Tag Archives: twitter

த‌கவல் நதி பாய்ந்து ஓட‌ட்டும்;டிவிட்டர் பிரகடனம்.

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் போது உருவாகியிருப்பது தற்செயலானது என்றாலும் பொருத்தமானது என்றே தோன்றுகிற‌து.

இதற்கான காரணம் மிகவும் சுலபமானது.மீனவர் ஆதரவு இயக்கம் போலவே எகிப்து மக்கள் போராட்டத்தின் முதுகெலும்பாக இருப்பது டிவிட்டர் மற்றும் அதன் சகோதர சேவைகள் தான்.(பேஸ்புக்,யூடியூப்).

எகிப்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு முன் டுனிசியாவில் டிவிட்டர் புரட்சி வெடித்தது.வேலையில்லா திண்டாட்டம் ,ஊழல் போன்ற பிர்சனைகளால் வெறுத்து போன டுனிசிய மக்கள் டிவிட்டர் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத்துவங்கியது அரசுக்கு எதிரான மக்கள் இயக்கமாக உருவானது.

டுனிசியாவின் புரட்சி தீ மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரவலாம் என்று கணிக்கப்பட்டதற்கு ஏற்பவே எகிப்தில் பதவி நாற்காலியில் பல ஆண்டுகளாக ஒட்டிக்கொண்டிருக்கும் முபாரக் அரசுக்கும் எதிரான‌ போராட்டம் வெடித்தது.எதிர்பார்க்க கூடியது போலவே எகிப்து அரசு முதல் வேலையாக டிவிட்டருக்கு தடை விதித்து இண்டெர்நெட் பயன்பட்டிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.

போராட்டத்தை நசுக்க எப்போதுமே ஆதக்க சக்திகள் பல்வேறு அடக்கு முறைகளை கடைபிடித்து வந்துள்ளனர்.தகவல் யுகத்தில் மக்கள் போராட்டத்திற்கான மாபெரும் ஆயுதமாக இணையம் உருவாகி இருப்பதால் போராட்டம் என்று வரும் போது அரசுகள் முதலில் செய்வது இண்டெர்நெட்டின் குரல் வலையை நெறிப்பது தான்.

அதிலும் குறிப்பாக இப்போது டிவிட்டரில் கை வைக்கின்றனர்.

டிவிட்டர் செய்திகள் மூலம் போராட்டத்திற்கு தூண்டுகோளாக இருக்ககூடிய‌ தகவல்கள பகிர்ந்து கொள்ளப்பட்டு பரஸ்பர ஆதரவு திரட்டப்படுகிற‌து.வெகுஜன ஊடகங்கள் தனிக்கை மற்றும் லாப நஷ்ட கணக்கின் அடிப்படையில் செய்திகளை சீர் தூக்கி பார்த்து வெளியிடும் நிலையில் இணையவாசிகள் எந்தவித அச்சமோ தய‌க்கமோ இல்லாமல் கருத்துக்களை வெளியிட்டு ஆதரவு திரட்ட டிவிட்டரும் பேஸ்புக்கும் கை கொடுக்கின்றன.

எனவே தான் செஞ்சீனமும் சரி மதாடிப்படைவாத ஈரானும் சரி மக்கள் அதிருப்தியை எதிர் கொள்ளும் போது டிவிட்டர் நதியின் மூலம் எதிர்ப்பு தகவல்கள் பாய்ந்தோடுவதை தடுக்க வேண்டும் என நினைக்கின்றன.

இப்போது எகிப்திலும் இது தான் நடந்திருக்கிறது.

உண்மையில் எந்த ஒரு நாட்டில் டிவிட்டருக்கு தடை விதிக்கப்படுகிறதோ அங்கு நிலைமை சரியில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு டிவிட்டர் மக்கள் சாதனமாக உருவாகியுள்ளது.

வர்த்தக நிறுவனமாக இருந்த போதிலும் டிவிட்டர் நிர்வாகம் இதனை உணர்ந்திருப்பது நல்ல விஷ‌யம்.அதைவிட இந்த புரிதலை வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள‌ அறிக்கை வரவேற்கத்தக்கது.

டிவிட்டர் நதி பாய்ந்தோடட்டும் என்னும் தலைப்பிலான பதிவில் டிவிட்டர் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன்,தங்களுக்கு அர்த்தமுள்ள வகையில் எந்த இடத்தில் இருப்பவரும் உடனடியாக தொடர்பு கொள்ள வழி செய்வதே டிவிட்டரின் நோக்கம் என்றும் இதற்கு கருத்து சுதந்திரம் மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சில டிவிட்டர் செய்திகள் அடுக்குமுறை தேசங்களில் முற்போக்கான மாற்றத்தை கொண்டு வர வல்லவை என்றும் கூறியுள்ள ஸ்டோன் டிவிட்டரின் உள்ளடக்கத்தில் உடன்பாடு  இல்லாவிட்டாலும் கூட அந்த தகவல்கள் பாய்ந்தோட செய்து வருவதாக கூறியுள்ளார்.

கருத்து சுதந்திரத்தை அடிப்படை ம‌னித‌ உரிமை என்று குறிப்பிட்டுள்ள ஸ்டோன் எந்த கருத்தையும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்வதை தடுக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.

டிவிடரின் தணிக்கை கொள்கை பற்றியும் விரிவாக விளக்கியுள்ள ஸ்டோன் கருத்து சுதந்திரம் தொடர்பான டிவிட்டரின் கருத்துக்களை பின்தொடர்வதற்கான முகவரியையும் கொடுத்துள்ளார்.

டிவிட்டர் ஒரு போராட்ட கருவியாக உருவாகியுள்ள நிலையில் டிவிட்டரின் இந்த தன்னிலை விளக்கம் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான ஆதரவு வரவேற்கத்தக்கதது.

சில ஆண்டுகளுக்கு முன் ஈரானில் எதிர்ப்பு அலை எழுந்த போது டிவிட்டரே அதன் மையமாக விளங்கியது.அப்போது டிவிட்ட தளத்தின் பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டிருந்த‌து.இந்த நேரத்தில் டிவிட்ட மூடப்பட்டால் போராட்டக்காரகளின் குரல் கேட்காமல் போய் விடும் என் க‌ருதி அமெரிக்க அரசே டிவிட்டரிடம் பராமரிப்பு பணிகளை தள்ளிவைக்க கேட்டுக்கொண்டது நினைவிருக்கலாம்.

———-

http://blog.twitter.com/2011/01/tweets-must-flow.htm

———-
(தமிழக மீனவர்களுக்கான டிவிட்டர் இயக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்)

l

டிவிட்டரில் மக்களை சந்தித்த அமெரிக்க கவர்னர்

டிவிட்டரில் நகரசபை கூட்டத்தை நடத்த முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சிகளை டிவிட்டரில் நடத்துவது சாத்தியமே.அமெரிக்கவின் புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் இப்படி டிவிட்டர் மூலம் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கிறார்.

டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளை அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்களர்களை கவர்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக மக்களோடு தொடர்பு கொள்ளவும்,அவர்களின் மனப்போக்கை அறியவும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கை பதவியில் இருப்பவர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

சமூக வலைப்பின்னல் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் தன்மையை வெளிப்படுத்தி கொள்வதோடு உள்ள படியே மக்கள் சேவையில் ஒரு அங்கமாகவும் இதனை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கருத துவங்கியுள்ளனர்.

இதன் வெளிப்பாடே டிவிட்டர் நேர்காணல் போன்றவை .அதாவது டிவிட்டரில் கேள்வி கேட்கப்பட்டு அதன் மூலமே பதில் அளிப்பது.டிவிட்டரில் பதிவிடும் போது பதில் அளிக்க உள்ள வசதியை கொண்டு டிவிட்டர் பேட்டிகள் நிகழத்தப்படுகின்றன.

இதே முறையில் பலரை கேள்வி கேட்க வைத்து டிவிட்டரில் பதில் அளிக்கலாம்.

புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் இந்த முறையில் தான் மாகாண மக்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் மூலம் பதில் அளித்துள்ளார்.

குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பது போல ஸ்காட் கடந்த வாரம் டிவிட்டரில் என்னிடம் கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்தார்.அதன்படியே வியாழக்கிழமை அன்று 38 நிமிடம் டிவிட்டரில் கேள்விகளை எதிர்கொண்டார்.

கவர்னரின் நூலக அறையில் லேப்டாப் முன் அமர்ந்த ஸ்காட் தனது டிவிட்டரில் கணக்கில் வந்து குவிந்த கேள்விகளுக்கு டிவிட்டர் பதிவுகளாக பதில் தந்தார்.

சரிந்து கிடக்கும் வீடுகளின் மதிப்பை உயர்த்த ஏதேனும் திட்டமிட்டிருக்கிறாதா என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு முதலில் வேலைவாய்ப்பினை பெருக்கி,வீடுகளை வாங்க வைத்து சொத்து வரியை குறைக்க இருப்பதாக ஸ்காட் பதில் அளித்தார்.

பள்ளிகளுக்கு ஐபேட் வழ்ங்கும் திட்டம் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் இல்லையா என்று வேறு ஒருவர் கேட்ட கேள்விக்கு பிள்ளைகளுக்கு நவீன தொழில்நுட்பததிஅ அறிமுக செய்வது நமது கடமை என்று அவர் பதிலளித்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது சொன்ன விஷயங்களை சுட்டிக்காடி கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.குறிப்பிட்ட ஒருவர் பிரசாரத்தின் போது அதிக குழந்தைகள் இருந்திருக்க கூடாதா என அவர் கூறியதை குறிப்பிட்டு அதனை நிரைவேற்றும் எண்ணம் இருக்கிறதா என ஆர்வத்தோடு கேட்ட கேள்விக்கும் அவர் இல்லை என்று பதில் தந்தார்.

டிவிட்டர் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டாலும் எதிர்பார்க்க கூடியது போலவே சிக்கலான மற்றும் சர்ச்சைக்குறிய வினாக்களை தவிர்த்து விட்டு தனது வேலை திட்டத்திற்கு பொருத்தமானவற்றுக்கு மட்டும் உற்காமாக பதில் தந்தார்.

இருப்பினும் டிவிட்டர் மூலம் அவர் மேற்கொண்ட இந்த முயற்சியை வரவேற்க வேண்டும்.

குறும்பதிவு சேவையான டிவிட்டர் தகவல் பகிர்விற்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் வழி செய்து கொண்டிருக்கும் போது மக்கள் பிரதிநிதிகளும் தங்களுக்கு வாக்களித்தவர்களோடு தொடர்பு கொள்ள அதனை பயன்படுத்திக்கொள்வதே இரு தரப்பினருக்குமே நலன் பயக்கும்.அதிலும் டிவிட்டரின் உடனடித்தன்மை மற்றும் சுலபத்தன்மை புதியதொரு உறவு பாலத்தை ஏற்படுத்தி தரக்கூடியது.

அந்த வகையில் புளோரிடா கவர்னர் டிவிட்டர் மூலம் குறை கேட்பு நிகழச்சியை நடத்தியுள்ளார்.புளோரிடா மக்களிடமும் இதற்கு நல்ல வர்வேற்பு காணப்பட்டது.இந்த அறிவிப்புக்கு பின் டிவிட்டரில் அவரது பிந்தொடர்பாளர்கலின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

வருங்காலத்தில் இததகைய டிவிட்டர் நிகழ்ச்சிகள் மேன்மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கட்சிகளின் பொதுக்குழு செயற்குழு போல டிவிட்டர் குழுக்களும் பிரபலமாகலாம்.

டிவிட்டர் டைரி எழுதுங்கள்

டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.டிவிட்டரை ஒரு டைரி போல கூட பயன்படுத்தலாம்.

டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் குறும்பதிவுகளை திரும்பி பார்க்கையில் அவற்றில் சில டைரி பதிவுகள் போலவும் அமைந்திருப்பதை உணரலாம்.

ஆனால் டைரி என்பது பகிர்ந்து கொள்வதற்கானது அல்ல என்னும் போது டிவிட்டரின் பகிர்தல் தன்மை அதற்கு எதிராகவே அமையும்.

இருப்பினும்  டிவிட்டர் மூலம் டைரி எழுதுவது போல தகவல்களை பதிவு செய்து அந்த பதிவுகளை உங்களுக்கு மட்டுமானதாகவே வைத்திருக்க விரும்பினால் அதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கரெண்ட்.ஐம் என்னும் அந்த தளத்தை டிவிட்டர் டைரி போல பயன்படுத்தலாம்.அதாவ‌து இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு டிவிட்டர் குறும்பதிவுகளை வெளீயிடுவது போலவே நிகழ்வுகளையும் எண்னங்களையும் குறித்து வைக்கலாம்.ஆனால் இவை எதுவுமே மற்றவர்களின் பார்வைக்கு வராது.

எப்படி டைரி நமக்கு மட்டுமானதாகவே இருக்குமோ அதே போல இந்த பதிவுகளும் பயனாளிகள் மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கும்.

எஸ் எம் எஸ் .குறும்பதிவு யுகத்தில் இப்படி டிவிட்டரில் டைரி எழுதுவதும் பொருத்தமாக தான் இருக்கும்.

இணைய‌தள முகவரி;http://www.current.im

ஒபாமா பற்றி டிவிட்டர் என்ன நினைக்கிறது.

obasmaதிரைப்படங்களின் வெற்றி தோல்வியை இப்போது டிவிட்டர் தான் நிர்ணயிக்கிறது என்கின்ற‌னர்.படம் பார்த்த உடனேயே படம் பற்றி உள்ளத்தில் தோன்றுவதை ரசிகர்கள் டிவிட்டரில் பதிவு செய்து விடுவது அந்தபடத்தை பார்க்கலாமா? வேண்டாமா?என முடிவெடுக்க வைத்து விடுகிறது.

பட தாயாரிப்பு நிறுவனங்களின் மார்க்கெட்டிங் முயற்சியை மீறி ரசிகர்கள் தங்கள் டிவீட்களிலேயே தன் வெற்றி தோல்வியை தீர்மானித்து விடுகின்றன.நாளிதழ் விமர்சனங்கள், வலைப்பதிவு விமர்சனங்கள் கூட பிறகு தான் வெளியாகின்றன.ஆனால் டிவிட்டர் விமர்சனங்கள் தியேட்டரிலிருந்தே வெளியாகி படம் குறித்த பொது அபிப்ராயத்தை உண‌ர்த்திவிடுகின்றன.

டிவிட்டர் விமர்சனத்தை எப்படி சமாளிப்பதென பட நிறுவனங்கள் குழ‌ம்பித்த‌விப்ப‌து ஒரு புற‌மிருக்க‌ டிவிட்ட‌ர் க‌ருத்துக்களால் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளின் செய‌ல்பாடுக‌ள் எந்த அளவுக்கு வரவேற்பை பெர்றுள்ளன என க‌ண்ட‌றிய‌ முடியும் தெரியுமா?

உதார‌ண‌த்திற்கு அர‌சைய‌ல் த‌லைவ‌ர் ஒருவ‌ர் எதிர்கால‌ திட்ட‌ம் குறித்து முக்கிய‌ உரை நிக‌ழ்த்துவ‌தாக‌ வைத்துக்கொள்வோம்.அந்த‌ உரை ம‌க்க‌ள் ம‌த்தியில் எத்த‌கைய‌ பாதிப்பை ஏற்ப‌டுத்திய‌து என்ப‌தை டிவிட்ட‌ரை பார்த்தே தெரிந்து கொண்டு விட‌லாம்.

எப்ப‌டி என்கிறிர்க‌ளா?

உரையை கேட்ட‌வுட‌னே ப‌ல‌ரும் அதௌ ப‌ர்றி தாங்க‌ள் என்ன‌ நினைக்கிறோம் என்ப‌தை டிவிட்ட‌ரில் ப‌திவு செய்ய‌ப்போகின்ற‌ன‌ர்.ஆஹா பேச்சு பிர‌மாதம்,என்ப‌தில் துவ‌ங்கி பெரும் ஏமாற்ற‌ம் என்ப‌து வ‌ரை உரையை பாராட்டியும் விம‌ர்சித்தும் க‌ருத்துக்க‌ளை டிவிட்ட‌ர் செய்ய‌லாம்.

இத்த‌கைய‌ டிவிட்ட‌ர் க‌ருத்துக்களை அல‌சி ஆராய்வ‌த‌ன் மூல‌ம் த‌லைவ‌ரின் உரை எந்த‌ அள‌வுக்கு தாக்க‌த்தை ஏற்ப‌டுத்திய‌து என‌ தெரிந்துகொள்லாம். மேற்பூச்சோ மிகைப்ப‌டுத்த‌லோ இல்லாம‌ல் உள்ள‌தை உள்ள‌ ப‌டி பிர‌திப‌லிக்கும் க‌ண்ணாடியாக‌ டிவிட்ட‌ர் க‌ருத்துக்க‌ள் அமைய‌லாம்.

ச‌மீப‌த்தில் அமெரிக்க‌ அதிப‌ர் சுகாதார‌ சீர்திருத்த‌ திட்ட‌ம் தொட‌ர்பாக நாடாளும‌ன்ற‌த்தில் உரை நிக‌ழ்த்திய‌ போது அவ‌ர‌து உரை ஏற்ப‌டுத்திய‌ தாக்க‌த்தை இப்ப‌டி டிவிட்ட‌ர் க‌ருத்துக்க‌ளின் மூல‌ம் அறிய‌ முடிந்த‌தாக‌ சொல்கிறார்க‌ள்.உரை நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ பின் டிவிட்ட‌ரில் ப‌திவான‌ க‌ருத்துக்க‌லை வைத்துக்கொண்டு பார்த்த‌ போது 36 ச‌த‌வீத‌ம் பேர் அத‌னை ஆத‌ரித்த‌தும் 32 ச‌த‌வீத‌ம் பேர் விம‌ர்சித்த‌தும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

ஒபாமாவின் சுகாதார‌ திட்ட‌ம் பெரும் ச‌ர்ச்சையை ஏற்ப‌டுத்தியுள்ள‌ நிலையில் அத‌னை ஆதிரித்து அவ‌ர் ஆற்றிஅய‌ உரை ம‌க்க‌ள் ம‌ன்ற‌த்தில் வ‌ர‌வேற்பை பெற்ற‌தா என்ப‌தை டிவிட்ட‌ர் ச‌ரியாக‌ ப‌ட‌ம் பிடித்து காட்டிய‌தாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

ஆக‌ டிவிட்ட‌ரை இனி உல‌கின் ம‌ன‌சாட்சியாக‌ க‌ருத‌லாம் போல்.

ஃபேஸ்புக் இனிது ; டிவிட்டர் கொடிது.

1-facebookஇனிது இனிது ஃபேஸ்புக் இனிது.ஆனால் டிவிட்டர் கொடிது. யூடியூப்பும் கொடிது என்று புகழ்பெற்ற ஆயவாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

இந்த மூன்று தள‌ங்களுமே இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் தள‌ங்களாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.சமூக வாழ்க்கையின் புதிய போக்காகவும் இவற்றின் பயன்பாடு அமைந்துள்ளன.

ஃபேஸ்புக் செய்வதும் டிவிட்டர் செய்வதும் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர்.இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆய்வாளரான டாக்டர் டிரேசி அலோவி டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களின் பயன்பாடு பற்றி ஆய்வு நடத்தி அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள ஸ்டிர்லிங் பல்கலையைச்சேர்ந்த உளவியல் துறை பேராசிரியரான அவர் ஃபேஸ்புக் பயனொபாட்டால் பெரிய பாதிப்புகள் இல்லை. ஆனால் டிவிட்டர் மற்றும் யூடியூப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

அவர் சொல்லும் விஷயத்தை புரிந்து கொள்வதற்கு செயல்பாட்டு நினைவுத்திறன் என்னும் சங்கதியை புரிந்துகொள்ள வேண்டும்.காரணம் இந்த செயல்பாட்டு நினைவுத்திறனை மையமாக கொண்டே அவர் ஆய்வு செய்திருக்கிறார்.

செயல்பாட்டு நினைவுத்திறன என்பது உளவியல் வராலாற்றில் மிகவு சமிபத்திய சேர்க்கை.1960களில் தான் இந்த பதம் பயன்படுத்தலாயிற்று.பொதுவாக குறுகிய கால நினைவாற்றல் தொடர்பாக இது பயன்படுத்தப்படுகிறது.மில்லர் ,கிலான்டர்,மற்றும் பிரிபிராம் ஆகிய அறிஞர்கள் இந்த பதத்தை பயன்படுத்தினர்.மனித மூளையை கம்ப்யூட்டரோடு ஒப்பிட்டு இதனை அறிமுகம் செய்தனர்.

குறிப்பெடுத்தல்,படிப்பது,புரிந்து கொள்ளல்,மற்றும் முடிவெடுத்தல் ஆகியவை செயல்பாட்டு நினைவாற்றல் தொடர்பானது.பணியிடத்தில் செய‌ல்படுவது போன்றவை இந்த ஆற்றலை சார்ந்தே இருக்கிற‌து.வேலையில் சிறப்பாக செயல்படவும்,வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவும் இந்த ஆற்றலே முக்கிய காரணம் என்று நம்புபவர்களில் டாக்டர் டிரேசியும் ஒருவர்.

அதனால் தான் அவர் டிவிட்டர்,யுடியூப் போன்ற சமுக வலைப்பின்னல் சேவைகள் செயல்பாட்டு நினைவுத்திறனின் மீது செலுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

இந்த ஆய்வின்படி டிவிட்டர் மூலம் கருத்துக்களை வெளியிடும் பழக்கம் செயல்பாட்டு நினைவுத்திறனை பாதிப்பதாக தெரியவந்துள்ளது.எஸ் எம் எஸ் அனுப்பும் பழக்கமும் இதே பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

டிவிட்டர் செய்யும் போது தகவல்களை ஜீரணிக்க அதிக நேரம் செலவிட முடியாததே இதற்கு காரணம். பார்க்கிறோம் ,படிக்கிறோம் ,மற‌ந்துவிடுகிறோம்.அது பற்றி அதிகம் யோசிக்காமல் அடுத்த வேலைக்கு சென்று விடுகிறோம்.டிவிட்டரில் கிடைக்கும் இடிவெளியில்லா தகவல்கள் அவற்றை பகுத்துணரும் அவசியத்தை உண்டாக்குவதில்லை. யூடியூப் மூலம் விடியோ கோப்புகளை பார்க்கும் போதும் இதே தான் நடக்கிறது. எனவே டிவிட்டர் செய்வதும் யூடியூப் பார்ப்பதும் பாதகமானதாக கருதப்படுகிற‌து.

ஆனால் அதே நேரத்தில் ஃபேஸ்புக் செய்வது மற்றும் வீடியோ கேம் விளையாடுவது செயல்பாட்டு நினைவாற்றலுக்கான பயிற்சியாக அமைகிறதாம்.சுடோகு புதிரையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.காரணம் இந்த செயல்களின் போது மூளை சுறுசுறுப்படைவதோடு சிறந்த ஒருங்கிணைப்பும் உண்டாகிறது.

இது பற்றி டிரேசி விரிவான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளாராம்.

நிறக் டிவிட்டர் ந‌ம்முடைய பகுத்துணரும் ஆற்றலை பாதிப்பதாக ஏற்கனவே விஞ்ஞானிகள் ஒரு ஆய்வின் மூலம் எச்சரித்துள்ளனர்.