Tag Archives: phone

நோக்கியா 3310- ன் மறு அவதாரம்!

Nokia-3310-796x398புதிய அறிமுகங்கள் கோலோச்சும் செல்போன் உலகில், இப்போது பழைய போன் ஒன்றின் மறு அறிமுகம் தொடர்பான செய்தி தான் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நோக்கியாவின் 3310 மாடல் போன் தான் அது. ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான போனாக இருந்த இந்த போன், மீண்டும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுவது உண்மை தானா? இந்த போன் அறிமுகமானால் அதன் விலை என்னவாக இருக்கும்? அதில் என்ன என்ன அம்சங்கள் இருக்கும்? என பலவித கேள்விகளோடு செல்போன் பிரியர்கள் மத்தியில் ஏற்படுத்திய இந்த போன் எதிர்பார்த்தபைடியே அறிமுகம் ஆகியிருக்கிறது. ஸ்மார்ட்போன் உலகில் இந்த பழைய போனால் வெற்றி பெற முடியுமா? எனும் கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும்,  அறிமுகமான 17 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த போன் இன்னமும் மறக்கப்படாமல் இருப்பதும், அதன் அறிமுகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதும் ஆச்சர்யமான விஷயம் தான்.

ஒரு காலத்தில் செல்போன் உலகில் நோக்கிய முன்னணி நிறுவனமாக கொடிகட்டிப்பறந்தாலும், ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப்பிறகு நிலைமை மாறியது. இதன் விளைவாக நோக்கியா முன்னணி இடத்தை இழந்து தடுமாறியதும், அதன் பிறகு அதன் செல்போன் வர்த்தகத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதும் செல்போன் உலகின் பிளேஷ்பேக் தகவல்களாக நினைவுக்கு வரலாம். நோக்கியா போன்களை பயன்படுத்தியிருந்தவர்கள், என்ன தான் இருந்தாலும் நோக்கியா போன் போல வருமா என்று கூட அதன் புகழ் பாட முற்படலாம்.

நோக்கியா பற்றி பழம் பெருமை பேசலாமேத்தவிர, ஸ்மார்ட்போன் யுகத்தில் நோக்கியா போன்களுக்கு இடமில்லையே என்றும் நினைக்கலாம். ஆனால் நோக்கியா இரண்டாவது இன்னிசிற்கு தயாராகி வருகிறது. இம்மாத இறுதியில் நடைபெற உள்ள மொபைல் காங்கிரஸ் கண்காட்சியில் நோக்கியாவின் என் 3, 5 மற்றும் 6 போன்கள் அறிமுகமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளன. இவை அனைத்தும், நோக்கியா பெயர் கொண்ட ஆண்ட்ராய்டு போன்களாக இருக்கும். இவற்றில் நோக்கியா 6 ஏற்கனவே சீனாவில் மட்டும் அறிமுகமாகி விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது.

நோக்கியா பிராண்டில் போன்களை அறிமுகம் செய்வதற்கான விநியோக உரிமை பெற்றுள்ள பின்லாந்து நிறுவனமான எச்.எம்.டீ. குளோபல் சார்பில் இந்த அறிமுகங்கள் நிகழ உள்ளன. இந்த புதிய மாடல்களோடு, பழைய 3310 மாடல் போனும் மறு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் உலகில் புதிய அறிமுகங்கள் தொடர்பான ரகசிய செய்திகளை கசிய விடுவதில் வல்லவராக கருதப்படும் தொழில்நுட்ப பத்திரிகையாளர் இவான் பிளாஸ் மூலம் வெளியான தகவல் என்பதால், இதை வெறும் வதந்தி என அலட்சியபடுத்த யாரும் தயாராக இல்லை. எனவே, நோக்கியா 3310 மாடல் மறு அவதார செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த பழைய போனின் வருகையை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர். நவீன ஸ்மார்ட்போன் இருந்தால் என்ன, இரண்டாவது போனாக நோக்கியாவை வைத்துக்கொள்வேன் என்பது போல பலர் உற்சாகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், இதன் விலை உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக சூடான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், மொபைல் காங்கிரசில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது:  https://thenextweb.com/mobile/2017/02/26/the-nokia-3310-is-back-baby/#.tnw_yYfprOBn

AAmS6buஐபோனுக்கும், விதவிதமான ஆண்ட்ராய்டு போனுக்கும் பழக்கப்பட்ட தலைமுறைக்கு நோக்கியா பழைய அற்புதமாகவே தோன்றும். ஆனால் 17 ஆண்டுகளுக்கு பிறகும் நோக்கியா 3310 மாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. முதல் விஷயம் இந்த போன் அது அறிமுகமான காலத்தில் அதன் விலைப்பிரிவில் மற்ற போன்களில் எல்லாம் இல்லாத மேம்பட்ட அம்சங்களை கொண்டிருந்தது. கால்குலேட்டர், நெட்வொர்க் மானிட்டர், ஸ்டாப் வாட்ச், நினைவூட்டல் வசதி உள்ளிட்ட அம்சங்களை இந்த போன் கொண்டிருந்தது. இப்போது இவை சாதாரணமாக தோன்றினாலும், புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் இந்த அம்சங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்தவே செய்தன.

இவைத்தவிர, செல்போன் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பாம்பு விளையாட்டையும் இந்த போன் பெற்றிருந்தது. மேலும் நாட்கணக்கில் தாக்கு பிடிக்க கூடிய இந்த பேட்டரியும், கீழே போட்டாலும் உடையாக இதன் உறுதியான தன்மையும், இந்த போனை விரும்பத்திற்கு உரியதாக்கின. நீளமான குறுஞ்செய்திகளை டைப் செய்யும் வசதி, மேல் உரையை மாற்றிக்கொள்ளும் தன்மை உள்ளிட்ட அம்சங்கள் பற்றியும் நோக்கிய பிரியர்கள் பேசித்தீர்க்க தயாராக இருக்கின்றனர்.

1999 ல் அறிமுகமான நோக்கியாவின் 3210 மாடலின் அடுத்த கட்டமாக 2000 மாவது ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன் நோக்கியாவின் சூப்பர் ஹிட் போனாக அமைந்தது. மொத்தம் 126 மில்லியன் போன்கள் விற்பனையானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதே வரிசையில் வேறு சில ரகங்களும் அறிமுகமாயின.

நம்பகமானது, நீடித்து உழைக்க கூடியது , உடையாத தன்மை கொண்டது என்றெல்லாம் பலவிதங்களில் பாராட்டப்பட்ட இந்த போன், ஸ்மார்ட்போன் காலத்தில் மீண்டும் அவதாரம் எடுக்க இருப்பதாக கூறப்படும் தகவல் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளே இதன் செல்வாக்கிற்கு சான்று.

இந்த போனின் செல்வாக்கிற்கு இன்னொரு உதாரணம், பின்லாந்து நாட்டில் நோக்கியா 3310 – தேசிய இமோஜிகளில் ஒன்றாக 2015 ல் தேர்வு செய்துள்ளனர். உடைக்க முடியாத தன்மையை உணர்த்தும் அந்த இமோஜிக்கு இந்த போன் தான் அடையாளம். இவ்வளவு ஏன், பிரிட்டனைச்சேர்ந்த டேவ் மிட்சல் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக இந்த போனை தான் பயன்படுத்தி வருகிறாராம். 2000 மாவது வாங்கி போன் இன்னமும் இயங்கி கொண்டிருப்பதோடு நடுவே ஆப்கானிஸ்தான், ஜோர்டன் உள்ளிட்ட நாடுகளில் போர் சூழலை தாக்குப்பிடித்ததோடு, ஒரு முறை வாஷிங்மிஷினிலும் துணிகளோடு சுற்றுவிட்டு வந்திருப்பதாக மிட்சல் பெருமையோடு பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

இணைய வசதி கொண்ட புதிய போனை மகன் வாங்கித்தந்திருந்தாலும் தனக்கு இந்த போனே போதும் என்கிறார் மிட்சல். நெருக்கடிகள் மிகுந்த நவீன வாழ்க்கையில், மீண்டும் இயற்கைக்கு திரும்புதல் எனும் கருத்து முன்வைக்கப்படுவது போல, செல்போன் உலகிலும் கூட எண்ணற்ற அம்சங்களும், எல்லையில்லா வசதிகளும் கொண்ட நவீன ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட பழைய போன்களே சிறந்தவை எனும் ஏக்கமும் வலுப்பெற்று வருகிறது. அதனால் தான் நோக்கியா 3310 இன்னமும் பேசப்படக்கூடிய போனாக இருக்கிறதோ!

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது. ( அறிமுக செய்தி அப்டேட் செய்யப்பட்டுள்ளது)

ஒளிப்படங்களுக்கு மேலும் ஒரு செயலி

போலராய்டு காமிராக்களை நினைவில் இருக்கிறதா? ஸ்மார்ட்போன் யுகத்தில் போலாராய்டு காமிராக்கள் செல்வாக்கு இழந்து விட்டாலும், இந்த பிராண்ட் ஸ்மார்ட்போன் செயலிகள் வடிவில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இவற்றில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு போட்டியாக கருதப்படும் போலாராய்டு ஸ்விங் செயலி இப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. முதல் கட்டமாக ஐபோன்களுக்கு அறிமுகமாகி இருக்கும் இந்த செயலி மூலம் வாழ்க்கை தருணங்களை ஒரு நொடி கணங்களாக படம் பிடிக்கலாம். படங்களை தொடும் போது அல்லதும் போனை சாய்க்கும் போது உயிர்பெறும் வகையில் இந்த படங்கள் அமைந்துள்ளன. பிரேம்களை வளைப்பது, செய்தி மற்றும் இமோஜிகள் மூலம் பதில் அளிப்பது உள்ளிட்ட புதிய அம்சங்களும் இணைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு: http://www.polaroid.com/products/swing-app

வீடியோ புதிது; ஒளிப்பட கலை அடிப்படைகள் !

ஒளிப்படம் எடுப்பது மிகவும் எளிது. கையில் ஸ்மார்ட்போன் அல்லது டிஜிட்டல் காமிரா இருந்தால் போதும். ஆனால் நல்ல ஒலிப்பட கலைஞராக வேண்டும் என்றால் தேர்ச்சியும்,நுட்பமும் வேண்டும். அதோடு காமிரா செயல்பாடு தொடர்பான அடிப்படையான அம்சங்களை அறிந்திருக்க வேண்டும். இது தொடர்பாக வழிகாட்டுதல் தேவை எனில், வீடியோ மூலம் உதவுகிறது சம் ஸ்டப் எக்ஸ்பிளைண்ட் யூடியூப் சேனல்.
விளக்க வீடியோக்களுக்காக அறியப்படும் இந்த சேனல், காமிரா செயல்பாடு தொடர்பாக அறிய வேண்டிய மூன்று அடிப்படை அம்சங்களாக ஷட்டர்ஸ்பீடு, அப்பெர்ச்சர் மற்றும் ஐ.எஸ்.ஓ ஆகிய அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறது. அனிமேஷன் படங்கள் உதவியுடன் இந்த அம்சங்கள் விளக்கப்படுகிறது. காமிரா நுட்பங்களின் அடிப்படையை அழகாக விளக்குவதோடு, மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.

வீடியோ இணைப்பு: https://youtu.be/zd9oNggNqjQ

2017 ல் நீங்கள் என்னவாக வேண்டும்?

புத்தாண்டு நெருங்கி வருகிறது. இந்த ஆண்டு எப்படி செயல்பட்டோம் என்று அலசிப்பார்த்து, அடுத்த ஆண்டு என்ன செய்ய வேண்டும் என திட்டம் வகுப்பதற்கு சரியான நேரம் இது. புத்தாண்டு தீர்மானம் தொடர்பாக வழிகாட்டும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த வரிசையில் கிரியேட்டிவ்பூம் இணையதளம், 2017 ல் நீங்கள் கிராபிக் டிசைனராவது சிறந்த விஷயம் என வலியுறுத்துகிறது. இதற்கான பத்து காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது. வடிவமைப்பு கலைக்கு எப்போதுமே மதிப்பும் தேவையும் இருக்கும், அது வேறு பல வாய்ப்புகளையும் திறந்துவிடக்கூடியதாக இருக்கும் என்பதில் துவங்கி, தானியங்கிமயமாக்கல் அலையிலும் வடிவமைப்பு திறனுக்கு தேவை இருக்கும், ஒரு அணியாக செயல்பட வாய்ப்பு கிடைக்கும், பிரச்னைகளை தீர்க்கும் உங்கள் ஆற்றலை வளர்க்கும் என ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த விளக்கம் அமைந்துள்ளது. மந்தையில் இருந்து விலகி, நீங்கள் நினைத்துப்பார்க்காத இடங்களுக்கும் உங்களை அழைத்துச்செல்லும் என உற்சாகம் அளிக்கிறது இந்த கட்டுரை. முயன்று பார்க்க நீங்கள் தயாரா?

இணைப்பு; http://www.creativeboom.com/tips/10-great-reasons-to-become-a-graphic-designer-in-2017/

பேஸ்புக்கின் புதிய வசதி

safetycheckmobielcarouselபுயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது.
பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வுகளின் போது எல்லோருக்கும் உறவினர்களும் நண்பர்களும் நலமாக இருக்கின்றரா? என அறிந்து கொள்ளும் துடிப்பு இயல்பாக ஏற்படும். பேரிடர் காலங்களில் பலர் சமூக ஊடகம் மூலம் இந்த கேள்வியை கேட்பதையும் , பலரும் சமூக ஊடகம் வாயிலாக தாங்கள் நலமுடன் இருப்பதை தெரிவிப்பதையும் பார்க்கலாம்.
இப்போது இந்த தகவலை சுலபமான முறையில் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் பேஸ்புக் இதை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதியின் மூலம் இயற்கை பேரிடர் தாக்கும் போது, நலமாக இருக்கும் தகவலை பேஸ்புக் மூலம் எளிதாக பகிரலாம். பாதிக்கப்பட்ட பகுதியில்; உள்ள நண்பர்கள் நலமுடன் இருப்பதையும் இதன் மூலம் அறியலாம்.
சேப்டி செக் வசதியை இயக்கி வைத்தால், உங்கள் நகரில் புயலோ, பூகம்பமோ தாக்கும் போது , பேஸ்புக் உங்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் அனுப்பி தகவல் கோரும். அதில் நலமாக இருக்கிறேன் எனும் வாய்ப்பை தேர்வு செய்தால் அந்த செய்தி உங்கள் டைம்லைனில் தோன்றும். நண்பர்களும் உறவினர்களும் நீங்கள் நலமாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். இதே போல உங்கள் நண்பர்கள் நிலையையும் நீங்கள் அறியலாம். உங்கள் நண்பர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் அதையும் பகிரலாம். ( ஆனால் இதற்கு அவர்கள் அனுமதி தேவை).
பேஸ்புக்கில் நீங்கள் சம்பர்பித்துள்ள நகரின் அடிப்படையில் இந்த சேவை இயங்குகிறது. நீங்கள் அந்த நகரில் இல்லை அல்லது உங்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் அதையும் தெரிவிக்கலாம்.

ஜப்பான் சுனாமிக்கு பிறகு பரிதவித்தவர்கள் தங்கள் நிலையை உறவினர்களுக்கு தெரிவிக்க் பேஸ்புக் பேரிடர் தகவல் பலகையின் மேம்பாடாக இந்த வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. நிச்சயம் பேஸ்புக்கின் ஸ்டேடஸ் அப்டேட்களில் இது தான் பயனுள்ளதாக இருக்கும்.
உலக அளவில் இந்த சேவை அறிமுகமாக உள்ளது. செல்போன் செயலிகளிலும் செயல்படும்.

பேஸ்புக் சேப்டி செக் வசதி பற்றி அறிய: https://www.facebook.com/about/safetycheck/

தானாக லைக் செய்ய ஒரு அப்ளிகேஷன்

loveஇது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமாக கருதப்படுகிறது. புதிய பதிவிற்கு லைக் குவிந்ததாக மகிழ்வதும், யாருமே லைக் போடவில்லை என்று குறைபட்டு கொள்வதும் இணைய பழக்கமாகி இருக்கிறது. லைக்குகள் உண்மையான் ஆதரவின் வெளிப்பாடா என்பது ஆய்வுக்குறியது. நம் இணைய உலகம் லைக்குகளால் இயங்குகிறது என்பது தான் உண்மை.

லைக் என்றதும் பேஸ்புக் தான் நினைவுக்கு வரும் என்றாலும் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலும் லைக் வசதி உண்டு.  இன்ஸ்டாகிராமில் வெளியாகும் புகைப்படங்களை பார்த்து ரசித்து பிடித்திருந்தால் லைக் செய்யலாம்.
இப்போது இதற்காக என்றே ஒரு செயலி (அப்ளிகேஷன்) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு தானியங்கி லைக் சேவை. இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்டால் போதும் அதன் பிறகு இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருப்பவர்கள் பக்கத்தில் புதிதாக வெளியாகும் புகைப்படங்களையும் எல்லாம் அவர்கள் சார்பாக இந்த சேவை தானாகவே லைக் செய்து விடும். மிகவும் பொறுத்தமாக இந்த செயலிக்கு லவ்மேட்டிகலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தானாக லைக் செய்ய ஒரு செயலியா ? இது தேவை தானா என்று கேட்கலாம். லைக் தெரிவிப்பது இயல்பானதாக இருக்க வேண்டாமா என்றும் கேட்கலாம். ஆனால் லவ்மேட்டிகலில் செயலியை உருவாக்கியவர் இதற்கு அழகான பதில் வைத்திருக்கிறார். பேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராம் சேவை வித்தியாசமானது என்கிறார் அவர். பேஸ்புக்கில் தகவல்கள் இடம்பெறுகின்றன. அவற்றை யாரும் லைக் செய்யவில்லை என்றால் கூட பார்த்திருப்பார்கள் படித்திருப்பார்கள் என நினைத்துக்கொள்ளலாம். ஆனால் இன்ஸ்டாகிராமில் வெறும் புகைப்படங்கள் தான். அவற்றை லைக் செய்யவில்லை என்றால் படத்தை பார்க்கவில்லை என்று நினைத்து விட வாய்ப்பிருக்கிறது. எனவே தான் , இன்ஸ்டாகிராமில் நண்பர்கள் புகைப்படங்கள் வெளியாகும் போது அவற்றை தானாகவே லைக் செய்ய இந்த செயலையை உருவாக்கியதாக அதை உருவாக்கிய ரமீத் சாவ்லா கூறியுள்ளார்.
சாவ்லாவின் நண்பர் ஒருவர் , நீ ஏன் எனது இன்ஸ்டாகிராம் படத்தை லைக் செய்யவில்லை என்று கவலையோடு கேட்ட போது , சாவ்லாவுக்கு எல்லோரும் லைக் செய்வதை எத்தனை முக்கியமாக கருதுகின்றனர் என்பதும் ,லைக் செய்யப்படாமல் இருப்பதால் கவலை அடைவதும் புரிய வந்திருக்கிறது. அதன் பயனாகவே இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.
லைக் பிரியர்கள் விரும்பக்கூடிய இந்த செயலியை இன்ஸ்டாகிராம் நிறுத்து வைத்துள்ளதாம்.

இணைய முகவரி; http://lovematically.com/

ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்.

nirbhayaசெல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என்று நினைத்து கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் . நடைமுறை வாழ்க்கையில் பயன் தரகூடிய செயலிகளும் பல இருக்கின்றன. அது மட்டுமா ஆபத்து காலத்தில் உதவிக்கான கோரிக்கை விடுக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. செல்போன் செயலிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த உயிர்காக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
எப்படியும் பெரும்பாலானோர் கைகளில் செல்போன் வைத்திருக்கின்றனர். ஆபத்து என வரும் போது இந்த செல்போன்கள் மூலமே ஒரு கிளிக்கில் உதவி கோர வழிசெய்யும் ஆபத்பாந்தவனாக  உயிர் காக்கும் செயலிகள் அமைந்துள்ளன.
ஆபத்து என தெரிந்தால் , செல்போனில் வேண்டியவர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கோரலாம் தான். ஆனால் சில நேரங்களில் செல்போனில் உள்ள எண்களில் வேண்டியவர்களின் எண்ணை தேடி கண்டுபிடித்து அவர்களை அழைத்து உதவி தேவை என சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியில் சிக்கி கொள்ளலாம். அதோடு ஆபத்து சூழ்ந்திருக்கும் போது பயத்திலும் பதட்டத்திலும் செல்போனில் உரியவர்களை அழைத்து உதவி கோருவது கடினமாக இருக்கலாம். எதிர்பாரமால் விபத்து ஏற்படும் சூழல், உடனடி மருத்துவ உதவி தேவையான் நிலை மற்றும் வன்செயலாளர்களிடம் சிக்கி கொள்ளும் ஆபத்தான நிலைகளில் இந்த செயலிகள் உதவிக்கு வருகின்றன. பெண்கள், குழ்ந்தைகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இவை ஆபத்து காலத்தில் கைகொடுக்கும்.

ஹெல்ப் மீ ஆன் மொபைல்

ஹெல்ப் மீ ஆன் மொபைல் செயலி பாதுகாப்பை விரல் நுனியில் கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு போனுக்கான இந்த செயலியின் மூலம் ஆபத்தான நேரங்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கோரலாம். இந்த செயலியை பயன்படுத்துவதும் எளிதானது. ஆண்ட்ராய்டு போனில் இவற்றை டவுண்லோடு செய்து கொண்டால் போதுமானது.  இந்த செயலியில் உள்ள பாதுகாவலர் பகுதியில் பயனாளிகள் வீட்டில் அறியப்படும் பெயரை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பாதுகாவலர்களின் செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும். தந்தை, சகோதரர், மாமா, நண்பர் ஆகியோரது செல்போன் எண்களை குறிப்பிடலாம். ஆபத்தில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்பட்டால் , இந்த செயலியின் உதவி தேவை பகுதியை கிளிக் செய்தால் போதும் , அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு அந்த கோரிக்கை குறுஞ்செய்தியாக போய் சேர்ந்துவிடும். மேலும், பயனாளியின் இருப்பிடம்  ஜிபிஎஸ் மூலம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். அது மட்டும் அல்லாமால் , செல்போனில் இருந்து ஆபத்து எச்சிரிக்கை ஒலி கேட்டிக்கொண்டே இருக்கும். இதில் அருகே உள்ளவர்களை உதவிக்கு அழைக்கும் அபயக்குரலாக செயலபடும்.
இந்த செயலியை பெண்கள் விஷமிகள் மத்தியில் சிக்கி கொண்டால் அல்லது முன்பின் தெரியாதவர்களால் பின் தொடர்ப்பாட்டால் பயன்படுத்தலாம். மேலும் விபத்து நேரங்களிலும் பயன்படுத்தலாம்.
அதே போல, எங்காவது சென்றிருக்கும் போது எதிர்பார்த்ததை விட கூடுதல் நேரம் ஆகிவிட்டால் , இதில் உள்ள நான் இங்கிருக்கிறேன் வசதி மூலமாக பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தை பாதுகாவலர்களுக்கு தெரிவிக்கலாம். செல்போன் சார்ந்த மதிப்புகூட்டப்பட்ட சேவைகளை வழ்ங்கி வரும் ஆன்மொபைல் நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது. நிறுவன இணையதளம் மற்றும் கூகிள் பிலே ஸ்டோரில் தரவிறக்கம் செய்யலாம்.

இணையதள முகவரி; http://www.helpme-onmobile.com/

https://play.google.com/store/apps/details?id=com.onmobile.helpme&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5vbm1vYmlsZS5oZWxwbWUiXQ..


நிர்பயா செயலி.

ஆபத்தில் சிக்கி கொள்ளும் பெண்களுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள செயலி இது. கடந்த ஆண்டு தில்லியில் வன்செயலாலர்களின் கொடுரத்துக்கு பலியான இளம்பெண் நிர்பயா பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிர்பயாவுக்கு நேர்ந்த கதி இனி வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படாமல் தடுக்க உதவும் வகையில் இந்த செயலியை ஸ்மார்ட் கிலவுட் இன்போடெக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. நிர்பயா – பி பியர்லெஸ் எனும் பெயரிலான இந்த செயலியில் உதவி தேவை எனும் செய்தியை குடும்பத்தினர் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அதே போல உதவி தேவை எனும் தகவலை பேஸ்புக் பக்கத்திலும் நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள இந்த செயலி வழி செய்கிறது. விஅப்த்து மற்றும் மருத்துவ அவசர நிலைகளிலும் இந்த செயலியை பயன்படுத்தலாம். குடும்பத்தினர் தவிர காவல்தூறையினர் , மருத்துவமனை மற்றும் அவசர உதவி எண்கள் ஆகியவற்றுக்கும் உடனயாக தகவல் அனுப்ப முடியும். ஆண்ட்ராட்யு, ஐபோன் விண்டோஸ் போன் என எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம். ஆங்கில் மொழியிலானது.

இணையதள முகவரி; http://www.smartcloudinfotech.com/nirbhaya.html

ஆறு பேர் வட்டம்.

சர்கில் ஆப் 6 செயலி , ஆபத்து காலத்தில் மட்டும் அல்லாது சிக்கலான எந்த சூழலிலும் உதவி கிடைக்கசெய்கிறது. இந்த செயலியில், உங்கள் உதவி வட்டத்தில் ஆறு நபர்களின் தொடர்பு எண்களை குறிப்பிடலாம். உதவி தேவைப்படும் சூழலில் இந்த ஆறு பேருக்கும் பயனாளியின் இருப்பிடம் பற்றிய விவரத்துடன் தகவல் தெரிவிகக்ப்படும். மூன்று விதமான உதவிகளை கோரலாம். ஆபத்து இல்லை ஆனால் அச்சமூட்டும் சூழலில் இருந்தால் , உடனே வந்து அழைத்து செல்லுமாறு செய்தி அனுப்பலாம். இதற்காக கார் ஐகானை கிளிக் செய்தால் போதும். பெரும் ஆபத்து என்றால் , உதவி தேவை என்னும் தகவல் தெரிவிக்கலாம். இதே போலவே மிகவும் அறுவையான ஆசாமிகளிடம் மாட்டிக்கொண்டால் வந்து காப்பற்றுங்கள் எனும் செய்தியையும் அனுப்பலாம். குடும்ப சிக்கல் அல்லது காதல் விவகாரம் போன்றவ்ற்றால் மன் உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் ஆலோச்னை மற்றும் ஆறுதல் தேவை என்றும் செய்தி அனுப்பலாம். அவசர எண்களை தொடர்பு கொள்ளும் வசதியும் இருக்கிறது. சர்வதேச அலவிலான செயலி இது. ஆங்கிலம் தான் பிரதான மொழி என்றாலும் இப்போது இந்தி மொழி வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராட் ,ஐபோன் இரண்டிலும் செயல்படுகிறது.
அமெரிக்காவில் பயனுள்ள செயலிகளுக்காக வெள்ளை மாளிகை நடத்திய போட்டியில் தேர்வான செயலி இது,.

இணையதள முகவரி; http://www.circleof6app.com/