சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்

aseepமழை பெய்யும் போது நனையும் செம்மறி ஆடு சுருங்குமா? செம்மறி ஆட்டில் இருந்து தான் குளிருக்கு இதமான கம்பளி ஆடைகள் தயாராகின்றன.கம்பளி ஆடையை தண்ணீரில் நனைக்கும் போது அது சுருங்கி விடுவதை பார்த்திருக்கலாம்.அப்படி என்றால் மழையில் நனையும் போது செம்மறி ஆடுகள் என்ன ஆகும்.சுருங்குமா?

சுவாரஸ்யமான கேள்வி தான்.சிந்திக்கவும் வைக்கும் கேள்வி.இதற்கான சரியான பதில்.மழையில் எந்த செம்மறி ஆடும் சுருங்குவதில்லை.காரணம் செம்மறி ஆட்டின் தோல் லனோலின் என்னும் பசை போன்ற பொருளை கொண்டிருக்கிறது.இந்த பசை மெழுகு போன்றது. எனவே செம்மறி ஆடு மழையில் நனையும் போது அதன் மீது நீர் ஓட்டமால் வழிந்து ஓடி விடும்.அதாவது இந்த மெழுகு ஆட்டில் மேல் பகுதில் உள்ள தோலுக்கு நீர் புகாதாத வாட்டர் ஃபுரூப் தன்மையை தருகிறது.

இதனால் தான் அடை மழை கொட்டினாலும் அதில் நனையும் ஆட்டின் தோல் சுருங்குவதில்லை.அப்படியென்றால் கம்பளி ஆடைகள் மட்டும் ஏன் தண்ணீரில் சுருங்கி விடுகின்றன.கம்பளி ஆடைகள் தயாரிக்கும் போது சுருளும் தன்மை கொண்ட தோல் நேராக்கப்படுகிறது. அவற்றை தண்ணீரில் நனைத்து துவைக்கும் போது,நீட்டிக்கொண்டிருக்கும் தோல் சுருண்டு விடுவதால் சுருங்கி விடுவது போன்ற தோற்றத்தை தருகிற‌து.

இந்த கேள்வி  போலவே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வியக்க வைக்கும் கேள்விகள் இன்னும் நிறைய இருக்கின்றன.

தண்ணீரில் நீந்தும் மீன்கள் தூங்குமா? ஆம், அன்றால் எப்போது எப்படி தூங்கும்?

இடி மின்னலோடு மழை பெய்யும் போது கடலில் மின்னல் தாக்கினால் மீன்களுக்கு ஷாக் அடிக்கும?

நாய்கள் ஏன் எப்போதும் நகரும் வாகனங்களை துரத்திச்செல்கின்றன.

இவை போன்ற கேள்விகள் உங்கள் மனதில் இருந்தால் அல்லது,இத்தகைய கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் டிட்யூவொன்டர்(http://www.didyouwonder.com/) இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழத்தி விடும்.காரணம் இந்த தளம் இது போல சுவாரஸ்ய‌மான கேள்விகளுக்கான பதில்களை தருகிறது.

 கேள்விகளுக்கான பதில்கள் இது வரை அறிந்திராத அறிவியல் பூர்வ‌மான உண்மையையும் உணர்த்துகின்றன‌.

வியக்க வைக்கும் கேள்விகளோடு வெங்காயம் வெட்டும் போது கண்களில் நீர் வருவது ஏன்?, சேவல் காலையில் கூவுவது ஏன்? போன்ற கேள்விகளுக்கான விஞ்ஞான விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.

கேள்வி பதில் மட்டும் அல்லாமல் வியக்க வைக்கும் உண்மைகள் போன்ற பகுதிகளும் இருக்கின்றன.

இந்த தளம் பிடித்திருந்தால் வைஸ்( http://www.whyzz.com/) தளமும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். டிட்யூவொன்டர் தளம் பெரியவர்களும் பயன்படுத்தக்கூடியது .வைஸ் தளம் சிறுவர்களை மையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த தளத்திலும் பெரியவர்களுக்கு தொட
ர்பு இருப்பது சுவாரஸ்யமான விஷயம்.அதாவது சிறுவர்கள் தங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க பெரியவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தள‌ம் இது.

பல நேரங்களில் சுட்டிஸ்களுக்கு விதவிதமான கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கும்.சுட்டிஸ் ஆர்வத்தோடு கேட்கும் இந்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது எனத்தெரியாமல் பெற்றோர்கள் திகைத்து நின்று விடுவார்கள்.

உதாரணத்திற்கு இடி இடிக்கும் போது காதை பிளக்கும் சத்தம் கேட்பது ஏன்? புயல் எங்கிருந்து வருகிறது? போன்ற கேள்விகளை சிறுவர்கள் ஆர்வத்தோடு பெரியவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.இப்படி கேட்கும் போதெல்லாம் அசடு வழியாமல் அல்லது உன‌க்கு வேறு வேலை இல்லை என்று அலுத்துக்கொள்ளாமல் பிள்ளைகளின் ஆர்வத்திற்கு ஈடு கொடுத்து கேள்விக்கான விளக்கத்தை சொல்லி அவர்களின் தெரிந்து கொள்ளும் ஈடுபாட்டை மேலும் வளர்க்க உதவும் வகையில் வளரும் பருவத்தில் எழக்கூடிய கேள்விகளுகான பதில்களை இந்த தளம் வழங்குகிறது.

ஆக பிள்ளைகளோடு சுவாரஸ்ய‌மான முறையில் தொடர்பு கொள்ள இந்த தளம் பெற்றோர்களுக்கு கைகொடுக்கும். இந்த தளத்தின் மூலம் பிள்ளைகளும் பெற்றோர்களும் பரஸ்பர‌ம் ஒரு உரையாடலை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இதே போல ஹைடெக் சயின்ஸ்( http://www.hightechscience.org/funfacts.ஹ்ட்ம்) தளத்திலும் சுவாரஸ்யமான அறிவியல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

ஃபேக்ட்மான்ஸ்டர் தளத்திலும் அறிவியல் தகவல்களை ஆர்வத்தோடு தெரிந்து கொள்ளலாம்.

சரி மேலே உதாரணமாக குறிப்பிடப்பட்ட கேள்விகளுக்கான பதில் அறிய ஆர்வமாக இருக்கிறதா? தண்ணீரில் மீன்கள் தூங்க்வே செய்கின்றன.அதாவது கண்களை திறந்து கொண்டே. ஆனால் மீன் தூக்கத்திற்கு பகல் இரவு எல்லாம் கிடையாது. கடலிலும் மின்னல் தாக்கினால் ஷாக் அடிக்கும். மீன்கள் ஆழத்தில் இருப்பதால் தப்பித்துக்கொள்கின்றன. சேவல் கூவுவது நாம் நினைப்பது போல மனிதர்களை எழுப்புவதற்காக அல்ல; கண் விழித்ததும் இது எங்க ஏரியா என போட்டி சேவலுக்கு எச்சரிக்கை செய்கிறது.

———–

நன்றி;சுட்டி விகடன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.