இனி தேவை இணைய கட்டுப்பாடு.

WasteNoTime3-TimeTracker-small>இணையத்தை பயன்படுத்தாமல் இருப்பது சாத்தியமில்லை. சிலருக்கு வேலைக்காக இணையத்தை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கலாம்.சிலருக்கு இணையத்தை பயன்படுத்துவதே வேலையாக இருக்கலாம்.

இணைய பயன்பாடு கைமேல் பலனும் தரலாம்.அதே நேரத்தில் நேரத்தை வீணடிக்கவும் செய்யலாம். சொல்லப்போனால் இணைய பயன்பாட்டையும் ,இணையத்தில் நேரத்தை வீணடிப்பதையும் பிரிப்பது கண்ணுக்கு தெரியாத கோடு தான்.

இணைய பயன்பாட்டில் இந்த கோட்டை கடக்கும் போது நேரம் விரயமாகத்துவங்கி விடுகிற‌து.உதாரணத்திற்கு வேலைக்கு களைப்பு தட்டுகிறதா? 5 நிமிடம் யூடியூப் வீடியோ பார்க்கலாம்.அதன பிறகு புத்துணர்ச்சியோடு வேலையில் கவனம் செலுத்தலாம் .ஆனால் வீடியோ மாற்றி வீடியோவாக கிளிக் செய்து கொண்டே இருந்தால் நேரம் வீணாவதை தவிர்க்க முடியாது.

இதே போல தான் பேஸ்புக் பயன்பாடும். நண்பர்களுடன் டச்சில் இருப்பதற்காக பேஸ்புக்கில் அவப்போது எட்டிப்பார்க்கலாம்.ஆனால் பேஸ்புக்கே கதியென இருந்தால் உங்கள் நேரம் உங்கள் கையில் இல்லை. இப்படி எத்தனையோ வழிகளில் இணையத்தில் நேரம் விரய‌மாக கொண்டு தான் இருக்கிறது.

இதை தடுக்க வேண்டும்.இணைய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என நினைத்தால் அதற்கான எளிய வழி இருக்கிறது.வேஸ்ட் நோ டைம் என்னும் செயலி தான் அந்த வழி.உங்கள் இணைய பயன்பாட்டை கண்காணித்து நேரத்தை வீண்டிக்கும் இணையதளங்களை அடையாளம் காட்டுகிறது இந்த செயலி.’

பிரவுசருக்கான நீட்சியாக கிடைக்கும் இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்டால் போதும்  செயல்பாட்டை கண்காணித்து உங்களை எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கும்.

இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பத்து இணையதளங்களை நீங்கள் அறிந்திருக்கலாம்.ஆனால் நீங்கள் அதிக பயன்படுத்தும் பத்து தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த செயலி அந்த பட்டியலை தயார் செய்து தருகிறது.நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் பத்து தளங்களை பட்டியலிட்டு தருவதோடு அவற்றில் செலவிடும் நேரத்தையும் தெரிவிக்கிறது.தினசரி அடிப்படையில் அல்லது வார அடிப்படையில் இந்த புள்ளி விவரத்தை பெற்லாம்.இதை பார்த்தாலே எந்த தளத்தில் நீங்கள் அதிக நேரத்தை செலவிடுகிறீர்கள் அது தேவையா என தீர்மானித்துக்கொள்ளலாம்.

அதிகமாக நேரத்தை குடிக்கும் இணையதளஙக்ளை அறிந்து கொண்ட பின அதற்கு தீர்வு காணவும் செயலி வழிகாட்டுகிறது.முதல் கட்டமாக , குறிப்பிட்ட நேரத்திற்கு இணையம் பக்கமே போகக்கூடாது என்று ஒரு வரையரை வைத்துக்கொண்டு அந்த நேரத்தில் இணைய இனைப்பை துண்டிக்கும் படி செய்து கொள்ளலாம்.

அதே போல பேஸ்புக் அல்லது ஜிமெயில் போன்ற நேரங்களில் குறிப்பிட்ட அளவு தான் நேரத்தை செலவிட வேண்டும் என்று கட்டுப்பாடு வைத்துக்கொள்ளலாம்.அதற்கான நேர கட்டுப்பாட்டையும் செயலியில் குறிப்பிடலாம்.அந்த நேரம் முடிந்தவுடன் குறிப்பிட்ட அந்த தளம் உங்களுக்கு முடக்கப்பட்டு விடும்.

இதன் மூலம் பேஸ்புக்கிற்கு இன்று பத்து நிமிடம் தான் யூடியூப்பிற்கு பத்து நிமிடம் தான் என கட்டுப்பாடு வை

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இனி தேவை இணைய கட்டுப்பாடு.

  1. அன்பின் சைபர் சிம்மன் – இணையக் கட்டுப்பாடு தேவைதான் – கடைப்பிடிக்க முயல்வோம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply

Leave a Comment

Your email address will not be published.