பேஸ்புக்கிற்கு மாற்று தேடுகிறீர்களா?

_77035407_diaspora1பேஸ்புக் அனல்டிகா சர்ச்சையை அடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் இணையவாசிகளை வாட்டத்துவங்கியிருக்கிறது. பலரும் ஒரு படி மேலே சென்று, டெலிட் பேஸ்புக் எனும் இணைய இயக்கத்தை துவங்கி பேஸ்புக்கில் இருந்து வெளியேற வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் பார்த்தால் பேஸ்புக்கில் இருந்து வெளியேறுவதால் மட்டும், பிரைவசி சிக்கலுக்கு தீர்வு காண முடியாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கூகுள், டிவிட்டர் உள்ளிட்ட மேலும் பல இணைய நிறுவனங்கள் பயனாளிகளின் தகவல்களை சேகரிப்பதும், இணையவாசிகளின் தரவுகளை கொண்டு விளம்பர வலை விரிப்பதே இணையத்தில் இப்போது பரவலாக பின்பற்றப்படும் வருவாய் வழியாக இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

பேஸ்புக்கில் நிலைத்தகவல்களை வெளியிடுவதை வாழ்க்கையின் நேர்த்திக்கடன் போல பழக்கப்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கலாம். ஆன்லைன் மூலம் நட்பு வலை விரிக்க உதவும் சமூக ஊடக சேவையான பேஸ்புக் புதிய நண்பர்களை பெறுவதிலும், பழைய நண்பர்களோடு கருத்து பரிமாற்றம் செய்வதிலும் கைகொடுக்கிறது. சிறிய குழுவாக வர்த்தகம் செய்வதில் துவங்கி, சமூக இயக்கங்களை ஒருங்கிணைப்பது வரை பலவிதங்களில் பேஸ்புக் பயன்படுகிறது. அதே நேரத்தில் பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடப்பது நேரத்தை வீணாக்குவதோடு, எல்லாவற்றையும் தகவல்களாக வெளியிடும், மிகை பகிர்வு பழக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மிகை பகிர்வு கவலையோடு இப்போது தகவல்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சமும் சேர்ந்திருக்கிறது. இதன் விளைவாக பேஸ்புக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணமோ அல்லது பேஸ்புக் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ ஏற்பட்டிருந்தால் கவலையை விட்டுத்தள்ளுங்கள், பேஸ்புக்கிற்கு மாற்றாக விளங்கக்கூடிய எண்ணற்ற இணைய சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்:

சமூக வலைத்தளங்கள்:

பேஸ்புக்கின் மீது கூறப்படும் மிகப்பெரிய புகார் அது பயனாளிகள் பகிரும் தகவல்களை சேகரிப்பதோடு, அவர்களின் இணைய சுவடுகளை விடாமல் பின் தொடர்ந்து விளம்பர வலை விரித்துக்கொண்டிருக்கிறது என்பது தான். இத்தகைய விளம்பர நோக்கில்லாத சமூக வலைப்பின்னல் சேவை தேவை எனில் எல்லோ.கோ இணையதளத்தை நாடலாம். எல்லோ என்றவுடன் எங்கே கேட்ட பெயராக இருக்கிறதே என நினைக்கலாம். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், பேஸ்புக்கிற்கு மாற்று எனும் கோஷத்துடன் அறிமுகமாகி கவனத்தை ஈர்த்த சேவை தான் எல்லோ. ஆரம்ப பரபரப்பிற்கு பிறகு எல்லோவை பலரும் மறந்துவிட்டாலும், அந்த சேவை அதிக சத்தமில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. விளம்பர நோக்கில்லை, பயனாளிகளின் தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு விற்கமாட்டோம் என எல்லோ அளிக்கும் உறுதிமொழி இப்போது மீண்டும் ஈர்க்கத்துவங்கியுள்ளது.

பெரும்பாலும் கலைஞர்கள், படைப்பூக்கம் மிக்கவர்களால் பயன்படுத்தப்படும் எல்லோ பேஸ்புக்கைவிட மாறுபட்ட அனுபவத்தை அளிக்கலாம்:  https://ello.co/

எல்லோவுக்கு முன்பாகவே பேஸ்புக்கின் தகவல் அறுவடையை விமர்சித்து உருவாக்கப்பட்ட சேவை டயோஸ்பரா. பிரைவஸி, சுதந்திரம் மற்றும் மையமற்ற தன்மை இதன் சிறப்பசமாக முன் வைக்கப்படுகிறது. எல்லாவற்றையும் நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடிய சமூக வலைப்பின்னல் சேவை என தன்னை டரோஸ்ப்ரா வர்ணித்துக்கொள்கிறது. பேஸ்புக் அளவுக்கு பரந்து விரிந்தது இல்லை என்றாலும் இந்த தளம் அளிக்க கூடிய ஹாஷ்டேக் அடிப்படையில் விருப்பமான கருத்தாக்கங்களை பின் தொடர்வது உள்ளிட்ட வசதி புதுமையான அனுபவத்தை அளிக்கலாம்: https://diasporafoundation.org/

இதே போல செயலி வடிவிலான ராப்டர் குறிப்பிட்ட ஆர்வங்கள் சார்ந்த இணைய சமூகங்களை உருவாக்கி கொண்டு தொடர்பு கொள்ள வழி செய்கிறது: https://www.raftr.com/?

பேஸ்புக்கின் அங்கமான புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராமுக்கு மாற்று தேவை என உணர்ந்தால், வெரோ செயலியை முயற்சித்து பார்க்கலாம். இன்ஸ்டாகிராம் போல அல்கோரிதம் தேர்வு செய்யும் புகைப்படங்களை முன்னிறுத்தாமல் இயல்பான முறையில் நண்பர்கள் பகிரும் புகைப்படங்களை பார்க்க வழி செய்வதாக கூறும் வெரோ அண்மை காலங்களில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது: VERO.co

செய்திகளை பெற!

பேஸ்புக் பயனாளிகள் பலருக்கும் அதன் நியூஸ்பீட் சேவை பரிட்சயமானது. சமூக ஊடக தளத்திலேயே செய்திகளை தெரிந்து கொள்வது வசதியானதாக கருதப்பட்டாலும் இது எத்தனை வில்லங்கமானது என புரியத்துவங்கியுள்ளது. ஒருவரின் நட்பு வலையில் உள்ள நண்பர்களின் விருப்பத்தேர்வுகளுக்கு ஏற்ப செய்திகளை முன்வைக்கும் நியூஸ்பீட் வசதி மாற்று கருத்தாக்க செய்திகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை குறைத்து, ஒருவித செய்திக்குமிழில் சிக்க வைப்பதாக கருதப்படுகிறது.

உண்மையில் செய்திகளை தெரிந்து கொள்வதற்கான முதன்மை வழியாக சமூக வலைப்பின்னல் சேவைகளை கருதுவது பாதகமானது. செய்திகளை தேர்வு செய்யும் உரிமை பயனாளிகள் கையிலேயே இருக்க வேண்டும். இதற்காக செய்திகளை தேடிச்செல்ல நேர்ந்தாலும் பரவாயில்லை என நினைத்தால், முன்னணி செய்தி தளங்களாக விளங்கும் பிபிசி.காம் மற்றும் அல்ஜசிரா.காம் தளங்களை அணுகலாம். வைரலாகும் புதுயுக செய்திகளை பின் தொடர நினைத்தால் பஸ்பீட் தளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம். மேலும் இணையத்தின் முதல் தகவல் திரட்டியாக கருதப்படும் டிக்.காம் தளமும் செய்திகளை அறிந்து கொள்வதற்கான சிறந்த இடமாக அமைகிறது. (DIGG.com)

செய்திகளை தெரிந்து கொள்வதோடு, நண்பர்கள் பின் தொடரும் செய்திகள் மீதும் ஒரு கண் வைத்திருக்க விரும்பினால் நஸல் சேவை ஏற்றதாக இருக்கும்: http://nuzzel.com/

செய்திகளை தெரிந்து கொள்ள பிளிப்போர்ட் செயலியையும் நாடலாம். வெளியுறவு கொள்கை முதல் சமையல் குறிப்பு வரை பல வித தலைப்பிகளில் இந்த தளம் செய்திகளை வழங்குகிறது. இந்த செயலிக்கான இணையதளத்தில் முதல் முறை நுழையும் போது பயனாளிகளின் ஆர்வத்தை கேட்டு அதற்கேற்ற செய்திகளை வழங்குகிறது. பயனாளிகள் தங்களுக்கு ஆர்வம் உள்ள தலைப்புகளில் துணைத்தலைப்புகளுக்கான ஹாஷ்டேகுகளையும் உருவாக்கி கொள்ளலாம்.: https://flipboard.com/

குழுக்கள் வசதி

பேஸ்புக் தளத்தில் நமக்கான தனி பக்கங்களை உருவாக்கி அதை நண்பர்கள் மற்றும் ஒத்த கருத்துள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம். பேஸ்புக்கின் சிறந்த பயன்பாடுகளில் ஒன்றாக இதை கருதலாம். குருப்மீ (https://groupme.com/en-US/ ) இதே போன்ற வசதியை அளிக்கிறது: இதைத்தவிர கூகுள் குருப்ஸ் மற்றும் யாஹு குருப்ஸ் வசதியையும் பரிசீலிக்கலாம்.

படைப்பூக்கம் சார்ந்த செயல்களில் ஆர்வம் உள்ளவர்கள் எனில் தங்கள் உருவாக்கங்களை பகிர்ந்து கொள்ள  புஹான்ஸ்.நெட் தளத்தை பயன்படுத்தலாம். இந்த தளத்தில் பகிரப்படும் ஓவியங்கள், வரைகலை சித்திரங்கள், வடிவமைப்புகள் உள்ளிட்ட ஆக்கங்களை ஒரு பறவை பார்த்தாலே போதும் அத்தனை உற்சாகமாக இருக்கும்.: https://www.behance.net/

பேஸ்புக் என்றில்லை, எல்லா வகையான சேவைகளுக்கும் இணையத்தில் மாற்று இருக்கின்றன. குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அதிருப்தி என்றால், புதுவிதமான குறும்பதிவு சேவையான மாஸ்டோடனை (https://mastodon.social/about)முயன்று பார்க்கலாம். கூகுலைத்தவிர இன்னொரு தேடியந்திரம் தேவை எனில், பயனாளிகள் தனிப்பட்ட தகவல்களை சேமிப்பதில்லை என உறுதி அளிக்கும் மாற்றுத்தேடியந்திரமான டக்டக்கோ (https://duckduckgo.com/) தேடியந்தித்தை முயன்று பார்க்கலாம்.

இவ்வளவு ஏன் மாற்று சேவைகளை பரிந்துரைப்பதற்கு என்றே ஒரு இணையதளம் இருக்கிறது: https://alternativeto.net/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *