌ம்பெற‌ வைக்கும் த‌க‌வ‌ல்க‌ள் குறித்து எச்ச‌ரிக்கையாக‌ இருங்க‌ள் என்று குறியுள்ளார்.கார‌ண‌ம் இப்போது ஃபேஸ்புக்கில் ப‌திவு செய்யும் க‌ருத்துக்க‌ள் நாளை உங்க‌ளை ஆட்டிப்ப‌டைக்க‌லாம் .

அதிப‌ராகும் எண்ண‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ எல்லோருக்குமே இது பொருத்தும்.

டிவிட்டரில் இந்திய கேப்டன் டோனி

tதொழில்நுட்பத்தின் தாக்கம் நமக்கு எதிர்மறையாகாவே அறிமுகமாவது குறித்து எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு.

இமெயிலின் அருமையை உணர்வதற்கு முன் இமெயில் மோசடி பற்றி தான் அதிகம் தெரிந்துகொண்டோம்.செல்போன் கொண்டு வ‌ந்துள்ள‌ மாற்ற‌ங்க‌ள் குறித்து எத‌தனையோ ந‌ல்ல‌ விஷய‌ங்க‌ள் இருக்க‌ செல்போனில் ஆபாச‌ ப‌ட‌ம் எடுக்க‌ முடிவ‌து ப‌ற்றியே அதிக‌ம் செய்திக‌ள் வெளியாகின்ற‌ன‌.

பொதுவாக‌வே இண்டெர்நெட் ப‌ய‌ன்பாடு தொட‌ர்பாக‌ எதிர்ம‌றையான‌ செய்திக‌ளே பெரிய அளவில் வெளியாகின்றன.இண்டெர்நெட் அறிமுகமில்லாதவர்கள் இந்த செய்திகளை படிக்க நேர்ந்தால் இந்த தொழில்நுடபமே தீமையானது என நினைத்து விடுவார்கள்.

பேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் போன்ற‌ வ‌லை பின்ன‌ல் த‌ள‌ங்க‌ள் விஷ‌ய‌த்திலும் இதே நிலை தான் தொட‌ர்கிற‌து.இந்த‌ இர‌ண்டு த‌ள‌ங்க‌ளுமே த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌த்திலும் தொட‌ர்புக‌ளை உருவாக்கி கொள்வ‌திலும் புதிய‌ எல்லைக‌ளை உண்டாக்கி வருகின்ற‌ன‌.இவை ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் வித‌ம் குறித்து எழுத‌வும் விய‌க்க‌வும் எவ்வ‌ள‌வோ இருக்கின்ற‌ன‌.

ஆனால் பேஸ்புக் ப‌ற்றி ந‌ம‌க்கு கிடைக்கும் த‌க‌வ‌ல்க‌ள் எத்த‌கைய‌து தெரியுமா?ந‌டிக‌ர் த‌னுஷ் பெய‌ரில் பேஸ்புக் த‌ள‌த்தில் மோச‌டி என்ப‌து தான்.பிர‌ப‌ல‌ங்க‌ள் பெய‌ரில் பேஸ்புக் ப‌க்க‌த்தை அமைத்து செய‌ல்ப‌டுவ‌து என்ப‌து உல‌க‌லாவிய‌ நிக‌ழ்வாக‌வே இருக்கிற‌து.

பேஸ்புக் போன்ற‌ த‌ள‌ங்க‌ளின் அருமையை புரிந்து கொள்ளும் பிர‌ப‌ல‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்கான‌ ப‌க்க‌த்தை உருவாக்கி கொண்டு ர‌சிக‌ர்க‌ளோடு தொட‌ர்பு கொள்கின்ற‌னர்‌.ம‌ற்ற‌ பிர‌ப‌ல‌ங்க‌ள் இத்த‌கைய‌ தொழில்நுட்ப‌ங்க‌ளின் முக்கிய‌த்துவ‌தை உண‌ராம‌ல் இருந்துவிடுகின்ற‌ன‌ர்.அப்போது யாராவ‌து ர‌சிக‌ர்க‌ள் அல்ல‌து விஷ‌மிக‌ள் அவ‌ர்க‌ள் பெய‌ரில் பேஸ்புக் ப‌க்க‌த்தை அமைத்து விடுகின்ற‌ன‌ர்.

இதில் பெரிய‌ மோச‌டி எல்லாம் ந‌ட‌ந்துவிட‌வில்லை.ஒரு ஏமாற்று வேலையாக‌வே இத‌னை க‌ருத‌லாம்.

டிவிட்ட‌ரிலும் இதே போல‌ ந‌ட‌ந்து வ‌ருகிற‌து.பிர‌ப‌ல‌ங்க‌ள் பெய‌ரில் போலி முக‌வ‌ரிக‌ள் உருவாக்க்க‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ளின் ப‌க்க‌ங்க‌ள் இய‌க்கப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.இத‌னை த‌டுப்ப‌த‌ற்காக‌வே டிவிட்ட‌ர் நிர்வாக‌ம் க‌ண‌க்கை ச‌ரிபார்க்கும் சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து.

இப்பொது இந்திய‌ கேப்ட‌ன் டோனி உள்ளிட்டோர் இந்த‌ நிலைக்கு ஆளாகியுள்ள‌ன‌ர் என்ற‌ செய்தியை பிடிஐ நிறுவ‌ன‌ம் வெளியிட்டுள்ள‌து.இந்த‌ க‌ண‌க்குக‌ளை பார்த்து ப‌ல‌ ர‌சிக‌ர்க‌ள் ஏமாந்து போயிருப்ப‌தாக‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து.

இங்கே நான் கூற‌ விரும்புவ‌து என்ன‌வென்றால் டோனி பெய‌ரில் மோச‌டி என‌ இத‌னை புரிந்து கொள்ள‌ முற்ப‌டுவ‌து த‌வ‌று என்ப‌தே.டிவிட்டர் சார்ந்த நிகழ்வுகளில் இது ஒரு சின்ன நிகழ்வு மட்டுமே.டிவிட்டரின் பரிமாணம் பலவிதமாக இருக்கும் போது டோனி பெயரில் மோசடி என்பது சரியான அறிமுகம் அல்ல.பிரபலங்கள் டிவிட்டர் பயன்பாடு பெரிய அளவில் பேசப்படும் போது இத்தகைய நிகழ்வுகளும் பெரிதுப்படுத்தப்படுவது இயல்பானது தான்.இருந்தாலும் கூட டோனி ஏமாற்றப்பட்டது போல இந்த செய்தி வெளியிடப்பட்டால் அது டிவிட்டருக்கான மோசமான அறிமுகமே.

உண்மையில் டிவிட்ட‌ரின் அருமையை புரிந்து கொள்ளாம‌ல் த‌ன்னுடைய‌ டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை உரிய‌ நேர‌த்தில் உருவாக்க‌த்த‌வ‌றிய‌ இந்திய‌ கேப்ட‌னுக்கு இது ஒரு எச்ச‌ரிக்கை ம‌ணி என்றே க‌ருத‌ வேண்டும்.

டிவிட்ட‌ர் மூல‌ம் விளையாட்டு ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் ர‌சிக‌ர்க‌ளை நேர்டியாக‌ தொட‌ர்பு கொள்ள‌லாம் எனும் போது அதை டோனி போன்ற‌ இந்திய‌ வீர‌ர்க‌ள் உண‌ராம‌ல் இருப்ப‌தே ஏமாற்ற‌ம்.