அண்ணா நினைவை போற்றும் குறும்பதிவுகள்!

annaபூ.கொ.சரவணனுக்கு ஒரு பூங்கொத்தை பரிசளிக்க வேண்டும். இமோஜி வடிவில் டிவிட்டர் வழியேவும் அந்த பூங்கொத்தை அனுப்பி வைக்கலாம். ஏனெனில், அண்ணாவின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு, தொடர் குறும்பதிவுகளால் அவரது பெருமைகளையும், சாதனைகளையும் சரவணன் நினைவு கூர்ந்துள்ளார்.

இப்படி குறிப்பிட்ட தலைப்பில் தொடர் குறும்பதிவுகளை ஒரே சரடாக வெளியிடுவது டிவீட்ஸ்டிராம் என குறிப்பிடப்படுகிறது. ஒரு குறும்பதிவில் அடங்கிவிடாத விஷயங்கள் கையில் இருக்கும் போது, இப்படி தொடர் குறும்பதிவுகளை பதிவிடலாம்.

அண்ணாவில் பெருமையையும், பங்களிப்பையும், ஒரு குறும்பதிவில் அடக்கிவிட முடியுமா என்ன? அது தான் சரவணன், மிக பொருத்தமாக அண்ணா பெருமைகள் பேசும் தொடர் குறும்பதிவுகளை இலக்கமிட்டு வெளியிட்டுள்ளார்.

அண்ணாவின் 110 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அண்ணாவின் முக்கியத்துவம் மற்றும் சாதனைகளை நினைவுகூறும் சரட்டை வெளியிடுகிறேன் என தெரிவித்து, அதன் பின் வரிசையாக பேரறிஞர் பெருமைகளை பேசியிருக்கிறார்.

மிகவும் அரிதான, நேர்மையான, ஜனநாயக தன்மை மிக்க, தனது காலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய தலைவராக அவர் இருந்தார் என முதல் குறும்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தங்களை வேர்களை அடையாளம் காண உதவினார், மற்றும் இந்தி திணிப்பை எதிர்த்து இரு மொழி கொள்கையை முன்வைத்தார் என அடுத்த குறும்பதிவு தெரிவிக்கிறது.

கூட்டாட்சி தத்துவத்தின் தீவிர ஆதரவாளர், எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய போது பதவி விலகுவதை பரிசீலித்தவர், இந்தி மொழி பிரச்சனையில் ஆட்சியை துறப்பேன் என சந்தோஷமாக கூறியவர் என தொடர்ந்து அவரது பெருமைகளை குறும்பதிவுகள் பேசுகின்றன.

அவரது வாழ்க்கை குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அவரது இறுதிச்சடங்கில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலில் செலுத்தியது உள்ளிட்ட விவரங்களையும் சரவணன் குறும்பதிவுகளாக்கி இருக்கிறார்.

இறுதியில் அண்ணா பற்றி மேலும் அறிவதற்கான யூடியூப் காணொலியும் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு நீள் பதிவை விட இந்த குறும்பதிவுகள் சரடு அண்ணா பெருமைகளை அழுத்தந்திருத்தமாக பேசுகின்றன.

அண்ணா பெரும் பேசும் தொடர் குறும்பதிவுகளை காண: https://twitter.com/PUKOSARAVANAN/status/1040810909243858945

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.