சாதனை இந்திய பெண் விஞ்ஞானி அசிமா சாட்டர்ஜி !

asima-chatterjees-100th-birthday-4652731129135104-2xகூகுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இல்லை எனில் பெரும்பாலான இந்தியர்களுக்கு இந்த சாதனை விஞ்ஞானியை நினைவில் நிறுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்காது. செப்டம்பர் 23 ம் தேதி கூகுள் தேடியந்திரம் தனது முகப்பு பக்கத்தில் அசிமா சாட்டர்ஜியின் (Asima Chatterjee) படத்தை டூடுல் சித்திரமாக வெளியிட்டு கவுரவித்திருந்தது. அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டி கூகுள் இவ்வாறு சிறப்பித்திருந்தது.

தேடல் சேவையை வழங்கி வரும் கூகுளின் முகப்பு பக்கத்தின் மையத்தில் உள்ள லோகோவை நீங்கள் கவனித்திருக்கலாம். முக்கிய நிகழ்வுகள் மற்றும் சாதனையாளர்கள் தொடர்பான முக்கிய தினங்களின் போது இந்த லோகோவை சித்திரமாக மாற்றி அமைத்து அவர்களை கவுரவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இந்த வகை சித்திரங்கள் கூகுள் டூடுல் என பிரபலமாக குறிப்பிடப்படுகின்றன. சுதந்திர தினம், புத்தாண்டு, ஒலிம்பிக் போட்டிகள் போன்றவற்றின் போது அவற்றை பிரதிபலிக்கும் கூகுள் டூடுல்களை பார்க்கலாம். சாதனையாளர்கள் பிறந்த தினங்களின் போதும் டூடுல் வாயிலாக கூகுள் அவர்களை நினைவு கூர்வதுண்டு. பலரும் மறந்துவிட்ட அரிய சாதனையாளர்களை எல்லாம் கூகுல் டூடுல் அறிமுகம் செய்திருக்கிறது.

இப்படி தான் அண்மையில் கூகுள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான முகப்பு பக்கத்தில் விஞ்ஞானி அசிமா சாட்டர்ஜியின் படத்தை வெளியிட்டு, யார் இந்த அசிமா? என கேட்க வைத்தது. இதற்கான பதிலை அறியும் ஆர்வத்தோடு லோகோவை கிளிக் செய்தால் நூற்றாண்டு காணும் அசிமா பற்றிய விக்கிபீடியா பக்கம் உள்ளிட்ட தகவல்கள் விரிந்து வியக்க வைக்கிறது. இவைத்தவிர, அசிமா நினைவை போற்றும் வகையில் கூகுள் கலாச்சார கழக இணையதளத்தில் இடம்பெற்றுள்ள டிஜிட்டல் கண்காட்சியும் அவர் எத்தனை பெரிய அறிவியல் ஆளுமையாக இருந்திருக்கிறார் என உணர்த்துகிறது.

இந்தியாவில் அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண் விஞ்ஞானியாக அறியப்படும் அசிமா குறித்தும், அவரது ஆய்வுகள் குறித்தும் தெரிந்து கொண்டால் வியப்பாக இருக்கிறது. எத்தனை பெரிய சாதனையாளராக அவர் இருந்திருக்கிறார். அசிமா, பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார். 2006 ல் இயற்கை எய்தும் வரை அறிவியல் மாணவர்களுக்கு வழிகாட்டி வந்திருக்கிறார்.

இத்தனை சிறப்புகளை பெற்றிருந்தும் கூட, அசிமா பெரும்பாலனவர்களால் அறியப்படாமல் இருப்பது வருந்ததக்கது தான். ஆனால், அசிமாவை நாம் அறியாவிட்டாலும் கூட, அவரது ஆய்வின் பயனை ஏதாவது ஒரு விதத்தில் தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். புற்றுநோய்க்கான கீமோதெரபியில் பயன்படுத்தப்படும் மருந்து முதல், மலேரியாவை கட்டுப்படும் மருந்து, வலிப்பு நோயை கட்டுப்படுத்தும் ஆயுஷ்-56 மருந்து வரை அவரது பங்களிப்பு பலவிதமாக இருக்கிறது.

கூகுள் டூடுல் வெளியான போது, இந்திய நாளிதழ்களின் இணையதளங்கள் துவங்கி, அமெரிக்காவின் ’டைம்’ இணையதளம், பிரிட்டனின் சன் பத்திரிகை இணையதளம் என எண்ணற்ற செய்தி தளங்கள், அசிமா பற்றிய அறிமுக செய்தியை பெரிதாக வெளியிட்டிருந்தன. இவற்றோடு தி வயர் உள்ளிட்ட இணைய இதழ்களில் வெளியான சிறப்புக்கட்டுரைகளை வாசிக்கும் போது அசிமா பற்றி மேலும் அறிய முடிகிறந்து.

அசிமா வேதியல் துறையில் சிறந்த ஆய்வாளராக இருந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக மருத்துவ வேதியலில் ஆர்வம் கொண்டு, மூலிகைகளின் மூலக்கூறுகளை பிரித்தறிவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் மூலிகை செடிகளின் மருத்துவ குணத்தை அறிந்திருந்தனர். இவற்றை மருத்துவத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மூலிகைகளின் மருத்துவ குணத்தின் உயிரியல் சார்ந்த அம்சங்கள் அசீமா போன்ற விஞ்ஞானிகளின் ஆய்வு மூலமே வெளிச்சத்திற்கு வந்தன.

வேதியலின் ஒரு முக்கிய அங்கமான இயற்கை வேதியலின் கீழ் வரும் இயற்கை பொருட்களின் வேதியல் எனும் பிரிவில் இடம்பெறும் இந்த வகை ஆய்வுகள் எளிதானதல்ல. அதிலும் ஆரம்ப கால கட்டத்தில் முறையான வசதிகள், மற்றும் நவீன உபகரணங்கள் இல்லாமலே அசிமா, இதற்கான ஆய்வில் ஓய்வில்லாமல் ஈடுபட்டு சாதித்திருக்கிறார் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

ஒருவிதத்தில் அசிமாவின் குடும்ப பாரம்பரியமும் இதற்கு ஒரு காரணமாக அமைகிறது. அசிமா 1916 ம் ஆண்டு செப்டம்பர் 23 ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். அவரது நாராயன் முகர்ஜி ஒரு மருத்துவர். அவரது சகோர்தரன் சராஷி ரஞ்சன் முகர்ஜியும் பின்னாளில் சர்ஜனாக புகழ்பெற்று விளங்கியவர். 1936 ல் வேதியலில் பட்டம் பெற்ற அசிமா, 1938 ல் இயற்கை வேதியலில் முதுகலை பட்டம் பெற்றார். 1940 ல் கொல்கத்தாவின் லேடி பிராபோர்னே கல்லூரியில் வேதியல் துறை நிறுவன தலைவராக பணிக்கு சேர்ந்தார். 1944 ல் அவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு, டாக்டர் பட்டமும் பெற்றார்.

இதனிடையே அசிமா, பரதானந்தா சாட்டர்ஜியை திருமணம் செய்து கொண்டார். இயற்பியல் மற்றும் மண் வேதியல் விஞ்ஞானியான பரதானந்தா பர்ந்த மனம் கொண்டவராக இருந்தார். அவரது ஆதரவும் ஊக்கமுமே அசிமாவை அந்த காலகட்டத்தின் சமூக தடைகளை உடைந்த்தெறிந்து ஆய்வுப்பணியில் ஈடுபட வைத்தது. இந்த தம்பதியின் மகளான ஜூலி பானர்ஜியும்,இயற்கை வேதியல் பேராசிரியராக இருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு அசிமா, மூன்று ஆண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அங்கு அமெரிக்க பேராசிரியர்களுடன் இணைந்து ஆய்வில் ஈடுபட்டார். இங்கு தான் அவருக்கு ஆல்கலாய்ட்கள் தொடர்பான ஆய்வின் மீது தனி ஈடுபாடு ஏற்பட்டது. 1950 ல் இந்தியா திரும்பியதும் அவர் ஆல்கலாய்ட் மற்றும் கவ்மரின் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். இவற்றில் தான் அவர் பல சாதனை கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.

ஆய்வாளராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. அவரது முதல் ஆய்வு மாணவர்களில் ஒருவரான டாக்டர்.எஸ்.சி,.பிரகாஷ், இது பற்றி கட்டுரை ஒன்றில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்களில் போதிய வசதிகள் கூட கிடையாது என்பதோடு, வேதியல் பொருட்களை வாங்கவும் போராட வேண்டியிருக்கும் என்கிறார் அவர். மாணவர்களுக்கான ஊக்கத்தொகையும் சொற்பமாக இருந்தது என்றும், பொருட்களை குத்திக்கொண்டு வர தொலைதூர இடங்களுக்கு சென்று வர வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த போதாமைகளை எல்லாம் மீறி அசிமா ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.

அடிப்படை வசதிகள் குறைவாக இருந்தோடு நவின உபகரணங்களும் சொற்பமாகவே இருந்தன. இவற்றை எல்லாம் ஒரு தடையாக கருதாமல், மூலிகைகளில் இருந்து நுண்ணிய அளவிலான ரசாயணங்களை பிரித்தறிந்தார். உபகரணங்களின் போதாமையை ஈடு செய்யும் ஆற்றல் மற்றும் அதீத கவனத்தோடு செயல்பட்டு, பல மூலிகைகளின் மருத்துவ குணத்திற்கான அடிப்படையான வேதியல் கூறுகளை கண்டறிந்தார். இவையே நோய்களை குணமாக்கும் மருந்துகளுக்கு வித்திட்டன.

பின்னர் நவீன உபகரணங்கள் சாத்தியமான போது அவரது ஆய்வு மேலும் தீவிரமாகி மேம்பட்டது,. 40 ஆண்டு கால ஆய்வு வாழ்க்கையில் அவர் ஆல்கயால்டு தொடர்பான ஆய்வுகளில் தான் அதிகம் ஈடுபட்டிருக்கிறார். இவையே புற்றுநோய் சிகிச்சையில் உதவும் மருத்து உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்க வைத்தது.

இத்தனைக்கும் ஒரு இல்லத்தலைவியாக குடும்ப பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றியபடியே அவர் ஆய்வுலகிலும் இயங்கி வந்திருக்கிறார். தினமும் அதிகாலை எழுந்திருந்து வீட்டு வேலைகளை முடித்த பிறகே அவர் பல்கலைக்கழகம் செல்வார் என கூகுள் டிஜிட்டல் கண்காட்சி தகவல் குறிப்பிடுகிறது. பின்னர் மாலை வீடு திரும்பியதும் மீண்டும் வீட்டு வேலை கவனிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்திய மருத்துவ மூலிகைகளுக்கான பிராந்திய ஆய்வு மையத்தை நிறுவியது, நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது, சர்வதேச பல்கலைக்கழகங்களில் உரையாற்றியது என தீவிரமாக இயங்கி வந்த அசிமா, சாந்தி ஸ்வருப் பட்னாகர் விருது, சு.வி.ராமன் விருது  பத்ம விபூஷன் உள்ளிட்ட அங்கீகாரங்களை பெற்றிருக்கிறார்.

நிகரில்லாத ஆய்வாளராக அவர் அறிவியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் எண்ணற்ற சாதனையாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இணைப்புகள்:

  1. அசிமா சாட்டரிஜியை கவுரவிக்கும் கூகுள் டிஜிட்டல் கண்காட்சி; https://www.google.com/culturalinstitute/beta/exhibit/rgKiCdKgS8UJIw
  2. அசிமா சாட்டர்ஜியின் ஆய்வுலக சாதனைகள்: http://indian-scientists.padakshep.org/subjectareas/chemical-sciences/chem-bhatnagar-prize-winners/asima-chatterjee
  3. அசிமா பற்றிய சிறப்புக்கட்டுரை: https://thewire.in/180533/asima-chatterjee-alkaloids-phytomedicine-antimalarial-bhatnagar-google/

நன்றி.; மின்னம்பலம் இணைய இதழில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.