Tag Archives: file

index

உங்கள் இ-மெயிலில் பணிவு இருக்கிறதா?

இ-மெயிலை எப்படி பயன்படுத்துவது எப்படி? என பாடம் நடத்துவது எல்லாம் இனியும் தேவையில்லாத விஷயம் என்று தான் நம்மில் பலர் நினைக்கலாம்.ஆனால் இ-மெயிலை சரியாக பயன்படுத்துவது எப்படி என்பது என்பது தொடர்பாக எல்லோரும் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.சரியாக எனும் போது மறுமுனையில் இருப்பவர் அதிருப்தியோ,ஆவேசமோ அடையாத வகையில் வாசகங்களை மெயிலில் இடம்பெறச்செய்வது!

ஏனெனில் மெயிலில் நாம் பயன்படுத்திம் தொனி அதை வாசிப்பவர் மனதில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.அதிலும் போகிற போக்கில் அதிகம் யோசிக்காமல் அனுப்பி வைக்கப்படும் மெயில்கள் வர்த்தக முறிவுகளை கூட உண்டாக்கலாம்.

இதற்கு முக்கிய காரணம், கடிதம் எழுதும் போது அதற்கென ஒரு வடிவத்தை,அலுவல் மொழியை பயன்படுத்த பழகியிருப்பது போல அதன் நவீன கால வடிவமான ஈ-மெயிலுக்கு என ஒரு அமைப்புக்கு நாம் பழகியிருக்கவில்லை என்பது தான்.

அலுவலகத்தில் உடன் பார்க்கும் நண்பருக்கு மெயில் அனுப்பும் போது, கோப்பு தேவை அனுப்பவும் என ஒற்றை வரியை டைப் செய்வதற்கும், தயவு செய்து,இந்த கோப்பை உடனே அனுப்பி வைக்கவும் என கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இப்படி இ-மெயில் அனுப்பும் போது அதில் இடம்பெறும் வாசகங்களில் அலட்சியம்,ஆணவம் போன்ற தொனி கேட்பதை தவிர்கக்ச்செய்யும் சேவையை பாக்ஸ்டைப் அறிமுகம் செய்துள்ளது.இ-மெயில் திருத்தச்சேவையான இதில் நாம் உத்தேசித்துள்ள வாசகங்களை டைப் செய்தால் அவற்றை சரி பார்த்து பணிவம்சம் கொண்ட வாசகங்களாக மாற்றித்தருகிறது.

மெயிலில் உள்ள வார்த்தைகளில் எவை பணிவற்றவை என சுட்டிக்காட்டி அவற்றை எப்படி மாற்றலாம் எனும் ஆலோசனை சொல்கிறது. நண்பர்களுக்கு அனுப்பும் மெயில்களை கூட விட்டுவிடலாம் ஆனால் வர்த்தக நோக்கிலான மற்றும் அலுவல் நோக்கிலான மெயில்களில் இந்த கவனம் மிகவும் அவசியம்.இந்த சரி பார்த்தல் சேவையை ஜிமெயிலுடன் இணைந்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.

இதன் பரிந்துரைகள் 100 சதவீதம் துல்லியமானவை என்று சொல்ல முடியாது என்றாலும் இ-மெயில் நாகரீகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சேவை.ஆங்கில மொழியில் உள்ள வாசகங்களை மட்டுமே இந்த சேவை திருத்தி தருகிறது என்றாலும் கூட இதன் பின்னே இருக்கும் அடிப்படை அம்சங்கள் எந்த மொழியில் இ-மெயில் அனுப்பும் போதும் கவனிக்க வேண்டியவை தான்.

இணைய முகவரி: https://labs.foxtype.com/politeness

—–

தானாக மறையும் கோப்புகள்

youtube-videos-sideplayer
தளம் புதிது; வீடியோ வசதி

இணையத்தில் உலாவும் போது யூடியூப்பில் வீடியோ பார்ப்பது உங்களுக்கு பிடித்தமானது என்றால் சைடுபிளேயர் (http://sideplayer.com/ )இணையதளத்தை நீங்கள் நிச்சயம் விரும்பாலாம். இந்த இணையதளம்,இணையத்தில் உலாவியபடியே யூடியூப் வீடியோவை பார்த்து ரசிக்க வழி செய்கிறது.அதாவது எந்த ஒரு இணையதளத்தையும் பயன்படுத்தியபடியே அதன் பக்கவாட்டில் ஒரு மூளையில் யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பாக செயல்படும் இந்த சேவை யூடியூப் வீடியோவை பிரவுசரின் ஒரு மூளையில் சின்ன பெட்டியாக தோன்றச்செய்கிறது.ஆக,பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தில் ஒரு கண் வைத்தபடி வீடியோவை ரசிக்கலாம். வீடியோ தோன்றும் பெட்டியையை எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் நகர்த்திக்கொள்ளலாம்.அதன் அளவையும் மாற்றிக்கொள்ளலாம். வேறு கட்டுப்பாட்டு வசதிகளும் இருக்கின்றன.ஒரு இணையதளத்தில் இருந்து வேறு ஒரு இணையதளத்திற்கு தாவினாலும் பிரச்சனையில்லை, அந்த தளத்தின் மூளையிலும் வீடியோ தோன்றும். காட்சி விளக்க வீடியோக்களை பார்க்கும் போது அந்த இணையதளத்தில் இருந்தபடியே வீடியோவை பார்க்க முடிவது பயன் தரக்கூடியதாக இருக்கும்.உதாரணத்திற்கு வேர்ட்பிரஸ் வலைப்பதிவின் பயன்பாட்டை விளக்கும் வீடியோவை பார்த்தபடியே வலைப்பதிவில் அந்த வழிகாட்டுதலை பின்பற்றலாம்.

இணையதள முகவரி:http://sideplayer.com/

———
MAIN-Colour-Blind-App
செயலி புதிது;கண்ணில் தெரியும் வண்ணங்கள்

உலகம் எல்லோருக்குமே வண்ணமயமாக தெரிவதில்லை.வண்ணங்களை மற்றவர்கள் போல உணர முடியாமல் தவிக்கும் பார்வை குறைபாடு கொண்டவர்கள் இருக்கின்றனர். இவர்கள் வண்ணங்களை பிரித்துணரும் வகையில் புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது.ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள கலர் பிளைண்ட் பால் எனும் அந்த செயலி போனில் உள்ள காமிரா மூலம் படம் பிடிக்கப்படும் காட்சிகளில் உள்ள பல்வேறு வண்ணங்களை பிரித்து காட்டுகிறது.காமிராவில் உள்ள பில்டர் மற்றும் ஸ்லைடர் மூலமாக வண்ணங்களின் வேறுபாட்டை உணரலாம்.இதற்கு முன்னர் பல வண்ணங்களை காண முடியாத பலர் இந்த செயலியின் மூலம் முதல் முறையாக வண்ணங்களை துல்லியமாக பார்க்க முடிவதால் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனராம். பார்வை குறைபாடு கொண்ட வின்செண்ட் பியோரெண்டினி என்பவர் இந்த செயலியை உருவாக்கி உள்ளார். தன்னைப்போன்றவர்கள் முழு வண்ணங்களையும் காண உதவும் வகையில் இந்த செயலியை வடிவமைத்தாக அவர் சொல்கிறார். இயல்பான பார்வை கொண்டவர்கள், வண்ண குறைபாடு கொண்டவர்கள் காணும் காட்சிகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த செயலியை பயன்படுத்தலாமாம்!

செயலி பற்றிய விவரங்களுக்கு: http://www.apppicker.com/apps/1037744228/color-blind-pal

—–

2c728f0e-6bfa-4c51-a5c5-75820d59bbbd-2060x1236

21693195851_9cf1b76774_zநிலவின் ஒளிபடங்கள்

புகைப்பட பகிர்வு சேவையான பிளிக்கரில் அவரவர் விருப்பத்திற்கும் ரசனைக்கும் ஏற்ப ஒளிபடங்களை பார்த்து ரசிக்கலாம்.இப்போது இந்த பட்டியலில் நிலவில் எடுக்கப்பட்ட ஒளிபடங்களும் சேர்ந்திருக்கின்றன.ஆம் நிலவில் விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட ஒளிபடங்களை அனைத்தும் பிளிக்கர் இணையதளத்தில் ( https://www.flickr.com/photos/projectapolloarchive) பதிவேற்றப்பட்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசாவால் அப்பல்லோ விண்கலம் முலம் அனுப்பி நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட ஒளிபடங்கள் இவை. மொத்தம் 8400 ஒளிபடங்களை வரிசையாக பார்த்து ரசிக்கலாம்.நிலவில் மனிதன் காலடி வைத்த பயணத்தின் டிஜிட்டல் ஒளிபடங்கள் மற்றும் ஆய்வு குறிப்புகளை பராமரித்து வரும் பிராஜக்ட் அப்பல்லோ ஆர்கேவ் சார்பாக இந்த ஒளிபடங்கள் பிளிக்கர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இவை எல்லாமே நாசாவின் மூல ஸ்கான் பதிவின் வடிவங்கள். விண்வெளி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த இணைய பக்கம் பொக்கிஷமாக இருக்கும். கருப்பு வெள்ளையில் வரிசையாக நிலவின் தோற்றத்தையும் அதன் மேற்புற காட்சிகளையும் பார்த்து ரசிப்பது புதிய அனுபவம் தான்.

———

தானாக மறையும் கோப்புகள்
file.io_
இணைய உலகில் ஏற்கனவே தானாக மறையும் மெயில் சேவைகள் இருக்கின்றன.அதாவது நாம் அனுப்பும் மெயில்கள் படிக்கப்பட்டவுடன் அவை அழிக்கப்பட்டுவிடும். அதே போல ஸ்மார்ட்போன் செயலியான ஸ்னேப்சாட் மூலம் அனுப்படும் ஒளிபடங்கள் மறுமுனையில் பார்க்கபப்ட்டவுடன் தானாக அழிக்கப்பட்டுவிடும்.இப்போது இதே வசதியை கோப்பு பகிர்வுக்கு பைல்.இயோ (https://www.file.io/#one )கொண்டு வந்திருக்கிறது. இந்த சேவை மூலம் பகிர்ந்து கொள்ளும் கோப்பு அதற்குறிய நபர் பார்த்ததும் காணாமல் போய்விடும். தேவை எனில் எவ்வளவு நேரம் அந்த கோப்பு பயன்பாட்டில் இருக்கலாம் என நிர்ணயிக்கும் வசதியும் இருக்கிறது. குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் அந்த கோப்பு அழிக்கப்பட்டுவிடும்.ச்ட்ட விரோதமான மற்றும் காப்புரிமைக்கு உட்பட்ட கோப்புகளை பகிர இந்த சேவையை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

gmail

மெயிலை திரும்ப பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்

எப்போதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெற வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதியை தேடியிருக்கிறீர்களா? இனி அந்த கவலையே இல்லை. இமெயிலை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது.

இமெயிலை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. இமெயிலில் பல அணுகூலங்கள் இருந்தாலும் சில நேரங்களில் மெயிலை அனுப்பிய பின் அதை ரத்து செய்ய வேண்டும் என நினைக்கும் நிலை வரலாம். அவசரத்தில் அல்லது உணர்வெழுச்சியில் ஒரு மெயிலை அனுப்பி விட்டு பின்னர் அவ்வாறு செய்திருக்க வேண்டாம் என நினைப்பது, அல்லது தகவல் பிழை மற்றும் விடுபட்ட தகவல் என பல காரணங்களுக்காகவும் இவ்வாறு நினைக்கலாம்.
இது போன்ற நேரங்களில் கைகொடுப்பதற்காக என்று ஜிமெயிலில் இப்போது அன் செண்ட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதி!

கூகுள் ஏற்கனவே ஜிமெயில் லேப்ஸ் மூலம் சோதனை முறையில் இந்த வசதியை அளித்து வருகிறது. அதன் புதிய மெயில் சேவை செயலியான இன்பாக்சிலும் இந்த வசதி இருக்கிறது. இப்போது ஜிமெயில் பயனாளிகளுக்கு இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜிமெயிலை பயன்படுத்தும் போது மெயிலை அனுப்பிய பிறகு ,அன் செண்ட் வசதி கொண்ட ஒரு பெட்டி எட்டிப்பார்க்கும். மெயிலில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைத்தால் அல்லது அதை அனுப்ப வேண்டாம் என நினைத்தால் உடனே அந்த பட்டனை கிளிக் செய்தால் , மெயில் சுவற்றில் அடித்த பந்து போல அனுப்ப படாமல் திரும்பி வந்துவிடும்.

அதன் பிறகு அந்த மெயிலில் திருத்தம் செய்யலாம் அல்லது டெலிட் செய்துவிடலாம்.
இந்த வசதியை பயன்படுத்த ஜிமெயிலில் செட்டிங் பகுதிக்கு சென்று அன்செண்டில் 5 முதல் 30 விநாடிகள் வரையான அவகாசத்தில் அமைத்துக்கொள்ளலாம். அதாவது 30 விநாடிகள் வரை அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் அவகாசம் இருக்கும். ஆக, இனி தவறான முகவரிக்கு இமெயிலை அனுப்பி வருந்தும் நிலை இனி இருக்காது.
Criptext-ActivityPanel_1434388452232
கிரிப்டெக்ஸ்ட் சேவை
இதே போல மெயிலை திரும்ப பெறும் வசதியை கிர்ப்டெக்ஸ்ட் எனும் புதிய மெயில் சேவையும் அளிக்கிறது. ஜிமெயிலை விட ஒரு படி மேலே சென்று படிக்கப்பட்ட பிறகும் கூட அது மெயிலை திரும்ப பெற வழி செய்கிறது.
இன்பாக்சில் வந்த மெயிலை படிப்பவர் டெலிட் செய்வது போல அனுப்பியவர் டெலிட் செய்ய இது வழி செய்கிறது. ஆக நாம் அனுப்பிய மெயிலை நாம் கட்டுப்படுத்த முடியும். தகவலை பரிமாறிக்கொண்ட பின் அந்த தகவல் ஆவணமாக இன்னொருவர் கம்ப்யூட்டரில் இருப்பதை இது தவிர்க்கிறது. ஒரு மெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாக மறைந்துவிடச்செய்யும் வசதியும் இது அளிக்கிறது.

ரகசிய மற்றும் மிகவும் நம்பகமான தகவல் கொண்ட மெயில்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.பின்னாளில் வரக்கூடிய வில்லங்கத்தையும் தவிர்க்க உதவலாம். ஆனால் மெயில் பெறுபவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார் என தெரியாது.

அதே போல அனுப்பிய மெயில் படிக்கப்ப்பட்டு விட்டதா என்பதையும் இதன் மூலம் கண்காணிக்கலாம். மெயிலை என்கிர்ப்ட் செய்தும் அனுப்பலாம்.
இமெயில் பரிமாற்றம் ரகசியமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சேவை ஏற்றதாக இருக்கும்.

ஜிமெயில் அறிவிப்பு: http://googleappsupdates.blogspot.co.uk/2015/06/undo-send-for-gmail-on-web.html

கிர்ப்டெக்ஸ்ட் சேவைக்கு: http://www.criptext.com/email/

———-


விகடன்.காமில் எழுதியது

Animated-Gif.0

கோப்புகளை பெற டிராப்பாக்சில் புதிய வசதி

கோப்பு பகிர்வு சேவையான டிராப்பாக்ஸ் நண்பர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெற்றுக்கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் டிராப்பக்சில் உறுப்பினர்களாக இல்லாதவர்களிடம் இருந்து கூட கோப்புகளை பெற்று டிராப்பாக்சில் சேமித்துக்கொள்ளலாம்.

கிளவுட் முறையில் கோப்புகளை சேமித்து வைக்கவும்,பகிர்ந்து கொள்வதற்குமான சேவையாக டிராப்பாக்ஸ் திகழ்கிறது. புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை சேமித்து வைப்பது உட்பட பலவிதங்களில் டிராப்பாக்ஸ் சேவையை பயன்படுத்தலாம்.

இணையத்தில் பயன்படுத்தும் கோப்புகளை நிர்வகிக்க உதவும் டிராப்பாக்ஸ் இப்போது மற்றவர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெறுவதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. பைல் ரிக்வஸ்ட்ஸ் எனும் பெயரிலான இந்த வசதி மூலம் யாரை வேண்டுமானாலும் உங்களுக்கு தேவையான கோப்பை உங்கள் டிராப்பாக்ஸ் கணக்கில் பதிவேற்ற வைக்கலாம்.

இதற்கு முன்னர் , டிராப்பாக்ஸ் உறுப்பினர் அல்லாத ஒருவரிடம் இருந்து ஏதேனும் கோப்பை பெற வேண்டும் என்றால் அவருக்கு இமெயில் மூலம் கோரிக்கை அனுப்ப வேண்டும். அதன் பிறகு அவர் மெயிலில் கோப்பை அனுப்புகிறாரா என பார்த்து அதை டிராப்பாக்சில் பதிவேற்ற வேண்டும். குழுவாக பலரிடம் இருந்து கோப்புகளை பெறும் தேவை இருந்தால் இது மிகவும் சிக்கலாகிவிடும்.

ஆனால் இப்போது யாரிடமேனும் கோப்பு தேவை என்றால் டிராப்பாக்சில் உள்ள பைல் ரிக்வஸ்ட் பகுதியில் கிளிக் செய்து அதில் இமெயில் முகவரியை சமர்பித்தால் போதுமானது. உடனே அந்த நபருக்கும் கோப்பை கோரும் மெயில் போய்ச்சேரும். அதை அவர் கிளிக் செய்தததும் என்ன வகையான கோப்பு தேவை என தெரிந்து கொண்டு அதை பதிவேற்றினால் போதும் அது கோரியவரின் டிராப்பாக்ஸ் பக்கத்தில் வந்து சேர்ந்துவிடும்.
கோப்புகளை கோரிப்பெறுவதற்கான எளிதான வழியாக இது கருதப்படுகிறது.

பலவிதங்களில் இந்த வசதி கைகொடுக்கும். ஒரு மைய நிகழ்ச்சி சார்ந்த புகைப்படங்களை பலரிடம் இருந்து பெற விருப்பமா? அவர்கள் அனைவருக்கும் கோரிக்கை அனுப்பி தொடர்புடையை புகைப்படங்களை பதிவேற்ற வைக்கலாம். அதே போல அலுவலக பணி சார்ந்த விஷ்யங்களை குழு உறுப்பினர்களிடம் இருந்து கோப்புகளாக பெற விரும்பினாலும் இது கைகொடுக்கும்.

டிராப்பாக்ஸ் புதிய வசதி பற்றி அறிய; https://blogs.dropbox.com/dropbox/

—–

நன்றி; விகடன்.காம்

ஜிமெயில் பிறந்த கதை

gm1இணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி இருக்கிறது. யாஹு, அவுட்லுக் என பல இமெயில் சேவைகள் இருந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளை பொருத்தவரை இமெயில் என்றால் ஜிமெயில் தான். கூகிள் அறிமுகம் செய்த சேவைகளில் தேடலுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலாமனதாக உள்ள ஜிமெயில் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகளாகிறது. ஜிமெயில் சேவைக்கு பின்னே மிகவும் சுவாரஸ்யமான கதை இருக்கிறது தெரியுமா? ஜிமெயில் சேவை மூன்று ஆண்டு கால உழைப்பின் விளைவாக உருவானது. கூகிளிடம் இருந்து ஒரு இமெயில் சேவையை பலரும் எதிர்பார்த்திராத நிலையில், அந்நிறுவனத்தின் ஊழியர்களில் பலரே கூட அதன் தேவையை கேள்விகுறியாக்கியதை மீறி ஜிமெயில் அறிமுகமாகி இணைய உலகை வென்றது. ஜிமெயிலை அனைவருக்கும் தெரியும் ,ஆனால் அதை உருவாக்கிய பால் புக்கைட் பற்றி எத்தனைப்பேருக்குத்தெரியும்? ஜிமெயில் உருவான கதை திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்தம் கூட ! இணைய உலகின் மைல்கற்களின் ஒன்றான ஜிமெயிலின் கதை இதோ:

2004 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி ஜிமெயில் சேவை அறிமுகமானது. அப்போது அது உண்மையான சேவை என்று யாருமே நம்பவில்லை. முட்டாள்கள் தினம் என்று வர்ணிக்கப்படும் ஏப்ரல் முதல் தேதியில் அறிமுகம் செய்யப்பட்டது ஒரு காரணம் என்பது மட்டும் அல்ல, அப்போது கூகிள் இமெயில் சேவை ஒன்றை அறிமுகம் செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படவில்லை. 1998 ல் அறிமுகமான கூகிள் அடுத்த சில ஆண்டுகளில் முன்னணி தேடியந்திரமாக உருவாகியது. தேடியந்திரங்கள் எல்லாம் , வலைவாசலாக உருமாறுவதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த நிலையில் கூகிள் மிக எளிமையான முகப்பு பக்கத்துடன் தூயத்தேடியந்திரமாக தேடல் சேவையை மட்டும் துல்லியமாக வழங்கி இணையவாசிகளை கவ்ர்ந்திருந்தது. தேடலில் இருந்து கவனத்தை திசைத்திருப்புவதில்லை என்று கூகிள் உறுதியாக இருந்ததால் அதனிடம் இருந்து இமெயில் சேவை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படாதது இயல்பானது தான். ஆனால் 2001 ம் ஆண்டில் இருந்தே கூகிள் இமெயில் சேவைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

ஜிமெயிலின் பிரம்மா

கூகுளின் 23 வது ஊழியராக சேர்ந்திருந்த பால் புக்கைட் ( Paul Buchheit ) எனும் மென்பொருளாளரிடம் தான் புதிய இமெயில் சேவையை உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. புக்கைட் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் இமெயில் உருவாக்க முயற்சியில் ஈடுபட்டு அதை கைவிட்டவர். இந்த முறை பயனுள்ள இமெயில் சேவையை உருவாக்கிவிட வேண்டும் எனும் உறுதியில் இருந்தார். முதல் நிலையில் இருந்தே பயனுள்ள ஒரு சேவையை உருவாக்கி அதை மேலும் மேலும் மேம்படுத்த வேண்டு என்பதை தனக்கான இலக்காகவும் நிர்ணயித்துக்கொண்டார்.

தேடலே முதல் புள்ளி

இப்படி அவர் முதலில் உருவாக்கிய சேவை தனது இமெயிலுக்கான தேடல் வசதி.
அந்த கால கட்டத்தில் கூகிள் ஊழியர்களுக்கு அலுவல் நிமித்தமாக நூற்றுக்கணக்கான மெயில்கள் வந்து கொண்டிருந்தன. புக்கைட் இன்பாக்சிலும் மெயில்கள் குவியவே அவற்றை தேடிப்பார்ப்பதற்கான வசதியை உருவாக்கினார். இந்த தேடல் சேவைக்கு என்று தனியே சர்வர் இல்லாமல் அவரது சர்வரிலேயே செயல்பட்டது. இந்த இமெயில் தேடல் வசதியை அவர் சக ஊழியர்களிடம் காண்பித்து கருத்து கேட்டார். அட பயனுள்ள சேவையாக இருக்கிறதே என்றவர்கள், தங்கள் மெயிலையும் தேடும் வசதி தேவை என்று கேட்டனர். இதனால் தனது சேவையின் பயன்பாடு குறித்து திருப்தி அடைந்த புக்கைட் விரைவிலேயே எல்லா மெயில்களையும் தேடக்கூடியதாக அதை மேம்படுத்