புதிய சேவை மார்கர்லி

மார்கர்லி புத்தம் புதிய தளமாக அறிமுகமாகியிருக்கிறது.ஆனால் அதன் சேவையில் எந்த புதுமையும் இருப்பதாக தெரியவில்லை.

இணையத்தில் பார்க்கும் கட்டுரைகளில் உங்களுக்கு பிடித்தமானதை மார்க் செய்து அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் கட்டுரைகளை புக்மார்க் செய்து கொள்வதன் மூலம் இதனை சாத்தியமாக்குகிறது.

அதாவது இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது ஏதாவது நல்ல கட்டுரை கண்ணில் பட்டால் அதனை அப்படியே புக்மார்க் செய்து கொள்ளலாம்.அந்த கட்டுரை அதன் தலைப்பு மற்றும் இணைப்புடன் சேமிக்கப்பட்டு விடும்.இப்படி புக்மார்க் செய்த கட்டுரைகளை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு கட்டுரை ஏற்கனவே சேமிக்கப்பட்டிருந்தால் அதனை மறுசேமிப்பு செய்து கொள்ளலாம்.

ஒரு விதத்தில் பார்த்தால் இது திரட்டிகளை போல தான்.இன்னொரு விதத்தில் பார்த்தால் இது புக்மார்கிங் சேவை போல தான்.

ஆனால் கட்டுரைகளுக்கான பின்ட்ரெஸ்ட் என்பது போன்ற அடைமொழியோடு இந்த தளம் அறிமுகமாகியுள்ளது.இன்னும் அறிமுக நிலையிலேயே தான் இருக்கிறது. அதிக உறுப்பினர்கள் சேரவில்லை.

ஏற்கனவே உள்ள சேவையை கொஞ்சம் மாற்றத்தோடு புதிய சேவை போல அறிமுகம் செய்திருக்கும் துணிச்சலையும் நம்பிக்கையையும் பாராட்டலாம்.

——-
http://markerly.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.