உலக அதிசயங்களை காண கூகுல் வசதி

அருங்காட்சியகங்களை மட்டும் அல்ல உலக அதிசயங்களையும் சரித்திர நினைவு சின்னங்களையும் கூகுல் மூலம் கண்டு களிக்கலாம்.அவற்றின் எழிலையும் ,வரலாற்று மேன்மையும் அனுபவித்து மகிழலாம்.எல்லாம் உங்கள் வீட்டில் இருந்தபடியே.

உலக அதிசயங்கள் (வேர்ல்டு வொன்டர்ஸ்) என்னும் பெயரிலான இந்த வசதி கூகுல் ஆர்ட் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான இணையதளத்தில் உலகின் 18 நாடுகளை சேர்ந்த 132 சரித்திர நினவு சின்னங்களை கண்டு களிக்கலாம்.இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன் ஹென்ஜ்,ஆஸ்திரேலியவைல் உள்ள ஷார்க் பே,ஜப்பானில் உள்ள கயோட்டா கோயில்கள் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கண்டு மகிழலாம்.

கண்டு மகிழலாம் என்றால் நேரில் பார்ப்பது போலவே அந்த இடங்களை எல்லாம் அவற்றின் நுணுக்கங்களோடு பார்த்து ரசிக்கலாம்.காட்சிகள் மிக துல்லியமாக இருப்பதோடு அவற்றில் மவுசால் கிளிக் செய்து காட்சியை இஷ்டத்திற்கு நகர்த்தி எந்த கோணத்தில் வேண்டுமானால் பார்க்க முடியும் என்பது தான்.

சொல்லப்போனால் நேரில் பார்க்கும் போது கூட இத்தனை துல்லியமாக பார்க்க முடியாது என்று சொல்லகூடிய வகையில் முழுமையான மெய்நிகர் (வர்ச்சுவல்)அனுபவத்தை இந்த காட்சிகள் வழங்குகின்றன.

யுனெஸ்கோ போன்ற சரவ்தேச அமைப்புகளோடு இணைந்து இப்படி உலக அதிசயங்களை கூகுல் உங்கள் கம்ப்யூட்டருக்குள்ளேயே கொண்டு வந்துள்ளது.

இவற்றை படமாக்க கூகுல் ஊழியர்கள் ரொம்பவே மெனக்கெட்டுள்ளனர்.ஒரு முறை விஜயம் செய்து பார்த்தீர்கள் என்றால் அதன் அருமை புரியும்.

உலக அதிசயங்களை காண;http://www.google.com/culturalinstitute/worldwonders/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

One Comment on “உலக அதிசயங்களை காண கூகுல் வசதி

  1. அன்பின் சிம்மன் – தகவல் அருமை – சென்று பார்த்தேன் – மகிழ்ந்தேன் – தகவலுக்கு நன்றி சிம்மன் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply

Leave a Comment to Cheena ( சீனா ) Cancel Reply

Your email address will not be published.