Tagged by: songs

சூரிய ஒளியை தோளில் சுமந்த பாடகர்!

ஜான் டென்வர் பெரிய பாடகராக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் எழுதிய ஒரு பாடலுக்காக விக்கிபீடியாவில் ஒரு பக்கம் இருக்குமா? ’என் தோளின் மீது சூரிய ஒளி’ எனும் பாடல் தான் அது. புகழ் பெற்ற பாடல் ஒன்றுக்காக என தனியே தகவல் பக்கத்தை உருவாக்கும் விக்கிபீடியா பங்கேற்பாளர்களை நினைத்து ஒரு பக்கம் வியக்கலாம் என்றால், மறுபக்கம் டென்வரின் இந்த பாடல் இணையத்தில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கும் விதம் இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கிறது. ’என் […]

ஜான் டென்வர் பெரிய பாடகராக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் எழுதிய ஒரு பாடலுக்காக விக்கிபீடியாவில் ஒரு பக்கம் இர...

Read More »

கொரோனா விழிப்புணர்வுக்கு வழிகாட்டும் இணையதளம்

கொரோனா வைரஸ் ( COVID-19 ) தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரம், அதன் அவசியத்தை மீறி, எந்த அளவு வெறுப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இடைவிடாமல் கேட்கும் இருமல் சத்தமும், போன் பேசுவதற்கு முன் நீளமாக தொடரும் வாசகங்களும், அதன் உச்சரிப்பும் எரிச்சல் தருவதாகவே இருக்கிறது என பலரும் புலம்புகின்றனர். இந்த பின்னணியில், கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செய்தியை எப்படி சுவாரஸ்யமாக, கச்சிதமாக சொல்லலாம் என்பதற்கான அருமையான உதாரணமாக […]

கொரோனா வைரஸ் ( COVID-19 ) தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரம், அதன்...

Read More »

இணையத்தை உலுக்கும் ‘கிகி’ சாலஞ்ச் பிரபலமானது ஏன்?

இணையம் முழுவதும் ‘கிகி’ சாலஞ்ச் நிகழ்வு பிரபலமானது எல்லாம் பழைய செய்தி. உலகம் முழுவதும் போக்குவரத்து காவல்துறைக்கு இந்த வைரல் போக்கு பெரும் தலைவலியாக மாறியிருப்பது தான், இப்போதைய புதிய செய்தி. அது மட்டும் அல்ல, உளவியல் வல்லுனர்களுக்கும் இந்த போக்கு வேலை கொடுத்து விளக்கம் அளிக்க வைத்திருக்கிறது. இணையத்தில் புழங்குபவர்களுக்கு கிகி சாலஞ்ச் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இணையத்தில் அதிக பரீட்சயம் இல்லாதவர்கள் கூட, ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகும் செய்திகளால் இந்த போக்கு குறித்து அறிந்திருக்கலாம். […]

இணையம் முழுவதும் ‘கிகி’ சாலஞ்ச் நிகழ்வு பிரபலமானது எல்லாம் பழைய செய்தி. உலகம் முழுவதும் போக்குவரத்து காவல்துறைக்கு இந்த...

Read More »

இளையராஜாவும் இசை தேடியந்திரங்களும்!

நான் தேடியந்திரங்களின் ரசிகன். அதிலும் குறிப்பாக இசை தேடியந்திரங்கள் மிகவும் பிடிக்கும். வரி வடிவங்களை தேடுவதை விட ஒலி காரணிகள் அடிப்படையில் இசைத்தேடலில் ஈடுபடுவது தொழில்நுட்ப சவால். அந்த வகையில் பல அருமையான தேடியந்திரங்கள் இருக்கின்றன. இவற்றில் பல காணாமல் போய் விட்டன. ஆனால் புதிதாகவும் பல உருவாக்கப்பட்டு வருகின்றன. இசை தேடியந்திரங்கள் பற்றி ஆர்வத்துடன் எழுதியும் வந்திருக்கிறேன். குறிப்பாக தமிழ் இந்து இணைய இதழில் எழுதிய தேடியந்திர தொடரில் இசை மயமான தேடியந்திரங்கள் பற்றி தனியே […]

நான் தேடியந்திரங்களின் ரசிகன். அதிலும் குறிப்பாக இசை தேடியந்திரங்கள் மிகவும் பிடிக்கும். வரி வடிவங்களை தேடுவதை விட ஒலி க...

Read More »

டிஜிட்டல் விடுதலை அளிக்கும் இசை சாதனம்

கட்டுரைக்குள் நுழைவதற்கு முன் ஒரு சிறு குறிப்பு. இந்த கட்டுரையில் விவரிக்கப்பட இருக்கும் இசை சாதனத்தை இந்தியர்கள் இப்போதைக்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த சாதனத்தை தருவித்துக்கொண்டாலும் அதன் ஆதாரமாக இருக்கும் இசை பாயும் சேவையான ஸ்பாட்டிபை இந்தியாவில் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிமுகமாகவில்லை என்பதால், அதை பயன்படுத்த முடியாது. அதனால் என்ன, சில சாதனங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றில்லை, அதன் கருத்தாக்கத்தை தெரிந்து கொண்டாலே அட, நன்றாக இருக்கிறதே என வியக்கத்தோன்றும். அப்படி வியந்து போவதற்காக […]

கட்டுரைக்குள் நுழைவதற்கு முன் ஒரு சிறு குறிப்பு. இந்த கட்டுரையில் விவரிக்கப்பட இருக்கும் இசை சாதனத்தை இந்தியர்கள் இப்போத...

Read More »