சுட்டி விகடனில் எனது தொடர்!

நீங்களும் பிக்காசோவாகலாம்!.

சுட்டீஸ் பிக்கோசாவை உங்களுக்கு தெரியுமா?மிகப்பெரிய ஓவிய மேதை அவர்.மாடர்ன் ஆர்ட் என்னும் நவீன பாணி ஓவியத்தின் தந்தையாக பிக்காசோ கருதப்படுகிறார்.

ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிக்காசோ மாதிரி புகழ் பெற வேண்டும் என்பது தான் கனவாக இருக்கும்.பிக்காசோ பாணியில் வரைய வேண்டும் என்பதும் இளம் ஓவியர்களின் விருப்பமாக இருக்கும்.

நீங்க நினைச்சாலும் கூட பிக்காசோ மாதிரி வரையலாம் தெரியுமா?

ஆம் பிக்காசோஹெட் என்னும் இணையதளம் பிக்காசோ மாதிரியே வரைய வழி செய்கிறது.

இந்த இணையதளத்தில் நுழைந்ததுமே அழகான ஓவியங்களை பார்க்கலாம்.எல்லாமே உங்களை போன்றவர்கள் இந்த தளத்தில் வரைந்த ஓவியங்கள் தான்.அந்த ஓவியங்களை எல்லாம் பாருங்கள்.அதே போலவே நீங்களும் வரையலாம்.

மற்ற வரைவதற்கான தளங்கள் போல இதில் தூரிகை எல்லாம் கிடையாது.அதை விட சுலபமாக ஓவியத்திற்கான எல்லாமே இதில் கொடுக்கப்பட்டுள்ளது.ஆம் வரையவும் என்னும் பகுதியை கிளிக் செய்ததுமே வெள்ளை பலகை ஒன்று வந்து நிற்கும்.அதில் தான் நீங்கள் வரைய வேண்டும்.

அதன் இடது பக்கத்தில் சின்ன சின்ன முகங்களாக கொடுகப்பட்டிருக்கும்.அந்த முகங்களில் ஒன்றை அப்படியே இழுத்து சென்று பலகையில் வைத்து விடலாம்.அதன் பிறகு பார்த்தீர்கள் என்றால் முகங்களுக்கு அருகே வரிசையாக கண்,காது,மூக்கு,உதடுகள்,புருவம் போன்றவை இருக்கும்.அவற்றில் பிடித்தமானதை இழுத்து சென்று ஏற்கனவே உள்ள முகத்தில் பொருத்த வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் அழகான மனித முகத்தை உருவாக்கி விடலாம்.இந்த கண்,காது,மூக்கு எல்லாமே பிக்காசோ பணியிலானவை என்பதால் ஓவியமும் பிக்காசோ வரைந்தது போலவே இருக்கும்.

ஓவியத்தை இன்னும் மெருகேற்ற வேண்டுமா? அப்படியே கீழே பார்த்தீர்கள் என்றால் ஒவியத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான வசதிகள் இருப்பதை பார்க்கலாம்.கண்,காது,மூக்கு போன்றவற்றை திருப்பலாம்,பெரிதாக்கலாம்,மேலே கிழே மாற்றலாம்.வண்ணங்களையும் சேர்க்கலாம்.

வரைந்தது பிடிக்கவில்லை என்றால் எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் அழித்து விட்டு மீண்டும் புதிதாக வரையலாம்.

புதிதாக வரைந்து முடித்த பின் ஓவியத்தின் கீழ் உங்கள் பெயரையும் கையெழுத்தாக போட்டுக்கொள்ளலாம்.

இப்போது நீங்கள் வரைந்த ஓவியம் இந்த தளத்தில் உள்ள ஓவிய கேலரியில் இடம் பெற்று விடும்.ஆக தளத்திற்கு வரும் மற்றவர்கள் உங்கள் ஓவியத்தையும் பார்த்து ரசிப்பார்கள்.

அது மட்டும் அல்ல நீங்கள் வரைந்த ஓவியத்தை இமெயில் மூலம் பிரன்ட்சுக்கு அனுப்பி வைக்கலாம்.பேஸ்புக் பக்கம் இருந்தால் அதிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

இது தான் பிக்காசோ போல வரைவதற்கான இணைய முகவரி;http://www.picassohead.com/

எல்லாம் சரி சுட்டீஸ் பிக்காசோ ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்.அவர் தேர்ந்த ஓவிய மட்டும் இல்லை;சிற்ப கலைஞ‌ரும் கூட.சின்ன வயதிலேயே அவருக்கு ஓவிய கலையில் ஆர்வம் வந்து விட்டது.

பிக்காசோ பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலோ அவர் வரைந்த அற்புத ஓவியங்களை பார்க்க நினைத்தாலோ இந்த இணையதளத்தை போய் பாருங்கள்;http://www.pablopicasso.org/
——————

சுட்டி விகடனில் வெளியாக துவங்கியிருக்கும் எனது தொடரின் முதல் பகுதி இது.சிறுவர்களுக்காக தனியே எழுத வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.இந்த அறிய வாய்ப்பை அளித்த சுட்டி விகடன் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சுட்டி விகடனில் எனது தொடர்!

  1. வாழ்த்துக்கள். மிகுந்த மகிழ்ச்சி. இது உங்களது திறமைக்கான அங்கீகாரம். சுட்டிகளுக்கு சிறந்த தளங்களை அறிமுகம் செய்யுங்கள். குழந்தைகளுக்காக எழுதுவது என்பதே மகிழ்ச்சி தான். அதுவும் விகடன் குழுமத்தில் என்றால் கேட்கவா வேண்டும்.

    உங்களுக்கான அரிய வாய்ப்பு என்பதை விட, இப்பணியைச் செய்ய மிகச் சரியான நபரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது, தொடர் வெற்றி பெறவும், சுட்டிகளிடையே நல்ல வரவேற்பு பெறவும் எனது வாழத்துக்கள்.

    Reply
    1. cybersimman

      என் மீது இத்தனை நம்பிக்கையா?மிகுந்த மகிழ்ச்சி நண்பரே.

      அன்புடன் சிம்மன்.

      Reply
  2. பிஞ்சுகளின் உள்ளத்தில் நல்ல எண்ணங்களை வலுப்படுத்துவதற்கு, உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்புக்கு நல்வாழ்த்துக்கள்.

    Reply
    1. cybersimman

      மிகுந்த நன்றி நண்பரே.

      அன்புடன் சிம்மன்.

      Reply
  3. இணைய உலகில் உங்களுக்கென்று ஒரு உன்னதமான இடம் கிடைத்திருப்பதைப் போல சுட்டி விகடன் மூலம் பத்திரிகை உலகில் – அதுவும் குழந்தைகளின் உலகில் உங்கள் முத்திரையைப் பிடிக்க கிடைத்துள்ள வாய்ப்பு இது.

    அளவு கடந்த மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

    Reply
    1. cybersimman

Leave a Comment

Your email address will not be published.