பிலிக்கர் புகைப்பட சேவையை சிறப்பாக பயன்படுத்த உதவும் இணையதளங்கள்.

fliபிக்காசா, இன்ஸ்டாகிராம் போன்ற புகைப்பட சேவைகளின் வருகையையால் பிலிக்கர் சேவை கொஞ்சம் பளபளப்பு குறைந்து விட்டதாக தோன்றினாலும் இதன் பயன்பாட்டுத்தன்மையை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் மத்தியிலும் சரி, அமெச்சூர் ஒளிப்பட கலைஞர்கள் மத்திலும் சரி பிலிக்கர் தான் இன்னும் செல்வாக்கு பெற்றிருக்கிறது. அதோடு பிலிக்கர் சமீப காலங்களாக புதிய வசதிகளையும் அறிமுகம் செய்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் புகைப்படங்களை சேமிப்பதற்கான இட வசதியையும் வாரி வழங்கியிருக்கிறது. எனவே பிலிக்கருக்கு நிகரில்லை என்றே சொல்ல வேண்டும். பிலிக்கர் புகைப்பட சேவையை மேலும் சிறப்பாக பயன்படுத்த உதவக்கூடிய இணையதளங்களும் இருக்கின்றன. பிலிக்கர் அனுபவத்தை மேம்படுத்தும் பிலிக்கர் சார்ந்த சில முக்கிய சேவைகள் இதோ;

பிலிக்கர் தேடியந்திரம்

பிலிக்கர் சேவையில் வெளியாகும் புகைப்படங்களை தேட பல வழி இருக்கிறது. பிலிக்கர் தளத்திலேயே கூட இதற்கான வசதி இருக்கிறது. என்றாலும் கூட பிலிக்கர் பிரியர்கள் ரிட்ரிவர் ( http://labs.systemone.at/retrievr/) தேடியந்திரத்தை நிச்சயம் விரும்புவார்கள். ஏனெனில் இந்த தேடியந்திரம் தேவையான புகைப்படங்களை வரைந்து காட்டி தேட உதவுகிறது. இந்த தளத்தின் இடது பக்கத்தில் உள்ள கட்டத்தில் , காகிதத்தில் வரைவது போல வரைந்து காட்டினால் தொடர்புடைய புகைப்படங்களை அடையாளம் காட்டுகிறது. நாம் வரைந்து காட்டுவதற்கு ஏற்ப பொருத்தமான புகைப்படங்கள் காட்டப்படுவதை பார்த்தால் வியப்பாக தான் இருக்கிறது. அதே போல் நம்மிடம் உள்ள புகைப்படத்தை இதில் பதிவேற்றி அதே போன்ற புகைபடங்களையும் தேடலாம். சோதனை முறையில் செயல்படுத்தப்படும் தேடியந்திரம் , எனவே அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த எச்சரிக்கையை மீறி முதல் முறை பயன்படுத்தும் எவரையும் வியப்பில் ஆழ்த்திவிடக்கூடும்.

சிறந்த படங்களை காண’

பிலிக்கரில் வெளியாகும் ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் அருமையான படங்களை கண்டு ரசிக்க வழி செய்கிறது லவர்லி.காம் (http://www.lurvely.com/ ) இணையதளம். இதன் முகப்பு பக்கத்திலேயே பிலிக்கர் பயனாளிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். செய்திப்படங்கள், பிரபலமான புகைப்படங்கள், பரிந்துரைக்கப்பட்ட புகைப்படங்கள் என பலவகையான தலைப்புகளில் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. புகைப்பட கலைஞர்களின் படங்கள் மற்றும் குறிப்பிட்ட இருப்பிடம் சார்ந்த புகைபப்டங்களையும் காணலாம். பிலிக்கரில் உங்களுக்கு உறுப்பினர் கணக்கு இருந்தால் அதை குறிப்பிட்டு நீங்கள் விரும்பிய புகைப்படங்கள் போன்றவற்றையும் பார்த்து ரசிக்கலாம். பிலிக்கரில் வெளியாகும் சிறந்த புகைப்படங்களை எளிதாக பார்த்து ரசிப்பதற்கான இணையதளம் என்று இந்த சேவை தன்னை வர்ணித்துக்கொள்கிறது.

புகைப்படங்களை பதிவேற்ற!

பிலிக்கர் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த இடம் மட்டும் அல்ல, புகைப்படங்களை சேமித்து வைப்பதற்காகவும் இதை பயன்படுத்தலாம்.உங்களிம் நிறைய புகைப்படங்கள் இருந்து அவற்றை பிலிக்கரில் பதிவேற்ற விரும்பினால் அதற்கு உதவுவதற்காக என்றே ஜப்லோடர் ( http://juploadr.sourceforge.net/ சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் புகைப்படங்களை பிலிக்கருக்கு எளிதாக் கொண்டு செல்லலாம். இதற்கான மென்பொருளை டவுண்லோடு செய்து கொண்டால் போதும்.

புகைப்படங்களை அழகாக்க

பிலிக்கரில் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்களை திருத்தி மேம்படுத்தி பகிர
்ந்து கொள்ள உதவுகிறது பிர்லோடர் இணையதளம் (http://www.preloadr.com/ ) .இதற்கென தனியே உறுப்பினர் கணக்கு தேவையில்லை.எதையும் டவுண்லோடு செய்யவும் வேண்டாம். பிலிக்கர் கணக்கு மூலமே இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். பதிவேற்றப்படும் புகைப்படங்கள் திருத்தப்பட்டு வண்ணங்கள் சரி செய்யப்பட்டு பதிவேற்றப்படுகின்றன. புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் இருப்பது போல பில்டர்க்ளையும் பொருத்தலாம். எளிமையான சேவை.ஆனால் மிகவும் பயனுள்ளது.

இதே போல பிலிக்கர் காம்ன்ஸ்( https://www.flickr.com/commons) மூலம்
குறிப்பிட்ட பகுதியில் எடுக்கப்பட்ட வரலாற்று புகைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். இது பிலிக்கர் தளமே தரும் அருமையான வசதி. சரித்திர பொக்கிஷங்களை க்ண்டு கொள்ள இந்த வசதி உதவும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *