Tag Archives: wiki

கூகுல் நாலெட்ஜ் கிராஃப் – வியக்க வைக்கும் புதிய வசதி!

‘ராஜா’ என்று இணையத்தில் தேடுகிறோம் என்றால், அது ராஜ ராஜ சோழனா அல்லது இளையராஜாவா இல்லை ஏ.எம் ராஜாவா, இல்லை என்றால் ஆ.ராசாவா?

இது போன்ற கேள்விகளுக்கான விடையை தேடல் முடிவாக அளிக்கும் புதிய வசதியை தான் முன்னணி தேடியந்திரமான கூகுல் அறிமுகம் செய்துள்ளது.’கூகுல் நாலெட்ஜ் கிராஃப்’ என்று குறிப்பிடப்படும் இந்த வசதி, தேடலில் அடுத்த அத்தியாயம் என்று வர்ணிக்கப்படுகிற‌து.தேடல் கலையை மேலும் புத்திசாலித்தனமானதாக மாற்றக்கூடியது என்றும் கருதப்படுகிறது.

தேடியந்திர உலகில் கூகுல் எப்போதோ நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டாலும், தன்னை நாடி வருபவர்களின் தேடல் அனுபவத்தை மேம்படுத்தித் தரும் வகையில் இன்னும் சிறப்பாக தேடல் முடிவுகளை வழங்க முயன்று கொண்டே இருக்கிறது கூகுல். புதிய புதிய வசதிகளையும் அம்சங்களையும் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் கூகுலின் லேட்டஸ்ட் அறிமுகம் நாலெட்ஜ் கிராஃப் வசதி.

உலகில் உள்ள பெயர்கள்,மனிதர்கள் மற்றும் இடங்கள் பற்றியெல்லாம் கூகுல் சேகரித்து வைத்திருக்கும் தகவல் களஞ்சியம் தான் இந்த கிராஃப். இப்படியாக 50 கோடிக்கும் மேற்பட்ட விஷயங்கள் குறித்து 350 கோடிக்கும் மேற்பட்ட தகவல்களை தனது டேட்டாபேசில் கூகுல் சேகரித்து பகுத்து வைத்திருக்கிறது.

இணையவாசிகள் தேடலில் ஈடுபடும் போது இந்த தகவல் களஞ்சியத்தை கொண்டு அவர்கள் எதிர்பார்க்காத வகையில், ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் தகவலை முன்வைத்து வியக்க வைக்கிறது கூகுல்.அதாவது இணையவாசிகள் என்ன தேடுகின்றனர் என்பதை கூகுல் புரிந்து கொண்டு அதற்கேற்ற தகவல்களை பரிந்துரைக்கிறது. பிரதான தேடல் பட்டியலுக்கு வலது பக்கத்தில் இந்த தகவல்கள் தோன்றுகின்றன.

தேடல் உலகில் இது புதிய உத்தியாக அமைந்துள்ளது. காரணம் இதுவரை கூகுல் உள்ளிட்ட எல்லா தேடியந்திரங்களும் இணையவாசிகள் தேடுவதற்கு பயன்படுத்தும் குறிச்சொல்லுக்கு பொருத்தமான இணைய பக்கங்களை பட்டியலிடுகின்ன்றன. கூகுல் இந்த பணியை விரைவாகவும் துல்லியமாகவும் செய்வதாக கருதப்படுகிறது.

ஆனால் தேடலில் ஒரு சின்ன பிரச்னை இருக்கிறது. உதாரணத்திற்கு ஒருவர் ‘தாஜ்மகால்’ என்னும் சொல்லை தேடுகிறார் என்று வைத்து கொள்வோம்.அவர் தேடுவது அழியா காதலின் அடையாளமாக விளங்கும் காதல் நினைவு சின்னமான தாஜ்மகாலாக இருக்கலாம், அல்லது ‘தாஜ்மகால்’ என்னும் பெயரிலான பாப் பாடகராக இருக்கலாம். ‘தாஜ்ம‌கால்’ என்னும் பெயரில் ஓட்டலும் இருக்கிறது. இவற்றில் குறிப்பிட்ட அந்த இணையவாசி தேடுவது எதனை?

இப்போதுள்ள நிலையில் தேடியந்திரங்கள் இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் ‘தாஜ்மகால்’ என்னும் சொல் தொடர்பான பக்கங்களை எல்லாம் கைகாட்டுகின்றன. அவற்றில் இருந்து இணையவாசிகளாக தேர்வு செய்து கொள்ள வேண்டும். அல்லது தேடும் போதே துணை குறிச்சொற்களை பயன்படுத்த வேண்டும்.

ஆனால் கூகுல் நாலெட்ஜ் கிராஃப் இது போன்ற நேரங்களில் தானே இணையவாசி சார்பில் ஊகித்து அவரது தேடலுக்கான பரிந்துரையை முன்வைக்கிறது. தாஜ்மகாலை பொருத்தவரை ‘தாஜ்மகால் என்பது வரலாற்று நினைவு சின்னம். அது இந்தியாவின் ஆக்ராவில் உள்ளது’ போன்ற அடிப்படையான விவரங்களை கூகுல் சட்டென்று தேடல் முடிவின் வலது பக்கத்தில் தருகிற‌து.

இந்த விவரங்கள் தாஜ்மகால் பற்றிய சுருக்கமான அறிமுகமாக விளங்குகின்றன.ஒரு ஒற்றை பார்வையில் தாஜ்மகால் பற்றி இதன் மூலம் தெரிந்து கொண்டு விடலாம்.

இணையவாசி தேடி வந்த தாஜ்மகால் இது தான் என்றால் இந்த பக்கத்தில் க்ளிக் செய்தால் போதும், தாஜ்மகால் பற்றி எல்லாவற்றையும் அறிந்து கொள்ள‌லாம்.

இதை இன்னும் சரியாக புரிந்து கொள்ள ‘ராஜா’ என்னும் பொதுவான தேடலோடு பொருத்தி பார்க்கலாம். ராஜா என்றால் அது மன்னர் ராஜ ராஜ சோழனாக இருக்கலாம். இசை பிரியர்களை பொருத்தவரை இளையராஜாவாக இருக்கலாம். பழைய பாடகர் ஏ.எம்.ராஜாவாகவும் இருக்கலாம். ஸ்பெக்ட்ரம் ராஜாவாகவும் இருக்கலாம்.

கூகுல் இதனை புரிந்து கொண்டு ‘ராஜா’ என்று தேடும் போது அதற்கேற்ற விவரங்களை முன் வைக்கிறது. இணையவாசிகள் தங்கள் தேர்வுக்கு பொருத்தமாக இருந்தால் அதனை பயன்படுத்தலாம்.

அதே போல பிரபலமான மனிதர்கள் பற்றி தேடும் போது அந்த மனிதர்கள் தொடர்பான அறிமுக விவரங்கள் கூகுல் தருகிறது. இடங்கள் பற்றிய விவரங்களும் இதே போல முன்வைக்கப்படுகின்றன.

திரை நட்சத்திரங்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நடித்த படங்கள் உள்ளிட்ட விவரங்களும் தரப்ப‌டும். எழுத்தாளர் எனில் அவர்கள் எழுதிய புத்தகங்கள், வாங்கிய விருதுகள் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

எனவே இணையவாசிகள் சுலபமாக தாங்கள் தேடும் தகவல்களை பெற்று விடலாம்.

விக்கிபீடியா போன்ற தகவல் பெட்டகங்களில் இருந்து இந்த தகவல்க‌ள் திரட்டப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.

மனிதர்கள் அல்லது இடங்கள் தொடர்பாக தேடும் போது இந்த பரிந்துரையை காணலாம்.

கூகுல் நாலெட்ஜ் கிராஃப் மூலம் அடிப்படை தகவல்கள் முன் வைக்கப்படுவதோடு, தேடல் தலைப்பு தொடர்பான சுவாரஸ்யமான விவரங்களும் இடம் பெறுகின்றன. உதாரணத்திற்கு ‘மேரி கியூரி’ என தேடினால் நோபல் பரிசு வென்ற மேடம் கியூரி பற்றிய அறிமுகம் வருவதோடு ‘கியூரியின் கணவரும் ஒரு நோபல் விஞ்ஞானி’ போன்ற தகவலகளும் அளிக்கப்படுகின்ற‌ன.

இவையெல்லாம் வெறும் உதாரணங்கள் தான். தேடலில் ஈடுபடும் போது அவரவர் தேவைக்கேற்ப பல வியப்புகளை கூகுலில் சந்திக்கலாம்.

காரணம் தேடுபவர் என்ன தேட விரும்புகிறார் என்பதை அவர் டைப் செய்வதில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டும் என கூகுல் விரும்புகிறது. அதற்கான முதல் படியாக தான் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் ஒருவரின் கேள்வியை அப்படியே புரிந்து கொண்டு அதற்கேற்ற பதிலை நெத்தியடியாக தர வேண்டும் என்பதே கூகுல் நோக்கமாக உள்ளது.

அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த வசதி முதல் கட்டமாக ஆங்கிலம் பேசும் இணையவாசிகள் மத்தியில் உலா வர உள்ளது.

கூகுல் நாலெட்ஜ் கிராஃப் பற்றி கூகுல் வலைப்பதிவி தரும் விவரம் : http://googleblog.blogspot.in/2012/05/introducing-knowledge-graph-things-not.html

————–

விகடன் டாட் காமில் எழுதியது.நன்றி விகடன்.

e

வால் முளைத்த விக்கிபீடியா

விக்கிபீடியா பயனாளிகளால் உருவாக்கப்படும் இணைய களஞ்சியம் என்பதும் அதில் யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெற வைக்கவோ திருத்தவோ முடியும் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்ககும்.

இணையவாசிகளின் பங்களிப்பால் விக்கிபீடியா நிகரில்லாத களஞ்சியமாக பர்நது விரிந்து வளர்ந்துள்ளது.விக்கிபீடியா தகவல்களில் நம்பகத்தன்மை பற்றி கேள்விகள் எழுப்பட்டாலும் அதன் பயன்பாடு பற்றி எந்த சந்தேகமும் இல்லை.

உலகின் முளை முடுக்கில் நடக்கும் விஷயங்கள் பற்றி கூட விக்கிபீடியாவில் குறிப்புகளை பார்க்கலாம்.உண்மையில் விக்கிபீடியாவில் கட்டுரை உருவாக்கப்படுவது குறிப்பிட்ட ஒரு தலைப்பு அல்லது நிகழ்வினுடைய செல்வாக்கின் அடையாளமாக கருதப்படுகிறது.

விக்கியை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவை ஒருபுறம் இருக்க விக்கிபீடியாவை அடிப்படையாக கொண்டு அதனை மேம்படுத்தும் அழகான முயற்சியாக புதிதாக ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

எம்பீடியா என்பது அந்த தளத்தின் பெயர்.அதன் நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமான பெயரும் கூட!காரணம் விக்கிபீடியா கட்டுரைகளின் மீது அனுபவம் சார்ந்த கருத்துக்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.

இணையத்தில் ஏற்கனவே உள்ள தகவல்களுடன் இணையவாசிகள் தங்களது அனுபவம் சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வைப்பதன் மூலம் விக்கிபீடியாவை அடிப்படையாக கொண்ட இணைய சமூகத்தை உருவாக்கிவது தான் இந்த தளத்தின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எந்த தலைப்பு தொடர்பாகவும் யார் வேண்டுமானாலும் தங்களது தகவல்களை இடம் பெற வைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உண்மையிலேயே அற்புதமானது.விக்கிபீடியாவின் பலமே அதன் திறந்த தன்மை தான்.அதில் உள்ள கட்டுரைகளில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தெரிந்த தகவலை சேர்க்கலாம்.இந்த பங்களிப்பால் தான் விக்கி கட்டுரைகள் விரிவானதாக செறிவானதாக இருக்கின்றன.

ஆனால் விக்கிபீடியாவில் தகவல்களை சமர்பிப்பபதற்கும் வரம்புகள் இருக்கின்றன.அதற்கு மாறாக விக்கி கட்டுரைகளை கை வைக்காமல் அந்த கட்டுரை தலைப்பு தொடர்பான தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிவது சிறந்த விஷயம் தானே.

உதாரணத்திற்கு விண்டோஸ் பற்றிய கட்டுரையில் இணையவாசிகள் தங்களது விண்டோஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.விண்டோஸ் தொடர்பான முதல் விளம்பரத்தை நாளிதழில் பார்த்த அனுபவத்தை அல்லது விண்டோசை முதன் முதலில் பயன்படுத்திய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

இதே போல பிரபலங்கள் தொடர்பான கட்டுரைகளில் ரசிகர்கள் அவரை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல அவர்களோடு பழகியவர்கள் நட்சத்திரங்களின் தனிப்பட்ட குணாதிசயம் தொடர்பான தகவல்களையும் இணைக்கலாம்.இந்த அனுபவ பகிர்வுகள் விக்கி கட்டுரைகள் தரும் தக‌வல்களுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தையும் புரிதலையும் ஏற்படுத்தலாம்.

எந்த தலைப்பாக இருந்தாலும் சரி அந்த தலைப்பின் விக்கி கட்டுரையின் கீழ் இணையவாசிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.அதை படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட தலைப்பபு தொடர்பான கேள்வி பதில் பகுதியையும் இணையவாசிகள் உருவாக்கி உரையாடலில் ஈடுபடலாம்.அதே போல அந்த தலைப்பிற்கான இணைய வாக்கெடுப்பையும் நடத்தலாம்.

இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான தலைப்பை தேர்வு செய்து படித்துப்பார்க்கலாம்.மனதில் உள்ள தலைப்பை தேடிப்பார்க்கும் சவசதியும் இருக்கிறது.அந்த தலைப்பு தொட‌ர்பான அனுபவ பகிர்வுகளை தவறவிடாமல் இருக்க நினைத்தால் டிவிட்டரில் பின் தொடர்வது போன அந்த தலைப்பை பின் தொடர்வும் செய்யலாம்.அது மட்டும் அல்ல இந்த தகவல்களை டிவிட்டர்,பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

ஒவ்வொரு தலைப்பின் கீழும் எத்தனை பேரால் பார்க்கப்பட்டுள்ளது,எத்தனை பேர் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன.மேலும் சமீபத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அனுபவங்களையும் கருத்துக்களின் பட்டியலையும் தனியே பார்க்கலாம்.

விக்கிபீடியாவை மேலும் சுவாரஸ்யமானதாக அதன் கட்டுரைகளை மேலும் உயிரோட்டமாக மாற்றக்கூடிய சேவை இந்த அனுபவம் சார்ந்த களஞ்சியம்.

இணையதள முகவரி;http://www.empedia.com/

அகராதி இல்லாத (இணைய)அகராதி.

அகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகாரபூர்வ தனமையும் இருக்கிறது.அகராதிகள் கராரானவை.ஒரு சொல் என்றால் அவை சொல்வ‌து தான் பொருள்.அதனால் தான் எப்போதும் சட்டம் பேசுவது போல பேசுபவர்களை அகராதி பிடித்தவர்கள் என்று சொல்வதுண்டு.

இணைய யுகத்திலும் இன்னும் நிபுணர்கள் கையிலேயே இருக்கும் பொருட்களில் அகராதியும் ஒன்று.அகராதி தயாரிக்க மொழியில் நிபுணத்துவமும் புலமையும் தேவை.

ஆனால் சோ சிலேங்க் இணைய அகராதி இதனை மாற்றி காட்டுகிறது. ஆங்கில சொற்கலூக்கான பொருள் தரும் இந்த அகராதியை பொருத்தவரை ஒரு சொல்லுக்கு பலவிதமான பொருட்கள் உண்டு.அதாவது ஒரே சொல்லை பலவிதமாக வரையறுக்கலாம்.எது சிறந்த பொருள் தருகிற்தோ அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

இதை மக்கள் அகராதி என்றும் சொல்லலாம்.காரணம் இந்த அகாராதியில் இணையவாசிகளே சொற்களுக்கான பொருட்களை சம்ர்பிக்கலாம்.இந்த அக‌ராதியில் இடம் பெற்றுள்ளவை எல்லாமே இணையவாசிகளால் சம‌ர்பிக்கப்பட்ட அர்த்தங்கள் தான்.நீங்கள் நினைத்தாலும் இதில் ஒரு வார்த்தையை சேர்க்கலாம்,ஏற்கனவே உள்ள சொல்லுக்கு உங்கள் அர்த்ததை சமர்பிக்க‌லாம்.

எனவே இதில் எந்த சொல்லுக்கும் இது தான் என்ற வரையறுக்கப்பட்ட பொருள் கிடையாது.அதாவது சொல்லின் பொருள் மாறுவதில்லை,ஆனால் அவ‌ற்றை விளக்கும் விதம் மாறுபடலாம்.

இணையவாசிகள் ஏற்கனவே உள்ள சொற்களுக்கும் தங்களின் விளக்கத்தை சம‌ர்பிக்கலாம்.ஒரு சொல்லுக்கு எத்தனை விதமான விளக்கத்தை அளிக்க முடியுமோ அத்தனை விளக்கத்தை அளிப்பது தான் இந்த அகராதியின் நோக்கம்.எந்த விளக்கமாக இருந்தாலும் குறிப்பிட்ட சொல்லின் பொருளை எளிதாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.

ஒரு சொல்லுக்கு பல வித விளக்கங்கள் இருந்தாலும் அவை அந்த சொல்லை புரிந்து கொள்ள எந்த அளவுக்கு உதவுகின்றன என்பதன் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 60 லட்சம் வார்த்தைகளுக்கு மேல் பட்டியலிடப்பட்டுள்ளன.அக‌ர வரிசைப்படி சொற்களை அணுகலாம்.சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட சொற்களும் பட்டியலிடப்படுகின்ற‌ன.

அகராதியின் பொருள் புரிய வைப்பது தான் என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் அகராதிகளுக்கான ஜனநாயகமயமான முயற்சி தான்.

இணையவாசிகள் உருவாக்கும் அகராதி தான் என்ற போதிலும் தவறான தன்மையோ சொற்களின் பொருளை மலினப்படுத்தும் முயற்சியோ இருப்பதாக‌ தெரியவில்லை.நடைமுறை வாழ்க்கை சார்ந்த உதாரணங்களோடு சொற்களின் அர்தத்தை புரிந்து கொள்ளும் விதத்தை எளிமையாக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.

மரபின் மீது நம்பிக்கை கொண்டவர்களை இந்த அகராதி கொஞ்சம் அதிர்ச்சிக்கு ஆளாக்கினாலும் எதிலும் எளிமையை எதிர்பார்ப்பவர்கள் இதனை ஆதரிக்கலாம்.

இணையதள் முகவரி;http://www.soslang.com/

விக்கிபீடியாவின் சாதனை

norway மேரி எரிக்சனை உங்களுக்குத்தெரியுமா?நார்வே நாட்டைச்சேர்ந்த நடிகை அவர்.நார்வேயில் நன்கறிந்தவர் .மற்றபடி உலகப்புகழ் பெற்றவர் என்றெல்லாம் சொல்லமுடியாது.ஒலிம்பிக் வீராங்கனை ஒருவரின் பேத்தி உலக‌ப்போரின் போது விமானம் ஓட்டியவரின் மகள் எனப‌து அவரைப்பற்றிய கூடுதல் தகவல்கள்.

இருந்தாலும் இதற்காகவெல்லாம் அவரை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.அவர் இண்டெர்நெட் சரித்திரத்ததில் இடம் பெற்றிருக்கிறார்.

எப்படி என்றால் வீக்கிபிடியாவில் அவரைப்பற்றிய கட்டுரை இடம்பெற்றுள்ளதன் மூலம் அவர் இண்டெர்நெட் சரித்திரத்திலும் இடம் பிடித்துள்ளார்.

விக்கிபீடியாவில் இட‌ம்பெறுவ‌து என்ப‌து பெரிய‌ விஷ‌ய‌ம‌ல்ல‌. ம‌க்க‌ள் க‌லைக‌ள‌ஞ்சிய‌மான‌ அதில் எல்லா விஷ‌ய‌ங்க‌ள் ம‌ற்றும் எல்லா வித‌மான‌வ‌ர்க‌ள் ப‌ற்றிய‌ த‌கவ‌ல்க‌ள் இட‌ம்பெற்றிருக்கின்ற‌ன‌.தொட‌ர்ந்து க‌ட்டுரைக‌ள் சேர்க்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.

பிர‌ப‌ல‌ங்க‌ள் என்றில்லை ;ஓர‌ள‌வுக்கு அறிமுக‌மாண‌வ்ர்க‌ளைப்ப‌ற்றி கூட‌ யாராவ‌து அதில் சிறு க‌ட்டுரையை எழுதி விடுகின்ற‌ன‌ர்.ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அதில் த‌க‌வ‌ல்க‌ளை சேர்த்து வ‌ருகின்ற‌ன‌ர்.

இப்ப‌டி நார்வே ந‌டிகையான‌ மேரி எரிக்ச‌ன் ப‌ற்றி மிக‌ ச‌மீப‌த்தில் ஒரு க‌ட்டுரை ஆங்கில‌ விக்கிபீடியாவில் சேர்க்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்த‌ க‌ட்டுரை விக்கிபீடியாவில் இட‌ம்பெறும் 3 மில்லிய‌னாவ‌து க‌ட்டுரை என்ப‌தே விசேஷ‌ம்.

விக்கிபீடியா வ‌ராலாற்றில் இது ஒரு மைல்கல் தானே. மில்லிய‌ன், பில்லிய‌ன் ஆகிய‌ இல‌க்க‌ங்க‌ளை எட்டுவ‌து என்ப‌து ஒரு சாத‌னை எண்ணிக்கையாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து அல்ல‌வா?

அந்த‌ வ‌கையில் விக்கிபீடியாவின் க‌ட்டுரைக‌ள் 3 மில்லிய‌னை க‌ட‌ந்திஅருப்ப‌து மாபெரும் சாத‌னையாக‌ அமைகிற‌து.அத‌ன் பின்னே உள்ள‌ கூட்டு முய‌ற்சி கொள்கைக்கும் அத‌ன் மீதான‌ ந‌ம்பிக்கையில் த‌க‌வ‌ல்க‌ளை இட‌ம்பெற‌செய்த‌ இணைய‌வாசிக‌ளுக்கு கிடைத்த‌ வெற்றி இது.

விக்கிபீடியா முக‌ப்பு ப‌க்க‌த்தில் அட‌க்க‌த்தோடு சின்ன‌தாக‌ இந்த‌ செய்தியை வெளியிட்டு பெருமித‌ம் கொண்டுள்ள‌து.

விக்கிபீடியா நிறுவப்பட்ட எட்டாவது ஆண்டில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

விக்கிபீடியா தொட‌ர்பான‌ சில‌ உப‌ த‌க‌வ‌ல்க‌ள்;விக்கிபீடியாவில் மொத்த‌ம் ப‌த்து ல‌ட்ச‌ம் உறுப்பின‌ர்க‌ள் உள்ள‌ன‌ர்.1.7 கோடி ப‌க்க‌ங்க‌ளை வுருவாக்கியுள்ள‌ன‌ர்.32.6 கோடி முறை த‌க‌வ‌ல்க‌ள் எடிட் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

பிரெஞ்சு மொழி ப‌திப்பில் 8 ல‌ட்ச‌ம் கட்டுரைக‌ள் உள்ள‌ன‌.ம‌ற்ற‌ மொழி ப‌திப்புக‌ளும் வ‌ள‌ர்ந்து வ‌ருகின்ற‌ன‌.

த‌மிழிலும் ப‌திப்பு உள்ள‌து. அத‌ன் வ‌ள‌ர்ச்சிக்கு உத‌விடுங்க‌ள்.

—–

link;
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
———

த‌மிழ் விக்கிபீடியா ப‌திப்பு ப‌ற்றி ந‌ல்ல‌தொரு கட்டுரைக்கு பார்க்க‌வும் இணைப்பு;

link;
http://muelangovan.blogspot.com/2009/08/blog-post.html

பார்கோடு விக்கிபீடியா

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை வாங்கி விடலாகாது என்று சொல்லப்படுவது உங்களுக்கு தெரியுமா?
.
நுகர்வோரான உங்கள் கடமையை சரிவர செய்ய,  வாங்கப்படும் பொருள் பற்றியும், அதனை தயாரித்த நிறுவனம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பது  தெரியுமா? 

 எல்லாம் தெரியும், விளம்பரங்களை பார்த்து விஷயங்களை தெரிந்து  கொண்ட பின்னர் தான் கடைக்கே போகிறோம் என்று நீங்கள் அலுப்புடன் அலட்சியமாக சொல்லலாம். ஆனால், இங்கே குறிப்பிடுவது விளம்பரம் மூலம்  தெரிவிக்கப்படும் தகவல்களை அல்ல; அவற்றின் பின்னே உள்ள தகவல்களை அதாவது நிறுவனங்கள் மறைக்க விரும்பும் தகவல்கள் மற்றும் வெளியிட விரும்பாத விவரங்கள் இவற்றை எல்லாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

அது உங்களின் தார்மீக கடமை என்று சொல்கின்றேன்.  அப்போது தான் நீங்கள் தார்மீக  பொறுப்புடன் நடந்து கொள்ள முடியும் என்றும் சொல்கின்றனர்.

சொல்வது, வர்த்தக நிறுவனங்கள் லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படாமல்  சமூக பொறுப்புடன்  நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை உறுதி செய்ய நுகர்வோர் செய்ய வேண்டியது எல்லாம், தகவல்களை  தெரிந்து கொண்டு அதனடிப்படையில்  சரியான முடிவுகளை  மேற்கொள்வது தான்.

 கெட்ட பெயர் சம்பாதித்த நிறுவனங்களை நுகர்வோர் இயல்பாகவே  தவிர்த்து விடுவ துண்டு. ஆனால்  நுகர்வோர் அறியாமலேயே தவறான  கொள்கைகளை/ நடைமுறையை கடைபிடிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றனவே. ஒரு நிறுவனம் தெரிந்தே குழந்தை தொழிலாளர்களை  வேலைக்கு நியமித்திருக்கலாம். ஒரு நிறுவனம், சுற்றுச் சூழல் 
மாசுபடுவது பற்றி கவலைப்படாமல் செயல்பட்டு கொண்டிருக்கலாம். ஒரு நிறுவனம் உள்ளூர் மக்களின்  நீர் ஆதாரத்தை சுரண்டி  லாபம் பார்த்து கொண்டிருக்கலாம்.  இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லலாம்.

வர்த்தக செயல்பாடுகள் பற்றி பெருமைபட்டுக் கொள்ளும் நிறுவனங்கள், இத்தகைய  சர்ச்சைக்குரிய சங்கதிகளை மூடி மறைத்து விடவே  முயற்சி செய்கின்றன.

 இப்போது உங்கள் முன் உள்ள கேள்வி, ஒரு நிறுவனம் தவறாக  செயல்படுகிறது என்று தெரிந்து கொண்டால்  அதன் தயாரிப்பை, வாங்காமல் புறக்கணிப்பது தானே சரி.  ஆம் என்பது உங்கள் பதிலாக இருந்தால்,  இந்த தகவல்களை  எல்லாம் எப்படி தெரிந்து கொள்வது என்ற கவலை உங்கள் மனதில் உண்டாகலாம்.

அந்த  கவலையே  வேண்டாம். நிறுவனங்களின்  பொருட்கள் பற்றிய விவரங்களை அளிப் பதற்காக  என்றே ஒரு இணைய தளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

 இன்றைய  வர்த்தக உலகில் எல்லா பொருட்களுமே விலையை குறிக்க பார்கோடை தாங்கி நிற்கின்றன அல்லவா? அந்த பார்கோடை வைத்தே  அப்பொருள் தொடர்பான முழு விவரங்களையும் அளிப்பதை நோக்கமாக  கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில்  இதனை பார்கோடு விக்கிபீடியா என்று சொல்லலாம்.

ஒரு பற்பசையையோ, சோப்பு கட்டியையோ பால் பாக் கெட்டையோ நீங்கள்  வாங்க போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே அதில் உள்ள பார்கோடை குறித்து வைத்துக் கொண்டு இந்த தளத்தில் அதனை டைப் செய்து பார்த்தீர்கள் என்றால் அந்த தயாரிப்பு தொடர்பான விவரங்கள்  திரையில் வந்து நிற்கும்.

விவரங்கள் என்றதும் வெறும்  தகவல்கள் மட்டும் அல்ல. நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒரே பார்வையில் அலசி ஆராய்ந்து எடை போட்டு விட உதவும் வகையிலான செய்திகள், விமர்சனங்கள், சர்ச்சைகள் என சகல விதமான விவரங்களும் தொகுக்கப் பட்டிருக்கும்.

உதாரணத்திற்கு நிறுவனத்தின் தயாரிப்பு முறை மற்றும் தொழிற்சாலையில்  ஊழியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து  ஏதாவது செய்திகள் வெளி வந்திருந்தால் அவை கட்டாயம் இடம் பெற்றிருக்கும் நிறுவனம் அரசு சலுகையை தவறாக பயன்படுத்தியது தொடர்பான செய்திகள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.

அதே போல அந்த   தயாரிப்பு பற்றி சக நுகர்வோரின் விமர்சன கருத்துக்களும் இடம் பெற்றிருக்கும். நிறுவனம் ஏதாவது சர்ச்சையில் சிக்கியிருந்தால் அந்த விவரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்படியாக  ஒவ்வொரு பொருள் பற்றிய முழு விவரங்களும் தொகுத்தளிக்கப் பட்டிருக்கும். பார்கோடை  டைப் செய்வதன் மூலம் எந்த பொருள் பற்றியும் இதன் வழியே தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறாக ஒரு நிறுவனம் தவறாக எதையும் செய்யவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு  அப்பொருளை நிம்மதியுடன் வாங்கலாம். இல்லை என்றால் இது போன்ற செயல்பாடுகளுடன் உடன்பட மாட்டேன் என கம்பீரமாக மறுத்து நிராகரிக்கலாம்.

நுகர்வோருக்கான இந்த தளம் நுகர்வோர் பங்களிப்பு இல்லாமல்  சிறப்பாக உருவாக வாய்ப்பில்லை. எனவே  நுகர்வோர் உதவியுடனேயே இதில் விவரங்கள் இடம் பெற உள்ளது.

  எனவே தான்  விக்கி பீடியா பாணியில் இந்த தளம் அமைக்கப்பட்டு வருகிறது.  இதில் நுகர்வோர் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான   தங்கள் மதிப்பீடுகள், கருத்துக்கள் மற்றும் கண்ணில் படும் செய்திகளை  சமர்பிக்கலாம். இப்படியாக  நுகர்வோர் சமர்பிக்கும் தகவல்கள் தொகுக்கப்பட்டு பொருட் களுக்கான  களஞ்சியமாக  இந்த தளம் உருவாக உள்ளது.