கிரவுட்பண்டிங் மூலம் உருவாகும் உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி!

கத்தான முயற்சி அது. முடிவடையும் போது பிரம்மாண்டமாகவும் இருக்கும். பிரமிக்கவும் வைக்கும். உலகின் மிகப்பெரிய தேசியக்கொடியை உருவாக்குவதற்கான திட்டமாக தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முயற்சியில் உலக நாடுகளை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். ஆம் , இந்த பிரம்மாண்ட கொடி கிரவுட்பண்டிங் முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தேசியக்கொடி நிறைவடையும் போது விண்வெளியில் இருந்து பார்த்தாலே தெரியக்கூடிய அளவுக்கு மெகா அளவில் இருக்கும். பிரம்மாண்டம் மட்டும் அல்ல அந்த கொடியின் சிறப்பம்சம்.

வறட்சிக்கும், வறுமைக்கும் அறியப்படும் பாலைவனப்பகுதியில் வேலைவாய்ப்புக்கு வித்திடும் திட்டமாகவும் , சுற்றுச்சூழலுக்கு நலன் பயக்கும் பசுமை திட்டமாகும் அமையும். தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையிலும் இந்த கொடி அமைந்திருக்கும். முற்றிலும் செடிகளால் அமைய இருக்கும் பசுமையான தேசியக்கொடி இது. ஆம், தென்னாப்பிரிக்காவின் தேசியக்கொடியை பிரதிபலிக்கும் வண்ணங்களை கொண்ட செடிகள் அந்த கொடியின் அமைப்பிலான வடிவமைப்பில் வளர்க்கப்பட இருக்கின்றன.

1flagஅருகில் இருந்து பார்த்தால் தோட்டம் போல் இருக்கும். ஆனால் பறவை பார்வை பார்த்தால், தென்னாப்பிரிக்க தேசியக்கொடி பூமி மீது படர்ந்திருப்பது போல தெரியும் – இது அந்த கொடியின் அற்புதம். தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரான கேப்டவுன் மற்றும் தலைநகர் ஜோகன்னஸ்பர்க் இடையிலான வறண்ட நிலப்பகுதியான காரூவில் உள்ள கேம்டேபூ நகராட்சியில் இந்த கொடி உருவாக்கப்பட்டு வருகிறது. கொடியின் மொத்த பரப்பு 66 ஹெக்டேர். அதாவது 163 ஏக்கர்கள். கிட்டத்தட்ட 66 கால்பந்து மைதானங்களின் பரப்பு! இந்த பரப்பில் 25 லட்சம் சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை ஆகிய வண்ணத்திலான பாலைவனச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த செடிகள் தான் கொடியாக இருக்கின்றன. தென்னாப்பிரிக்க தேசியக்கொடி அமைப்பில் உள்ள கருப்பு முக்கோணப்பகுதியில் பெரிய அளவிலான சோலார் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த மின் நிலையம் சுற்றியுள்ள பகுதியில் மின் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. செடிகளுக்கான நீர்த்தேவையும் மழைநீர் சேமிப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆக, புதுமையான இந்த திட்டம் வேலைவாய்ப்பு, சுற்றுலா மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பலவித நோக்கங்களை கொண்ட லட்சிய திட்டமாகவும் இருக்கிறது. செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு மூலம் இந்த நகராட்சியில் உள்ள 700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டம் 40 சதவீதமாக இருக்கும் பகுதி என்பதால் இது இப்ப்குதியின் வறுமையை போக்கும் என கருதப்படுகிறது.

அதோடு இந்த பிரம்மாண்டமான பசுமைக்கொடியை பார்ப்பதற்காக என்றே சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என நம்ப படுகிறது. கொடியை விண்ணில் இருந்து தான் பார்க்க முடியும் என்பதால் இதற்காக என்றே இப்பகுதியில் ஹாட் ஏர் பலூன் உலாக்களுக்கும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செடிகள் மண்ணுக்கு உரிய ஊட்டச்சத்தை அளிப்பதோடு , கரியமில வாயுவை உறிஞ்சிக்கொண்டு சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கும் என்று கருதப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும் கைகொடுப்பதோடு பொருளாதார வளர்சிக்கும் உதவக்கூடிய மிகபெரிய திட்டமாக கருதப்படுகிறது. முழுவீச்சில் செடிகளும், கொடியும் தயாராகி வருகின்றன.

1flag2road-trip-1எல்லாம் சரி, இந்த திட்டம் உருவானது எப்படி? இதன் பின்னே இருப்பது யார்?

2010 ல் நடந்த கால்பந்து உலக கோப்பை போட்டியின் போது தான் இந்த திட்டத்திற்கான விதை உருவானது. கால்பந்து திருவிழாவை முன்னிட்டு தென்னாப்பிரிக்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து கால்பந்து ரசிகர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து குவிந்தனர். உலக கோப்பை தென்னாப்பிரிக்க மக்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தேசியக்கொடி அனைவரையும் ஒன்றிணைக்கும் சின்னமாக இருந்தது. எப்சிபி தென்னாப்பிரிக்கா எனும் விளம்பர நிறுவனம் இந்த உணர்வை மையமாக கொண்டு, உலக கோப்பை முடிந்ததும் ’கொடி தொடர்ந்து பறக்கட்டும்’ எனும் கோஷத்தோடு விளம்பர திட்டம் ஒன்றை மேற்கொண்டது. இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த விளம்பரத்தை உருவாக்கிய லைபர்மேன் எனும் அதிகாரியை நிறுவன சி.இ.ஓ அழைத்து பாராட்டு தெரிவித்தார். அத்தோடு நிற்காமல், இந்த உணர்வை எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும் வகையில் புதுமையான ஒரு திட்டத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்காக லைபர்மேன் உருவாக்கியது தான் ,விண்ணில் இருந்து பார்த்தால் தெரியக்கூடிய பிரம்மாண்ட தேசியக்கொடியை உருவாக்கும் திட்டம்.

ஜெயண்ட் பிளாக் ஆப் தென்னாப்பிரிக்கா எனும் பெயரில் இந்த திட்டம் செயல்படுததப்பட்டு வருகிறது. இதற்காக அறக்கட்டளை ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டதிற்கு தேவையான நிதியில் முதல் கட்ட தொகை வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. அடுத்த கட்ட நிதி பொது மக்களிடம் இருந்து கோரப்படுகிறது.

கிரவுட்பண்டிங் முறையில் இந்த நிதியை திரட்ட ஜெயண்ட்பிளாக் எனும் பெயரில் இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது. ( இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க தேசியக்கொடி மீது கிளிக் செய்தால் கொடியின் வண்ணங்களுக்கான பாலைவனச்செடிகளின் தோற்றம் வருகிறது. இதன் மூலம் கொடி எப்படி உருவாகும் என்பதை உணரலாம்). கொடியின் பின்னே உள்ள லட்சிய திட்டத்தை விவரிக்கும் இந்த இணையதளம் , கொடியின் அங்கமான செடிகளை வளர்க்க நிதி கோருகிறது. விருப்பம் உள்ளவர்கள், ஒரு செடியை வாங்கி வாங்கி தத்தெடுக்கலாம். பல காலத்திற்கு அந்த செடி உங்கள் பெயர் சொல்லிக்கொண்டிருக்கும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க பகுதியில் சமூக மாற்றத்திற்கும் சுற்றுச்சூழல் நலனுக்கும் வித்திடக்கூடிய இந்த பிரம்மாண்ட தேசியக்கொடி உலக உளவிலான கூட்டு முயற்சிக்கும் சான்றாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி; https://www.giantflag.co.za/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.