சிந்தனைகளுக்கான டிவிட்டர்.

நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல விருப்பம் இருந்தால் யீடி இணையதளத்தின் பக்கம் போய் பார்க்கலாம்.

ஆனால் இந்த‌ இணைய‌தளத்தை பார்த்ததுமே டிவிட்டர் போலவே இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.காரணம் தோற்றத்திலும் சரி செய்லபாட்டிலும் சரி டிவிட்டர் போலவே தான் இருக்கிறது.

டிவிட்டரில் எப்படி,இப்போது என்ன நிகழ்கிறது என்பதை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறதோ அதே போல யீடி இப்போது என்ன நினைக்கிறோம் என்னும் எண்ணத்தை வெளியிட உதவுகிறது.

மனதில் உள்ள எண்ணம் எதுவாக இருந்தாலும் சரி அதனை இந்த தளத்தின் மூலம் வெளியிடலாம்.நான் என்ன நினைக்கிறேன் என்றால் என்னும் சொற்றொடரின் கீழே உள்ளத்தில் தோன்றுவதை 160 எழுத்துக்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் யார் என்பதை தெரிவித்தும் இதனை பகிர்ந்து கொள்ளலாம்.அல்லது உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமலேயே பகிர்ந்து கொள்ளலாம்.யார் என்பதை சொல்ல விரும்பினால் இந்த கருத்தை அப்படியே டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

உலக‌மே சுயநலம் கொண்டதாக இருக்கிறது என்றோ,அல்லது வாழ்க்கையில் முன்னேற கடினமாக உழைக்க வேண்டும் என்றோ மனதில் தோன்றும் எண்ணம் எதுவாக இருந்தாலும் இங்கே இடமுண்டு.

அவை நீங்கள் நம்பும் வாழ்க்கை தத்துவமாக இருக்கலாம்.பட்டறிவின் பலனாக‌ தெரிந்து கொண்டதாக இருக்கலாம்.உங்களை கவர்ந்த பொன்மொழியாக இருக்கலாம்.ஏன் வேதனை அல்லது விரக்தியின் வெளிப்பாடாக இருக்கலாம்.

உங்கள் எண்ணம் எதுவாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்தி கொள்ளலாம்.

எண்ணத்தை வெளிப்படுத்திய பிறகு அதற்கான விளக்கத்தையும் அளிக்கலாம்.ஆனால் இது கூடுதல் வசதி தான் கட்டாயமில்லை.சிந்தனைக்கான காரணங்களை அல்லது நியாயங்களையோ எடுத்து சொல்ல நினைத்தால் இவ்வாறு விளக்கம் தரலாம்.

அதன் பிறகு உங்கள் சிந்தனையும் இந்த தளத்தில் வந்துவிடும்.எல்லா எண்ணங்களைக்குமே மற்றவர்கள் கருத்து தெரிவிக்கும் வசதி இருக்கிற‌து.ஆக உங்கள் சிந்தனையை யாரோ ஆமோதிக்கவோ எதிர்க்கவோ வாய்ப்புண்டு.இது விவாத‌மாகவோ உரையாடலாகவோ மாறலாம்.

எல்லாம் சரி,மனதில் உள்ளதை ப‌கிர்ந்து கொள்ள விரும்பினால் டிவிட்டர் அல்லது பேஸ்புக்கிலேயே அதனை செய்யலாமே,இது போன்ற தளங்கள் தனியே தேவையா என்று கேட்கலாம்.

உண்மை தான்.ஆனால் இந்த தளத்தை எண்ணங்களுக்கான டிவிட்டர் என்று வைத்து கொள்ளலாம்.அதாவது மனதில் உள்ள என்ணங்களை மட்டும் பகிர்ந்து கொள்வதற்கான தளமாக கொள்ளலாம்.

ஒருவிதத்தில் கொஞ்சம் டிவிட்டர் கொஞ்சம் வலைப்பதிவின் கலைவை என்றும் சொல்லலாம்.டிவிட்டர் போல எண்ணத்தை பகிர்ந்து கொண்டு வகைப்பதிவு போல அதற்கான விளக்கத்தையும் அளிக்கலாம்.ஆனால் என்ன டிவிட்டர் அல்லது வலைப்பதிவில் முதலில் நமக்கான முகவரி கணக்கை துவக்கி கொள்ள வேண்டும்.அதனை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

ஆனால் ‘யீடி’யிலோ நினைப்பதை மட்டும் சொல்லிவிட்டு வேறு வேலை பார்க்கலாம்.நிரந்தர உறுப்பினர் பக்கம் எதுவும் தேவையில்லை.அதாவது சொலவதற்கு ஏதோ ஒன்று மனதில் இருக்கிறது,ஆனால் அதற்காக வலைப்பதிவை துவக்கி நடத்த விரும்பாதவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.

எந்த அளவுக்கு இந்த தளம் பிரபலமாக கூடும் என்று தெரியவில்லை.ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறது.இணையத்தில் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கின்றனர் என்ற வியப்பையும் ஏற்படுத்துகிற‌து.

சில நேரங்கள் மற்றவர்களின் வாழ்கை அனுபவ வெளிப்பாட்டையோ அல்லது சிந்த‌னை கீற்றையோ இதில் தரிசிக்க நேரலாம்.

இணையதள முகவரி;http://www.yeedy.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சிந்தனைகளுக்கான டிவிட்டர்.

  1. டுவிட்டர் பற்றி ஒரு ஆராய்ச்சியே நடத்துறீங்க …………

    # # #
    # # #
    # # #
    ###### ###### ###### # #### # ## #####
    # # # # # ## # # # #
    # # # # # # # ### ####
    # # # # ## # # # # #
    ### # # #### # # # # ## #####

    Reply

Leave a Comment

Your email address will not be published.