கண்களுக்கு ஓய்வு அளிக்க உதவும் இணையதள‌ம்.

கம்ப்யூட்டரையே பார்த்து கொண்டிருப்பவர்களே உங்கள் கொஞ்சம் கண்களையும் பார்த்து கொள்ளுங்கள் என்று கரிசனத்தோடு சொல்லும் எச்சரிக்கும் தளங்களில் ஐபிரேக் மிகவும் எளிதானது.அதே நேரத்தில் நெத்தியடியாக அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது.

ஓயாத கம்ப்யூட்டர் பயன்பாடு கண்களுக்கு அயர்ச்சியை கொடுக்க கூடியது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இடைவெளி இல்லாமல் கம்ப்யூட்டர் மானிட்டரையே பார்த்து கொண்டிருப்பதால் கண்களின் ஆரோக்கியம் பாதிக்கபடுகிறது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

ஏற்கனவே கண்களில் எரிச்சல்,தலைவலி போன்ற கஷ்டங்களை நீங்கள் அனுபவித்து வரலாம்.

எல்லாம் சரி தான் ஆனால் கம்ப்யூட்டரை பயன்பாட்டை கைவிட முடியாதே என்று நீங்கள் குறைப்பட்டு கொள்ளலாம்.

நவீன வாழ்க்கையில் கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க இயலாதது தான் என்றாலும் நீடித்த கம்யூட்டர் பயன்பாட்டால் கணகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தவிர்க்க கூடியதே!.

இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது இடையிடையே கண்களுக்கு தகுத்த ஓய்வு அளிப்பது தான்.அதாவது ஓயாமல் கம்ப்யூட்டர் திரையையே பார்த்து கொண்டிருக்காமல் நடுவே சிறிது நேரம் மானிட்டடரில் இருந்து கண் பார்வையை விலக்கி கண்களை வேறு திசையில் பார்த்தால் போதுமானது.

ஆனால் இதை மறக்காமல் செய்ய வேண்டும்.இப்படி மறக்காமல் இருக்க நினைவூட்ட உண்டாக்கப்பட்டுள்ள சேவை தான் ஐபிரேக் இணையதளம் .

உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவை என்று சொல்லும் இந்த தளம் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் குறைந்தது 20 நொடிகளாவ‌து 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருளை பாருங்கள் என்று இதற்கு வழிகாட்டவும் செய்கிறது.

இந்த‌ அறிவிப்பை அழகிய பின்னணிக்கி நடுவே முகப்பு பக்கத்தின் நடுவே கொண்டுள்ள இந்த தளம் அதன் அருகிலேயே அடுத்த ஓய்விற்கான நேரத்தை காட்டிக்கொண்டே இருக்கிறது.இந்த தளத்தை செயல்படுத்தி வைத்தால் சரியான நேரத்தில் கண்களுக்கு ஓய்வளிக்க நினைவூட்டுகிறது.

கம்ப்யூட்டரோடு கணகளையும் கவனியுங்கள்.

இணையதள முகவரி;http://www.eye-break.tk/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கண்களுக்கு ஓய்வு அளிக்க உதவும் இணையதள‌ம்.

  1. aha good idea we should do and follow

    Reply
    1. cybersimman

  2. meha nathan

    நண்பரே,தங்கள் இத்தகவல் மிகவும் உதவியாக உள்ளது,நன்றி..அன்புடன் மேகநாதன் ,திருப்பூர்..

    Reply
    1. cybersimman

Leave a Comment

Your email address will not be published.