டிவிட்டர் தேடியந்திரம்

டிவிட்டர் பிரபலமாக துவங்கிய காலத்தில் டிவிட்டர் சார்ந்த தேடியந்திரங்கள் போட்டி போட்டுக்கொண்டி அறிமுகமாயின.டிவிட்டரின் உடனடி தன்மையை கருத்தில் கொண்டு இப்போதைய தகவல்களை தேடித்தருவதில் கவனம் செலுத்தும் வகையில் டிவிட்டர் தேடியந்திரங்கள் அறிமுகமாயின.இவற்றோடு ரியல் டைம் சர்ச் என்னும் கருத்தாக்கமும் பிறந்தது.

ரியல் டைம் சர்ச் கருத்தாக்கம் இன்னமும் இருக்கிறது.ஆனால் பல ரியல் டைம் தேடியந்திரங்கள் காணாமல் போய்விட்டன.

இன்னமும் தொடரும் டிவிட்டர் தேடியந்திரங்களில் டிவீட் ஸ்கேன் தேடியந்திரமும் ஒன்று.வடிவமைப்பை பொருத்தவரை கூகுல் போலவே இருக்கும் இந்த தேடியந்திரத்தில் டிவிட்டரில் வெளியாகும் குறும் பதிவுகளை தேடிப்பார்க்கலாம்.

டிவிட்டரில் எந்த தலைப்பு தொடர்பான விவரங்கள் தேவையோ அதற்கான குறிச்சொல்லை டைப் செய்தால் அந்த தலைப்பு தொடர்பான டிவிட்டர் குறும்பதிவுகள் பட்டியலிடப்படுகிறது.ஒரு தலைப்பு தொடர்பாக குறிப்பிட்ட டிவிட்டர் பயனாளியின் பதிவுகளையும் தேடலாம்.

இணையவாசிகளின் தேடலின் அடிப்படையில் பிரபலமான தேடல் பதங்களும் தொகுத்தளிக்கப்படுகின்றன.அவற்றையும் கிளிக் செய்து பார்க்கலாம்.

தேடியந்திர முகவரி;http://tweetscan.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டர் தேடியந்திரம்

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

    Reply

Leave a Comment

Your email address will not be published.