கூகுள் அபிமானிகளுக்கு சில கேள்விகள்

ஜேசன் அர்கோவின் இணையதளத்தை பற்றி உங்களுக்கு கேள்வி இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவரது இணையதளம் கூகுள் தேடலில் ஏன் முதன்மை பெறவில்லை எனும் கேள்வி எனக்கு இருக்கிறது. இந்த கேள்விக்கான பதில் மூலம் கூகுளின் போதாமைகளை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றும் கருதுகிறேன்.

ஒரு தேடியந்திரமாக கூகுளை குறை சொல்வதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை மீறி, கூகுளின் சறுக்கல்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. கூகுள் தேடலில் போதாமைகள் இருப்பதாக சொல்லப்படுவதை கூட பலரும் பொருட்படுத்துவதில்லை.

கூகுள் மீதான இந்த மிகை நம்பிக்கை தவறானது. கூகுளை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதற்கு மாறாக அதன் தேடல் முடிவுகளை ஆய்வுக்குள்ளாக வேண்டும். கேள்விகள் எழுப்ப வேண்டும். இது பயனாளிகளாக நீங்கள் பெறும் தேடல் முடிவுகளின் தரத்தை உணர்ந்து கொள்ள உதவும்.

கூகுள் தேடல் தொடர்பாக எழுப்ப வேண்டிய கேள்விகளில் ஒன்றாக, சொந்த இணையதளங்களுக்கு தேடல் பட்டியலில் கூகுள் தரும் இடம் என்ன எனும் கேள்வி அமைகிறது.

இதற்கு உதாரணமாக, ஜேசன் அர்கோவின் சொந்த இணையதளத்தை தேடல் பட்டியலில் முதலில் முன்னிறுத்தாமல் கூகுள் பின்னுக்குத்தள்ளியது ஏன் எனும் கேள்வி வருகிறது.

இந்த இடத்தில் ஜேசன் அர்கோ பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அர்கோவை நீங்கள் கேள்விபட்டிருக்காவிட்டாலும் கூட, அவரது செல்வாக்கை மறைமுகமாக உணர்ந்திருப்பீர்கள். ஏனெனில், யூடியூப் உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள் செல்வாக்கு பெறுவர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களையும், புரிதலையும் அளிக்கும் ’சோஷியல்பிளேட்’ (Social Blade) இணையதளத்தை அர்கோ நடத்தி வருகிறார்.

யூடியூப்பில் எந்த கிரியேட்டர்கள் முன்னணியில் இருக்கின்றனர், யாருக்கு எவ்வளவு சந்த்தாரர்கள் உள்ளனர், அவர்கள் ஈட்டும் வருமானம் என்ன போன்ற தகவல்களை எல்லாம் யூடியூப் புள்ளிவிவரங்கள் சார்ந்து முன்வைக்கும் தளமாக சோஷியல்பிளேட் விளங்குகிறது. யூடியூப்பில் எழுச்சி பெறும் கிரியேட்டர்கள் யார்? என்பது போன்ற கணிப்புகளுக்காகவும் இந்த தளம் அறியப்படுகிறது.

சமூக ஊடக தரவுகள் சார்ந்த அலசலை அளிக்கும் இணைய நிறுவனமாக வளர்ந்திருக்கும் சோஷியல் பிளேட் தளம், சமூக ஊடக செல்வாக்கு சார்ந்த இணையதளங்களில் முக்கியமானதாக அமைகிறது.

சோஷியல்பிளேட் பற்றி இன்னமும் அழமாகவும், விரிவாகவும் அறிமுகம் செய்து கொள்வதற்கான ஆய்வில் ஈடுபட்ட போது தான் அதன் நிறுவனர் ஜேசன் அர்கோ என்பதை அறிய முடிந்தது. அர்கோ பற்றி மேலும் அறிய முயற்சித்த போது, ’வில்வீடியோபார்புட்’ (http://willvideoforfood.com/ ) எனும் சுவாரஸ்யமான இணையதளத்தை அறிய முடிந்தது.

ஆன்லைன் வீடியோ மார்க்கெட்டிங் சார்ந்த பதிவுகளை கொண்டுள்ள இந்த தளத்தில் சோஷியல்பிளேடு தளம் பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ளது. சோஷியல் பிளேடு நிறுவனர் ஜேசன் அர்கோவின் நேர்காணல் ஒன்றை துவக்கத்தில் சுட்டிக்காட்டும் இந்த பதிவு, யூடியூப் புள்ளிவிவரங்களில் இதன் முக்கியத்துவத்தை விவரிக்கிறது.

இந்த சுட்டியில் அர்கோவின் பெயரை கிளிக் செய்த போது அவரது இணையதளத்திற்கு கொண்டு சென்றது.

அர்கோவின் இணையதளத்தை (https://urgo.org/about/?ref=twitter) பார்வையிட்ட போது தான், இந்த தளம் கூகுள் தேடல் பட்டியலில் முதலில் இடம்பெறவில்லை என்பதை உணர முடிந்தது. உண்மையில் கூகுள் தேடல் முடிவுகளின் முதல் சில பக்கங்களை பார்வையிடும் போது அர்கோவுக்கு சொந்த இணையதளம் இருக்கிறது என்பது கூட தெரியவில்லை.

மேலே சொன்ன இணையதளத்தின் பதிவுக்கு சென்ற போது தான் தற்செயலாக அர்கோவின் இணையதளத்தை அறிய முடிந்தது.

பொதுவாக சொந்த இணையதளங்கள் ஒருவரைப் பற்றிய அதிகாரப்பூர்வ தளங்களை அறிய ஏற்ற இடமாக கருதப்படும் நிலையில், அர்கோ பற்றிய தேடலில் அவரது இணையதளம் கூகுளால் முன்னிறுத்தப்படவில்லை என்பது உறுத்தலாக அமைகிறது அல்லவா!

நிற்க, இணைய தேடல் தொடர்பாக கூகுள் தேடல் தொடர்பாக மனதில் கொள்ள வேண்டிய சிறு நுணுக்கங்களில் ஒன்றாகவும் இது அமைகிறது. கூகுள் அளிக்கும் தேடல் முடிவுகளை மேலோட்டமாக அணுக கூடாது. நீங்கள் தேடி வந்த தகவல் அதன் முடிவுகளில் எங்கோ ஒளிந்திருக்கலாம். இத்தகைய தேடலில் ஈடுபட்டால் மட்டுமே நாடி வந்தது கிடைக்குமேத்தவிர மற்றபடி, கூகுள் முன்வைக்கும் முடிவுகளை தான் சிறந்தது என நம்பி ஏமாற வேண்டியிருக்கும்.

அதோடு, கூகுள் அளிக்கும் முடிவுகளை அவற்றின் வரிசையை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.  

எப்போதுமே தனிநபர் இணையதளங்களை முக்கியமாக கருதுகிறேன். இணைய ஆய்வில் ஈடுபடும் போது சொந்த இணையதளங்களில் தனிநபர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை பெறுவதோடு தனிப்பட்ட பல தகவல்களையும் பெறலாம். குறிப்பாக டெலவப்பர்களின் இணையதளங்களில் அவர்களின் டிஜிட்டல் ஆக்கங்கள் பற்றி முழுவதும் அறியலாம்.

எனவே, அர்கோ பற்றிய தேடலில் அவரது இணையதளம் கூகுள் தேடலில் முதலில் கண்டறியப்பட முடியாத்தை கூகுள் தேடல் சார்ந்த போதாமையாகவே கருதுகிறேன்.

ஆனால், நிச்சயம் கூகுள் அர்கோ இணையதளத்தை முதலில் முன்வைக்காததற்கு அதனிடம் காரணங்கள் இருக்கும் என்றே கருதுகிறேன். இணையதளத்தை முதன்மை பெறுவதற்கான கூகுள் வைத்திருக்கும் அளவுகோள்கள்களின்படி, அர்கோ தளம் பின்னுக்குத்தள்ளப்பட்டிருக்கலாம்.

அர்கோ தளம் புதுப்பிக்கப்படாமல் இயங்கா தன்மையோடு இருப்பதும், அர்கோவே கூட தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த தளத்தை குறிப்பிடாமலும் இருப்பதும் கூட இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். எனில், கூகுள் தனிநபரின் இணையதளத்தை எதன் அடிப்படையில் முன்னிறுத்துகிறது எனும் கேள்வி எழுகிறது. அதைவிட முக்கியமாக, தனிநபர் தேடல் முடிவுகளில் அவரது சொந்த இணையதளம் முதலில் எந்த இடத்தில் இடம்பெறுவது சரியாக இருக்கும் எனும் கேள்வியும் எழுகிறது.

சொந்த இணையதளத்தை எடைப்போட்டு பார்க்காமல், தனிநபர்களுக்கான தேடலில் அவர்கள் சொந்த இணையதளத்தை முதலில் முன்வைப்பது தேடியந்திர நியாயமாக அமையாதா? என்ற கேள்வியையும் கேட்க வேண்டியிருக்கிறது.

நிற்க, ஜேனிஸ் கிரம் (janis krums ) என்பவர் தொடர்பான தேடலில் அவரது சொந்த இணையதளம் கூகுளால் முதலில் முன்னிறுத்தப்படுவதை இதனுடன் ஒப்பிட்டு பார்க்கவும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.