டிஜிட்டல் டைரி-2 இணையத்தில் வேலை தேடுவது எப்படி?

inஇணையத்தில் தகவல்களை தேடுவது போலவே, வேலைவாய்ப்பை தேடுவது சுலபமானது. ஆனால் இரண்டுக்குமே கொஞ்சம் நுணுக்கங்கள் தேவை. அப்போது தான் எதிர்பார்த்த பலனை பெற முடியும். உதாரணத்திற்கு, தகவல் தேடலில் பொருத்தான கீவேர்டுகளை பிரயோகிக்கவும், முதல் கட்ட முடிவுகள் ஏமாற்றம் அளித்தால் அந்த கீவேர்டை மேலும் பட்டத்தீட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.
அதே போல, வேலைவாய்ப்பு தேடலும் தெளிவான வழிமுறைகள் இருக்கின்றன. முன்னணி வேலைவாய்ப்பு இணையதளங்களில் ஒன்றான ’இன்டீட்’ தளத்தில் எப்படி சிறந்த முறையில் வேலை தேடுவது எனும் வழிகாட்டி பதிவு வாயிலாக மேக்யூஸ்ஆப் செய்தி தளம் இதை அழகாக விளக்கியிருக்கிறது.
வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்கள் ’இன்டீட்’ தளத்தில் எடுத்த எடுப்பில் வேலை தேடத்துவங்கிவிடலாம் தான். முகப்பு பக்கத்தில் இதற்காக இரண்டு கட்டங்கள் உள்ளன. அதில் என்ன வகையான துறைகளில் வேலை தேவை மற்றும் எந்த இடத்தில் வேலை தேடுகிறீர்கள் என்பதை குறிப்பிட்டால் போதும் பொருத்தமான வேலைவாய்ப்புகள் பட்டியலிடப்படுவதை பார்க்கலாம். வேலை தேடுபவர்கள் தங்கள் தேவைக்கேற்ப இந்த பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது மாற்றுத்தேடலை மேற்கொள்ளலாம்.
இப்படி வேலை தேடுவது தவிர, வேலை தேடுபவர்கள் தங்கள் ரெஸ்யூமை பதிவேற்றி அதனடிப்படையில் பொருத்தமான நிறுவனங்களின் வேலைவாய்ப்பு தகவல்களையும் பெறலாம். ஏற்கனவே தரமான ரெஸ்யூம் கைவசம் இருந்தால், அதை இந்த தளத்தில் பதிவேற்றலாம். இல்லை எனில், நல்ல ரெஸ்யூமை உருவாக்கி கொள்ள இந்த தளமே வழிகாட்டுகிறது.
ஆனால் இதற்கெல்லாம் முன், ’இன்டீட்’ தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்கிறது மேக் யூஸ் ஆப் பதிவு. ஏனெனில் அப்போது தான் ’இன்டீட்’ தளத்தின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அடுத்ததாக வேலைதேடுபவர் தங்கள் ரெஸ்யூமை பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு, பொருத்தமான வேலைகளை தேடிப்பார்க்கலாம்.
ஒரு முறை தேடிவிட்டு மனம் தளர வேண்டியதில்லை. ஒருவர் தான் விரும்பும் வேலைவாய்ப்பு தொடர்பான கீவேர்ட்களை குறிப்பிட்டு பொருத்தமான புதிய வேலைவாய்ப்புகள் தங்களுக்கு இமெயிலில் வந்து சேர ஏற்பாடு செய்து கொள்ளலாம். இறுதியாக மைஜாப்ஸ் பகுதி மூலம் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களையும் திறம்பட நிர்வகிக்கலாம்.
வேலைதேடுபவர் எனில் ’இன்டீட்’ தளத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இல்லை எனில் உங்கள் இளைய நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள்: https://www.indeed.co.in/

நோட்டிபிகேஷன்களுக்கு ஒரு செயலி
ஸ்மார்ட்போனில் அதிகம் அணுகப்படும் அம்சங்களில் ஒன்றாக நோட்டிபிகேஷன்கள் இருக்கின்றன. எந்த சேவையில் இருந்து எந்த தகவல் வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த வசதி உதவுகிறது. நோட்டிபிகேஷன் வசதி பல நேரங்களில் கவனச்சிதறலாகவும் அமையலாம். ஆனால் நோட்டிபிகேஷனை இன்னும் சிறப்பாக கையாள வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதற்காக என்றே ஒரு செயலி இருக்கிறது. பவர் ஷேட் செயலி, நோட்டிபிகேஷன்களை கையாள் உதவுகிறது. இந்த செயலியில் பின்னணி தோற்றத்தை விருப்பம் போல அமைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது.
பிரைட்னஸ் மாற்றும் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. நோட்டிபிகேஷன்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். அடிப்படை சேவை இலவசமானது,. மேம்பட்ட வசதிகள் கொண்ட கட்டண சேவையும் இருக்கிறது.
மேலும் தகவல்கள் அறிய: https://play.google.com/store/apps/details?id=com.treydev.pns&hl=en_IN

மோட்டோரோலோவின் புதிய போன்
ஸ்மார்ட்போன் உலகில் இப்போது போல்டபிள் போன் எனப்படும் திரையுடன் மடங்கும் வசதி கொண்ட போன்களே அதிகம் எதிர்நோக்கப்படும் புதுமையாக இருக்கிறது. ஏற்கனவே சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த பிரிவில் முனோட்ட மாதிரியை அறிமுகம் செய்துள்ளன. இப்போது மோட்டோரோலோவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
அண்மையில் இணையத்தில் கசிந்துள்ள புகைப்படங்கள், மோட்ட்ரோலோவின் புதிய போனான மோட்டோ ரேசர், கீழ்பக்கம் மடங்கும் வசதி கொண்டதாக இருக்கும் என உணர்த்துகின்றன. மடங்கிய நிலையில் இருந்து போனை விரித்தால் முழு அளவி திரை விரிகிறது. மடங்கிய நிலையில் சிறியதாக இரண்டாவது திரை ஒன்றும் இருப்பதை அறிய முடிகிறது. இதில் நோட்டிபிகேஷன்களை காணலாம்.
போன் முழுவதும் விரிக்கப்பட்ட நிலையில், கீழ்ப்பகுதியில் டிஸ்பிளே மற்றும் மேல் பகுதியில் நாட்ச், காமிரா உள்ளிட்ட அம்சங்களை பார்க்க முடிகிறது. இந்த போன் முழுவதும் மடங்கும் தன்மை கொண்டதா அல்லது அது போன்ற மாதிரி அம்சம் கொண்டதா? என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்த போன் மாதிரி விரைவில் அறிமுகம் ஆக இருப்பது உறுதியாகி இருக்கிறது.
உங்கள் பாஸ்வேர்டு என்ன?

இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டாம், யோசித்துப்பார்த்தால் போதுமானது. ஏனெனில், உங்கள் பாஸ்வேர்டு என்ன என்பதை நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. பாஸ்வேர்டு உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருப்பது தான் பாதுகாப்பானது. எனில், எதற்காக இந்த கேள்வி என்றால், களவு போன பாஸ்வேர்டுகள் பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டும் இருக்கிறதா? எனும் கேள்வியை நீங்கள் கேட்டுக்கொள்வதற்காக தான்.
ஆம், இணைய உலகில் பாஸ்வேர்டு தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. ஹேக்கர்கள் எனப்படும் தாக்காளர்களும் இன்னும் பிற இணைய விஷமிகளும், இணையத்தில் கைவரிசை காட்டி பாஸ்வேர்டு திருட்டில் ஈடுபடுகின்றனர். தனிநபர்களின் பாஸ்வேர்டை திருடுவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இணைய சேவைகளில் தாக்குதல் நடத்தி மொத்தமாக பயணர்கள் பாஸ்வேர்டு விவரங்களை அபகரிப்பதும் அதிகம் நடக்கிறது.
இப்படி திருடப்படும் பாஸ்வேர்டுகளின் பொதுத்தன்மையை ஆய்வு செய்து, அதிகம் களவாடப்படும் பாஸ்வேர்டுகளின் பட்டியல் இணையவாசிகளை எச்சரிப்பதற்காக வெளியிடப்படுகிறது. அண்மையில், பிரிட்டனின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம், இத்தகைய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வழக்கம் போலவே, இந்த பட்டியலிலும், 123456 எனும் எண் வரிசையும், password என்பதையே பாஸ்வேர்டாக கொள்வதும் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே இவை நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டாக இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள் என்கின்றனர். இல்லை எனில் எதிர்கால பாஸ்வேர்டு தாக்குதலில் நீங்களும் இலக்காக அதிக வாய்ப்புள்ளது.
இணைய தாக்குதலில் இருந்து தப்பிக்க உங்கள் பாஸ்வேர்டு வலுவானதாக இருக்க இரண்டு அடிப்படையான விஷயங்கள் இருக்கின்றன. முதல் விஷயம் மேலே சொன்னது போன்ற வழக்கமாக பலரும் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளை தவிர்க்கவும். இரண்டாவதாக உங்களைப்பற்றிய தனிப்பட்ட விவரங்களை கொண்டு பாஸ்வேர்டை அமைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். அதாவது உங்கள் பெயர் அல்லது பிறந்த தேதியை கொண்டு பாஸ்வேர்டு அமைப்பது. இதை எல்லாம் தாக்காளர்கள் எளிதாக ஊகித்து விடுவார்கள்.

சொல்லின் வரலாறு சொல்லும் வீடியோ
இணையத்தில் ஆங்கிலம் தொடர்பான அறிவை வளர்த்துக்கொள்ள அநேக தளங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் சுவாரஸ்யமான வீடியோக்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அந்த வகையில். பிரபலமான ஆங்கில வார்த்தையான ஓகே தோன்றிய விதம் பற்றி விளக்கும் சுவாரஸ்யமான வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றாக ஓகே இருக்கிறது. ஆங்கிலம் அறியாதவர்கள் கூட, இந்த வார்த்தையை சரளமாக பயன்படுத்துவதை பார்க்கலாம். அனுமதி அல்லது உடன்படுவதை குறிக்கும் இந்த வார்த்தை எங்கிருந்து எப்படி உருவாகி வந்தது என்பது தெரியுமா? துவக்கத்தில் வார்த்தைகளை தவறாக சுருக்குவதன் விளைவாக உருவான இந்த வார்த்தை தந்தி பிரபலமான போது வெகுஜன புழக்கத்திற்கு வந்ததாக கருதப்படுகிறது. இது போன்ற தகவல்களோடு ஓகே வார்த்தையை சுவைபட விவரிக்கிறது வாக்ஸ் இணையதளம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள நாம் ஏன் ஓகே என சொல்கிறோம், எனும் இந்த வீடியோ: https://youtu.be/1UnIDL-eHOs

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.