இது டிவிட்டர் பழிக்கு பழி!

உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள் என்றால் ட்விட்டரில் கோபத்தை வெளிப்படுத்துங்கள். நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ , நீங்களும் ட்விட்டர் நட்சத்திரமாகலாம். பிரிட்டனை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் இப்படி தான் ட்விட்டரில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி பரவலான ஆதரவையும் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இன்று அவர் பணியாளர்களுக்கு , குறிப்பாக சமையல் கலைஞர்களுக்கு ஏற்படும் அநீதிக்கு குரல் கொடுப்பவராக போற்றப்படுகிறார்.

ஜிம் நைட் எனும் அந்த இளம் சமையல் கலைஞர் பிரிட்டனில் உள்ள தி பிளஃப் பப் எனும் ரெஸ்டாரண்டில் தலைமை சமையல் கலைஞராக இருந்தார். கடந்த 15 ந் தேதி அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை கேட்டதற்காகவும்  அதை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமை பணியாற்ற மறுத்ததற்காகவும் அவர் மீது நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தலைமை சமையல் கலைஞர் பணியில் இருக்க வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால் ஜிம் நைட் கிறிஸ்துமஸ் பண்டிகையை தன் குடும்பத்துடன் கொண்டாடி விரும்பினார். இதனால் விடுமுறையில் பணியாற்ற முடியாது என மறுத்திருக்கிறார். வேலையில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.

நிறுவனங்களில் பணியாற்றும் பலருக்கு ஏற்படும் நிலை தான் இது. ஆனால் எதிர்ப்பையும் தெரிவித்து வேலையையும் இழந்து நின்றால் என்ன செய்வது ? தனிமையில் புலம்பலாம். நண்பர்களிடம் குமுறலை வெளிப்படுத்தலாம். வேறு என்ன செய்து விட முடியும்? ஜிம் நைட் தனக்கு ஏற்பட்டதாக கருதிய அநீதியை நினைத்து புலம்பிக்கொண்டிருக்கவில்லை. போர்க்கொடியும் தூக்கவில்லை .மாறாக தனது நிலையை ட்விட்டரில் வெளிப்படுத்தினார்.

அவர் பணியாற்றிய பிளஃப் பப்பிற்கு ட்விட்டர் பக்கம் இருக்கிறது. அந்த ட்விட்டர் பக்கத்தில் அவர் மனக்குமுறலை குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டார்.

’ எங்கள் சமையல் கலைஞரை வேலையில் இருந்து நீக்கிவிட்டோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்..’ இது தான் அவரது முதல் குறும்பதிவு. நைட் உண்மையில் புத்திசாலி தான். அதனால் தான் என்னை அநியாயமாக வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்பது போல குறும்பதிவு செய்யாமல் , நிறுவனமே அவரை நீக்கியது பற்றி அறிவிப்பது போல குறும்பதிவு செய்தார்.

இது எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக அமைந்தது என்று அடுத்த குறும்பதிவுகளை பார்த்தால் தெரியும். ’ துரதிர்ஷ்டவசமாக அவர் வார இறுதியில் விடுமுறை கேட்டார். குடும்பத்தை காரணம் காட்டி கிறிஸ்துமஸ் அன்று விடுமுறை கேட்டார் . அதனால் நீக்கி விட்டோம்’. இது அடுத்த குறும்பதிவு. ’ஆம், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்னதாக இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.’’ அவருக்கு 7.5  மாத குழந்தை இருந்தால் எங்களுக்கு என்ன ?’ இப்படி அடுத்த இரண்டு குறும்பதிவுகளில் நிறுவனம் தெரிவிப்பது போலவே தனக்கு ஏற்பட்ட நிலையை அவர் உணர்த்திவிட்டார். கடைசி குறு

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.