டிவிட்டருக்கு மாற்றாக எழுச்சி பெறும் மாஸ்டோடான்!

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சமூக வலைப்பின்னல் சேவை வரிசையில், மாஸ்டோடானை (Mastodon) அறிமுகம் செய்து கொள்ள இதை விட பொருத்தமான நேரம் இருக்காது. டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்கால் வாங்கப்பட்டதை அடுத்து எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்களுக்கு மத்தியில் டிவிட்டருக்கு மாற்று சேவை பற்றிய கருத்துகளும் முன்வைக்கப்படுகிறது.

இந்த பின்னணியில் மாஸ்டோடான் இயல்பாகவே கவனத்தை ஈர்க்கிறது. ஏனெனில், குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு மாற்றாக உருவானது தான் மாஸ்டோடான். 2016 ம் ஆண்டு அறிமுகமான இந்த சேவை ஏற்கனவே அதற்கான அபிமானிகளை பெற்றுள்ள நிலையில் தற்போது டிவிட்டர் சர்ச்சையால் இணைய வெகுமக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கியதை அடுத்து எலான் மஸ்க் எடுத்துவரும் நடவடிக்கைகள் டிவிட்டர் பயனாளிகளை பெருமளவில் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. லாபத்தை நோக்கிய நடவடிக்கைகள் டிவிட்டரை எப்படி எல்லாம் பாதிக்க கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

இனி டிவிட்டர் நமக்கு ஏற்றதாக இருக்காது என நினைப்பவர்கள், பொருத்தமான மாற்று சேவைக்கு மாறுவதை பரிசீலிக்கும் சூழலில், பலரும் மாஸ்டோடானுக்கு மாறி வருகின்றனர். மாஸ்டோடானுக்கு மாறுங்கள் எனும் கருத்தும் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது.

மாஸ்டோடானுக்கு மாறுவதாக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நீங்கள் மகத்தான இந்த மாற்று குறும்பதிவு சேவையை அறிமுகம் செய்து கொள்வது அவசியம். ஏனெனில் மாஸ்டோடான், டிவிட்டருக்கு மாற்று என்பது மட்டும் அல்ல, பேஸ்புக் போன்ற எந்த ஒரு பெரும் வர்த்தக நிறுவனத்தின் வசமாக இருக்கும் சமூக ஊடக சேவைக்கும் மாற்றாக விளங்குகிறது.

எனவே மாஸ்டோடான் சேவையை அறிமுகம் செய்வதற்கு பின் அதன் பின் இருக்கும் லட்சிய கருத்தாக்கத்தை அறிந்து கொள்வது அவசியம். மையம் இல்லாதது என்பதும், திறவுமூல அடிப்படையிலானது என்பதும் தான் மாஸ்டோடான் பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்.

மையம் இல்லாதது என்பது டிவிட்டர், பேஸ்புக் போல ஒரு மையமான சர்வர் அமைப்பை கொண்டு இயங்கும் சேவை அல்ல என்பதை குறிக்கிறது. இந்த தொழில்நுட்ப கருத்தாக்கம் புரியவில்லை எனில், எந்த ஒரு வர்த்தக நிறுவனத்தின் கைகளிலும் இல்லாத பொதுவெளியிலான சேவை என புரிந்து கொள்ளலாம்.

ஆம், டிவிட்டர் இதற்கு முன் ஜேக் டோர்சிக்கு (!) சொந்தமாக இருந்து, இப்போது எலான் மஸ்க் கைகளுக்கு மாறியிருப்பது போல, மாஸ்டோடான் எந்த ஒரு வர்த்தக நிறுவனத்திற்கும் சொந்தம் இல்லாதது. அதை வேறு எந்த ஒரு வர்த்தக நிறுவனமும் வாங்கவும் முடியாது. மாஸ்டோடான் முகப்பு பக்கத்தில், விலைக்கு வாங்க முடியாத சமூக வலைப்பின்னல் சேவை என்பதே அதன் அறிமுக வாசகமாக வரவேற்கிறது.

டைம்லைனில் அல்கோரிதம்களின் தலையீடும் கிடையாது என்பதும் முக்கிய அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையே வேறுவிதமாக சொல்வது என்றால், வர்த்தக நிறுவனத்திடம் அல்லாமல் பயனாளிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் சேவை எனலாம். ஆம், மாஸ்டோடானில் பயனாளிகள் எல்லாவற்றையும் தீர்மானித்துக்கொள்ளலாம். எதையும், எப்போதும் அவர்கள் மீது நிர்வாகம் திணிக்க முடியாது என்பதும் மாஸ்டோடானின் தனித்தன்மையாக இருக்கிறது.

இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்றால், அடிப்படையில் மாஸ்டோடான் திறவுமூல தன்மை கொண்டிருப்பது தான். தொழில்நுட்ப நோக்கில் மையமில்லாத உள்கட்டமைப்பு வசதியை கொண்டிருக்கும் மாஸ்டோடான், செயல்பாட்டு நோக்கில் திறவு மூல தன்மை கொண்டிருக்கிறது. ஆகவே மாஸ்டோடானில் எல்லாமே வெளிப்படையானது.

இவை எல்லாவற்றையும் விட மாஸ்டோடான், லாப நோக்கிலானது இல்லை. எனவே முதலீட்டாளர்கள் நெருக்கடியோ, விளம்பர கவலைகளோ அதற்கு கிடையாது. முழுக்க முழுக்க பயனாளிகளுக்கான சேவை அது.

யூஜென் ரோக்கோ (Eugen Rochko ) எனும் மென்பொருளாளர், தனது 24 வது வயதில் 2016 ம் ஆண்டில் மாஸ்டோடான் சேவையை உருவாக்கினார். எந்த ஒரு வர்த்தக நிறுவனத்தாலும் கட்டுப்படுத்தப்படாமல் பயனாளிகள் கைகளில் இருக்கும் சேவை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அதற்கேற்ப, யாருடைய முதலீட்டையும் கோராமல், இணையவாசிகளிடம் இருந்தே நிதி திரட்டி இந்த சேவையை உருவாக்கினார். ( பேடர்ன் எனும் புதுமையான சமூக நிதி தளத்தை இதற்காக பயன்படுத்திக்கொண்டார்).

மாஸ்டோடான், மையம் இல்லாத சர்வர்களை கொண்டது என்பதால், பயனாளிகள் விரும்பினால் இதில் தங்களுக்கான சர்வரையும் உருவாக்கி கொள்ளலாம். மாஸ்டோடான் சேவைக்கு என பொதுவான விதிகள் எதுவும் கிடையாது. சர்வர்களை நிர்வகிக்கும் பயனாளிகளே தங்களுக்கான பொது விதிகளை உருவாக்கி கொள்ளலாம்.

இப்படி எல்லாம் ஒரு சமூக வலைப்பின்னல் சேவை இருக்குமா? எனும் வியப்பை ஏற்படுத்தும் மாஸ்டோடான், பெடிவர்ஸ் (fediverse ) எனப்படும் இணைக்கப்பட்ட சர்வர்களின் கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

வர்த்தக தன்மையும், லாப நோக்கமும், சமூக ஊடகங்களின் ஆதார தன்மையை பாதிப்பதை விருப்பாதவர்கள், பெடிவர்ஸ் கருத்தாக்கம் சார்ந்த திறவுமூல சமூக வலைப்பின்னல் சேவைகளை மனதார ஆதரிக்கின்றனர். மாஸ்டோடான் இதற்கு அருமையான உதாரணம்.

பயன்படுத்துவது எப்படி?

இனி மாஸ்டோடான் சேவையின் அம்சங்களை பார்க்கலாம்.

மாஸ்டோடான் டிவிட்டர் போன்ற குறும்பதிவு சேவை என்றாலும், இரண்டுக்கும் இடையே பொதுவான அம்சங்களும், முக்கிய வேறுபாடுகளும் இருக்கின்றன. டிவிட்டர் போலவே இதிலும் குறும்பதிவுகளை வெளியிடலாம் என்றாலும், மாஸ்டோடானில் 500 எழுத்துகள் வரை கொண்ட பதிவுகளை பகிரலாம். மாஸ்டோடானில் பதிவுகள் ’டூன்ஸ்’ எனப்படுகின்றன. மறுபதிவுகள் ’பூஸ்ட்’ எனப்படுகின்றன. இதில் பாலோயர்கள் உண்டு.

ஆனால், டிவிட்டர் போல மாஸ்டோடானில் ஒரே மைய டைம்லைன் கிடையாது. மேலும் புதிய உறுப்பினர்கள் இணையும் போது, மைய தளத்தில் இணையாமல் அவர்களுக்கான சர்வர்களில் இணைய வேண்டும். மாஸ்டோடான் மொழியில் சர்வர்கள் இன்ஸ்டன்சஸ் எனப்படுகின்றன.

பல வகையான கருப்பொருளில் சர்வர்கள் அமைந்துள்ளன. அவற்றில் விரும்பிய சர்வரில் இணையலாம். அதன் பிறகு குறும்பதிவுகளை வெளியிடலாம், உரையாடலில் பங்கேற்கலாம். ஒவ்வொரு சர்வரும் அதன் பயனாளிகள் சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை.

இப்படி எண்ணற்ற சர்வர்களின் தொகுப்பாக இருந்தாலும், மாஸ்டோடான் உறுப்பினர்கள் ஒரு சர்வரில் இருந்து வேறு எந்த சர்வரில் உள்ள உறுப்பினர்களோடும் தொடர்பு கொள்ளலாம். இமெயில் எனும் பொது உள் கட்டமைப்பு மூலம் வெவ்வேறு மெயில் சேவைகளுக்கு இடையே பரிமாற்றம் செய்வது போல இது அமைகிறது.

மாஸ்டோடான் பதிவுகளிலும் பயனாளிகளுக்கு கட்டுப்பாடு அம்சம் அதிகம். ஒரு பதிவை குறிப்பிட்ட நபர்கள் மட்டும் படிக்கும் வகையில் அல்லது பாலோயர்கள் பார்வைக்கு மட்டும் பகிரலாம் அல்லது பொது வெளியிலும் பகிரலாம். மைய டைம்லைனையும் பார்வையிடலாம்.

எழுத்து வடிவம் தவிர, புகைப்படம், வீடியோவையும் பகிரலாம்.

மாஸ்டோடானுக்கு என மையமான தளம் இல்லை என்றாலும், மாஸ்டோடான் சோஷியல் (https://mastodon.social/explore) , மாஸ்டோடன் ஆன்லைன் (https://mastodon.online/explore ), ஜாயின்மாஸ்டோடான் (https://joinmastodon.org/ ) போன்ற தளங்கள் உதவியாக இருக்கும்.

முற்றிலும் புதுமையான இந்த சேவை முதல் பார்வைக்கு குழப்பத்தை அளிக்கலாம். ஆனால் அதன் ஆதார அம்சத்தை புரிந்து கொண்டால், அதை பயன்படுத்துவது எளிதாக அமையும்.

மாஸ்டோடான் பற்றிய முக்கிய குறிப்பு, இந்திய பயனாளிகளுக்கு இந்த சேவை ஏற்கனவே பரிட்சியமானது தான். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய டிவிட்டர் பரப்பில் சாதிய பாகுபாடு தொடர்பான சர்ச்சை வெடித்து, டிவிட்டரில் இருந்து வெளியேறுங்கள் ஹாஷ்டேக் பிரபலமான போது, மாஸ்டோடான் தான் மாற்று சேவையாக முன்வைக்கப்பட்டது.

தமிழ் இந்து காமதேனு பதிப்பில் எழுதும் சமூக ஊடக வானவில்-தொடரின் அண்மை பகுதி

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.