இணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்

1544524288-Instagram_Voice_Messages( தளம் புதிது)

இணையத்தில் இனி இணைந்து படிக்கலாம்

ஆன்லைனிலேயே பலவிதமான பாடத்திடங்களை கற்று பட்டையம் மற்றும் சான்றிதழ்களை பெறலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். முன்னணி பல்கலைக்கழகங்கள் துவங்கி, கோர்சரா (Coursera), உடேமி (Udemy ), எடெக்ஸ் (edX) உள்ளிட்ட இணைய கல்வி நிறுவனங்களும் இத்தகைய பாட திட்டங்களை வழங்கி வருகின்றன. இப்படி இணையத்தில் கற்று தேர்ச்சி பெறக்கூடிய பாடத்திடங்களை ஒரே இடத்தில் அணுகும் வகையில் தொகுத்தளிக்கும் இணைய சேவைகளும் பல இருக்கின்றன. இந்த வகையில் புதிதாக அறிமுகம் ஆகியுள்ள ஸ்டேக்ஸ்.கோர்சஸ் (https://stacks.courses/ ) இணையதளம், இணைய பாடத்திட்டங்களை பட்டியலிடுவதோடு, அவற்றை இணைந்து படிப்பதற்கான இணைய நண்பர்களையும் தேடிக்கொள்ள வழி செய்கிறது.

இந்த தளத்தில் உள்ள தேடல் வசதியை பயன்படுத்திய விரும்பிய இணைய பாடத்திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் பிறகு அதே பாடத்திட்டத்தை பயிலும் நண்பர்களை இந்த தளம் மூலம் கண்டறிந்து அவர்களோடு இணைந்து பயிலலாம். பாடம் தொடர்பான கேள்விகள், அல்லது சந்தேகங்களை அந்த நண்பரோடு பகிர்ந்து கொள்ளலாம். இணைய கற்றலை சமூக வசதி கொண்டதாக மாற்றிக்கொள்ள இந்த சேவை உதவுகிறது.

(செயலி புதிது)

தொழில்நுட்ப செய்திகளுக்கான புதிய செயலி

தொழில்நுட்ப செய்திகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கான செய்தி வாசிப்பு செயலியாக ஸ்வைப் ஒன் ரீடர் அறிமுகம் ஆகியுள்ளது. தொழில்நுட்ப செய்திகளை அளிக்கும் தளங்களில் இருந்து பல்வேறு தலைப்புகளில் செய்திகளை இந்த செயலி தொகுத்தளிக்கிறது. ரெட்டிட், ஹேக்கர் நியூஸ், பிராடக்ட் ஹண்ட் உள்ளிட்ட தளங்களின் செய்திகளை இந்த செயலியில் அணுகலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கான இந்த செயலியை, கூகுள் பிளேஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்யலாம். ஒரே இடத்தில் தொழில்நுட்ப செய்திகளை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த செயலி ஈர்ப்புடையதாக இருக்கும்.

மேலும் தகவலுக்கு; https://swipeone.app/home

( அண்மையில் தான் அறிமுகமான இந்த செயலி, இப்போது பயன்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை. அதன் இணைய பக்கத்தில் பிழை செய்தி தான் வருகிறது. இணைய உலகத்தில் இதெலாம் சகஜம் என்று சொல்லலாமோ!

(தகவல் புதிது)

இன்ஸ்டாகிராமில் வாய்ஸ் மெசேஜ் வசதி!

ஒளிபட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் பயணர்களுக்கான புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், வாய்ஸ் மேசேஜ் அனுப்பும் வசதியை இப்போது அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் டைரக்ட் வசதி மூலம் பயனாளிகள் தங்கள் பாலோயர்கள் அல்லது நண்பர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைக்கலாம். வாட்ஸ் அப் அல்லது பேஸ்புக் மெஸஞ்சரில் உள்ளது போலவே பயனாளிகள் ஒரு நிமிட ஒலி வடிவ செய்தியை அனுப்பி வைக்கலாம். இதற்காக இன்ஸ்டாகிராம் செயலியின் லேட்டஸ்ட் வடிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, இன்ஸ்டாகிராம் உரையாடல் வசதியில் மைக் ஐகானை அடையாளம் கண்டு ஒலி வடிவ செய்தியை அனுப்பலாம்.

இது தவிர அண்மையில், இன்ஸ்டாகிராம் படங்களுக்கான குரல் வழி விளக்கம் அளிக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் பார்வை குறைபாடு கொண்டவர்களும் இனி இன்ஸ்டாகிராமை தடையிலாமல் பயன்படுத்தலாம். பார்வை குறைபாடு கொண்டவர்கள், இணையதளங்களில் உள்ள தகவல்களை வாசித்துக்காட்டும் ஸ்கிரீன் ரீடர் வசதியை பயன்படுத்தும் போது, படத்தை விவரிப்பது போன்ற விளக்கத்தை கேட்க முடியும். செயற்கை நுண்ணறிவு நுட்பம் கொண்டு இன்ஸ்டாகிராம், படங்களுக்கான இந்த குரல் வழி விளக்கத்தை அளிக்கிறது. படத்தில் உள்ள பொருட்களை செயற்கை நுண்ணறிவு நுட்பம் கண்டுணர்ந்து அதை வாசத்து காட்டும். இந்த வசதியை மேம்படுத்தும் வகையில், பயனாளிகள் படங்களை பதிவேற்றும் போதே அதற்கான விரிவான விளக்கத்தை சமர்பிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள அட்வான்ஸ்டு செட்டிங் பகுதிக்கு சென்று, ’ரைட் ஆல்ட் டெக்ஸ்ட் (Write alt text ) ’ வசதியை கிளிக் செய்து, அதில் படத்திற்கான விரிவாக விளக்கத்தை இடம் பெற வைக்கலாம்.

(கேட்ஜெட் புதிது)

ரஷ்ய கூகுளின் புதிய போன்

ரஷ்யாவின் கூகுள் என அழைக்கப்படும் யான்டெக்ஸ் (Yandex  ) நிறுவனம் அதே பெயரில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ரஷ்யாவில் 1990 களில் உருவாக்கப்பட்ட யான்டெக்ஸ் தேடியந்திரம், ரஷ்யா உள்ளிட்ட முன்னாள் சோவியத் நாடுகளில் முன்னிலையில் இருக்கிறது. உலகம் முழுவதும் கூகுள் முன்னிலையில் இருந்தாலும், ரஷ்யாவில் யாண்டெக்ஸ் தான் முன்னணி தேடியந்திரமாக இருக்கிறது. கூகுள் போலவே யான்டெக்சும், தேடல் தவிர பிரவுசர், இமெயில் , இ-காமர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்திருக்கிறது.

தற்போது யான்டெக்ஸ் ஸ்மார்ட்போன் பிரிவிலும் அடியெடுத்து வைத்துள்ளது. ரஷ்யாவில் கூகுள் போட்டியை சமாளிக்கும் வகையில் அந்நிறுவனம், புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது,. இந்த போனும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளது. ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட இந்த போன் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. யான்டெக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள ’அலைஸ்’ எனும் டிஜிட்டல் உதவியாளர் சேவையும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே 2013 ல் யோட்டோபோன் எனும் ரஷ்ய ஸ்மார்ட்போன் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த போன் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. யான்டெக்ஸ் போன் இந்த நிலையை மாற்றுமா என்று பார்க்க வேண்டும்.

தமிழ் இந்துவில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *