போன் பேட்டிரி தீரும்போது அரட்டை அடிக்க உதவும் செயலி

உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி தீர இன்னும் சில நிமிடங்களே இருக்கும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? மனம் பரபரப்பாகி, அருகே எங்கே சார்ஜர் இருக்கிறது என தேடுத்துவங்குவீர்கள். கையில் சார்ஜர் இல்லை என்றாலோ அல்லது சார்ஜ் செய்ய வழி இல்லை என்றாலோ இன்னும் பதற்றமாகிவிடலாம். இத்தகைய இக்கட்டான அனுபவம் ஏற்கனவே சில முறை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். இது போன்ற நிலையை தவிர்க்க பவர் பேங்க் வாங்கி வைத்துக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்க நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொண்டிருக்கலாம்.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பேட்டரி தொடர்பான இந்த பிரச்சனை சின்னதாகவோ, பெரிதாகவோ எதிர்கொள்ளமால் இருக்க வாய்ப்பே இல்லை தான். உண்மையில், பேட்டரியின் போதாமை தான்  ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் பிரதான சிக்கல்களில் ஒன்றாக இருக்கிறது. அதனால் தான் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் பேட்டரியின் ஆற்றலை அதிகரிப்பதில் தனி கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் அதற்கேற்ப நாம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதும் அதிகரித்திருப்பதால் பேட்டரி சிக்கல் முடிவில்லாத பிரச்சனையாக நீடிக்கிறது.

எல்லாம் சரி, உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி தீரும் நிலை ஏற்படும் போது, அது பற்றி கவலைப்படாமல் உங்களைப்போன்ற ஒருவருடன் அரட்டை அடிக்கும் வாய்ப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இந்த கேள்விக்கான உங்கள் பதிலை பொருத்து, ’டைவித்மீ’ செயலி உங்களுக்கு சுவாரஸ்யமானதாகவோ, பயனில்லாததாகவோ தோன்றலாம். ஏனெனில் இந்த செயலி, உங்கள் போன் பேட்டரி உயிரிழந்து போக இருக்கும் நிலையில், மற்றவர்களுடன் அரட்டை அடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. அதிலும் எப்படித்தெரியுமா? உங்களைப்போலவே போனில் பேட்டரி தீரும் நிலையில் இருக்கும் ஒருவருடன் உங்களை இணைத்து வைத்து பேசச்சொல்கிறது! இதை ஏற்றுக்கொண்டால், பேட்டரி தீர்ந்து போவதற்கு முன்னர் முற்றிலும் புதுமையான அனுபவம் சாத்தியமாகலாம். இல்லை என்றாலும் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை எனும் எண்ணத்தை தான் இந்த செயலி ஏற்படுத்த முயல்கிறது.

கொஞ்சம் வித்தியாசமான செயலியாக தான் இருக்கிறது அல்லவா! அது உண்மை தான், நம்மை அறியாமல் நாம் பழக்கமாகிவிட்ட, டிஜிட்டல் கால பதற்றத்தை குறைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை சுவாரஸ்யமான வழியில் நிறைவேற்றவும் முயற்சிக்கிறது.

அடிப்படையில் பார்த்தால், இந்த செயலி, மேசேஜிங் செயலி வகையை சேர்ந்தது தான். ’வாட்ஸ் அப்’ போல, உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு பதிலாக, அறிமுகம் இல்லாதவர்களுடன் அரட்டை அடிக்க இந்த செயலி வழி செய்கிறது. இந்த நோக்கில் தொடர்பு கொள்ள உதவும் செயலிகளும் இல்லாமல் இல்லை. ஆனால் ’டைவித்மீ’ செயலியில் என்ன வித்தியாசம் என்றால், சாதாரண நிலையில் இந்த செயலியை பயன்படுத்த முடியாது என்பது தான்.

இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் எனில், உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி தீரும் நிலையில் இருக்க வேண்டும். ஆம், பேட்டரி தீர ஐந்து நிமிடங்களே இருக்கும் போது மட்டுமே இந்த செயலியின் அரட்டை அறையில் இணைய முடியும். இதே போல பேட்டரி தீரும் நிலையில் உள்ள வேறு ஒருவருடன் நீங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம். இந்த செய்திகளுக்கு அருகே பேட்டரியில் மிச்சமிருக்கும் சார்ஜின் அளவு காண்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அதை பார்த்துக்கொண்டே செய்திகளை பரிமாறிக்கொள்ளலாம்.

இந்த அரட்டையில் பங்கேற்க ஒரு புனைப்பெயரை உருவாக்கி கொண்டால் போதுமானது. ஆனால் இந்த செயலி உங்கள் பேட்டரி சார்ஜ் செய்ய வழி செய்யும் என்றோ அல்லது, குறைவான பேட்டரியில் அரட்டை அடிக்க வழி செய்யும் என்றோ நினைத்துவிட வேண்டாம். பேட்டரியின் மொத்த சார்ஜும் தீர்ந்து போவதற்கு முன், பேட்டரியில் சார்ஜ் தீர இருக்கும் இன்னொரு பயனாளியுடன் பேச வழி செய்கிறது. அவ்வளவு தான்!.

எதற்கு இப்படி ஒரு செயலி? பேட்டரி தீரும் நிலையிலும் ஏதேனும் நல்லவிதமாக செய்ய உதவும் செயலியை உருவாக்க நினைத்தோம் என்கிறார் இந்த செயலியின் இணைய நிறுவனரான டிரையஸ் டிபூர்ட்டர்  (Dries Depoorter ). பேட்டரி தீர்ந்து போனால் என்ன செய்வது என பதற்றமாகி யோசிப்பதற்கு பதில், அரட்டை அடிப்பது என்பது கொஞ்சம் கூலான சோசனை தான். அதை தான் இந்த செயலி செய்கிறது. நாம் அரட்டை அடிப்பவரும் இதே நிலையில் இருப்பவர் என்பதால், பேட்டரி தீரும் நிலைப்பற்றி சுவாரஸ்யமான கருத்துக்கள் அல்லது புலம்பல்களை பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் புதிய நட்பு கூட கிடைக்கலாம். எல்லாவற்றையும் முக்கியமாக, பேட்டரி நிலை பற்றி யோசிக்காமல், நிஜ வாழ்க்கை நிலையை கவனியுங்கள் என்று இந்த செயலி உணர்த்துவதாக புரிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்போனும் கையுமாக இருப்பது தான் வாழ்க்கையா, என்ன? ஸ்மார்ட்போனில் பேட்டரி இல்லை என்றால் என்ன, நிஜ உலக தொடர்புகளை கவனியுங்களேன். அத்தகைய ஒரு தொடர்பை ஏற்படுத்துக்கொள்ளுங்களேன் என்று இந்த செயலி சொல்லாமல் செல்கிறது இந்த செயலி.

இதே போலவே சிறிஸ் போலின் என்பவர் இணைய இணைப்பு இல்லாத நிலையில் மட்டுமே அணுக்க கூடிய வகையில் உருவாக்கிய புதுமையான இணையதளம் (https://chris.bolin.co/offline/ ) ஒன்றை உருவாக்கி இருக்கிறார் தெரியுமா? டைவித்மீ தொடர்பான செயலியை அறிமுகம் செய்யும் மதர்போர்ட் இணையதள பதிவு இந்த தகவலை குறிப்பிடுகிறது. வழக்கமாக எல்லா இணையதளங்களையும் இணையத்தில் தொடர்பு கொண்டிருக்கும் போது தானே பார்க்க முடியும். ஆனால் இந்த தளத்தை அணுக வேண்டும் எனில், இணைய தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இணைய தொடர்பை துண்டித்து விட்டு இந்த தளத்தை அணுகினால், ’நீங்கள் செயல்திறன் பெற வேண்டாமா, இணையத்தை விட்டு வெளுயேறி வெளியேறுங்கள். ஏனெனில் இணையத்தில் தொடர்பை தக்க வைத்துக்கொள்ள, உள்ளேயும், வெளியேவும் நிறைய இடைஞ்சல்களை சந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும்” எனும் வாசகம் வரவேற்கிறது.

இணைய இணைப்பை துண்டித்து விட்ட நிஜ உலக தொடர்புகளில் அக்கறை செலுத்துங்கள் என்று இந்த இணையதளம் சொல்வது போலவே, டைவித்மீ செயலி, ஸ்மார்ட்போனை கொஞ்சம் மறந்து நிஜ உலக மனிதர்களோடு உறவாடுங்கள் என்று சொல்கிறது.

இதன் இணை நிறுவனர் டிபூர்ட்டர் முதலில், இந்த செயலியை டேட்டிங் வசதி கொண்டதாக உருவாக்க நினைத்திருக்கிறார். அதாவது, பேட்டரி தீரும் நிலையில் டேட்டிங் முயற்சியில் ஈடுபட வைக்கும் சேவையை வழங்க நினைத்து, பின்னர் வெறும் அரட்டை வசதியை மட்டும் இணைத்து இதை உருவாக்கியிருக்கிறார். பேட்டரி சிக்கல் தொடர்பான செயலி என்பதால் ஆப்பிள் பிளேஸ்டோரில் படாத பட்டு இந்த செயலியை சேர்த்திருக்கிறார். ஆண்ட்ராய்டு போனிலும் செயல்படுகிறது. கூகுள் பிளேஸ்டோரில் கட்டண செயலியாக இந்த செயலி தோன்றுகிறது.

செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூட இல்லை, ஆனால் இது உணர்த்தும் செய்தியை யோசித்துப்பார்த்தால் கூட போதும்! டிஜிட்டல் வாழ்க்கையின் கொஞ்சம் ஆசுவாசம் தேடலாம்!

செயலியை அணுக: http://diewithme.online/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.