Tagged by: google

டிவிட்டருக்கு மாற்றாக எழுச்சி பெறும் மாஸ்டோடான்!

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சமூக வலைப்பின்னல் சேவை வரிசையில், மாஸ்டோடானை (Mastodon) அறிமுகம் செய்து கொள்ள இதை விட பொருத்தமான நேரம் இருக்காது. டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்கால் வாங்கப்பட்டதை அடுத்து எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்களுக்கு மத்தியில் டிவிட்டருக்கு மாற்று சேவை பற்றிய கருத்துகளும் முன்வைக்கப்படுகிறது. இந்த பின்னணியில் மாஸ்டோடான் இயல்பாகவே கவனத்தை ஈர்க்கிறது. ஏனெனில், குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு மாற்றாக உருவானது தான் மாஸ்டோடான். 2016 ம் ஆண்டு அறிமுகமான இந்த சேவை ஏற்கனவே […]

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சமூக வலைப்பின்னல் சேவை வரிசையில், மாஸ்டோடானை (Mastodon) அறிமுகம் செய்து கொள்ள இதை விட பொரு...

Read More »

கூகுள் அபிமானிகளுக்கு சில கேள்விகள்

ஜேசன் அர்கோவின் இணையதளத்தை பற்றி உங்களுக்கு கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவரது இணையதளம் கூகுள் தேடலில் ஏன் முதன்மை பெறவில்லை எனும் கேள்வி எனக்கு இருக்கிறது. இந்த கேள்விக்கான பதில் மூலம் கூகுளின் போதாமைகளை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றும் கருதுகிறேன். ஒரு தேடியந்திரமாக கூகுளை குறை சொல்வதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை மீறி, கூகுளின் சறுக்கல்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. கூகுள் தேடலில் போதாமைகள் இருப்பதாக சொல்லப்படுவதை கூட பலரும் […]

ஜேசன் அர்கோவின் இணையதளத்தை பற்றி உங்களுக்கு கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவரது இணையதளம் கூகுள் தேடலில் ஏன்...

Read More »

ஒரு நகரை டெலிட் செய்ய முடியுமா? இது இணைய யுகத்தின் கேள்வி!

அழிந்த நகரம் என பொருள் தரும் டெஸ்ட்ராய்டு சிட்டியை (destroyed city) ஒருவர் இணையத்தில் தேடி பார்ப்பதற்கான சாத்தியம் இருக்கும் அளவுக்கு நீக்கப்பட்ட நகரம் எனும் டெலிடட் சிட்டியை (“Deleted City” ) தேடிப்பாப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் நகரங்கள் அழிக்கப்படும் வரலாற்று உண்மையை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இணைய யுகத்து கருத்தாக்கமான நீக்கப்படுவதை ( Delete ) நகரங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ளும் மனம் நமக்கு இன்னும் வாய்க்கவில்லை. எனவே, ’டெலிடட் சிட்டி.நெட்’ (http://deletedcity.net/ ) இணையதளத்தை […]

அழிந்த நகரம் என பொருள் தரும் டெஸ்ட்ராய்டு சிட்டியை (destroyed city) ஒருவர் இணையத்தில் தேடி பார்ப்பதற்கான சாத்தியம் இருக்...

Read More »

சூரிய ஒளியை தோளில் சுமந்த பாடகர்!

ஜான் டென்வர் பெரிய பாடகராக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் எழுதிய ஒரு பாடலுக்காக விக்கிபீடியாவில் ஒரு பக்கம் இருக்குமா? ’என் தோளின் மீது சூரிய ஒளி’ எனும் பாடல் தான் அது. புகழ் பெற்ற பாடல் ஒன்றுக்காக என தனியே தகவல் பக்கத்தை உருவாக்கும் விக்கிபீடியா பங்கேற்பாளர்களை நினைத்து ஒரு பக்கம் வியக்கலாம் என்றால், மறுபக்கம் டென்வரின் இந்த பாடல் இணையத்தில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கும் விதம் இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கிறது. ’என் […]

ஜான் டென்வர் பெரிய பாடகராக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் எழுதிய ஒரு பாடலுக்காக விக்கிபீடியாவில் ஒரு பக்கம் இர...

Read More »

நல்ல படங்களை கண்டறிவது எப்படி?

’கால் மீ பிரியா’ எனும் ஆவணப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இருக்கிறது. கவனிக்கப்படாமல் போன எத்தனையோ நல்ல ஆவணப்படங்களில் இதுவும் ஒன்று என்றாலும், இந்த படம் தொடர்பாக பேசுவது அவசியம் எனத்தோன்றுகிறது. முதல் விஷயம் இந்த ஆவணப்படம் தொடர்பாக தமிழில் எந்த குறிப்பும் இல்லை. இத்தனைக்கும் இந்த படம் திருப்பூரை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் தமிழில் இந்த படம் தொடர்பாக எந்த விவாதமும் நிகழ்ந்ததாக தெரிவில்லை. ( குறைந்தபட்சம் கூகுள் தேடலில் கண்டறிய […]

’கால் மீ பிரியா’ எனும் ஆவணப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இருக்கிறது. கவனிக்கப்படாமல் போன எத்தனையோ நல்ல ஆவணப்படங்க...

Read More »