டிவிட்டர் மூலம் திட்டமிட உதவும் இணையதளம்.

app-play-button
‘பல்லும் இருந்து பசியும் எடுப்பதால் சீப்பு என் முடியை தின்கிறது’ என்னும் கவிஞர் கலாப்பிரியாவின் அழகான கவிதையை போல உங்களுக்கு டிவிட்டரிலும் நாட்டம் இருந்து திட்டமிடுதலிலும் ஆர்வம் இருந்தால் எதையும் அழகாக திட்டமிட்டு மேற்கொள்வதற்கான வழியை டுடுடிவீட் இணையதளம் காட்டுகிறது.

இணையத்தில் செய்து முடிக்க விரும்பும் செயல்களை குறித்து வைத்து கொள்ள உதவும் தளங்கள் அநேகம் இருக்கின்றன.இந்த வகை தளங்களில் குறும்பதிவு சேவையான டிவிட்டரின் ஆற்றலை சரியாக பயன்படுத்தி கொள்ளக்கூடியதாக டுடுடிவீட் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை பயன்படுத்துவது மூலமாக டிவிட்டர் வழியே உங்கள் வாழ்க்கையை திட்டமிட்டுக்கொள்ளலாம்.அதாவது செய்ய வேண்டிய செயல்களை டிவிட்டர் மூலம் உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக்கொள்ளலாம்!.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ ,எதை மறக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவற்றை எல்லாம் டிவிட்டரில் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொள்ள வேண்டியது தான்.

இவை எல்லாம் செயற்கறிய செயல்களாக தான் இருக்க வேண்டும் என்றில்லை.இன்று செல்போன் பில் கட்ட வேண்டும் என்பதில் துவங்கி புதிய புத்தகத்தை படித்து முடிக்க வேண்டும்,யோகா செய்ய வேண்டும்,சிகிரெட் பிடிக்காமல் இருக்க வேண்டும்,மளிகை சாமான வாங்க வேண்டும் என்று எந்த வகையான செயல்களையும் டிவிட்டரில் வெளியிடலாம்.

இத்தகைய குறும்பதிவுகளோடு டுடு என்னும் ஆங்கில சொற்களை ஹாஷ்டேகாக சேர்த்து வெளியிட வேண்டும்.

இவ்வாறு வெளியாகும் குறும்பதிவுகளை டுடுடிவீட் தளம் தனியாக பிரித்து உங்களுக்கான பக்கத்தில் சேமித்து வைக்கும்.

எப்போது தேவையோ அப்போது இந்த பக்கத்தை பார்த்தால் என்ன வேலைகளை செய்ய வேண்டும்,எவை செய்து முடிக்கப்படாமல் இருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

திட்டமிட உதவுவதற்கான நினிவூட்டல் தளம் தான் என்றாலும் இதற்கென தனியே நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை.செய்ய நினைப்பவற்றை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டால் போதுமானது.

குறும்பதிவுகளில் ‘டுடு’சொற்களை சேர்ப்பதோடு அந்த செயல் தொடர்பான குறிச்சொற்களையும் சேர்த்து கொண்டால் அந்த சொற்கள் தொடர்பான செயல்களை எல்லாம் தனியே பிரித்து வகைப்படுத்தியும் தருகிறது இந்த தளம்.உதாரணத்திற்கு உடற்பயிற்சி என்றோ அலுவல் என்றோ குறிப்பிட்டுக்கொள்ளலாம்.

எப்போதும் டிவிட்டரே கதி என இருப்பவர்கள் இந்த தளம் மூலம் டிவிட்டர் வழியே தங்கள் வாழ்க்கையை திட்டமிட்டு கொண்டு செய்ய வேண்டியவற்றை செய்து முடித்து முன்னேறலாம்.

இதை டிவிட்டரிலேயே செய்து கொள்ளலாமோ இதற்கு தனியே ஒரு இணையதளம் தேவையா என்று கேட்கலாம்.ஆனால் டிவிட்டரில் குறும்பதிவுகளை தொடர்ந்து வெளியிடும் போது நினைவூட்டல் பதிவுகள் அவற்றில் பின்னுக்குத்தள்ளப்பட்டு மறைந்துவிடலாம்.

ஆனால் டுடுடிவீட் தளமோ அழகாக அத்தகைய குறும்பதிவுகள் கண்டு கொண்டு தொகுத்தளிக்கிறது.

இணைதள முகவரி;http://todotweet.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *