நோக்கியா 3310- ன் மறு அவதாரம்!

Nokia-3310-796x398புதிய அறிமுகங்கள் கோலோச்சும் செல்போன் உலகில், இப்போது பழைய போன் ஒன்றின் மறு அறிமுகம் தொடர்பான செய்தி தான் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நோக்கியாவின் 3310 மாடல் போன் தான் அது. ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான போனாக இருந்த இந்த போன், மீண்டும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுவது உண்மை தானா? இந்த போன் அறிமுகமானால் அதன் விலை என்னவாக இருக்கும்? அதில் என்ன என்ன அம்சங்கள் இருக்கும்? என பலவித கேள்விகளோடு செல்போன் பிரியர்கள் மத்தியில் ஏற்படுத்திய இந்த போன் எதிர்பார்த்தபைடியே அறிமுகம் ஆகியிருக்கிறது. ஸ்மார்ட்போன் உலகில் இந்த பழைய போனால் வெற்றி பெற முடியுமா? எனும் கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும்,  அறிமுகமான 17 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த போன் இன்னமும் மறக்கப்படாமல் இருப்பதும், அதன் அறிமுகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதும் ஆச்சர்யமான விஷயம் தான்.

ஒரு காலத்தில் செல்போன் உலகில் நோக்கிய முன்னணி நிறுவனமாக கொடிகட்டிப்பறந்தாலும், ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப்பிறகு நிலைமை மாறியது. இதன் விளைவாக நோக்கியா முன்னணி இடத்தை இழந்து தடுமாறியதும், அதன் பிறகு அதன் செல்போன் வர்த்தகத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதும் செல்போன் உலகின் பிளேஷ்பேக் தகவல்களாக நினைவுக்கு வரலாம். நோக்கியா போன்களை பயன்படுத்தியிருந்தவர்கள், என்ன தான் இருந்தாலும் நோக்கியா போன் போல வருமா என்று கூட அதன் புகழ் பாட முற்படலாம்.

நோக்கியா பற்றி பழம் பெருமை பேசலாமேத்தவிர, ஸ்மார்ட்போன் யுகத்தில் நோக்கியா போன்களுக்கு இடமில்லையே என்றும் நினைக்கலாம். ஆனால் நோக்கியா இரண்டாவது இன்னிசிற்கு தயாராகி வருகிறது. இம்மாத இறுதியில் நடைபெற உள்ள மொபைல் காங்கிரஸ் கண்காட்சியில் நோக்கியாவின் என் 3, 5 மற்றும் 6 போன்கள் அறிமுகமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளன. இவை அனைத்தும், நோக்கியா பெயர் கொண்ட ஆண்ட்ராய்டு போன்களாக இருக்கும். இவற்றில் நோக்கியா 6 ஏற்கனவே சீனாவில் மட்டும் அறிமுகமாகி விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது.

நோக்கியா பிராண்டில் போன்களை அறிமுகம் செய்வதற்கான விநியோக உரிமை பெற்றுள்ள பின்லாந்து நிறுவனமான எச்.எம்.டீ. குளோபல் சார்பில் இந்த அறிமுகங்கள் நிகழ உள்ளன. இந்த புதிய மாடல்களோடு, பழைய 3310 மாடல் போனும் மறு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் உலகில் புதிய அறிமுகங்கள் தொடர்பான ரகசிய செய்திகளை கசிய விடுவதில் வல்லவராக கருதப்படும் தொழில்நுட்ப பத்திரிகையாளர் இவான் பிளாஸ் மூலம் வெளியான தகவல் என்பதால், இதை வெறும் வதந்தி என அலட்சியபடுத்த யாரும் தயாராக இல்லை. எனவே, நோக்கியா 3310 மாடல் மறு அவதார செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த பழைய போனின் வருகையை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர். நவீன ஸ்மார்ட்போன் இருந்தால் என்ன, இரண்டாவது போனாக நோக்கியாவை வைத்துக்கொள்வேன் என்பது போல பலர் உற்சாகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், இதன் விலை உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக சூடான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், மொபைல் காங்கிரசில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது:  https://thenextweb.com/mobile/2017/02/26/the-nokia-3310-is-back-baby/#.tnw_yYfprOBn

AAmS6buஐபோனுக்கும், விதவிதமான ஆண்ட்ராய்டு போனுக்கும் பழக்கப்பட்ட தலைமுறைக்கு நோக்கியா பழைய அற்புதமாகவே தோன்றும். ஆனால் 17 ஆண்டுகளுக்கு பிறகும் நோக்கியா 3310 மாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. முதல் விஷயம் இந்த போன் அது அறிமுகமான காலத்தில் அதன் விலைப்பிரிவில் மற்ற போன்களில் எல்லாம் இல்லாத மேம்பட்ட அம்சங்களை கொண்டிருந்தது. கால்குலேட்டர், நெட்வொர்க் மானிட்டர், ஸ்டாப் வாட்ச், நினைவூட்டல் வசதி உள்ளிட்ட அம்சங்களை இந்த போன் கொண்டிருந்தது. இப்போது இவை சாதாரணமாக தோன்றினாலும், புத்தாயிரமாண்டின் துவக்கத்தில் இந்த அம்சங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்தவே செய்தன.

இவைத்தவிர, செல்போன் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பாம்பு விளையாட்டையும் இந்த போன் பெற்றிருந்தது. மேலும் நாட்கணக்கில் தாக்கு பிடிக்க கூடிய இந்த பேட்டரியும், கீழே போட்டாலும் உடையாக இதன் உறுதியான தன்மையும், இந்த போனை விரும்பத்திற்கு உரியதாக்கின. நீளமான குறுஞ்செய்திகளை டைப் செய்யும் வசதி, மேல் உரையை மாற்றிக்கொள்ளும் தன்மை உள்ளிட்ட அம்சங்கள் பற்றியும் நோக்கிய பிரியர்கள் பேசித்தீர்க்க தயாராக இருக்கின்றனர்.

1999 ல் அறிமுகமான நோக்கியாவின் 3210 மாடலின் அடுத்த கட்டமாக 2000 மாவது ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போன் நோக்கியாவின் சூப்பர் ஹிட் போனாக அமைந்தது. மொத்தம் 126 மில்லியன் போன்கள் விற்பனையானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதே வரிசையில் வேறு சில ரகங்களும் அறிமுகமாயின.

நம்பகமானது, நீடித்து உழைக்க கூடியது , உடையாத தன்மை கொண்டது என்றெல்லாம் பலவிதங்களில் பாராட்டப்பட்ட இந்த போன், ஸ்மார்ட்போன் காலத்தில் மீண்டும் அவதாரம் எடுக்க இருப்பதாக கூறப்படும் தகவல் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளே இதன் செல்வாக்கிற்கு சான்று.

இந்த போனின் செல்வாக்கிற்கு இன்னொரு உதாரணம், பின்லாந்து நாட்டில் நோக்கியா 3310 – தேசிய இமோஜிகளில் ஒன்றாக 2015 ல் தேர்வு செய்துள்ளனர். உடைக்க முடியாத தன்மையை உணர்த்தும் அந்த இமோஜிக்கு இந்த போன் தான் அடையாளம். இவ்வளவு ஏன், பிரிட்டனைச்சேர்ந்த டேவ் மிட்சல் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக இந்த போனை தான் பயன்படுத்தி வருகிறாராம். 2000 மாவது வாங்கி போன் இன்னமும் இயங்கி கொண்டிருப்பதோடு நடுவே ஆப்கானிஸ்தான், ஜோர்டன் உள்ளிட்ட நாடுகளில் போர் சூழலை தாக்குப்பிடித்ததோடு, ஒரு முறை வாஷிங்மிஷினிலும் துணிகளோடு சுற்றுவிட்டு வந்திருப்பதாக மிட்சல் பெருமையோடு பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

இணைய வசதி கொண்ட புதிய போனை மகன் வாங்கித்தந்திருந்தாலும் தனக்கு இந்த போனே போதும் என்கிறார் மிட்சல். நெருக்கடிகள் மிகுந்த நவீன வாழ்க்கையில், மீண்டும் இயற்கைக்கு திரும்புதல் எனும் கருத்து முன்வைக்கப்படுவது போல, செல்போன் உலகிலும் கூட எண்ணற்ற அம்சங்களும், எல்லையில்லா வசதிகளும் கொண்ட நவீன ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட பழைய போன்களே சிறந்தவை எனும் ஏக்கமும் வலுப்பெற்று வருகிறது. அதனால் தான் நோக்கியா 3310 இன்னமும் பேசப்படக்கூடிய போனாக இருக்கிறதோ!

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது. ( அறிமுக செய்தி அப்டேட் செய்யப்பட்டுள்ளது)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.