நேபாள பூகம்பம்; பாதிக்கப்பட்டோர் பற்றி அறிய உதவும் கூகுள் சேவை

நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி தகவல் அறியவும், உயிர் பிழைத்தவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும் உதவும் வகையில் கூகுள் நிறுவனம் பர்சன் பைண்டர் இணைய சேவையை துவக்கியுள்ளது.

பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகளின் போது தகவல் தொடர்பும் பாதிக்கப்படுவதால் இவற்றில் சிக்கியவர்களின் நிலை பற்றி உடனடியாக தகவல் பெறுவது பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறது. பேஸ்புக் ,டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகள் கைகொடுத்தாலும் கூட பேரிடர் பகுதிகளில் வசித்தவர்கள் நிலை என்ன என்பதை அவரது உறவினர்களும் அன்புக்கிறியவர்களும் உடனடியாக தெரிந்து கொள்வது கடினமான செயலாகவே இருக்கிறது. அதே போல பேரிடரில் இருந்து மீண்டவர்கள் தாங்கள் நலமாக இருக்கும் தகவலை அன்புக்குறியவர்களிடம் பகிர்ந்து கொள்வது சிக்கலானதாகவே இருக்கிறது.

இது போன்ற சூழலில் எளிதாக கைகொடுக்கும் தொழில்நுட்பமாக பியூபில் பர்சரன் இணைய சேவையை கூகுள் உருவாக்கி உள்ளது. அடிப்படையில் எளிமையான இணையதளமான இந்த சேவையில் இரண்டு பகுதிகள் இருக்கும். ஒன்று உயிர்பிழைத்தவர்கள் மற்றும் நலமுடன் இருப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிப்பதற்கான பகுதி. பேரிடர் பகுதிகளில் தகவல் ஒருங்கிணைப்பு பெரும் சோதனைக்கு உள்ளாகும் ஆரம்ப கட்டத்தில் மீட்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் இந்த பகுதியில் அவற்றை வெளியிடலாம்.

இரண்டாவது பகுதி பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்கள் தொடர்பான விவரங்களை தேடுவதற்கானது. இந்த பகுதியில் உறவினர்கள் பெயர் உள்ளிட்ட தகவல்களை தெரிவித்து அவர்களில் நிலை பற்றிய விவரங்களை கோரலாம். இதைப்பார்த்து விவரமறிந்தவர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து அறிவதற்கான மற்றும் உயிர் பிழைத்தவர்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான தகவல் மேடையாக இந்த தளம் செயல்படுகிறது.
இந்த இணைய சேவையை கூகுள் நேபாள பூகம்பத்திற்காக புதுப்பித்துள்ளது. ஏற்கனவே உத்ராகாண்ட் மேக்வெடிப்பு பாதிப்பு மற்றும் பாலின் புயல் பாதிப்பு போன்ற பேரிடர்களின் போது கூகுள் இந்த பர்சன் பைண்டர் சேவையை அமைத்தது. தற்போது நேபாள மக்களுக்கு உதவுவதற்காக இந்த சேவையை அமைத்துள்ளது.

இணையதள முகவரி: https://google.org/personfinder/2015-nepal-earthquake/

இதே போல பேஸ்புக் தளமும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் தங்கள் நிலை குறித்து நிலைத்தகவலாக தெரிவிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பேஸ்புக்கின் இந்த வசதி பற்றிய விவரம் வருமாறு:

புயல் ,பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களில் நலமாக இருக்கிறேன் என நெருக்கமானவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் புதிய வசதியை சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது.
பூகம்பம் ,புயல்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வுகளின் போது எல்லோருக்கும் உறவினர்களும் நண்பர்களும் நலமாக இருக்கின்றரா? என அறிந்து கொள்ளும் துடிப்பு இயல்பாக ஏற்படும். பேரிடர் காலங்களில் பலர் சமூக ஊடகம் மூலம் இந்த கேள்வியை கேட்பதையும் , பலரும் சமூக ஊடகம் வாயிலாக தாங்கள் நலமுடன் இருப்பதை தெரிவிப்பதையும் பார்க்கலாம்.
இப்போது இந்த தகவலை சுலபமான முறையில் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. சேப்டி செக் எனும் பெயரில் பேஸ்புக் இதை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதியின் மூலம் இயற்கை பேரிடர் தாக்கும் போது, நலமாக இருக்கும் தகவலை பேஸ்புக் மூலம் எளிதாக பகிரலாம். பாதிக்கப்பட்ட பகுதியில்; உள்ள நண்பர்கள் நலமுடன் இருப்பதையும் இதன் மூலம் அறியலாம்.
சேப்டி செக் வசதியை இயக்கி வைத்தால், உங்கள் நகரில் புயலோ, பூகம்பமோ தாக்கும் போது , பேஸ்புக் உங்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் அனுப்பி தகவல் கோரும். அதில் நலமாக இருக்கிறேன் எனும் வாய்ப்பை தேர்வு செய்தால் அந்த செய்தி உங்கள் டைம்லைனில் தோன்றும். நண்பர்களும் உறவினர்களும் நீங்கள் நலமாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். இதே போல உங்கள் நண்பர்கள் நிலையையும் நீங்கள் அறியலாம். உங்கள் நண்பர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் அதையும் பகிரலாம். ( ஆனால் இதற்கு அவர்கள் அனுமதி தேவை).
பேஸ்புக்கில் நீங்கள் சம்பர்பித்துள்ள நகரின் அடிப்படையில் இந்த சேவை இயங்குகிறது. நீங்கள் அந்த நகரில் இல்லை அல்லது உங்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் அதையும் தெரிவிக்கலாம்.

ஜப்பான் சுனாமிக்கு பிறகு பரிதவித்தவர்கள் தங்கள் நிலையை உறவினர்களுக்கு தெரிவிக்க் பேஸ்புக் பேரிடர் தகவல் பலகையின் மேம்பாடாக இந்த வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. நிச்சயம் பேஸ்புக்கின் ஸ்டேடஸ் அப்டேட்களில் இது தான் பயனுள்ளதாக இருக்கும்.
உலக அளவில் இந்த சேவை அறிமுகமாக உள்ளது. செல்போன் செயலிகளிலும் செயல்படும். நேபாளத்தில் பூகம்ப பாதிப்பில் சிக்கியவர்களுக்கு இந்த வசதி பேருதவியாக இருக்கும் .

பேஸ்புக் சேப்டி செக் வசதி பற்றி அறிய: https://www.facebook.com/about/safetycheck/

————

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

One Comment on “நேபாள பூகம்பம்; பாதிக்கப்பட்டோர் பற்றி அறிய உதவும் கூகுள் சேவை

  1. கூகுளுக்கு நன்றி

    Reply

Leave a Comment

Your email address will not be published.