இவர் ட்விட்டர் வள்ளல் தெரியுமா?

2016 ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் நடைபெற இருப்பது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டிகளை உலகம் வியந்து போகும் வகையில் நடத்திக்காட்ட ரியோ நகர அதிகாரிகள் தீவிரமாக இருக்கின்றனர். இதுவும் எதிர்பார்க்க கூடியது தான். ஆனால் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதில் ஸ்பெயின் நாட்டு ஏழை பெரியவர் ஒருவருக்கு சின்ன பங்கிருக்கிறது.

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றால்,குறிப்பாக சமூக ஊடகங்களில் அது தாக்கத்தை ஏற்படுத்தினால் நிச்சயம் அதற்காக ரியோ நகரமும் பிரேசில் மக்களும் ஸ்பெயினின் சேவியர் காஸ்டனோவாவிற்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த போட்டிகளுக்காக அவர் மனமுவந்து பெரிய உதவியை செய்திருக்கிறார். அவர் கொடைவள்ளலாக நடந்து கொண்டு ரியோ நகருக்கு கைகொடுத்திருக்கிறார். அவர் அப்படி என்ன செய்திருக்கிறார் என்றால், ரியோ நகரின் பெயரில் தான் பதிவு செய்து வைத்திருந்த @riodejaneiro எனும் டிவிட்டர் முகவரியை விட்டுக்கொடுத்திருக்கிறார்.

சமூக ஊடக உலகில் அதிகார பூர்வ கணக்குகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இது எத்தனை பெரிய விஷயம் என்று தெரியும்.அதிலும் கஸ்டனோ இந்த முகவரியை ஒப்படைக்க பேரம் பேசாமல் இதன் மூலம், எந்த லாபமும் அடைய நினைக்காமல் இலவசமாக ரியோ நகரிடம் இந்த கணக்கை ஒப்படைத்திருக்கிறார்.

காஸ்டனோ ஷூ பாலிஷ் போடுபவராக வேலை பார்க்கும் ஏழ்மை நிலையில் இருப்பவர் என அறியும் போது அவர் இப்படி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பது இன்னும் கூட வியப்பளிக்கலாம்.
ஒருவித்ததில் காஸ்டனோவை தொலைநோக்கு மிக்கவர் என்று தான் சொல்ல வேண்டும்.. அதைவிட டிவிட்டர்நோக்கு மிக்கவர் என்று சொல்லலாம். கடந்த 2007 ம் ஆண்டீல் டிவிட்ட்ர சேவை அறிமுகமான காலத்தில் அவர் பல முக்கிய குறிச்சொற்களை கொண்டு டிவிட்டர் முகவரிகளை பதிவு செய்து வைத்துக்கொண்டார். கவனிக்க அந்த காலக்கட்டத்தில் டிவிட்டர் சேவை அத்தனை பிரபலமாகவில்லை. அப்போதே அவர் டிவிட்டரின் முக்கியத்தவத்தை உணர்ந்து செயல்பட்டார்.

இணைய உலகில் இது ஆரம்ப காலம் தொட்டு நடப்பது தான். ரெயிலில் முன்கூட்டியே துண்டு போட்டு இடம் பிடிப்பது போல, பின்னாளில் வளரக்கூடிய இடத்தில் தரிசாக கிடக்கும் நிலத்தை வாங்கிப்போடுவது போல இணையத்திலும் புதிய சேவைகளில் முக்கிய பெயர்களை பதிவு செய்து வைத்துக்கொள்ளும் கில்லாடிகள் இருக்கின்றனர். சிலர் இதை திட்டமிட்டு செய்வதுண்டு. சிலர் தற்செய்லாக செய்து வைப்பதும் உண்டு. எது எப்படியோ அந்த குறிப்பிட்ட இணைய சேவை பிரபலமானால் இத்தகைய முகவரிகளுக்கு கிராக்கி ஏற்படும் . இதை பயன்படுத்தி காசு பார்த்தவர்களும் இருக்கிறார்கள். சில நேரங்களில் இது வம்பு வழக்கு என்று பிரச்சனையாவதும் உண்டு. இந்த போக்கிற்கு சமீபத்திய உதாரணமாக எபோலா நோய் ஆபத்து உசத்தில் இருந்த போது எபோலா.காம் எனும் முகவரியை வைத்திருந்தவர் அதை பெருந்தொகைக்கு விற்றதை குறிப்பிடலாம்.

ஸ்பெயினின் காஸ்டனோவும் இப்படி தான், ரியோ டிஜெனிரோ நகரின் டிவிட்டர் முகவரியை பதிவு செய்து வைத்திருந்தார். அடுத்த ஆண்டு அந்நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நிலையில் இந்த கணக்கு எத்தனை மதிப்புவாய்ந்தது என யோசித்துப்பாருங்கள். ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய தகவல்களை பகிரவும் ,மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ரியோ நகருக்கு என்று அதிகார பூர்வ டிவிட்டர் பக்கம் மிகவும் அவசியம். ரியோ நகரமோ @riodejaneiro என்ற முகவரியை கோட்டைவிட்டு விட்டது. வேறு பெயரில் டிவிட்டர் கணக்கை ஒலிம்ப்க்கிற்காக துவக்கி கொள்ளலாம் தான். ஆனால் சிக்க என்ன என்றால் ஒலிம்பிக் தொடர்பாக தகவல்கள் தேடப்படும் போது @riodejaneiro என்ற முகவரியை பலர் டைப் செய்து ஏமாறலாம். அல்லது தேடியந்திரங்கள் இந்த முகவரியை முதலில் சுட்டிக்காட்டலாம். எப்படி இருந்தாலும் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் இந்த முகவரியில் இருந்தால் நன்றாக இருக்கும்.
ஆக, ஸ்பெயின் பெரியவரிடம் கிட்
டத்தட்ட பொன்னான முகவரி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அவர் நினைத்திருந்தால் இதை வைத்து பெரிய அளவில் காசு பார்த்திருக்கலாம். ஆனால் அவரோ அவ்வாறு செய்யாமல் இந்த முகவரியை ரியோ நகர் அதிகாரிகளுடம் ஒப்படைத்திருக்கிறார். அதுவும் எப்படி தெரியுமா? தானே அவர்களை தொடர்பு கொண்டு இந்த முகவரி பற்றி தெரிவித்து டிவிட்டர் முகவரியை தானமாக அளித்திருக்கிறார். ( உண்மையில் பலமுறை அவர் இமெயில் அனுப்பிய பிறகே ரியோ அதிகாரிகள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்).

ஒரு காலத்தில் கிராபிக் டிசைனராக வேலை பார்த்த காஸ்டனோ ஸ்பெயின் பொருளாதார தேக்க நிலை காரணமாக இப்போது ஷு பாலிஷ் போடும் வேலை செய்து வருகிறார். ஆனாலும் கூட இந்த முகவரியை விற்று பணம் பார்க்க அவர் விரும்பவில்லை.
ஆன் ஷூபாலிஷ் போடுபவனாக இருக்கலாம், ஆனால் 13 கோடி ரீயோ மக்களுக்கு என்னிடம் பரிசளிக்க ஒரு விஷயம் இருக்கிறதே என்று இது பற்றி அவர் பெருமித்த்துடன் சொல்கிறார்.

காஸ்டனோ ஏற்கனவே @canada மற்றும் @madrid ஆகிய முகவரிகளை சம்பந்தப்பட்ட நகரங்களிடம் ஒப்படைத்திருக்கிறார். @japan முகவரியையும் கைவசம் வைத்திருப்பவர் ,2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஜப்பானிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக சொல்கிறார்.
வித்தியாசமான கொடைவள்ளல் தான் !

——-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.