ஆலைக்கு அணை போட்ட எஸ்எம்எஸ்

alcatel-lego-top1சீனாவின் கடற்கரை பகுதியில் கியாமன் என்றொரு நகரம் இருக்கிறது. அந்த நகரில் ரசாயனத் தொழிற்சாலை ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டி ருந்தது. அந்த ஆலை அமைக்கப் பட்டால் நகரின் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாக நகரவாசிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து,இந்த ஆலை அமைக்கும் பணி கைவிடப் பட்டுள்ளது.அதாவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆலையால் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும், அதனால் அந்த திட்டமே கிடப்பில் போடப்பட்டதையும் குறிப்பிடும் போது, எல்லாம் ஏதோ சுலபமாக நிகழ்ந்தது போல தோன்றினாலும், ஒரு நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின்னரே இது சாத்தியமாகி இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. வழக்கமான போராட்டத்தின் சாயல்களோ கூறுகளோ இல்லாமல் தொழில்நுட்பத்தின் அற்றலை பயன்படுத்தி நடந்த சாத்வீகமான போராட்டம். அதிலும், போராட்டங்களை அவை அரும்பும் போதே நசுக்கி எறிந்துவிடும் சீனாவில், அரசின் கண்களில் மண்ணைத்தூவி வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கும் போராட்டம். அமைதியான போராட் டம் என்றாலும், அது முடிந்த விதத்தில் பிரம்மாண்டமாக சாதித்த போராட்டம்.
இந்த போராட்டத்திற்கு அடித்தள மாக அமைந்தது செல்போனும் ஆயுதமாக பிரயோகிக்கப்பட்டது எஸ்எம்எஸ் வசதியும்தான்.
ஆதரவு திரட்டுவதிலும், ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைப் பதிலும், செல்போன் மற்றும் எஸ்எம் எஸ்சின் ஆற்றலுக்கு ஏற்கனவே பல உதாரணங்கள் உள்ளன. மற்றொரு முன்னோடி உதாரணமாக சீனாவின் கியாமின் நகர போராட்டம் அமைந்திருக்கிறது.
பிசைலின் என்னும் ரசாயனம் புகைப்படச் சுருள்கள் மற்றும் நூலிழைகளை தயாரிக்கப்பயன் படுவது. இந்த ரசாயனம் ஆபத்தான நச்சுத்தன்மை கொண்டது. இந்த ரசாயனத்தின் பாதிப்பில் விலங்குக ளில் பிறப்புக்கோளாறு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எந்த இடத் தில் இந்த ஆலை வருகிறதோ, அந்த இடம் பலவிதங்களில் பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.
ஆனால் அரசுத் தரப்பில் இப்படி யொரு ஆலை அமைக்க முடிவு செய்யப் பட்ட பின்னர் என்ன செய்ய முடியும்?
கியாமன் நகரவாசிகள் இப்படி நினைக்கவில்லை. இந்த ஆலை வரவேக் கூடாது என அவர்கள் தீர்மான மாக இருந்தனர்.அந்த தீர்மானம் நகர வாசிகளின் செல்போன்களில் எச்சரிக்கை எஸ்எம்எஸ்களாக உலா வந்தன. “”மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த அந்த ரசாயனம் உற்பத்தி செய்யப் படுகிறது என்றால் நம்மு டைய நகரில் ஒரு அணுகுண்டு வைக்கப் பட்டது போலத்தான். அதன் பிறகு கியாமன் மக்கள் இரத்த புற்றுநோய் மற்றும் குறை பிரசவங்களால் அவதிப் பட வேண்டியதுதான்”. இது தான் அந்த எஸ்எம்எஸ் செய்தியின் வாசகம்.
இந்த எஸ்எம்எஸ்ஐ உருவாக்கியது யார்? அதனை முதலில் அனுப்பி வைத்தது யார்? என்றெல்லாம் தெரிய வில்லை. ஆனால், திடீரென்று பார்த் தால் இந்த எஸ்எம்எஸ் எல்லோரு டைய செல்போன்களிலும் மின்னிக் கொண்டிருந்தது.
இதை பார்த்து திடுக்கிட்டவர்கள் உடனடியாக தங்களுக்கு வேண்டிய வர்களுக்கு அனுப்பி வைத்தனர். இப்படியே எஸ்எம்எஸ் எங்கும் உலாவ ஒரு கட்டத்தில் பத்து லட்சத்தை தாண்டி விட்டது. நகரின் மொத்த மக்கள் தொகை 15 லட்சம். இந்நிலையில் 10 லட்சம் முறை இந்த எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அது நகரில் உள்ள பெரும்பாலானோர் இந்த செய்தியை படித்து நகருக்கு வர இருந்த ஆபத்தை அறிந்திருந்தனர். இந்த ஆபத்தை தடுக்க நினைத்த வர்கள் வீதியில் இறங்கி போராட வில்லை. ஆர்ப்பாட்டம் நடத்த வில்லை.” மற்றவர்களும் இந்த ஆபத்தை உணரட்டும் என செய்தியை அனுப்பி வைத்தனர். விளைவு, ஒரு மாபெரும் போராட்டத்துக்கு பின் உண்டாகக்கூடிய விழிப்புணர்ச்சி மக்களிடம் வந்திருந்தது.
இதனிடையே, பிலாக் தளங்கள் சில வற்றில் இந்த செய்தி குறிப்பிடப் பட்டுள்ளன. போராட தயக்கமாக இருந்தால் நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் நண்பர்களிடம் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள் போதும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அனைவரும் அதைதான் செய்தனர். விளைவு நகர மக்களின் மனநிலை ஆலை க்கு எதிராக இருக்கிறது என்னும் செய்தி அதிகாரிகளுக்கு புரிந்து விட்டது. இந்த நிலையில் ஆலை அமைக்கும் பணியில் ஈடு படுவது சரியல்ல என்று, தற்காலிகமாக திட்டத்தை தள்ளிப் போடவதாக அறிவித்துவிட்டனர்.
இன்டெர்நெட் ஒரு போராட்ட ஆயுதமாக பயன்படுத்தப் படுவதை உணர்ந்துள்ள சீன அரசு,எதிர்ப்பாளர் கள் மற்றும் அதிருப்தியாளர்களின் இணையதளங்களை கண்காணித்து எதிர்மறையான கருத்துக்கள் பரவுவதை கட்டுப்படுத்தி வருகிறது. ஆனால். செல்போன் விஷயத்தில் இப்படி கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்க வில்லை. எல்லோரிடமும் செல்போன் இருப்பதும், எஸ்எம்எஸ் செய்திகளை கண்காணிப்பதும் கஷ்டம். என்றாலும், செல்போன் துணையோடு நடத்தப்படும் போராட்டம் சீன அரசின் இரும்புக் கரத்தில் சிக்காமல் தப்பி பிழைத்து வெற்றியும் பெற்றிருக்கிறது.
————–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.