Tagged by: india

மெய்நிக தேநீர் அருந்துவோம் வாருங்கள்!

கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட பலவித இணையதளங்கள் பற்றி எழுதி வருகிறேன். இவை எல்லாமே அக்கரையில் அமைக்கப்பட்ட அக்கறை தளங்கள். விதிவிலக்காக அமைந்த ஜன்னலோர காட்சிகளை பார்த்து ரசிக்க உதவும் இணையதளம் தவிர, ( ஒருசிலவற்றை நான் தவறவிட்டிருக்கலாம்),இந்தியாவில் கொரோனா சூழலை எதிர்கொள்ள ஆசுவாசம் அளிக்கும் இணையதளங்கள் அமைக்கப்படவில்லை. இந்தக்குறையை போக்கும் வகையில் அமைகிறது கிராப்சாய்.ஆன்லைன் (https://www.grabchai.online/ ) இணையதளம். சாய் என இந்தியில் குறிப்பிடப்படும் தேநீர் இந்தியர்களின் தேசிய பானம் போன்றது. அதிலும் பணியிடத்தில் இருக்கும் போது […]

கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட பலவித இணையதளங்கள் பற்றி எழுதி வருகிறேன். இவை எல்லாமே அக்கரையில் அமைக்கப்பட்ட அக்கறை தளங்கள...

Read More »

சொல் என்றால் என்ன? ஒரு வார்த்தை ஆராய்ச்சி

என்னைப்பொருத்தவரை ஒரு தேடியந்திரம் அசடு வழியக்கூடாது. கூகுள் பெரும்பாலான நேரங்களில் இதை தான் செய்கிறது. அதவது, ஒரு தகவலை கேள்வி பதில் வடிவில் தேடும் போது, ஒன்று அதற்கான பதிலை கச்சிதமாக முன்வைக்க வேண்டும். அல்லது அதற்கான பதில் இல்லை எனில் தெரியாது என வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும். மாறாக, சும்மா பொருத்தமானதாக தோன்றும் முடிவுகளை எல்லாம் பட்டியலிட்டு சுற்றவிடக்கூடாது. இதை ஏற்காமல் விவாதத்திற்கு வருபவர்கள், உலகின் முதல் இணைய அகராதி எது என தேடிப்பார்த்து சரியான […]

என்னைப்பொருத்தவரை ஒரு தேடியந்திரம் அசடு வழியக்கூடாது. கூகுள் பெரும்பாலான நேரங்களில் இதை தான் செய்கிறது. அதவது, ஒரு தகவலை...

Read More »

காந்தியை மறக்காமல் இருப்பது எப்படி? ஒரு இணைய பார்வை

இணைய யுகத்தில் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களை நினைவில் நிறுத்திக்கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையை, செய்தியை எடுத்துச்சொல்லவும் இணையதளங்கள் அமைப்பது சிறந்த வழி. நன்கு வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியான இணையதளங்களின் வாயிலாக, காந்தியின் வாழ்க்கையையும், அவரது கொள்கைகளையும் எளிதாக வழங்கலாம். ஆனால், மகாத்மா நினைவைjf போற்றும் நேர்த்தியான இணையதளத்தை உருவாக்குவது போலவே, அந்தlf தளத்தை சீரான முறையில் பராமரிப்பதும் முக்கியம். மாறாக, இணையதளத்தை புதுப்பிக்காமல் கைவிடுவது என்பது மகாத்மாவை மறப்பதற்கு சமமானது. மகாத்மாவின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட […]

இணைய யுகத்தில் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களை நினைவில் நிறுத்திக்கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையை, செய்தியை எடுத்துச்சொல்லவ...

Read More »

இது மாஸ்க்கிளப் இணையதளம்

கொரோனா காலத்தில், முககவசம் தயாரிப்பாளர்களையும், முககவச நுகர்வோரையும் இணைத்து வைக்கும் வகையில், மாஸ்க்மேக்கர்ஸ்கிளப் (https://maskmakers.club/ ) இணையதளம் செயல்பட்டு வருகிறது. முககவச தயாரிப்பாளர்களுக்கான சர்வதேச கையேடாக உருவாக்கப்பட்ட இந்த தளம், உலகம் முழுவதும், மருத்துவ ரகம் அல்லாத முககவசம் தயாரித்து தரும் தனிநபர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை பட்டியலிடுகிறது. முககவசம் தேவைப்படுபவர்கள், இவர்களை தொடர்பு கொள்ளலாம். கொரோனா கோரத்தாண்டவம் ஆடத்துவங்கிய நாட்களில், முககவசம் தொடர்பாக பெரும் குழப்பம் நிலவியதோடு, முககவசம் வாங்குவதிலும், கொள்முதல் செய்வதிலும் பெரும் […]

கொரோனா காலத்தில், முககவசம் தயாரிப்பாளர்களையும், முககவச நுகர்வோரையும் இணைத்து வைக்கும் வகையில், மாஸ்க்மேக்கர்ஸ்கிளப் (htt...

Read More »

கேம்ஸ்கேனருக்கு மாற்றான இந்திய செயலி எப்படி இருக்கிறது?

இந்திய செயலியை களமிறக்க இது சரியான நேரம் தான். சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கான மாற்றாக இந்திய செயலிகளை எளிதாக முன்னிறுத்தலாம். இந்த வகையில் கேம்ஸ்கேனருக்கு மாற்றாக, காகஸ் (https://kaagaz.sortedai.com/) எனும் இந்திய செயலி அறிமுகமாகியிருக்கிறது. சந்தையின் தேவை உணர்ந்து, மின்னல் வேகத்தில் இந்த செயலியை உருவாக்கி வெளியிட்டிருக்கின்றனர். சார்டட் ஏ.ஐ எனும் நிறுவனம் இந்த செயலியின் பின்னே உள்ளது. கேம்ஸ்கேனர் போலவே, ஆவணங்களை மொபைல் போனில் ஸ்கேன் செய்ய இந்த செயலியை பயன்படுத்தலாம். மூன்று […]

இந்திய செயலியை களமிறக்க இது சரியான நேரம் தான். சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கான மாற்றாக இந்திய செ...

Read More »