ரோபோக்கள் தேடி வருகின்றன!

https _blueprint-api-production.s3.amazonaws.com_uploads_card_image_338737_77f3143b-e1f6-4ca8-95ca-5c5c2913fc8eபுத்தாண்டு பிறந்ததுமே கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளில்,  சி.இ.எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சி முக்கியமானது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் இந்த கண்காட்சியில் நுகர்வோர் உலகில் வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் அவற்றின் முன்னோட்ட மாதிரிகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு வரை இந்த கண்காட்சியில் பெரிய சைஸ் ஸ்மார்ட் டிவிகள், தானியங்கி கார்கள், அணிகணிணி வகை சாதனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு கண்காட்சியில், பலவகையான ரோபோக்கள் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்துள்ளதாக தொழில்நுட்ப இணையதளங்கள் வியப்புடன் வர்ணித்துள்ளன. காபி போடும் ரோபோ, துணி மடித்து வைக்கும் ரோபோ, விளக்குகளை போட்டு அனைக்கும் ரோபோ, தினசரி வேலைகளை செய்யும் சேவக ரோபோ என பலவித ரோபோக்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் யு.எஸ்.ஏ டுடே இதழ் இணையதளம் தெரிவிக்கிறது. மனிதர்களை போலவே தோன்றும் ரோபோக்கள் கவனத்தை ஈர்த்ததாகவும், அதிலும் குறிப்பாக விஞ்ஞானி ஐன்ஸ்டின் போலவே தோன்றும் ஆண்ட்ராய்டு ரக ரோபோ அற்புதக் என இந்த இதழ் குறிப்பிடுகிறது.

தொழில்நுட்ப இணையதளமான மாஷபிள், ஐன்ஸ்டீன் ரோபோ பற்றி தனியாகவே விரிவாக எழுதியிருக்கிறது. ஐன்ஸ்டீன் என்றதும் சார்பியல் கோட்பாடு, இ=எம்சி2 (E = mc 2 ) சமன்பாடு போன்றவை நினைவுக்கு வருவது போலவே அவரது தலைமுடி, அவர் நாக்கை நீட்டும் விதம் உள்ளிட்ட அம்சங்களும் நினைவுக்கு வரும். இத்தகைய அம்சங்களுடன் ஐன்ஸ்டீனை கச்சிதமாக நம் முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த ரோபோவை ஹாங்காங்கை சேர்ந்த ஹான்சன் ரொபோட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பேராசியர் ஐன்ஸ்டீன் எனும் பெரிலான இந்த ரோபோ வை-பை வசதி கொண்டுள்ள இந்த ரோபோ கற்றலுக்கு உதவும் செயலியுடனும் இணக்கப்பட்டுள்ளது.

மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோக்களை தயாரிப்பதற்காக அறியப்படும் ஹான்சன் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஐன்ஸ்டீன் ரோபோ அந்த மகா விஞ்ஞானியின் 50 க்கும் மேற்பட்ட முக உணர்வுகள் மற்றும் செய்கைகளை வெளிப்படுதக்கூடியதாக இருக்கிறது. ஐன்ஸ்டீன் தொடர்பான தகவல்களையும் தெரிவிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவை மேலும் திறன் மிக்கதாக ஆக்குவது மற்றும் மக்களுடன் சிறந்த முறையில் தொடர்பு கொள்ள வைப்பதே எங்கள் இலக்கு என்கிறது ஹான்சன் நிறுவனம். ரோபோ ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ மனிதர்களுடன் உரையாடுவதோடு அவர்களின் பழக்க வழங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெரூசலம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ரோபோ ஐன்ஸ்டீனை ஹான்சன் உருவாக்கியுள்ளது. இந்த ரோபோ மினியேச்சர் சிறிய வடிவில் அமைந்திருந்தாலும், வழக்கமான அளவிலும் உள்ள ரோபோவையும் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த ரோபோவுக்காக என்று பிரத்யேகமான கிக்ஸ்டார்ட்டர் பக்கமும் அமைக்கப்பட திட்டமிட்டுள்ளது.

ஐன்ஸ்டீன் தவிர ஜிபோ , குரி, பாரீஸ்டா, அரிஸ்டாட்டில், ஓலி, ஹப், ஏர்பாட், ரோபோமோவர் உள்ளிட்ட ரோபோக்களும் இந்த கண்காட்சியில் அறிமுகமாகியுள்ளன.

இவற்றில் குரி இல்லங்களில் பயன்படக்கூடிய ரோபோ. 20 அங்குலம் உயரம் கொண்டு குரி, சக்தி வாய்ந்த காமிராக்களை கண்களாக கொண்டிருக்கிறது. தன்னைச்சுற்றிய காட்சிகளை உணரக்கூடிய இந்த ரோபோ வீட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனும் கொண்டது. ஒளிபடங்களை எடுத்து ஒளிபரப்பும் ஆற்றலும் பெற்றிருக்கிறது. மேபீல்ட் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் படைப்பு இது. சாதாரண வேலைகளையும் கூட செய்து முடிக்கும் திறன் கொண்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

யூ.கே. வின் எமோடெக் நிறுவன உருவாக்கமான ஓலி, இசை கேட்பு சாதனங்கள் மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்க கூடியது. ஹப் ரோபோ, மனித முகம் கொண்ட டிஜிட்டல் உதவியாளராக உருவாக்கப்பட்டுள்ளது. இசை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடியதாக வானிலை விவரங்களை அளிக்க கூடியதாக இது கவர்கிறது என்கிறது டெக் ரிப்பபிள் இணையதளம்.

ரோபோ மோவர் வீட்டுக்கு வெளிப்புறத்தில் பணியாற்றக்கூடியது என்றால் எல்.ஜி நிறுவனத்தின் ஏர்பாட் விமானநிலையத்திற்கு வழிகாட்டக்கூடியது. அரிஸ்டாட்டில் ரோபோ சிறார்களுடன் உரையாடி அவர்கள் கேள்விக்கு பதில் அளிக்க கூடியது. பாரிஸ்ட்டா காலையில் சூடாக காபி போட்டு தரக்கூடியது. யூனிபாட் எனும் வாக்குவம் கிளினர் ரோபோ பாதுகாப்பு காமிரா அம்சத்தையும் கொண்டுள்ளது. 4 அடி உயரம் கொண்ட மோரோ சிறிய ரோபோ, நீங்கள் கட்டளையிட்டால் பிரிட்ஜ் போன்ற பொருட்களை கூட உங்களுக்காக தூக்கி வருமாம். டெர்டில் எனும் ரோபோ தோட்ட வேலை செய்து களைகளை அகற்றக்கூடியதாக இருக்கிறது.

இதே போல ஜப்பானின் செவன் டிரீமர்ஸ் அறிமுகம் செய்துள்ள லாண்ட்ராய்டு, துணைகளை துவைத்து, உலர்த்தி அழகாக மடித்து அயன் செய்தும் தருகிறது. காட்சி உணர் திறன் கொண்ட இந்த இயந்திரம் துணிகளை தரம்பிரித்து அதற்கேற்ப செயல்படுகிறது. இவைத்தவிர இன்னும் சில விநோத ரோபோக்கள் அறிமுகமாகியுள்ளன.

இந்த வகை ரோபோக்கள் வருங்காலத்தில் வீடுகளை நோக்கி படையெடுக்க இருப்பதாக வல்லுனர்கள் சொல்கின்றனர். ஏற்கனவே வீடுகளில் பயன்படுத்தப்படும் ரூம்பா ரக ரொபோக்கள் மற்றும் அமேசான் அலெக்சா வகை டிஜிட்டல் உதவியாளர்கள் வரிசையில் இவையும் இணையும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர்.

மனிதர்களுடன் உரையாடி கற்றுக்கொள்ளக்கூடிய ரோபோக்கள், அவர்கள் சொல்வதை புரிந்து கொண்டு செயல்படக்கூடிய உதவியாளர் ரோபோக்கள் எதிர்காலத்தில் சகஜமாக பயன்பாட்டிற்கு வரும் என்றும் கணிக்கின்றனர். ரோபோ எதிர்காலத்திற்கு நீங்கள் தயாரா?

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.