பிட்காயின் செய்திகளை அறிய உதவும் இணையதளங்கள்

coindesk-670x473இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் என பலவிதமாக குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. பிட்காயின் தொடர்பான விவாதம் இணைய உலகில் சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், கடந்த ஆண்டு தான் பிட்காயின் எழுச்சி பெற்று வல்லுனர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த ஆண்டு துவக்கத்தில் 1,000 டாலர் அளவில் இருந்த இதன் மதிப்பு வருட இறுதியில் 20,000 டாலரை எட்டிப்பிடித்தது முதலீட்டு நோக்கிலும் பலரை கவர்ந்தது. பிட்காயின் மதிப்பு ஏற்ற இறக்கத்திற்கு உள்ளானாலும், அதன் மீதான கவனம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தில் பிட்காயின் மதிப்பு என்னவாக இருக்கும் என்பது தொடர்பாக பலவிதமான கருத்துக்கள் நிலவும் சூழலில் ஒரு தரப்பினர் பிட்காயினை எதிர்கால நாணயம் என்கின்றனர். இன்னொரு தரப்பினரோ இது எப்போது வேண்டுமானாலும் உடைய காத்திருக்கும் குமிழ் என்கின்றனர். இவற்றுக்கு மத்தியில் பிட்காயின் போன்ற மற்ற டிஜிட்டல் நாணயங்களும் கவனத்தை ஈர்க்கத்துவங்கியுள்ளன. இணைய உலகின் தவிர்க்க இயலாத நுட்பங்களில் ஒன்றாக உருவாகி இருக்கும் பிட்காயின் தொடர்பாக நீங்களும் அப்டேட்டாக இருக்க விரும்பினால் இந்த தளங்கள் உதவியாக இருக்கும்;

காயின் டெஸ்க் (https://www.coindesk.com/ )

பிட்காயின் தொடர்பான செய்திகள் இப்போது எல்லா இடங்களிலும் தெரிந்து கொள்ள முடிகிறது. எனினும் பிட்காயின் உலகில் நிகழும் அனைத்துவிதமான செய்திகளையும், தகவல்களையும் அப்டேட்டாக தெரிந்து கொள்ள வேண்டும் எனில் காயின் டெஸ்க் தளத்தை அவசியம் புக்மார்க் செய்து கொள்ள வேண்டும். பிட்காயின் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை செய்திகளாக தருவதோடு, பிட்காயின் நுட்பத்தை ஆழமாக விளக்கும் கட்டுரைகள், அது தொடர்பான விவாதங்கள், வழிகாட்டிகள் என அனைத்துவிதமான தகவல்களையும் அளிக்கிறது இந்த தளம்.

பிட்காயின் சந்தை நிலவரம், அதன் ஏற்ற இறக்கங்கள், அவற்றுக்கான காரணங்கள் உள்ளிட்டவற்றையும் இந்த தளம் விளக்குகிறது. பிட்காயின் அடிப்படையாக கருதப்படும் பிளாக்செயின் நுட்பம் பற்றிய விளக்க பகுதியும் இடம்பெற்றுள்ளது. தினமும் தங்கம் வெள்ளி விலை நிலவரம் பார்ப்பது போல இந்த தளத்தில் பிட்காயின் மதிப்பின் ஏற்ற இறக்கத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

பிட்காயினுக்கான தகவல் சுரங்கமாக விளங்கும் இந்த தளம், பிட்காயின் போன்ற இதர எண்ம நாணயங்கள் பற்றிய தகவல்களையும் அளிக்கிறது. ஆம், பிட்காயின் தவிர வேறு பல எண்ம நாணயங்களும் இருக்கவே செய்கின்றன. இவற்றில் சில பிட்காயினுக்கு நிகராக வேகமாக வளர்ந்தும் வருகின்றன. பிட்காயின் தொடர்பான செய்திகளை தேடும் வசதியும் இருக்கிறது.

காயின் டெலிகிராப்

பிட்காயின் அபிமானிகளால் அதிகம் விரும்பப்படும் செய்தி தளங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் வருகிறது காயின் டெலிகிராப். பிட்காயின் மற்றும் அதன் போட்டி எண்ம நாணயங்கள் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், அலசல்கள் உள்ளிட்டவற்றை இந்த தளம் வழங்குகிறது. வல்லுனர்கள் பார்வையை விளக்கும் பத்திகளும் இடம்பெறுகின்றன. எண்ம நாணயங்களின் எதிர்காலம் பற்றிய விவாதமும் முக்கிய அங்கம் வகிக்கிறது.

பிட்காயின் மேகசைன் (https://bitcoinmagazine.com/)

முழுக்க முழுக்க பிட்காயின் மீது கவனம் செலுத்தும் தளமாக பிட்காயின் மேகசைன் விளங்குகிறது. செய்திகள், வழிகாட்டிகள், விலை, தரவுகள் மற்றும் கருத்துகள் என ஐந்து பிரிவிப் கீழ் இந்த தளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் பல துணைத்தலைப்புகளில் தகவல்கள் அடங்கியுள்ளன. அநேகமாக தினமும் புதிய கட்டுரைகள் வெளியாகின்றன.

தி மெர்க்லே (https://themerkle.com/ )

பிட்காயின் தொடர்பான செய்தி தளங்களில் புதிய வரவு இந்த தளம். சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த தளம் பிட்காயின் உள்ளிட்ட பலவிதமான எண்ம நாணயங்கள் தொடர்பான செய்திகள், கட்டுரைகளை வெளியிடுகிறது. இந்த நாணயங்களை மாற்ற உதவும் பரிவர்த்தனை மையங்கள் தொடர்பான செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம். பிட்காயின் வாலெட்கள் பற்றிய தகவல்களையும் வாசிக்கலாம்.

சி.சி.என் (https://www.ccn.com/)

பிரபலமான தொலைக்காட்சியான சி.என்.என் போல சி.சி.என் என குறிப்பிடப்படும், கிரிப்டோ காயின்ஸ் நியூஸ் தளம் பிட்காயின் தொடர்பான செய்திகளை முழுவீச்சில் அளிப்பதோடு, அதன் மீதான விமர்சன கட்டுரைகளையும் இடம்பெறச்செய்கிறது. மாற்று பிட்காயின்கள் தொடர்பான செய்திகளும் அதிகம் இடம்பெறுகின்றன. பிட்காயின் அடிப்படைகளை கற்றுத்தரும் பகுதியும் இருக்கிறது. பிட்காயின் விலை போக்கையும் தெரிந்து கொள்ளலாம்.

பிட்காயின் வலை (https://bitcoin.org/en/blog )

பிட்காயினை நிர்வகிக்கும் இணைய சமூகத்தின் அதிகாரபூர்வ தளமான  பிட்காயின்.ஆர்க் தளத்தின் வலைப்பதிவு பகுதியிலும் பிட்காயின் தொடர்பான அண்மை தகவல்களை தெரிந்து கொள்ளலாம். எளிமையான வடிவமைப்பில் கட்டுரைகள் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. பிட்காயின் செயல்படும் விதம் தொடர்பான அடிப்படை தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பிட்காயின் சமூகம், பிட்காயின் தொடர்பான பிரத்யேக சொற்கள் என மேலும் பல பகுதிகள் உள்ளன.

இவைத்தவிர பிட்காயின்.காம் தளமும் பிட்காயின் தொடர்பான செய்திகளை வழங்குகிறது: https://news.bitcoin.com/. பிட்காயின் என்றால் என்ன என துவங்கி அதன் முக்கிய அம்சங்களை எளிதாக விளக்கும் பிட்காயின் அகாடமி பகுதியும் இருக்கிறது. பிட்காயின் தொடர்பான இலவச இணைய வகுப்பில் சேர்ந்து பயிலும் வாய்ப்பையும் அளிக்கிறது. புதிய பிட்காயின்களை உருவாக்குவதற்கான பிட்காயின் மைனிங் முறை பற்றிய விளக்க கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

பிட்காயின் தொடர்பான் செய்திகளை விட அது தொடர்பான விவாதத்தில் ஆர்வம் அதிகம் எனில் பிட்காயின் டாக் (https://bitcointalk.org/) இணையதளத்தை நாடலாம். பிட்காயின் அபிமானிகளுக்கான விவாத களமாக இந்த தளம் அமைந்துள்ளது.

இதே போல, இணைய உலகின் முகப்பு பக்கம் ந வர்ணிக்கப்படும் ரெட்டிட் தளத்திலும் பிட்காயின் தொடர்பான செய்திகள், விவாதத்தை பின் தொடரலாம். பிட்காயின் தொடர்பான பல விவாத சரடுகளில் நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்தோடு கருத்துக்களை பகிர்வதை பார்க்கலாம்.

எல்லாம் சரி, பிட்காயின் என்றால் என்ன என்று இன்னமும் தெளிவாக புரியவில்லையே என்ற கவலை உங்களுக்கு இருந்தால், மேக்யூஸ் ஆப் தளத்தின் பிட்காயின் வழிகாட்டியை நாடலாம்: https://www.makeuseof.com/tag/how-to-explain-bitcoin-to-anyone/ பிட்காயின் என்பது மையமில்லாத டிஜிட்டல் பணம், மின்னணு முறையில் உருவாக்கப்பட்டு, மின்னணு முறையில் பரிமாறிக்கொள்ளப்படும் டிஜிட்டல் நாணயம் இது எனத்துவங்கி இதன் சூட்சமங்களை தகவல் வரைபடமாக இந்த பகுதி விளக்குகிறது. பிட்காயினை எப்படி வாங்குவது, எப்படி வைத்திருப்பது, எப்படி செலவு செய்வது என்பது பற்றியும் எளிதாக விளக்குகிறது. பிட்காயின் உலகில் புதிதாக நுழைபவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.

கேட்ஜெட் புதிது

ஸ்மாட்ரான் நிறுவனம் அடுத்த ஸ்மார்ட்போன் மாதிரியை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முதலீட்டாளராகவும், விளம்பர தூதராகவும் பெற்றுள்ள இந்நிறுவனம் கடந்த ஆண்டு எஸ்.டிஆர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக டி.போன்பி எனும் புதிய மாதிரியை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த போனின் விலை 9,000 ரூபாயாக இருக்கும் என்றும் மின் வணிக தளமான பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரும் என்றும் தெரிகிறது. 5,000mAh பேட்டரி இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும் என கிஸ்பாட் தளம் தெரிவிக்கிறது.

செயலி புதிது; ஒரு நொடியில் போஸ்டர்கள்

இணையம் மூலமே போராட்டங்களை ஒருங்கினைக்கவும், வழிநடத்தவும் சமூக ஊடகங்கள் உதவியாக இருக்கின்றன. இத்தகைய இணைய இயக்கங்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சியில் உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது வாக்வோக் செயலி. ஐபோனுக்கான இந்த செயலி மூலம் போராட்ட நோக்கத்தை அழகாக சொல்லும் போஸ்டர்களை எளிதாக உருவாக்கி கொள்ளலாம். இதற்கான மாதிரிகளை இந்த செயலியே வழங்குகிறது. அவற்றில் இருந்து தேர்வு செய்து நம் நோக்கத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம். ஏற்கனவே உள்ளவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். தேவை எனில் தரவிறக்கம் செய்து அச்சிட்டுக்கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு: https://www.walkwoke.co

தகவல் புதிது; கடந்த ஆண்டின் டிஜிட்டல் சொல்

’ஷிட்போஸ்ட்’ என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இந்த வார்த்தையை நீங்கள் கேள்விபட்டிருக்காவிட்டால் கூட, இதன் தாக்கத்தை இணையத்தில் நிச்சயம் உணர்ந்திருக்கலாம். இணைய உரையாடலை பாழக்க அல்லது ஒருவரை வெறுப்பேற்றும் நோக்கத்தோடு வெளியிடப்படும் தேவையில்லான கருத்துகள் அல்லது பதிவுகள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய வெட்டி வீண் வம்பு பதிவுகளை பேஸ்புக்கிலும், இன்னும் பிற தளங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த பதிவுகளை குறிக்கும் ஷிட்போஸ்ட் எனும் வார்த்தையே கடந்த ஆண்டின் டிஜிட்டட் சொல்லாக அமெரிக்க பேச்சு வழக்கு கழகம் தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டின் சொல்லாக, இணையத்தை உலக்கி வரும் பொய்ச்செய்தி நிகழ்வான ஃபேக்நியூஸ் தேர்வாகியுள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.