Tagged by: world

ஆப்கான் பெண்கள் வண்ண ஆடைகளில் போஸ் கொடுப்பது ஏன்?

ஆப்கானிஸ்தான் மக்களின் நிலை பரிதாபமானது தான். அதைவிட அந்நாட்டு மகளிரின் நிலை இன்னும் மோசமானது. மத அடிப்படைவாதிகளாக அறியப்படும் தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமே ஆதிக்கம் செலுத்துகிறது. இடைப்பட்ட காலத்தில் பெண் கல்வி மற்றும் சுதந்திரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் எல்லாம் பின்னுக்குத்தள்ளப்படும் நிலையாக் ஆப்கான் பெண்கள் பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கின்றனர். இந்த பின்னணியில் அண்மையில் டிவிட்டரில் அலையென பகிரப்பட்ட ஆப்கான் பெண்களின் வண்ணமயமான படங்கள் உலகின் கவனத்தை […]

ஆப்கானிஸ்தான் மக்களின் நிலை பரிதாபமானது தான். அதைவிட அந்நாட்டு மகளிரின் நிலை இன்னும் மோசமானது. மத அடிப்படைவாதிகளாக அறியப...

Read More »

இணையம் கொண்டு வந்த பேராசிரியர்.

இணைய வரலாறு என்பது பொதுவாக அமெரிக்கா சார்ந்தே முன்வைக்கப்படுகிறது. இணையத்தின் துவக்கப்புள்ளியான அர்பாநெட்டில் துவங்கி,  இணைய வளர்ச்சியின் பெரும்பாலான மைல்கற்கள் அமெரிக்காவிலேயே நிகழ்ந்த நிலையில் இணைய வரலாற்றில் அமெரிக்க ஆதிக்கத்தை புரிந்து கொள்ளலாம் என்றாலும், இணைய வளர்சியை முழுமையாக புரிந்து கொள்ள , பிற நாடுகளின் பங்களிப்பை தெரிந்து கொள்வது அவசியம். அதே போல, ஒவ்வொரு நாடும் இணையத்தில் எப்படி இனைந்தன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஒவ்வொரு நாட்டிற்கும் இணையம் எப்படி வந்தது என்பதை […]

இணைய வரலாறு என்பது பொதுவாக அமெரிக்கா சார்ந்தே முன்வைக்கப்படுகிறது. இணையத்தின் துவக்கப்புள்ளியான அர்பாநெட்டில் துவங்கி, ...

Read More »

தானியங்கி கொரோனா தகவல் பக்கம்

கொரோனா காலத்தில் பிரபலமான இணையதளங்களில் வேர்ல்டோமீட்டர் (https://www.worldometers.info/) இணையதளமும் ஒன்று. பல்வேறு தலைப்புகளில் உலக நாடுகளின் புள்ளி விவரங்களை தொகுத்தளிக்கும் இந்த தளம், கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்த துவங்கிய காலத்தில், வைரஸ் பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை தொகுத்தளிப்பதற்கான தனிப்பக்கம் மூலம் பரவலாக அறியப்பட்டது. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, குறிப்பிட்ட நாடுகளில் தாக்கத்தின் விவரம் உள்ளிட்ட தகவல்களை அளித்த இந்த பக்கத்தை, ஊடகங்களும், தனிமனிதர்களும் ஆர்வத்துடன் பின்பற்றினர். இந்த தளத்தின் பின்னணி தொடர்பாக யாரும் பெரிதாக […]

கொரோனா காலத்தில் பிரபலமான இணையதளங்களில் வேர்ல்டோமீட்டர் (https://www.worldometers.info/) இணையதளமும் ஒன்று. பல்வேறு தலைப்...

Read More »

டெக் டிக்ஷனரி -16 பேஸ்புக் அபிஷியல் (“Facebook official”) – பேஸ்புக் அறிவிப்பு

எச்.பி.ஒ உங்களுக்குத்தெரிந்திருக்கலாம். (ஹோம் பாக்ஸ் ஆபிஸ் எனும் பிரபலமான அமெரிக்க சேனலில் சுருக்கம்). சரி, எப்.பி.ஒ தெரியுமா? எப்.பி.ஒ என்பது பேஸ்புக் அபிஷியல் என்பதன் சுருக்கம். தமிழில் பேஸ்புக் அதிகாரி என்றோ, அதிகாரபூர்வ பேஸ்புக் என்றோ பொருள் கொள்வதைவிட பேஸ்புக் அறிவிப்பு என கொள்வதே சரியாக இருக்கும். இதன் ஆங்கில விளக்கத்தை தெரிந்து கொண்டால் இதற்கான காரணம் புரியும். ஜோடியாகிறவர்கள் அல்லது தம்பதியாக போகிறவர்கள் தங்கள் உறவு நிலையை பேஸ்புக்கில் அறிவிப்பது பேஸ்புக் அறிவிப்பாக கொள்ளப்படுகிறது. அதாவது […]

எச்.பி.ஒ உங்களுக்குத்தெரிந்திருக்கலாம். (ஹோம் பாக்ஸ் ஆபிஸ் எனும் பிரபலமான அமெரிக்க சேனலில் சுருக்கம்). சரி, எப்.பி.ஒ தெர...

Read More »

விக்கிபீடியாவுக்காக புகைப்படம் எடுக்கலாம் வாருங்கள்!

இணையவாசிகள் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் நாமும் பங்களிப்பு செய்யலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புதிய கட்டுரையை எழுதி சமர்பிப்பதில் துவங்கி, ஏற்கனவே உள்ள கட்டுரையில் தகவல்களை சேர்ப்பது அல்லது திருத்துவதன் மூலம் உங்கள் பங்களிப்பை செலுத்தலாம். ஆங்கிலம் தவிர, தமிழிலும் பங்களிக்கலாம். ஆனால், விக்கியின் செயல்முறையை புரிந்து கொண்டு பங்களிப்பதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால் அல்லது விக்கிபீடியாவில் பங்களிக்க இன்னும் ஊக்கம் தேவைப்பட்டால், இப்போது அதற்கான மிக எளிய வழியை விக்கிமீடியா ( விக்கிபீடியாவின் […]

இணையவாசிகள் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் நாமும் பங்களிப்பு செய்யலாம் என்பதை நீங்கள் அறிந்த...

Read More »