இலக்குகளை அடைவதற்கு ஒரு இணையதளம்.

பிராத்தனைகளை வெளியே சொல்லகூடாது ,சொன்னால் நிறைவேறாமல் போய்விடலாம் என்பார்கள்.ஆனால் இலக்குகள் அப்படி அல்ல; மனதில் உள்ள இலக்குகளை வெளியே சொல்லலாம்.சொல்ல வேன்டும்.அப்போது தான் அவற்றை மறக்காமல் இருப்போம்.அது மட்டும் அல்ல அவற்றை செய்து முடிப்பதற்கான தூண்டுதலாகவும் அமையும்.

பகிர்ந்து கொள்வதன் மூலம் இலக்குகள் அடைவது சுலபமாகும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் ’43 திங்ஸ்’ இணையதளம் உங்களை அழைக்கிறது.இலக்குகளை அடைய உதவும் இணையதளங்களில் ஒன்றான இந்த தளம் இலக்குகளை உலகோடு பகிர்ந்து கொள்ளலாம்.அவற்றை செய்து முடிப்பதற்கான ஊக்கத்தையும் பெறலாம்.புதிய இலக்குகளை உருவாக்கி கொள்ளலாம்.இல்லக்குகள் மூலம் புதிய நட்பையும் பெறலாம்.

இலக்குகள் எளிதானதோ, கடினமானதோ,சாதரணமானதோ உயர்வானதோ அந்த இலக்குகளை அடைவதற்கான வழி எளிதானது என்பதை இந்த தளம் காட்டுகிறது.அதற்கேர்ப இந்த தளத்தின் வடிவமைப்பும் சரி அதனை பயன்படுத்துவதும் சரி மிகவும் எளிதானது.

மனதில் உள்ள இலக்குகளை அடைவதற்கான முதல் படி அவற்றை மறக்காமல் இருக்க குறித்து வைப்பது தான்.அடிப்படையில் இந்த தளம் அதனை தான் செய்கிறது.

எந்த இலக்கை அடைய விருப்பமோ அதனை இங்கு குறித்து வைக்கலாம்.முகப்பு பக்கத்திலேயே வரிசையாக உள்ள கட்டங்களில் இலக்குகளை குறிப்பிட வேண்டியது தான்.

இலக்குகளை குறித்து வைத்த பின் அவற்றை அச்சிட்டு வைத்து கொள்ளலாம்.அல்லது இமெயில் மூலம் நமக்கு நாமே அனுப்பி நினைவூட்டி கொள்ளலாம்.பேஸ்புக் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

அப்படியே உலகம் முழுவதும் உள்ள இலக்காளர்களோடு பகிர்ந்து கொள்லலாம்.இலக்காளர்கள் என்றால் உங்களை போலவே ஏதேனும் இலக்குகளை குறி வைத்துள்ள சக உறுப்பினர்கள்.நானும் உங்களை போல தான் என்று சொல்லி ஒத்த இலக்கோடு பயணிக்க காத்திருப்பவர்கள் .

இப்படி இலக்குகளை பகிர்ந்து கொள்வது தான் இந்த தளத்தின் சிறப்பம்சமே.

இந்த தளத்தில் இலக்குகளை சமர்பித்தது உறுப்பினரானதுமே உங்கள் இலக்குகளுக்கான பக்கம் ஒன்று உருவாக்கி தரப்படுகிறது.உங்கள் இலக்குகளை நிர்வகிப்பதற்கான பக்கம் இது.

முதல் வேலையாக உங்கள் இலக்கை பற்றி விரிவாக குறிப்பிட்டு கொள்ளலாம்.வலைப்பதிவு போல அதற்கு தலைப்பிட்டு ,அழுத்தம் தரவேண்டிய இடங்களில் கொட்டை எழுத்துக்களாக்குவது போன்றவற்றையும் மேற்கொள்ளலாம்.இப்படி விரிவாக இலக்கை விவரித்த பின் அதனை சேமித்து கொள்ளலாம்.

அதன் பிறகு இலக்கை நோக்கிய பயணத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை இதே போலாவே வெளியிட்டு கொள்ளலாம்.இலக்கை அடைந்துவிட்டால் வெற்றிகரமாக முடித்துவிட்டேன் என்று குறித்து வைத்து கொள்ளலாம்.

இலக்குகளை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.வலைப்பதிவு இருந்தால் அதிலும் பதிவிடலாம்.

உங்கள் இலக்கு எந்த வகையை சேர்ந்தது என அடையாளம் காட்டுவதற்காக அதனோடு பொருத்தமான குறிச்சொல்லையும் இணைக்கலாம்.இதன் மூலம் அதே போன்ற இலக்கை அடைய நினைப்பவர்கள் உங்களோடு தொடர்பு கொள்வதோ அல்லது ஏற்கனவே இலக்கை அடைந்தவர்கள் உங்களுக்கு ஆலோசனை சொல்லி ஊக்கம் தருவதோ சாத்தியமாகும்.

சொல்லப்போனால் நானும் அடைய நினைக்கிறேன்,நான் அடைந்து விட்டேன் ஆகிய இரண்டும் தான் இந்த தளத்தின் மந்திர வார்த்தைகள்.அதாவது உங்களுக்கான இலக்கை தீர்மானித்து கொண்டதுமே அதே இலக்கை அடைய நினைப்பவரை நீங்கள் தொடர்பு கொண்டு நானும் இதனை செய்ய நினைக்கிறேன் என தெரிவிக்கலாம்.அதே போல மற்ற உறுப்பினர்களும் உங்களை தொடர்பு கொண்டு நானும் என சேர்ந்து கொள்ளலாம்.அதன் பிறகு பரஸ்பரம் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளலாம்.

அதே போல் ஏற்கனவே சாதித்தவர்கள் நான் செய்து விட்டேன் என குறிப்பிட்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.இந்த பகிர்வு இலக்கை நோக்கி முன்னேறக்கூடிய ஊக்கத்தை தரும்.

எல்லா இலக்கு பக்கத்திலுமே எத்தனை பேர் அந்த இலக்கை கொண்டுள்ளனர்,அவர்கள் அதனை அடைய என்னவெல்லாம் செய்து வருகின்றனர் போன்ற விவரங்களை பார்க்க முடியும்.நீங்கள் நினைத்தால் நானும் செய்கிறேன் என இணைந்து கொள்ளலாம்.இதற்கான் பட்டனை கிளிக்கினால் போதும்.அல்லது கைத்தட்டி ஊக்கப்படுத்துவது போல் ஆதரவு தெரிவிக்கலாம்.

சக உறுப்பினர்களின் நாட்குறிப்புகள் பல நேரங்களில் நமக்கும் வழிகாட்டுவதாக அமையலாம்.உடனே இந்த உறுப்பினரை நேரடியாக தொடர்பு கொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

ஒன்று நமக்கான இலக்குகளை சமர்பித்து களத்தில் இறங்கலாம்.அல்லது இந்த தளத்தில் சமர்பிக்கப்பட்ட இலக்குகளை அலசி ஆராய்ந்து அதில் பிடித்தமானதை தேர்வு செய்து நாமும் இணைந்து கொள்ளலாம்.சக உறுப்பினர்களின் இலக்குகலை படிப்பது புதிய அனுபவமாக இருப்பதோடு சில நேரங்களில் புதிய வாயிலையும் திறக்க வைக்கும்.

ஒருவர் பின்பற்றக்கூடிய இலக்கு மற்றும் தொடர்புடைய பிற‌ பொருத்தமான இலக்குகளையும் இந்த தளமே உறுப்பினர்களுக்கு அடையாளம் காட்டுகிறது.

இலக்கை நோக்கி பயணிப்பதோடு அந்த பாதியில் தோழர்களையும் தேடிக்கொள்ள இந்த தளம் வழி செய்கிறது.

இதை தான் உங்கள் வாழ்க்கையை மாற்றி கொள்வடு கடினமானது.அதை தனியே செய்வது இன்னும் கடினமானது என்று சொல்லி உலகம் முழுவதும் உள்ள இலக்கை அடைய நினைப்பவர்களோடு கைகோர்த்து நீங்களும் முன்னேறுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது இந்த தளம்.

எடுத்த காரியம் நிறைவேற இதைவிட சுவாரஸ்யமான வழி இலை என்றே தோன்றுகிறது.

இனி இலக்கை அடைய இந்த முகவரி;http://www.43things.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இலக்குகளை அடைவதற்கு ஒரு இணையதளம்.

  1. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

    Reply

Leave a Comment

Your email address will not be published.