பாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும்.

இணையத்தில் பாட்டு கேட்கவும் பிடிக்கும் கேட்டு ரசிக்கும் பாடலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பிடிக்கும் என்றால் அதற்கேற்ற சேவையாக சாங்.லி தளத்தை சொல்லலாம்.

சாங்.லி தளத்தி எம்பி3 வடிவிலான எந்த பாட்டை சமர்பித்தாலும் அதற்கான இணைய முகவரியை உருவாக்கி தருகிறது.இந்த முகவரியை டிவிட்டர் குறும்பதிவாக நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த குறும்பதிவை காணும் நண்பர்கள் அந்த இணைப்பை கிளிக் செய்து பாடலை கேட்டு மகிழலாம்.பாடலை டவுண்லோடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆனால் ஒன்று பகிர்ந்து கொள்ளப்படும் பாடல் இணையத்தில் எங்காவது ஒரு தளத்தில் இருக்க வேண்டும்,அப்போது தான் அதனை கேட்க முடியும்.

இசை சார்ந்த சேவைகளில் எளிமையானது,சுவாரஸ்யமனது,பயனுள்ளதும் கூட!

இணையதள முகவரி;http://song.ly/#axzz1qr0f8mRy

0 thoughts on “பாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *